Sunday, March 31, 2024

Vasan Eye Care Hospital Now it has started in Tambaram with state of the art high technology


 Vasan Eye Care Hospital Now it has started in Tambaram with state of the art high

technology

Chennai,31 March 2024:Vasan eye care ASG eye hospitals the India's largest network of

eye hospitals has been the pioneer in producing state of the art, high-tech, stand-alone

speciality eye care hospitals. Our network comprises of 150 + speciality eye hospitals across

the country the wide the within breath of the country. We have a series of primary secondary

and tertiary care eye hospitals. The unique feature of each hospital is that it houses all the

facilities required for a comprehensive eye check-up examination and complete treatment

facilities at every centre without the need for referral to another centre. All our primary care

centres have the capacity to treat most basic eye care necessities including outpatient

department, basic investigations basic operating theatre including surgeries for the latest

advancements in cataract and refractive surgeries. Our secondary and tertiary care hospitals

feature all specialities including facilities for treating patients with glaucoma, retina surgeries,

squint, paediatric and oculoplastic surgery.

The unique feature of Vasan eye care ASG hospitals is that it combines the historical quality

and long-standing care of which is the speciality of Vasan eye care chain network and the

cutting-edge technology and the latest in advance surgical techniques which is speciality of

ASG group of hospitals full stop in continuation of this effort we are proud to announce the

launch of the latest in its series of hospital at the bustling suburb of Tambaram in Chennai.

Vasan eye care ASG hospital, Tambaram will have and Elite team of specialist and super

specialists comprising very experienced and a young and enterprising set of doctors:

● Dr Kaushik PBMBBS, DO, DNB, FICO, FRCS (Glasg)Senior Phaco refractive

surgeon

● Dr P ASHOKANMS, DOMedical retina and Lasers

● Dr Indu GovindarajMS, FMRFVitreo retina surgeon

● Dr V. GaneshMS, DOPhaco refractive surgeon

● Dr Uma MaheshwariMS, DOGlaucoma specialist

In an address to the press Dr Kaushik spoke about the latest advances in cataract surgery

and how cataract surgery could render a patient glass free for life by implanting the latest in

Indian and imported intraocular lenses while the surgery itself could be completely painless

and a day care procedure with the patient following the daily routines a very next day itself.

Dr Ashokan explained the serious consequences of diabetic retinopathy and how modern

laser treatment and intravitreal injections are extremely helpful in recovery and treatment of

the serious complications of diabetes and the eye.

Dr Indu spoke about the complications of diabetes leading to bleeding and membrane

formation within the eye which could be corrected with the latest in surgical techniques like

vitrectomy, membrane peeling and surgical repair of retinal holes does give back excellent

visual rehabilitation for a patient who is suffering from long term count sequences of

diabetes.

Dr Ganesh spoke about the latest techniques of cataract surgery and rehabilitation and how

modern-day surgery is a painless and simple affair.

Dr Uma discussed the complications of glaucoma and explained how medical and surgical

treatment for glaucoma has revolutionized the medical scene

சுந்தர் சி இயக்கத்தில் ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படத்தின் நான்காம் பாகம் 'அரண்மனை 4' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா !


 அரண்மனை 4 டிரைலர் வெளியீட்டு கொண்டாட்டம் !!


சுந்தர் சி இயக்கத்தில் ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படத்தின் நான்காம் பாகம் 'அரண்மனை 4' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா  !



Avni Cinemax (P) Ltd  சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் Benz Media PVT LTD சார்பில் A.C.S அருண்குமார் தயாரிப்பில், சுந்தர் சி நடித்து, இயக்க, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா உட்பட எண்ணற்ற நட்சத்திரங்களின் நடிப்பில், அரண்மனை பட வரிசையில் நான்காம் பாகமாக உருவாகியுள்ள திரைப்படம் 'அரண்மனை 4'. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, திரை நட்சத்திரங்கள் சூழ, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்..

நடிகை, தயாரிப்பாளர் குஷ்பு பேசியதாவது…
இப்படத்தின் நான்கு பாகங்கள் வரை வெற்றிகரமாகப் போக முக்கிய காரணம் சுந்தர் சி தான். அவருடன் 30 வருடமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அவர் ஒவ்வொரு படத்திலும் எப்படி வித்தியாசமாக ரசிகர்களை மகிழ்விக்கலாம் என எப்போதும் யோசித்துக் கொண்டே இருப்பார். வீட்டில் இருக்கும் இரு குழந்தைகளும், ஹாரர் திரைப்படங்களுக்கு ஃபேன். எனவே தான் அவரும் இந்த ஜானரில் தொடர்ந்து படமெடுக்கிறார். அரண்மனை படத்தை சோறு கட்டிக்கொண்டு வந்து திரையரங்கில் குடும்பத்தோடு ரசிக்கும் ரசிகர்கள் தான் இந்த வெற்றிக்கு காரணம். அவர்களுக்கு நன்றி. மேலும் எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் Benz Media  A.C.S அருண்குமார் சார், இப்படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. ஒரு படத்தில் இரண்டு நாயகிகள் ஒன்றாக இருக்க முடியாது என சொல்வார்கள். ஆனால் இந்த படத்தில் தமன்னா, ராஷிக்கண்ணா அவ்வளவு ஒத்துழைப்பு தந்தார்கள். கோவை சரளா மேம் மற்றும் நடித்த அனைவருக்கும் என் நன்றிகள். எங்கள் வீட்டுப் பிள்ளை ஹிப்ஹாப் ஆதி அட்டகாசமாக இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் சூப்பரான விஷுவல்ஸ் தந்துள்ளார்.  எல்லோருக்கும் என் நன்றிகள். அரண்மனை 3 பாகங்களை விட இப்படம் இன்னும் அட்டகாசமாக இருக்கும்.  இறுதியாக எங்கள் மகிழ்ச்சிக்காக தொடர்ந்து  உழைத்துக் கொண்டிருக்கும் என் கணவர் சுந்தர் சிக்கு நன்றிகள்.

நடிகர் சந்தோஷ் பிரதாப் பேசியதாவது…
சுந்தர் சி சார் படத்தில் வேலை பார்ப்பது, நமது அப்பா அண்ணன் உடன் வேலை செய்வது மாதிரி தான். அவ்வளவு நன்றாகப் பார்த்துக் கொள்வார். அவருக்கு என்ன வேண்டும் என்பதை தெளிவாகச் சொல்லிவிடுவார். வேலை எப்போதும் ஜாலியாக இருக்கும். இப்படத்தில் வேலை பார்த்தது மறக்க முடியாத அனுபவம். இந்தப் படம் கண்டிப்பாக உங்கள் எல்லோரையும் சந்தோஷப்படுத்தும்.

நடிகர் ஜெயப்பிரகாஷ் பேசியதாவது
நடிக்க வந்து 10 வருடங்களுக்குப் பிறகு தான் சுந்தர் சி சார் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு படத்திலும் நமக்கு வாய்ப்பு வருமா என ஏக்கம் இருக்கும். நல்ல வேலை தெரிந்த இயக்குநர் உடன் வேலை பார்க்கும் போது நமக்குள் உற்சாகம் தானாக வரும். அவருடன் எல்லா படத்திலும் வேலை பார்க்க ஆசை.  அத்தனை கச்சிதமான இயக்குநர். நடிகர்களை மிக நன்றாகப் பார்த்துக் கொள்வார்.  இந்தப் படம் கண்டிப்பாக பிரமாண்ட வெற்றி படமாக இருக்கும். அனைவருக்கும் நன்றி.

VTV கணேஷ் பேசியதாவது..
தெலுங்கில் பிரபாஸ் படம் பண்ணிக் கொண்டிருக்கும் போது, தான் இந்தப் படம் செய்தேன். ஆனால் திடீரென சுந்தர் சி மீசையை எடு என்றார். அய்யய்யோ பிரபாஸ் படம் பிரச்சனையாகிடுமென்று தயங்கினேன். ஆனால் சுந்தர் சியின் பாசவலையினால் செய்தேன். இப்போது ஃப்ரேம் பார்க்கையில் அவ்வளவு அட்டகாசமாக இருக்கிறது. யோகி பாபு, சரளா மேடமுடன் சூப்பராக காமெடி ஒர்க்கவுட் ஆகியுள்ளது. எப்போதும் பேய் நம்மைக் கைவிடாது என சுந்தர் சி சொல்வார், அது இந்தப்படத்திலும் நிரூபணமாகியுள்ளது. அவர் 120 வருடம் வாழ்வார், ஏனெனில் அவர் மனைவி தான் காரணம். இப்படி ஒரு  மனைவி இருந்தால், யார் வேண்டுமானாலும் 100 வயசுக்கு மேல் வாழலாம். சுந்தர் சிக்கு வாழ்த்துக்கள். படத்திற்கு வாழ்த்துக்கள்.

நடிகை கோவை சரளா பேசியதாவது…
இந்த கம்பெனியில் நான் ஒரு கம்பெனி ஆர்டிஸ்ட். எல்லா படத்திலும், நான் இருப்பேன். இவ்வளவு பெரிய படத்தை கட்டி ஆள்வது சுந்தர் சி சாரால் தான் முடியும். சின்ன தவறு செய்தாலும் கரெக்டாக கண்டுபிடித்துச் சரி செய்து விடுவார். மிகத் திறமையானவர். இவரைப்போல் அனுபவம் வாய்ந்த ஒரு இயக்குநர் தமிழ் சினிமாவில் இப்போது யாருமே இல்லை. படத்தில் வேலை பார்ப்பது போன்றே இருக்காது. இப்படம் மற்ற அரண்மனை படங்கள் போல் இருக்காது. அதைவிட அட்டகாசமாக இருக்கும். தமன்னா, ராஷிகண்ணா நன்றாக நடித்துள்ளனர். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

நடிகர் யோகிபாபு பேசியதாவது…
இப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்த சுந்தர் சி சார் தயாரிப்பாளருக்கு நன்றி. கலகலப்பு படத்தில் வேலை பார்த்த போது என்னை அழைத்து நீங்க நடந்து வரும்போது உங்க தலைக்குப் பின்னாடி ஒரு சக்கரம் சுத்துது என வாழ்த்தினார். அவரது ஆசிர்வாதத்தால் இன்னும் திரையுலகில் என் வாழ்க்கை சக்கரம் சுத்த வேண்டும். அவர் நிறைய வாய்ப்பு தர வேண்டும். எல்லோருக்கும் என் நன்றிகள்.


நடிகை ராஷி கண்ணா பேசியதாவது…

எல்லா அரண்மனை படத்தை விடவும் இந்த படத்தின் டிரெய்லர் அட்டகாசமாக இருக்கிறது. இந்தப் படம் கண்டிப்பாக எல்லா படத்தை விடவும் பிரம்மாண்டமாக இருக்கும். சுந்தர் சி அத்தனை அழகாக படத்தை எடுத்துள்ளார். அவர் இந்த மாதிரி கமர்ஷியல் படங்களை எடுப்பதில் வல்லவர். இந்தப் படம் வேலை பார்த்தது ரொம்ப ஜாலியாக இருந்தது. நடிகை தமன்னாவுடன் இணைந்து தெலுங்கு படத்தில் வேலை செய்துள்ளேன். இப்போது தமிழில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. படம் அட்டகாசமாக வந்துள்ளது. ஹிப் ஹாப் ஆதி சூப்பர் பாடல்கள் தந்துள்ளார். இப்படத்தில் நானும் இணைந்திருப்பது மகிழ்ச்சி. படம் கண்டிப்பாக உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும் நன்றி.

நடிகை தமன்னா பேசியதாவது…
சுந்தர் சி, குஷ்பூ மேடம் எனக்கு ஃபேமிலி மாதிரி. பணம், வாய்ப்பு எல்லாம் அப்புறம் தான். என்னை அவ்வளவு நன்றாக பார்த்துக் கொண்டார்கள். சுந்தர் சி சார் உடன் என்றால் ஓகே என்ன படம் வேண்டுமானாலும் செய்யலாம், அவரை அவ்வளவு நம்புகிறேன். மிகத் திறமையான இயக்குநர். அவர் நினைத்தால் ஹீரோக்களை வைத்து என்ன மாதிரி படங்கள் வேண்டுமானாலும் செய்ய முடியும். ஆனால் பெண்களை மையமாக வைத்து எல்லோரும் ரசிக்கும் படி கதை செய்துள்ளார், அவருக்கு நன்றி. குஷ்பூ மேடத்தால் முடியாதது எதுவுமே இல்லை. சினிமா, பொலிடிகல் என எல்லாவற்றிலும் அசத்துகிறார். அவர் என் இன்ஸ்பிரேஷன். ராஷி கண்ணாவும் நானும் ஏற்கனவே தெலுங்கு படம் செய்துள்ளோம். மிகச்சிறந்த கோ ஆர்டிஸ்ட், மிக உண்மையானவர். என்னை அதிகம் நேசிப்பவர். அவர் நிறைய பியூட்டிஃபுல் படங்கள் செய்துள்ளார் வாழ்த்துக்கள். கோவை சரளா மேடம் செம்ம ஜாலியானவர். இப்படத்தில் நானும் இணைந்திருப்பது மகிழ்ச்சி. இப்படம் வெளியாவதற்காக நானும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன். நன்றி

இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி பேசியதாவது…
அரண்மனை 4 சுந்தர் சி அண்ணாவுடன் ஆறாவது படம். என்னை இசையமைப்பாளராக, ஹீரோவாக அறிமுகப்படுத்தி என் மீது மிகப்பெரும் அன்பையும், நம்பிக்கையையும் வைத்திருக்கும் அண்ணாவிற்கு நன்றி. அரண்மனை 4 எல்லாப் படங்களையும் விடப் பிரம்மாண்டமான வெற்றி பெறும். தமன்னா, ராஷிகண்ணா இருவரும் மிக அழகாக இருக்கிறார்கள். படத்தில் அத்தனை அழகாக நடித்துள்ளனர். யோகிபாபு, சரளா மேடம் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். நன்றி.



இயக்குநர் சுந்தர் சி பேசியதாவது…
எல்லோருக்கும் வணக்கம். அரண்மனை இப்போது நான்காம் பாகத்துடன் வந்துள்ளேன், முதல் பாகம் செய்யும் போது, இது இப்படி சீரிஸாக மாறும் என நினைக்கவே இல்லை. அரண்மனை 3 படத்திற்கு கிடைத்த வெற்றி தான் இப்படம் உருவாக காரணம். எப்போதும் நான் பணத்திற்காக இந்தப்படத்தைச் செய்யலாம் என நான் நினைத்ததே இல்லை. ஒரு நல்ல கதை, ஐடியா கிடைத்ததால் மட்டுமே இந்தப்படத்தைத் துவக்கியுள்ளேன். இப்படத்திற்கும் பின் ஒரு அட்டகாசமான ஐடியா கிடைத்தது. நம் நாட்டை ஆக்கிரமித்தவர்கள் வட இந்தியாவைப் பிடித்த அளவு, அஸ்ஸாம் பக்கம் பிரம்மபுத்திராவை தாண்டிப் போகவில்லை. அது ஏன் எனக் கேட்டு ஆராய்ந்தால், பாக் எனும் ஆவிகளின் சக்தி பற்றிய சுவாரஸ்யமான விஷயம் சிக்கியது. அதை வைத்து, மிக சுவாரஸ்யமான கதையை அரண்மனை 4 இல் செய்துள்ளோம். நான் வேறொரு படத்தில் வேலை செய்த போது இந்த ஐடியா கிடைத்தது. இதில் வேலை பார்க்கலாமா? எனத் தயங்கினேன். அந்த நேரத்தில் ஒரு பயணம் மேற்கொள்கையில் ஒரு சின்ன பெண், என்னிடம் அங்கிள் அரண்மனை 4 எப்போது வருமென்றார் ?, அந்தப்பெண் என் தயக்கத்தை போக்கிவிட்டார். உடனே இந்த படம் ஆரம்பித்து விட்டேன். என் தயாரிப்பாளர்கள் கதையே கேட்கவில்லை. முழு ஆதரவு தந்தார்கள். அரண்மனை முதல் மூன்று படங்களை விட இப்படத்தில் எல்லாமே பிரம்மாண்டமாக இருக்கும். இப்படத்தில் இரண்டு ஹீரோயின், ஒரு ஹீரோயின் ஒரே நேரத்தில் அவரைப் பார்த்தால் பயமாகவும் இருக்கனும், பரிதாபமும் வரனும், குழந்தைக்கு அம்மாவாக வரணும், யாரை அணுகுவது என்று நினைத்தேன். ஆனால் தமன்னா கேட்டவுடன் ஒத்துக்கொண்டார். அட்டகாசமாக நடித்துள்ளார். அவர் கேரியரில் இப்படம், அவரது வித்தியாசமான முகத்தைக் காட்டும். இப்படம் அவருக்கு பெயர் சொல்லும் படமாக இருக்கும். ராஷிக்கண்ணா எனக்கு மிகவும் கம்ஃபோர்ட்டான ஆர்டிஸ்ட். என்னை முழுமையாக நம்புவார். இப்படத்தில் நன்றாகச் செய்துள்ளார். அரண்மனை படத்தில் காமெடி முக்கியம். என் படத்திற்கு ரசிகர்கள் வரக்காரணம் காமெடி தான், அதை நிறைவேற்றனும். பேப்பரில் நாங்கள் எழுதுவது பாதி தான், ஆர்டிஸ்ட் தான் அதை முழுதாக மாற்ற வேண்டும். அந்த வகையில் யோகி பாபு, சரளா மேடம், VTV கணேஷ், சிங்கம் புலி எல்லோரும் கலக்கியுள்ளார்கள். மொத்தத்தில் அரண்மனை 4 மனதிற்கு மிகப்பிடித்த படமாக வந்துள்ளது. பின்னணி இசையில் வழக்கமான பேய் படம் போல இல்லாமல் வித்தியாசமாகச் செய்துள்ளார் ஆதி. எனக்கு எப்போதும் சப்போர்ட்டாக இருக்கும் என் மனைவிக்கு நன்றி. படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. படம் ஏப்ரலில் வருகிறது ஆதரவு தாருங்கள் நன்றி.

அரண்மனை படத்தின் நான்காம் பாகம், மிகப்பெரும் பொருட்செலவில், பெரும் நட்சத்திரக்கூட்டணியுடன் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. முதல் மூன்று பாகங்கள் போலவே குடும்பங்கள் கவலை மறந்து சிரித்துக் கொண்டாடும்  வகையிலான ஹாரர் காமெடியாக இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சுந்தர் சி.

இப்படத்தில் சுந்தர் சி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, கே ஜி எஃப் ராம், VTV கணேஷ், சேசு, ஜேபி, டெல்லி கணேஷ், சந்தோஷ் குமார், தீரஜ் விஷ்ணு ரத்தினம், S.நமோ நாராயணன், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி உட்பட பெரும் எண்ணிக்கையிலான நட்சத்திரக்கூட்டம் இணைந்து நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப குழு

தயாரிப்பு - Avni Cinemax (P) Ltd & Benz Media PVT LTD
எழுத்து இயக்கம் - சுந்தர் சி
வசனம் - வெங்கடேஷ்
இசை : ஹிப்ஹாப் தமிழா
ஒளிப்பதிவு - இசக்கி கிருஷ்ணசாமி
படத்தொகுப்பு : ஃபென்னி ஆலிவர்
கலை இயக்கம் - பொன்ராஜ்
சண்டைப்பயிற்சி - ராஜசேகர் K
ஸ்டில்ஸ் - V.ராஜன்
மக்கள் தொடர்பு - சதீஷ் (AIM)

மீண்டும் இணையும் தசரா கூட்டணி - நானி 33 படத்தின் அறிவிப்பு வெளியீடு


மீண்டும் இணையும் தசரா கூட்டணி - நானி 33 படத்தின் அறிவிப்பு வெளியீடு


காதல் மற்றும் ஆக்ஷன் டிராமா ஜானரில் வெளியான தசரா திரைப்படம் கடந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக மாறியது. மேலும் நானி நடிப்பில் வெளியாகி அதிக வசூல் செய்த படமாகவும் தசரா அமைந்தது. இந்த நிலையில், தசரா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

நானி மற்றும் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலாவுடன் புதிய படத்தில் இணைகிறார். நானி 33 என தற்காலிக தலைப்புடன் துவங்கப்பட்டு இருக்கும் இந்த படத்தை ஸ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் (எஸ்.எல்.வி. சினிமாஸ்) சார்பில் சுதாகர் செருக்குரி தயாரிக்கிறார்.

தசரா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஸ்ரீகாந்த் ஒடேலா, முதல் படத்திலேயே அதிக வசூலை குவித்து நல்ல வரவேற்பை பெற்றார். தனது முதல் படத்திலேயே நானியை இதுவரை யாரும் பார்த்திராத அளவுக்கு வித்தியாசமாக வெளிப்படுத்தி இருந்தார்.

புதிய படம் தொடர்பாக வெளியிடப்பட்ட போஸ்டரில் ரத்தம் தெறிக்க சிவப்பு நிறம் கொண்டிருக்கிறது. இதன் பின்னணியில் நானியின் முகம் மாசாக காட்சியளிக்கிறது. இத்துடன் அவர் சிகரெட் பிடிக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான போஸ்டரில், தலைவராக இருக்க அடையாளம் தேவையில்லை என்ற வாசகம் இடம்பெற்று இருக்கிறது.

முதல் போஸ்டரில் இருந்தே அடுத்த படம் ரத்தம் தெறிக்கும் வகையில் ஆக்ஷன் கதைக்களம் கொண்டிருக்கும் என்பதை படக்குழு தெரியப்படுத்தி இருக்கிறது. ஸ்ரீகாந்த் தனது அடுத்த படத்திலும் நானியை சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் காட்சிப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த படத்தை பெரும் பொருட்செலவில் எடுக்க தயாரிப்பாளர் சுதாகர் செருக்குரி முடிவு செய்திருக்கிறார். குறிப்பிட்ட ஜானரில் படமெடுக்காமல், வித்தியாசமான கதைகளை தேர்வு செய்வதில் கவனம் செலுத்துகிறார். அந்த வகையில், இவர் ஸ்ரீகாந்த் ஒடேலாவுடன் மீண்டும் இணைய இருக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படம் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.

படக்குழுவினர்

நடிகர் - நானி

தொழில்நுட்பக் குழு:
 இயக்குனர்: ஸ்ரீகாந்த் ஒடேலா
 தயாரிப்பாளர்: சுதாகர் செருக்குரி
 பேனர்: எஸ்.எல்.வி.சினிமாஸ்
 பி.ஆர்.ஓ: சதீஸ்குமார்

 மார்கெட்டிங்: பர்ஸ்ட் ஷோ 

ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று வரும் 'பவுடர்' திரைப்படம்


 ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று வரும் 'பவுடர்' திரைப்படம்


இணையவாசிகளின் பாராட்டு மழையை தொடர்ந்து 'பவுடர்' படத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டம்



நடிகர் சாருஹாசனை வைத்து 'தாதா 87' திரைப்படத்தை இயக்கியவரும், வெள்ளிவிழா நாயகன் மோகன் நடிப்பில் 'ஹரா' மற்றும் அமலா பால் சகோதரர் அபிஜித் பால் நடிக்கும் திரைப்படம் உள்ளிட்டவற்றை இயக்கி வருபவருமான விஜய் ஸ்ரீ ஜி, மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் நடிப்பில் உருவாக்கிய 'பவுடர்' படம் திரையரங்குகளில் வெளியாகி பல்வேறு தரப்புகளிடமிருந்து பாராட்டுகளை பெற்றது. 


தற்போது 'பவுடர்' திரைப்படம் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியாகி இணையவாசிகள் மற்றும் இன்றைய தலைமுறையினரின் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து, இத்திரைப்படத்தை திரையரங்குகளில் மீண்டும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 


'பவுடர்' படத்தில் மனைவியிடம் திட்டு வாங்கும் கணவனாக இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி நடித்துள்ள காட்சிகள், குறிப்பாக பணம் கிடைத்தவுடன் அதிகாலையில் மனைவியை ஷாப்பிங்கிற்கு அழைக்கும் காட்சி, ரசிகர்களிடம் பாராட்டு பெற்றுள்ளது. வையாபுரி மற்றும் அனித்ரா நாயர் தந்தை-மகளாக தோன்றும் சென்டிமென்ட் காட்சிகள் ரசிகர்களின் இதயங்களை தொட்டுள்ளன. 'பவுடர்' திரைப்படத்திற்கு பிறகு லியோ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடிக்க வையாபுரிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


ஒரு காவல் துறை அதிகாரியாக மிகவும் தேர்ந்த நடிப்பை மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் 'பவுடர்' திரைப்படத்தில் வெளிப்படுத்தி இருந்தார். சினிமா நிகழ்ச்சிகளில் பல வண்ண உடைகளில் அவரை பார்த்தவர்கள் காக்கி சீருடையில் 'பவுடர்' படத்தில் அவர் கலக்குவதை வெகுவாக ரசித்து வருகின்றனர். 


சாந்தினி தேவா, 'மொட்டை' ராஜேந்திரன், சிங்கம்புலி, வையாபுரி, ஆதவன், 'சில்மிஷம்' சிவா, விக்கி ஆகியோர் நடித்துள்ள 'பவுடர்' படத்தை விஜய் ஸ்ரீ ஜி இயக்க, ஜி மீடியா பேனரில் ஜெயஸ்ரீ விஜய் தயாரித்துள்ளார்.


'பவுடர்' குழு


கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் - விஜய் ஸ்ரீ ஜி


இசை - லியாண்டர் லீ மார்ட்


ஒளிப்பதிவு - ராஜபாண்டி


மக்கள் தொடர்பு - நிகில் முருகன்


படத்தொகுப்பு - குணா


கலை இயக்குநர் - சரவணா


சண்டைக்காட்சி - விஜய்


உடைகள் - வேலவன்


புகைப்படங்கள் - ராஜா


சவுண்ட் ஸ்டுடியோ - சவுண்ட் ஹோலிக் ஸ்டுடியோ


ஒலி வடிவமைப்பு - பிரேம்குமார்


ஒலிக்கலவை - நவீன் ஷங்கர்


டிஐ வண்ணம்: வீரராகவன்


வடிவமைப்பு - ஜி டிசைன்ஸ்


தயாரிப்பு மேலாளர் - சரவணன்


தயாரிப்பு நிறுவனம் - ஜி மீடியா


தயாரிப்பாளர் - ஜெய ஸ்ரீ விஜய், கோவை எஸ் பி மோகன் ராஜ்


ஆடியோ லேபிள் - டிவோ

Saturday, March 30, 2024

சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த படமாக வருகிறது "வா பகண்டையா"!

சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த படமாக வருகிறது "வா பகண்டையா"!

ஒளி ரெவிலேஷன் நிறுவனம் சார்பில், பி.ஜெயகுமார் இயக்கி, தயாரித்துள்ளார்!

இளைஞர்கள் அறிவு ஆயுதம் ஏந்தும் வகையிலும், காதலர்கள் உறவுகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளும் வகையிலும் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, பி.ஜெயகுமார் இயக்கியுள்ளார்!

சினிமா என்பது பொழுதுபோக்கையும் தாண்டி, மக்களிடம் செய்திகளை கொண்டு சேர்க்க கூடிய மிக்கப்பெரிய ஊடகமாகும். அதை வைத்துக்கொண்டு மக்களை நல்வழிப்படுத்தவும் முடியும், நாசமாக்கவும் முடியும், என்பதை தமிழ் சினிமாவில் 
சமீபத்தில் வெளியான சில படங்கள் நிரூபித்துக் கொண்டு வருகிறது. அந்த வகையில், கமர்ஷியலாக உருவாகி இருந்தாலும், 'சமூக அவலங்களை பேசும் ஒரு திரைப்படமாக உருவாகியுள்ளது ‘வா பகண்டையா'.

ஹீரோவாக விஜய தினேஷ் நடிக்க, ஆர்த்திகா ஹீரோயினாக நடித்திருக்கிறார். வில்லனாக அஜீத் கோலி நடிக்க, மற்றொரு வில்லனாக மும்பை நடிகர் யோகி ராம் நடிக்கிறார். இவர்களுடன் ஆர்.சுந்தர்ராஜன், 
நிழல்கள் ரவி, மீரா கிருஷ்ணன், நித்திஷ் வீரா, பவர் ஸ்டார் சீனிவாசன், மனோபாலா, 
காதல் சுகுமார், பிளாக் பாண்டி, போண்டா மணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

எஸ்.ஏ.ராஜ்குமார் இசை அமைத்துள்ளார். ஆரி ஆர்.ஜே.ராஜன் ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் அர்ஸ் 
படத்தொகுப்பு செய்கிறார். சிவசங்கர், அக்‌ஷை ஆனந்த், விஜி ஆகியோர் நடனம் அமைக்க, இடி மின்னல் இளங்கோ 
சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.

'வா பகண்டையா’ ஏப்ரல் 12'ம் தேதி 
திரையரங்குகளில் வெளியாகிறது!

@GovindarajPro

கனா vs Everyone" - தைரியம், கனவுகள் மற்றும் நெகிழ்ச்சியைப் பற்றிய ஒரு அழுத்தமான கதை.*

*"கனா vs Everyone" - தைரியம், கனவுகள் மற்றும் நெகிழ்ச்சியைப் பற்றிய ஒரு அழுத்தமான கதை.*

இந்திய டிஜிட்டல் உள்ளடக்க வெளியின் பரபரப்பான உலகில், "கனா vs Everyone" வெளியீட்டின் மூலம் புதிதாக ஒரு ரத்தினம் பிரகாசிக்க உள்ளது. வடக்கில் இருந்து வைரல் ஃபீவர் மற்றும் தெற்கில் இருந்து ட்ரெண்ட் லவுட் ஆகிய இரண்டு டிஜிட்டல் ஜாம்பவான்களும் உங்களுக்கு இதை இணைந்து வழங்குவதோடு, இந்த விறுவிறுப்பான தொடரின் கதை, அனைத்து வயதினரையும் பிரதிபலிக்கும் விதத்தில் அதன் நேர்த்தியான கதாபாத்திரங்கள், சக்திவாய்ந்த கதை மற்றும் உலகளாவிய கருப்பொருள்கள் மூலம் தமிழ் பார்வையாளர்களையும் கவரும் என்று உறுதியளிக்கிறார்கள்.


அசல் இந்திப் படைப்பான ‘சப்னே vs Everyone’ மூலம் ஈர்க்கப்பட்ட ட்ரெண்ட் லவுட், தி வைரல் ஃபீவருடன் கூட்டு சேர்ந்து, அசல் படைப்பின் தன்மை மாறாமல் அதை சிறந்த முறையில் தமிழ் பிராந்தியத்திற்கு ஏற்றவாறு வழங்குகிறது.  IMDb-இல் அதிக விமர்சனம் செய்யப்பட்டு 9.4 என சிறந்த மதிப்பிடப்பட்ட, இந்த டிஜிட்டல் தொடரானது, கனவுளைப் பற்றிய தேடலையும்  மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத தடைகளை எதிர்கொள்ளும் விடாமுயற்சியின் வலிமையை பறைசாற்றும் ஒரு கதை ஆகும். 

பரபரப்பான கலாச்சாரத்துடன் கூடிய வேகமான நகர்ப்புறப் பகுதியின் பின்னணியில் அமைக்கப்பட்ட, கனா vs Everyone ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த உலகில் தங்கள் சொந்த பாதையை செதுக்க தீர்மானித்த இரண்டு இளைஞர்களின் பயணத்தை பற்றிய கதை ஆகும். "கனா vs Everyone" தொடரில் மிகவும் மனதைக் கவரும் அம்சங்களில் ஒன்றாக தாய்க்கும் மகனுக்கும் இடையிலான சிறப்பான பிணைப்பை சித்தரிப்பதாகும்.  அவர்கள் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் அசைக்க முடியாத ஆதரவும் நிபந்தனையற்ற  அன்பும், ஒரு வலுவான குடும்பக் கதையில், கஷ்டமான மற்றும் தளர்வான சூழ்நிலையில் ஒருவருக்கொருவர் ஆதரவாக நிற்பதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றன.

கூடுதலாக, கனா vs Everyone தொடரானது வாழ்க்கை என்றழைக்கப்படும் போரில் சக ஊழியர்களுக்கு இடையிலான நட்புறவையும், ரியல் எஸ்டேட் மாஃபியாவின் இருண்ட பக்கங்களையும், சாத்தியமற்ற வழிகளில் சில அம்சங்களை பயன்படுத்தும் மோசமானவர்களை பற்றி தெரிந்து கொள்ள உதவுகிறது.

சக்திவாய்ந்த நிகழ்ச்சிகள், மூச்சடைக்கக்கூடிய காட்சிகள் மற்றும் மயக்கும் ஒலிப்பதிவுகள் நிறைந்த கனா vs Everyone சினிமாவுக்கான பிரமாண்டத்துடன் வழங்கப்படும் ஒரு அழுத்தமான தொடராகும்.  அதன் சிந்தனையைத் தூண்டும் கதைக்களத்தின் மூலம், இந்தத் தொடர் ஒருமைப்பாடு, விசுவாசம், பின்னடைவு மற்றும் அநீதிக்கு எதிராக நிற்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நினைவூட்டுகிறது.

நீங்கள் இணைய தொடர்களை அதிகமாகப் பார்ப்பவராக இருந்தாலும், இதயப்பூர்வமான நாடகத்தின் ரசிகராக இருந்தாலும் அல்லது உத்வேகத்தைத் தேடும் ஒருவராக இருந்தாலும், கனா vs Everyone  குடும்பத்துடன் கட்டாயம் பார்க்க வேண்டிய தொடராகும்.   29-மார்ச்-2024 அன்று மாலை 6 மணிக்கு, பீயிங் தமிழன் யூடியூப் பக்கத்தில் பிரத்யேகமாக வெளியான கனா vs Everyone-ன் முதல் எபிசோடின் கொண்டாட்டத்தில் எங்களுடன் இணைந்திருங்கள்.  இனிவரும் அடுத்தடுத்த எபிசோடுகள் ஒவ்வொன்றாக ஒவ்வொரு வாரமும் வெளியாகும்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் முன்னேறவும், உயர்த்தப்படவும், உத்வேகம் பெறவும் தயாராகுங்கள்.

Sofa Bhai's 'School Leave Vittachu' Album Takes the Internet by Storm"*

*Sofa Bhai's 'School Leave Vittachu' Album Takes the Internet by Storm"*

In a recent release from Be Ready Music, the young star 'Sofa Bhai' is capturing the essence of childhood with the album "School Leave Vittachu," marking a new era in entertainment for kids. The album, spearheaded by the dynamic Dongli Jumbo and composed by Sudarshan M. Kumar, has quickly become a sensation, resonating with children and adults alike.
The lyrics are written by Sudarshan. M. Kumar himself.
Sofa Bhai, now a household name thanks to his viral video selling extraordinary sofas, has transitioned seamlessly into the music world. With his captivating voice and infectious energy, he brings to life the playful spirit of childhood in each track of the album.

The album's success underscores Be Ready Music's commitment to innovative content creation. Sudarshan's musical genius combined with Dongli Jumbo's creative direction is sure to capture the imagination of all.

Moreover, renowned choreographer Richi Richardson has choreographed a dance routine for one of the album's tracks, adding another dimension to Sofa Bhai's artistic expression. This collaboration further solidifies the album's status as a groundbreaking project in the realm of children's entertainment.

What sets "School Leave Vittachu" apart is its ability to resonate with a diverse audience. Whether it's the catchy tunes, relatable lyrics, or Sofa Bhai's magnetic charm, the album has struck a chord with listeners of all ages, earning widespread acclaim and topping the charts.

This album marks a significant milestone as it pioneers a new genre of children's entertainment in Tamil, setting a high standard for future endeavors in the industry. With its universal appeal and infectious energy, "School Leave Vittachu" is poised to leave a lasting impact on generations to come.

Listeners can immerse themselves in the magic of "School Leave Vittachu" by following this link: https://bit.ly/4adhGjH

ஆண்களும் கூட கண்ணீர் விட்டு ஃபீல் பண்ணும் படமாக ‘சாமானியன்’ இருக்கும்” ; ராமராஜன் பெருமிதம்


 ஆண்களும் கூட கண்ணீர் விட்டு ஃபீல் பண்ணும் படமாக ‘சாமானியன்’ இருக்கும்” ; ராமராஜன் பெருமிதம்

“ராமராஜன் இருக்கார்.. பாட்டு எங்கேய்யா ?” ; சாமானியன் இயக்குநர் மீது கோபப்பட்ட இளையராஜா  

“சின்ன மக்கள் திலகம்” ; ‘சாமானியன்’ ராமராஜனுக்கு இயக்குநர் ஆர்.வி உதயகுமார் புகழாரம்

”9 வருடமாக போராடிய என்னை இயக்குநராக்கியது ராமராஜனின் ராசியான கை தான்” ; கே.எஸ்.ரவிக்குமார்

“வனவாசம் முடிந்து வந்துள்ள ‘சாமானியன்’ ராமராஜனுக்கு இனி பட்டாபிஷேகம் தான்” ; இயக்குநர் பேரரசு 

“ராமராஜன் ஓடுகிற குதிரையில் ஏறுகிறவர் அல்ல.. பல குதிரைகளை ஓட வைத்தவர்” ; இயக்குநர் பேரரசு



“இசைஞானியின் காம்பவுண்டுக்குள் என்னை அனுமதித்தவரே பவதாரணி தான்” ; சாமானியன் இயக்குநர் ராகேஷ் நெகிழ்ச்சி

நல்ல தரமான படங்களை தயாரித்து வரும் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரிப்பில்  உருவாகியுள்ள  படம் ‘சாமானியன்’. கிட்டத்தட்ட பத்து வருட இடைவெளிக்குப்பிறகு ‘மக்கள் நாயகன்’ ராமராஜன் இப்படத்தின் மூலம் கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்கிறார். அதுமட்டுமல்ல. ராமராஜனின் திரையுலக பயண வெற்றியின் பின்னணியில் தூணாக இருந்து அவரது படங்களுக்கு காலத்தால் அழியாத இனிமையான பாடல்களை கொடுத்த இசைஞானி இளையராஜா, தற்போது 23 வருடங்களுக்கு பிறகு ‘சாமானியன்’ படத்தின் மூலம் மீண்டும் ராமராஜனுடன் கைகோர்த்துள்ளார்

தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய  படங்களை இயக்கிய இயக்குநர் R.ராகேஷ் இயக்கியுள்ள இப்படத்திற்கு கதாசிரியர் கார்த்திக் குமார் கதை எழுதியுள்ளார். கதாநாயகிகளாக நக்ஸா சரண், ஸ்மிருதி வெங்கட், அபர்ணதி நடிகின்றனர். முக்கிய வேடங்களில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், லியோ சிவகுமார், ராஜாராணி பாண்டியன், மைம் கோபி, போஸ் வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்..  ஒளிப்பதிவை அருள்செல்வன் மேற்கொள்ள, படத்தொகுப்பை  ராம்கோபி கவனிக்கிறார். சண்டைக்காட்சிகளை மிரட்டல் செல்வா வடிவமைத்திருக்கிறார்.

படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ‘சாமானியன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.  இந்த நிகழ்வில் நாயகன் ராமராஜன் உள்ளிட்ட படக்குழுவினருடன் இயக்குநர்கள் கே.எஸ் ரவிக்குமார், ஆர்வி உதயகுமார், பேரரசு, சரவண சுப்பையா, ரோபோ சங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 

இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் பேசும்போது, “ரஜினி சாரே ஒருமுறை என்னிடம் ராமராஜன் பற்றி குறிப்பிடும்போது, அவருக்கு இருக்கும் அந்த மாஸ் ஓப்பனிங் கலெக்சனை பார்த்து, நமக்கு போட்டியாக முன்னாடி போய்க் கொண்டிருக்கிறார் என பயந்துவிட்டேன் என்று கூறினார். நான் பல வருடங்களாக உதவி இயக்குநராக பணியாற்றிய சமயத்தில் அந்த படங்கள் எதுவும் பெரிதாக வெற்றி பெறாத நிலையை நான் பணியாற்றிய முதல் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்றால் அது ராமராஜன் நடித்த ‘ராஜா ராஜா தான்’ நான் அதற்கு முன் பல படங்கள் பணியாற்றி இருந்தாலும் முதன்முதலில் ஸ்டார்ட் கட் ஆக்சன் சொன்னது ராமராஜனுக்கு தான். ராஜ்கிரண் தயாரிப்பில், கஸ்தூரிராஜா கதை, வசனம் எழுதிய ‘பெத்தவ மனசு’ படத்தில் நான்  இணை இயக்குனராக பணியாற்றினேன். அந்த படத்தில் ராமராஜன் ஹீரோ மற்றும் டைரக்டராக இருந்ததால் அவர் நடிக்கும் காட்சிகளை நான் தான் அவருக்கு ஸ்டார்ட் ஆக்சன் சொல்லி இயக்கினேன். அதுதான் என்னுடைய பிள்ளையார் சுழி. அதன்பிறகு ராஜ்கிரன் ஹீரோவாகிவிட்டார். கஸ்தூரிராஜா இயக்குநராகிவிட்டார். நானும் புரியாத புதிர் மூலமாக இயக்குநர் ஆகிவிட்டேன். 1981 லிருந்து 9 வருடங்கள் வரை ராசி இல்லாத சூழல் இருந்த நிலையில் ராசியான மனிதரான ராமராஜன் மூலமாக எனக்கு எல்லாமே சென்டிமென்ட் ஆக மாறியது. இதுதான் எனக்கும் அவருக்குமான பந்தம். 

இந்த படத்தில் நடிக்க இயக்குநர் ராகேஷ் வந்து அழைத்தபோது ராமராஜன் இருக்கிறார் என்றால் நான் ஒரு நாள் வந்து போகும் கெஸ்ட் ரோலில் கூட நடிக்க தயார் என்று கூறி விட்டேன். அவர் ஏன் இப்படி நடக்கிறார், இருக்கிறார் என்று யாரும் அவரை தவறாக நினைக்காதீர்கள். அந்த விபத்திற்கு பிறகு தான் அவருக்கு இப்படி ஆகிவிட்டது. அவர் இப்போது நம்முடன் இருக்கிறாரே என்றால் அது அந்த ஆண்டவனின் அருள் தான். அவருடன் காரில்  சென்றவர்கள் எல்லாம் விபத்தில் இறந்துவிட கடவுள் அருளால் உயிர் பிழைத்த அவர். இன்று மீண்டு வந்து மீண்டும் கதாநாயகனாக இளையராஜாவின் இசையில் பாடுகிறார் என்றால் அதுதான் இறைவனின் அருள்.

இந்த நிகழ்விற்கு இளையராஜா வரவில்லை.. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவர் வீட்டிலும் சில நாட்களுக்கு முன் சோக நிகழ்வு நடந்தது. பரவாயில்லை... ராமராஜனின் அடுத்த படத்திற்கும் அவர்தான் இசையமைக்கிறார் என்பதால் அப்போது பார்த்துக் கொள்வோம். இளையராஜாவுடன் நான் அவ்வளவு நெருங்கி பழகியது இல்லை என்றாலும் நான் ‘ராஜா ராஜா தான்’ படத்தில் பணியாற்றிய போது அந்த படத்திற்கு இசையமைத்தது இளையராஜா தான். அதன் பிறகு பல வருடங்கள் கழித்து ஏவிஎம் தயாரிப்பில் சக்திவேல் என்கிற படத்தை இயக்கியபோது அதற்கு இளையராஜா தான் இசை அமைத்தார். அப்போது ஒரு பாடல் இதுபோல வேண்டும் என நான் உதாரணமாக சொல்லும் போது என்னுடைய முந்தைய படமான புருஷ லட்சணம் படத்தில் இருந்து கோலவிழியம்மா என்கிற சாமி பாடலை பாடிக் காட்டினேன். 

அதன் பிறகு வெளியே வந்ததும் ஏவிஎம் சரவணன் என்னை அழைத்து அது தேவா சார் பாட்டு. அதை ஏன் இளையராஜாவிடம் சொன்னாய், இருவரும் போட்டியாளர்களாச்சே என்று என்னை செல்லமாக கடிந்து கொண்டார். அதன் பிறகு மதியம் அதேபோன்று இன்னொரு பாடலுக்காக அமர்ந்த போது இதற்கு என்ன பாடல் இன்ஸ்பிரேஷனாக சொல்லப் போகிறாய் என்று ராஜா சார் கேட்டார். உடனே சுதாரித்துக் கொண்டேன். அப்போது எனக்கு ராமராஜன் சார் தான் ஞாபகம் வந்தது. உடனே மாங்குயிலே பூங்குயிலே போல ஒரு பாடல் வேண்டுமென கேட்டேன். அப்படித்தான் ‘மல்லிகை மொட்டு மனச தொட்டு’ என்று ஒரு பாடலை போட்டு தந்தார். அந்த பாடல் அப்போது மிகப்பெரிய ஹிட் ஆகி இப்போது வரை ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. என்னுடைய வாழ்க்கையில் அந்தந்த சமயங்களில் நடக்கும் சம்பவங்களில் எல்லாமே ஒருவர் உள்ளே வருவார்.. அவர் தான் ராமர்.. ராமராஜன்” என்றார்.

நடிகை வினோதினி பேசும்போது, “11 வருடங்களுக்கு பிறகு ராமராஜன் மீண்டும் திரையில் தோன்றப் போகும் இந்த படத்தில் எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது பெருமையாக இருக்கிறது. பூந்தமல்லி அருகில் அபார்ட்மெண்ட் ஒன்றில் படப்பிடிப்பை நடத்திய போது எதிர்பாராத விதமாக அங்கே படப்பிடிப்பை தொடர முடியாத சூழல் ஏற்பட்டதும் உடனடியாக அதற்கு மாற்றாக அதே போன்று ஒரு இடத்தை வளசரவாக்கத்தில் ஏற்பாடு செய்து இரவு பகலாக 72 மணி நேரம் தூங்காமல் பணியாற்றி காட்சிகளை படமாக்கினார் இயக்குநர் ராகேஷ். அவர் ஒரு தயாரிப்பாளருக்கான இயக்குனர்” என்று கூறினார்

நடிகர் ரோபோ சங்கர் பேசும்போது, “ஒரு விருது வழங்கும் விழாவில் நானும் ராமராஜன் அண்ணனும் ஒன்றாக கலந்து கொண்டோம். எனக்கு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டிருந்தது யார் வழங்கப் போகிறார்கள் என்று எனக்கு தெரியாத நிலையில் அவர் கையாலேயே அந்த விருதை பெற்றேன். அன்று அவர் கலர் கலராக உடை அணிந்ததை கிண்டல் பண்ணி பேசினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை இளைஞர்கள் அந்த உடையை தான் ட்ரெண்டிங்காக அணிந்து வருகிறார்கள்” என்று பேசினார்.

நடிகை நக்ஸா சரண் பேசும்போது, “என்னுடைய வாழ்க்கையில் நான் நடித்த முதல் படம் ‘சாமானியன்’. இந்த படத்தில் ராமராஜனின் மகளாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய சந்தோசம். எம் எஸ் பாஸ்ர், ராதாரவி படம் முழுக்க எனக்கு வழிகாட்டியாக இருந்து நடத்தினார்கள். அவர்களுக்கு நன்றி.. இளையராஜா சாரின் பெயரை கேட்டாலே ஒரு பாசிட்டிவான அதிர்வு ஏற்படும். அவருடைய இசையில் நான் என்னுடைய முதல் படத்தில் நடித்ததை ஆசிர்வதிக்கப்பட்டதாக கருதுகிறேன். முதல் படத்தில் மிகவும் அழுத்தமான, ஆழமாக கதாபாத்திரம் கொடுத்ததற்காக இயக்குநர் ராகேஷ் மற்றும் தயாரிப்பாளர் மதியழகன் அவர்களுக்கு என்னுடைய நன்றி” என்று பேசினார்.

இயக்குநர் சரவண சுப்பையா பேசும்போது, “தயாரிப்பாளர் மதியழகன் இன்னும் இரண்டு படங்களை தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு மிகப்பெரிய வெற்றியை நீங்கள் தரும் பட்சத்தில் ஒரு மிகப்பெரிய தயாரிப்பாளராக தொடர்ந்து பயணிப்பார். அதேபோல இயக்குநர் ராகேஷ் திறமையான ஒரு டெக்னீசியன். அவர் இந்த படத்தை எடுத்துக் கொண்ட விதம் ரொம்பவே புதிதாக இருந்தது. இசைஞானி இளையராஜாவின் இசையில் எனக்கு இது நான்காவது படம். ஒரு மேஜிக்கல் அசைவு இல்லாமல் எந்த படமும் என் நடக்காது. 25 வருடங்களுக்குப் பிறகு இசைஞானியும் மக்கள் நாயகனும் ஒன்றாக இணைந்தது, 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ராமராஜன் திரையில் தோன்றுவதற்கு காரணம், 7 வருடங்களுக்கு பிறகு இயக்குநர் ராகேஷ் மீண்டும் இந்த படத்தை இயக்க காரணம் படத்தின் ஸ்கிரிப்ட் தான். ராகேஷ் என்னிடம் பேசும்போது, சிட்டிசனாகிய நீங்கள் இந்த சாமானியனை வாழ்த்த வேண்டும் என்றார். சாமானியனே ஒரு சிட்டிசன் தானே.. இந்த படத்தில் ராமராஜனுக்கு வழக்கமான கிராமத்து பெயராக இல்லாமல் சங்கர் நாராயணன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு கதாசிரியர் கார்த்திக் குமார் தன் தாத்தா பெயரை மனதில் வைத்து எழுதியதாக கூறினாலும் இயக்குனர் ராகேஷ் அதை படத்தில் வைத்திருப்பதற்காந காரணத்தை நீங்கள் படத்தில் பார்க்கும்போது செமையாக இருக்கும்” என்று கூறினார்.

நாயகன் லியோ சிவகுமார் பேசும்போது, “இந்த படத்தின் டீசர் வெளியீடு தி.நகரில் நடந்தபோது ராமராஜன் சாரை பார்க்க வேண்டும் என்பதற்காக என்னுடைய நண்பருடன் அங்கே சென்றேன். அப்போது என்னை கவனித்த தயாரிப்பாளர் மதியழகன், சில நாட்கள் கழித்து என்னை இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் இருப்பதாக கூறி அழைத்து நடிக்க வைத்தார். சிறுவயது காலங்களில் இளையராஜாவின் பாடல்கள் கேட்டு வளர்ந்த எனக்கு இன்று அவர் எனது முகத்தைப் பார்த்து ஒரு பாடல் போடுகிறார் என நினைக்கும் போது மிகப் பெருமையாக இருக்கிறது” என்று பேசினார்.

நடிகர் எம்.எஸ் பாஸ்கர் பேசும்போது, “ராமராஜனின் ‘சோலை புஷ்பங்கள்’ படத்தில் நான் டப்பிங் பேசிய காலத்தில் இருந்து இன்று இந்த படத்தில் இணைந்து நடித்ததுவரை எல்லாரிடமும் ஒரே போல பழகக் கூடியவர் ராமராஜன். எனக்கு ஒரு சின்ன ஆசை. அது நிறைவேறும். நிறைவேறனும்.. இப்போது இங்கே இருக்கக்கூடிய மக்கள் திரள் இந்த படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவிலும் இருக்க வேண்டும். கரகாட்டக்காரன் படம் போல அதையும் மீறி இந்த படம் ஓட வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். ராமராஜன் மறுபடியும் இடைவெளி இல்லாமல் நடிக்க வேண்டும். மக்கள் நாயகன் என்கிற பட்டம் அவருக்கு மட்டும் தான்.. அதை யாரும் எடுத்துக்கொள்ள முடியாது” என்று கூறினார்.

இக்குநர் ஆர்.வி உதயகுமார் பேசும்போது, “நடிகர் ராமராஜனின் மனம் எப்படி இருக்கிறதோ அதேபோன்று இயல்பான ஒரு நடிகர். ராமராஜனை என்னால் இயக்க முடியாமல் போய்விட்டதே என்கிற வருத்தம் எனக்கு இருக்கிறது. நான் படம் இயக்கிய சமயத்தில் எதிர்பாராத விதமாக ஒரு விநியோகஸ்தராக ரஜினியின் தர்மத்தின் தலைவன் படத்தை வாங்கியிருந்தேன். ஆனால் சில காரணங்களால் அது தள்ளிப்போனது. அப்போது ராம நாராயணன் என்னிடம் அதற்கு பதிலாக ராமராஜன் படம் ஒன்றை தருகிறேன், அதை ரிலீஸ் செய்யுங்கள் என்று கூறினார். ரஜினி படத்திற்கு பதிலாக ராமராஜன் படத்தை ரிலீஸ் செய்வதா என்கிற யோசனைல் ஏற்பட்டது. அதனால் அதை என்னால் வாங்க முடியவில்லை. அந்த படம் தான் கரகாட்டக்காரன். கிட்டத்தட்ட பல கோடி ரூபாய் வரை அந்த படம் வசூலித்தது. ஆனால் ரஜினி படத்தை வாங்கி வெளியிட்ட வகையில் எனக்கு மிகப்பெரிய நட்டம் ஏற்பட்டது. ராமராஜன் மனது பூவை விட மென்மையானது. உண்மையிலேயே இவர்தான் சின்ன மக்கள் திலகம். தான் நேசித்தவர்களை எல்லாம் தயாரிப்பாளர்களாக மாற்ற முயற்சித்து அதில் வெற்றி பெற்றவர் ராமராஜன்” என்று பேசினார்

இயக்குனர் பேரரசு பேசும்போது, “ராமராஜன் வனவாசம் முடிந்து வந்துள்ளதாக எல்லோரும் சொன்னார்கள் வனவாசம் முடிந்ததும் பட்டாபிஷேகம் தான். சாமானியன் ஒரு பட்டாபிஷேகத்திற்கு தயாராகி விட்டார். நதியா வளையல், குஷ்பூ இட்லி என நடிகைகளை மட்டுமே புகழ்ந்த ரசிகர்கள் மத்தியில் ராமராஜன் சட்டை என ஒரு நடிகரையும் புகழ வைத்தது ராமராஜன் தான். எனக்கும் அவருக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. எனக்கும் அவருக்கும் குருநாதர், தாய் வீடு எல்லாமே இயக்குநர் ராம நாராயணனும் தேனாண்டாள் பிலிம்ஸும் தான். அவருக்கு எப்படி ஊர் ராசியோ எனக்கும் அதே போல ஊர் ராசி தான்.. இப்போதெல்லாம் இரண்டு படங்கள் ஓடி விட்டாலே புது கம்பெனிகளுக்கு மட்டுமல்ல, தமிழ் கம்பெனிகளுக்கே கால்சீட் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். ஆனால் ராமராஜன் பெரிய நடிகராக மாறினாலும் சிறிய தயாரிப்பாளர்கள், தன்னிடம் உதவியாளராக பணியாற்றிய இயக்குனர்கள் ஆகியோருக்கு தான் முன்னுரிமை கொடுத்தார். அப்படி ஒரு மனசு அவருக்கு மட்டும் தான் உண்டு. ராமராஜன் ஓடுகிற குதிரையில் ஏறுகிறவர் அல்ல.. பல குதிரைகளை ஓட வைத்தவர்.. தனக்கு ஏற்பட்ட விபத்திலிருந்து மீண்டு இந்த அளவிற்கு வந்து உட்கார்ந்து இருக்கிறார் என்றால் அவருடைய மனதும் அவருடைய ரசிகர்களும்  தான் காரணம்.. தமிழ் திரையுலகில் ராமராஜனின் அடையாளம் கல்வெட்டு மாதிரி இருக்கும். அது என்றும் மறையாது” என்று பேசினார்.

இயக்குனர் ராகேஷ் பேசும்போது, “23 வருடங்கள் கழித்து இசைஞானியும் மக்கள் நாயகனும் ஒன்றாக இணையும் படம் ‘சாமானியன்’. அதை இயக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது. புகை பிடிப்பது தவறானது என சென்ஸார் கார்டு போட வேண்டும் என சில வருடங்களுக்கு முன்பு தான் ஒரு விதிமுறை வந்தது. ஆனால் தான் நடிக்க வந்த காலத்திலிருந்து சிகரெட் பிடிக்க மாட்டேன், மது அருந்த மாட்டேன் என தன் மனதிற்குள்ளேயே ஒரு ரெட் கார்டு போட்டு வைத்திருப்பவர் ராமராஜன். பல சவால்கள் நிறைந்த சூழலில் இந்த படத்தை எடுத்து இருக்கிறோம். இதை பட்டிதொட்டி எங்கும் கொண்டு போய் சேர்ப்பது உங்கள் கடமை. படம் துவங்க ஆரம்பித்த சமயத்தில் இருந்ததை விட, கேமரா ஓட ஓட 100 மடங்கு அதிக எனர்ஜியுடன் இருக்கிறார் ராமராஜன். அவர் அவர் ஒரு சாமானிய மக்களின் பிரதிநிதி. அவர் போட்டிருக்கும் சட்டை வேண்டுமானால் கலர் கலராக இருக்கலாம். அவர் மனது என்றும் வெள்ளைதான்.. விசுவாசம், நன்றி என்றால் அது ராமராஜன் தான்..

படப்பிடிப்பில் நடிகை நக்ஸா மீது அதிக டேக் வாங்குவதாக சிலநேரம் கோவப்பட்டு உள்ளேன். ஆனால் அனைத்தையும் பக்காவாக கற்றுக்கொண்டு தன்னை மோல்டு செய்து கொண்டு தற்போது அதிக படங்களில் நடிக்கும் நடிகையாக மாறி உள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் மதியழகன் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். ஆனால் அது சரியாக இருக்காது, அதற்கு பதிலாக வேறு ஒரு நடிகரை போடுங்கள் என ராமராஜன் கூறிவிட்டார்.. காரணம் அவருக்கு கதாபாத்திரம் கொடுத்தால் படம் முழுவதும் வரும் நீளமான கதாபாத்திரம் கொடுங்கள் என்றார். மதுரையில் படப்பிடிப்பு நடைபெற்ற போது திண்டுக்கல்ல லியோனி சார் தனது மகன் லியோ சிவா நடிப்பதை பார்ப்பதற்காக படப்பிடிப்பிற்கு வந்தார். மகனது நடிப்பை பற்றி கேட்டபோது, நடிப்பு பற்றி எதுவும் சொல்லாததால் சரியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.. நீங்கள் போய் எதுவும் சொல்லி கெடுத்து விடாதீர்கள் சார் என்று கேட்டுக் கொண்டேன். எம்.எஸ் பாஸ்கர் ஒரு காட்சி இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக 20 அடி உயர தண்ணீர் தொட்டிக்குள் மூச்சை பிடித்து முங்கியபடி நடித்தார். கே.எஸ் ரவிக்குமார் ஒரு நடிகராக, ஒரு மிகப்பெரிய இயக்குனராக இருந்தாலும் இந்த படத்தின் படப்பிடிப்பில் ஒரு புரொடக்சன் மேனேஜராகவே மாறி படப்பிடிப்பை விரைவில் முடிப்பதற்கு ஒரு தூண்டுகோலாக இருந்தார். ராதாரவி சார் செட்டுக்கு வந்து விட்டாலே ஒருவித அமைதி வந்துவிடும். அதனால் அதிகம் நடிகர்களை வைத்து படமாக்கும் சமயங்களில் எப்படியாவது அவரின் கால்சீட்டை வாங்கி அவரை அழைத்து வந்து விடுவோம்.

இந்த நிகழ்ச்சி இங்கே இப்போது சாதாரணமாக நடந்துவிடவில்லை.. இந்தப்படத்தின் கதை வேறு ஒருவருடையது என்று புகார் கொடுத்திருக்கிறார்களே என்று எனக்கும் தயாரிப்பாளருக்கும் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து மிகப்பெரிய அழுத்தம்.. ட்ரெய்லருக்கும் டீசருக்கும் சென்சார் சான்றுகளுக்காக விண்ணப்பித்தால் அங்கே ஏற்கனவே ஒருவர் சாமானியன் என டைட்டில் பதிவு செய்திருப்பதாக கோர்ட்டில் ஆர்டர் வாங்கி அங்கே கொடுத்து வைத்திருக்கிறார். அதையெல்லாம் உடைத்து எங்களிடம் தான் சாமானியன் டைட்டிலுக்கான ஆதாரம் இருக்கிறது என்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்து 48 மணி நேரத்தில் ட்ரெய்லர் மற்றும் டீசருக்கான சென்சார் சான்றிதழை வாங்கியுள்ளோம். இந்த படத்தின் கதை எல்லோருடைய வாழ்க்கையிலும் இருப்பது தான்.. அதை உணர்வுகளுடன் சேர்த்து மனதை தொடும் விதமாக உருவாக்கி இருக்கிறோம்.. இதற்காக நந்தா பெரியசாமி உள்ளிட்ட குழுவினருடன் ஆறு மாதங்கள் உழைத்திருக்கிறோம். இப்படி பணத்தைக் கொட்டி படத்தை எடுத்து முடித்து கடைசி நேரத்தில் கதை என்னுடையது என்று யாரோ சொன்னால் மனது வலிக்கிறது. ஒவ்வொரு நிமிடமும் போராட்டமாக தான் கழிந்தது. 

இந்தப் படத்திற்கு மேலும் பெருமை சேர்ப்பது இசைஞானியின் இசை தான். மக்கள் நாயகன் ராமராஜனை பட்டிதொட்டி எங்கும் உள்ள மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது அவரது பாடல்கள் தான்.. நான் ‘அம்மு’ என்கிற குறும்படத்தை எடுத்து விட்டு அதற்கு இசையமைப்பதற்காக இசைஞானியை தேடி தினசரி அவரது வீட்டு வாசலில் நின்றேன். அவர் பிஸியாக இருந்ததால் பார்க்க முடியவில்லை. ஆனால் இதை தினசரி கவனித்த பவதாரணி ஒரு நாள் என்னை அழைத்து விவரம் கேட்டார். அப்பா பிஸியாக இருக்கிறார் என கூறியபோது, அப்படி என்றால் இந்த படம் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களாவது இசையமைத்துக் கொடுங்கள் என கேட்டேன். இரண்டு நாள் கழித்து அவரை சந்தித்தபோது உங்களுக்கு பிடித்திருக்கிறதா என்று கேட்டென்.. என்னைவிட என்னுடைய அம்மாவிற்கு இந்த படம் பிடித்திருக்கிறது.. நீ இசையமைத்து கொடு என்று என்னிடம் சொல்லிவிட்டார் என பவதாரணி கூறினார். அப்படி பவதாரணி இசையமைத்து கொடுத்த அந்த ‘அம்மு’ படம் தான் எனக்கு தமிழ்நாடு அரசு திரைப்பட பிரிவில் கோல்ட் மெடல் பெற்று தந்தது. 

பிறகு இளையராஜா சாரை சந்திக்க முடியாமல் போனாலும் இந்த சாமானியன் மூலமாக அவரை சந்திக்கும் வாய்ப்பு மட்டுமல்லாமல் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. அப்போது கூட பவதாரணி என்னிடம் ஒருவழியாக அப்பாவை பிடித்து விட்டீர்களே என்று  கிண்டலாக கேட்டார். அந்த வகையில் என்னை இந்த காம்பவுண்டுக்குள் அனுமதித்தவரே பவதாரணி தான். ஆனால் இன்று அவர் இல்லை. இந்த படத்தில் மாண்டேஜ் பாடலைத் தவிர வேறு பாடல்களே இல்லையே, நானும் ராமராஜனும் சேர்ந்தாலே பாட்டுக்களை தானே ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள் என கொஞ்சம் என் மீது கோபப்பட்டார் ராஜா சார். முழுப்படத்தை பார்த்துவிட்டு இந்த படத்தில் இரண்டு பாடல்களுக்கான இடம் இருக்கிறதே என்று என்னிடம் கூறினார். அவரே அருமையான ஒரு பாடலை எழுதி இசையமைத்து இதில் எப்படியும் ராமராஜன் உதட்டசைத்து பாடும் விதமாக படமாக்கு என்று கூறினார். அந்த பாடல் தான் கிளைமாக்ஸுக்கு முன்னதாக இந்த படத்திற்கு மிக பக்கபலமாக அமைந்துள்ளது. இந்த சாமானியனை எல்லோரும் தோளில் தூக்கி வைத்து கொண்டு செல்லுங்கள்” என்று பேசினார்.

திண்டுக்கல் ஐ லியோனி பேசும்போது, “மக்கள் நாயகன் ராமராஜனின் மிகப்பெரிய ரசிகன் நான்.  கலர் கலராக உடை அணிந்து கைகளை தூக்கி பாடல் காட்சிகளில் நடித்து புகழ்பெற்றவர் எம்ஜிஆருக்கு பிறகு யார் என்றால் அது ராமராஜன் தான். என்னுடைய மகன் லியோ சிவகுமார் மாமனிதன், அழகிய கண்ணே ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதற்கு பிறகு அவருக்கு ஒரு ரீ என்ட்ரி கொடுக்கும் விதமாக இந்த சாமானியன் படம் கிடைத்துள்ளது. அவருக்கு உங்கள் ஆதரவை கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

மக்கள் நாயகன் ராமராஜன் பேசும்போது, “2010ல் நான் மீட்டிங் போய் விட்டு வரும்போது மிகப்பெரிய விபத்தை சந்தித்தேன். மயிரிழையில் உயர் தப்பினேன் என்று சொன்னால் சரியாக இருக்கும். அதிலிருந்து மீண்டு வந்து நான் இப்படி ஒரு படம் நடிப்பேனா என்பது உலக அதிசயம் போல நடந்திருக்கிறது. ஏனென்றால் என்னுடைய ரசிகர்களின் தமிழக மக்களின் பிரார்த்தனை தான்.. இந்த ரசிகர் மன்றங்களுக்கும் நான் எதுவும் செய்ததில்லை. ஆனால் எனக்காக உயிரை தரக்கூடிய அளவுக்கு பாசம் வைத்திருக்கிறார்கள். 

இயக்குநர் ராகேஷ் எனக்கு அன்றும் இன்றும் என்றும் பொருந்துகின்ற மாதிரி அருமையான திரைக்கதையில் இந்த படத்தை எடுத்துள்ளார். இதன் ட்ரெய்லரையும் பாடல்களையும் நான் ஒரு டெக்னீசியனாகத்தான் பார்த்தேன். இதற்கு விளம்பரமே கொடுக்க வேண்டாம்.. ராமராஜன் படம் என்றால் பார்ப்பதற்கு லட்சம் பேர் இருக்கிறார்கள்.. இந்த படத்தின் திரைக்கதை என்பது உலகில் பிறந்த ஒவ்வொருவரும் இதை கடக்காமல் போகவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு அருமையான கதை இது. படம் பார்த்து விட்டு வரும்போது தாய்மார்கள் மட்டுமல்ல, என்னுடைய ரசிகர்களும் ஆண்களும் கூட கண்ணீர் விட்டு ஃபீல் பண்ணும் அளவிற்கு ஒரு கதை. இந்த அளவிற்கு அழகாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் ராகேஷ். இன்று ராஜா அண்ணன் வருவார் என நினைத்திருந்தேன். அவர் வராததால் மனதிற்கு கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. இந்த 23 வருடங்களிலும் என்னை ராமராஜன் என்று சொல்கிறார்கள் என்றால் இளையராஜாவின் பாட்டு தான் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. இன்று பல இடங்களில் இளையராஜா, ராமராஜன் பாடல்களை தான் கேட்கிறேன் என்கிறார்கள்.

கே எஸ் ரவிக்குமார் இங்கே இருக்கும்போது சில விஷயங்களை பேச வேண்டும்.. நான் நடித்த ராஜா ராஜா தான் படத்தில் இயக்குநர் ஈ.ராமதாஸிடம் கே.எஸ் ரவிக்குமார் துணை இயக்குனராக வேலை பார்த்தார். நானும் 40 படங்களில் உதவி இயக்குனராக வேலை பார்த்தவன் என்கிற வகையில், அப்போதே  அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யும் கே எஸ் ரவிக்குமாரின் திறமையை பார்த்து ஆச்சரியப்பட்தென். அதன்பிறகு நான் நடித்து இயக்கிய ‘பெத்தவ மனசு’ படத்தில் என்னுடன் இணைந்து இணை இயக்குநராக பணியாற்றினார். இத்தனை வருடங்கள் கழித்து ரஜினி, கமல் என முன்னணி நட்சத்திரங்களை இயக்கும் அளவு புகழ்பெற்ற அவர் மீண்டும் என்னை சந்திக்கும் போது அவர் காட்டிய அந்த மரியாதையை பார்த்த போது சினிமாவில் உண்மை, நன்றி, விசுவாசம் இன்னும் சாகவில்லை.. உயிரோடு இருக்கிறது என்று நினைக்க வைத்தவர் கே.எஸ்.ரவிக்குமார்.

கரகாட்டக்காரன் 465 நாள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையிலேயே தொடர்ந்து எட்டு 100 நாள் படங்களையும் கொடுத்தேன். இந்த படத்தில் பாட்டே இல்லாமல் படம் கொடுத்து இருக்கிறாயே என்று ராஜா அண்ணன் என்னிடம் கேட்டார். இந்த படத்தில் எனக்கு ஜோடியே கொடுக்கவில்லை. எனக்கு ஜோடி எம் எஸ் பாஸ்கர், ராதாரவி அண்ணன் தான்.. சரி ஒரு படம் தியாகம் பண்ணிவிட்டு போவோம் என விட்டுவிட்டேன். ஆனால் அடுத்த படத்தில் ஜோடியும் வேண்டும் பாட்டு வேண்டும்.. இப்போது கூட ஆறு பாட்டுக்குளுடன் ஒரு படம் கொண்டு வா உனக்கு பண்ணித் தருகிறேன் என ராஜா சார் கூறினார். இளையராஜா இதுவரை உலக அளவில் பெற்ற புகழை வேறு எந்த இசையமைப்பாளரும் பெற்றதில்லை. இனியும் பெற முடியாது.

தன்னுடைய மூன்று புதல்வர்களையும் இசைக்காக சென்னைக்கு அனுப்பிய அந்த தாய் சின்னத்தாய் அல்ல.. தெய்வத்தாய் மகுடி வாசித்தால் பாம்பு ஆடும். அது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அண்ணன் இளையராஜா ஆர்மோனியம் வாசித்தால் பாம்பேயே ஆடும். எனக்கு கொடுத்தது போல் வேறு ஒரு ஹீரோவுக்கு பாடல்களை கொடுக்கவில்லையே என்று சொல்வார்கள். நான் கூட ரஜினி சாருக்கு கொடுத்தது போல எனக்கு பாடல்களை ராஜா சார் கொடுக்கவில்லை என்று கூட சொல்வேன். ஆனால் “சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா” என்கிற அந்த ஒரு பாடல் எனக்கு போதும். சிங்கப்பூரில் சென்று வேட்டி கட்டி நடித்த ஒரே தமிழ் நடிகர் நான்தான்.. எங்களுடன் ஒரு மாட்டு வண்டியையும் சிங்கப்பூருக்கு கொண்டு செல்வதாக இருந்தோம். விமானத்தில் அனுமதிக்கவில்லை.

44 படங்களில் நடித்த பின் 45வது படம் இழுத்துக் கொண்டே இருந்தது. ஆனால் சாமானியன் திரைப்படம் சரியான நேரத்தில் என்னை வந்து சேர்ந்தது” என்றார்.

THE GOAT LIFE - திரைவிமர்சனம்

பிருத்விராஜ் சுகுமாரன், தனது தோழன் கே.ஆர்.கோகுலுடன் சவுதி அரேபியாவில் வேலைக்காக இறங்குகிறார்.

அவர்களுக்கு ஹிந்தியோ அல்லது ஆங்கிலமோ தெரியாது, மேலும் அவர்கள் விமான நிலையத்தில் துப்பு துலங்குகிறார்கள்.

அவர்கள் தங்கள் ஸ்பான்சருக்காக காத்திருக்கும் போது, ​​பிருத்வியையும் கோகுலையும் ஏமாற்றுவது எளிது என்பதை தாலிப் அல் பலுஷி புரிந்துகொள்கிறார்.

தாலிப் அவர்களையும் தன்னுடன் அழைத்துச் செல்கிறார். ப்ரித்வி ஒரு பாலைவனப் பகுதியில் ஒதுக்குப்புறமான பண்ணையில் ஆடு மேய்க்கப்படுகிறார்.

அவரும் கோகுலிடமிருந்து பிரிந்து விடுகிறார். அப்போது பிருத்வி என்ன செய்தார் என்பதுதான் படம்.

இயக்குனர் பிளெஸ்ஸி கதையை ஆழமாக விவரித்திருந்தாலும் படத்தின் நீளத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்திருக்கலாம். கதாநாயகனின் அவலநிலை யதார்த்தமாகவும் விரிவாகவும் காட்டப்பட்டுள்ளது.

படம் எந்த இடத்திலும் சினிமாவாகத் தெரியவில்லை, அதுவே பலமும் பலவீனமும்.

ஒப்பீட்டளவில் முதல் பாதியை விட இரண்டாம் பாதி சற்று சிறப்பாக உள்ளது.

பிருத்விராஜ் தனது இரத்தத்தையும், வியர்வையும், கண்ணீரையும் படத்தில் பதித்திருக்கிறார், அவருடைய அபாரமான நடிப்பால் காதலிக்காமல் இருக்க முடியாது.

நஜீப்பின் கதாபாத்திரத்திற்கு உயிரோட்டம் கொடுத்த அவர், தனது பாத்திரத்தில் உள்ள உதவியற்ற தன்மையை அற்புதமாக வெளிப்படுத்தினார். தி கோட் லைஃப் படத்திற்காக பிருத்விராஜ் செய்திருக்கும் வித்தியாசமான மேக்ஓவர்கள் பிரமிக்க வைக்கிறது.

ஜிம்மி ஜீன் லூயிஸ் மற்றும் கே.ஆர்.கோகுல் ஆகியோர் தங்களின் துணை வேடங்களில் சிறப்பாக நடித்துள்ளனர். அமலா பாலின் அவல நிலையைப் பற்றி மேலும் சில பகுதிகளை சேர்த்திருக்கலாம்.

ஏஆர் ரஹ்மானின் பின்னணி இசை பல காட்சிகளின் தாக்கத்தை உயர்த்துகிறது. சுனில் கே.எஸ் மற்றும் கே.யு.மோகனனின் ஒளிப்பதிவு பாலைவன வாழ்க்கையை நம்ப வைக்கும் வகையில் கொண்டு வந்துள்ளது.

 

Friday, March 29, 2024

கேள்விக்குறியாக்கப்பட்ட ஏழை மாணவர்களின் கல்வி:

கேள்விக்குறியாக்கப்பட்ட ஏழை மாணவர்களின் கல்வி:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இயங்கி வரும் ரைஸ் எம்எம்எஸ் (Rural Institute of Community Education - Mathakondapalli Model School) பள்ளியானது 1999-ஆம் ஆண்டில் நெதர்லாந்து நாட்டின் புகழ்பெற்ற தன்னார்வல நிறுவனமான தெரஸ் டெஸ் ஹோம்ஸ் (TDH - NL) அளித்த 90 கோடி நிதியின் மூலம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் பல ஏழை மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வியை அளித்து வந்திருக்கின்றது. 

ஆனால், 2014-ஆம் ஆண்டில் பள்ளியின் குழு செயலராக இணைந்த மேரு மில்லர் என்பவரால் பல்வேறு நிர்வாக சீர்கேடுகள் அப்பள்ளியில் ஏற்பட்டிருக்கின்றது. அங்கு இலவச கல்வி பயின்றுவந்த ஐநூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பள்ளி நிர்வாகம் வெளியேற்றி இருக்கின்றது. மேலும், பதினாறு கோடி மதிப்பிலான பள்ளியின் சொத்தை ஆலிவர் சாலமன் என்வருடன் இணைந்து மேரு மில்லர் சட்ட விரோதமாக விற்று ஊழல் செய்துள்ளார். 

இதனை வன்மையாக கண்டித்து பத்திரிக்கையாளர் திரு.சிவராமன் அவர்கள் மேரு மில்லரை பணி நீக்கம் செய்ய வேண்டி ஐஏஎஸ் அதிகாரி திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் புகார் அளித்துள்ளார். மேலும், புதிய செயலரை பணியில் அமர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இதனால், கேள்விக்குறியாக்கப்பட்ட பல ஏழை மாணவர்களின் கல்விநலன் காக்கப்படும் என்று நம்பிக்கை கொண்டுள்ளார். இவரின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.

விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'தி ஃபேமிலி ஸ்டார்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு*

*விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'தி ஃபேமிலி ஸ்டார்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு* 

*விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'தி ஃபேமிலி ஸ்டார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு*

தெலுங்கிலும், தமிழ் திரையுலகிலும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படங்களை தயாரித்து வரும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா  கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் விஜய் தேவரகொண்டாவின் ' தி ஃபேமிலி ஸ்டார்'. இந்தத் திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மிருனாள் தாக்கூர் நடிக்கிறார். பரசுராம் பெட்லா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை கே. யூ. மோகனன் ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி அன்று உலகம் முழுவதும் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. 

இதை முன்னிட்டு படக்குழுவினர் தெலுங்கானா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இப்படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது விஜய் தேவரகொண்டா, படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்வரூப் ஆகியோர் கலந்து கொண்டனர். 

தயாரிப்பாளர் தில் ராஜு பேசுகையில், ‌'' விஜய் நடிக்கும் 'வாரிசு' திரைப்படத்திற்கு பிறகு, விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள 'தி ஃபேமிலி ஸ்டார்' என்ற திரைப்படத்தை இரண்டாவது படமாக தயாரித்திருக்கிறேன். இந்த திரைப்படம் நடுத்தர வர்க்கத் இளைஞரின் கதை. ஒவ்வொரு குடும்பத்திலும் தங்களுடைய குடும்ப முன்னேற்றத்திற்காக பாடுபடுபவர்கள் தான் 'தி ஃபேமிலி ஸ்டார். இதை வலியுறுத்தும் வகையில் இப்படம் உருவாகி இருக்கிறது. இதில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக மிருனாள் தாக்கூரும் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை 'கீதா கோவிந்தம்' படத்தை தொடர்ந்து இயக்குநர் பரசுராம் பெட்லாவும், விஜய் தேவரகொண்டாவும் இணைந்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த காபி இருக்கிறது. இட்லி சாம்பார் இருக்கிறது. தாலி இருக்கிறது. .ஃபுல் மீல்ஸ் ஆகியவையும் இடம்பெற்றிருக்கிறது. இது ஒரு கம்ப்ளீட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கிறது. நடுத்தர வர்க்கத்து மக்களின் பொருளாதார ஸ்டேட்டஸ் உயரவும், குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருக்கவும் போராடும் ஒரு இளைஞனின் கதை தான் இப்படத்தின் கதை. இந்தப் படத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் வகையில் காதல், காமெடி, சென்டிமென்ட், ஆக்சன் என கமர்சியல் விசயங்கள் இடம் பிடித்திருக்கிறது. இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களுக்கும் பிடிக்கும். என்னுடைய நண்பரும் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான ஸ்வரூப் - இந்த படத்தை தமிழக முழுவதும் வெளியிடுகிறார்.‌ விஜய் தேவரகொண்டாவும் - பரசுராமும் இணைந்து நிகழ்த்தி இருக்கும் மேஜிக்கைக் காண ஏப்ரல் ஐந்தாம் தேதி திரையரங்கத்தில் வருகை தந்து ஆதரவு தாருங்கள்'' என்றார். 

படத்தின் நாயகனான விஜய் தேவரகொண்டா பேசுகையில், ''  தமிழ் இயக்குநர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இப்படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக சென்னை வந்த போது அந்தப் பயணம் மிகவும் இனிமையாக இருந்தது. சென்னைக்கு வரும்போதெல்லாம் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். கடந்த முறை ஊடகவியலாளர்களை சந்தித்தபோது.. தமிழில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஊடகவியலாளர்கள் விளக்கினர். நானும் அதற்கு பதிலளித்தேன். 

என்னுடைய நடிப்பில் வெளியான முதல் படம் 'அர்ஜுன் ரெட்டி'க்கு நீங்கள் அளித்த ஆதரவு மறக்க இயலாது. தற்போது மீண்டும் இயக்குநர் பரசுராமுடனும், தயாரிப்பாளர் தில் ராஜுடனும் இணைந்து 'தி ஃபேமிலி ஸ்டார்' படத்தின் மூலம் உங்களை சந்திக்கிறேன். இயக்குநர் பரசுராமுடன் இணைந்து 'கீதா கோவிந்தம்' எனும் திரைப்படத்தில் நடித்திருந்தேன். அதனைத் தொடர்ந்து 'தி ஃபேமிலி ஸ்டார்' படத்தில் நடித்திருக்கிறேன். இது அந்த படத்தை விட கூடுதல் உயரத்திற்கு என்னை அழைத்துச் செல்லும் என நம்புகிறேன். இதற்கு முன் எனது நடிப்பில் வெளியான 'குஷி' திரைப்படத்திற்கும் உங்களின் ஆதரவு பிரமிப்பாக இருந்தது. இதே போல் இந்த படத்திற்கும் உங்களின் ஆதரவும் அன்பும் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.

இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடுத்தர வர்க்கத்தை இளைஞராக நடித்திருக்கிறேன். அன்பு செலுத்துவதிலும் ... காதலிப்பதிலும்... நேசிப்பதிலும்... கோபத்திலும் ஒரு எக்ஸ்ட்ரீம் நிலையை எதிர்கொள்பவன்தான் இப்படத்தில் நாயகன்.‌ இது ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். 

படத்தின் நாயகியான மிருனாள் தாக்கூர் அற்புதமான ஒத்துழைப்பை வழங்கிய சக கலைஞர். மும்பையில் வேறு ஒரு பணியில் இருப்பதால், அவரால் இங்கு வர இயலவில்லை. இருந்தாலும் அவர் அந்த கதாபாத்திரத்தில் திறமையாக நடித்து, தன்னுடைய நடிப்பு முத்திரையை பதித்திருக்கிறார். அவருக்கும் படக்குழுவின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. தற்போது இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதுவும் ரசிகர்களை வெகுவாக கவரும். இந்தத் திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி அன்று தெலுங்கிலும், தமிழிலும் வெளியாகிறது.'' என்றார். 

படத்தினை தமிழகம் முழுவதும் வெளியிடும் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்வரூப் பேசுகையில், '' தயாரிப்பாளர் தில் ராஜு அருமையான நண்பர். இந்தப் படம் படத்தை தமிழகத்தில் வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறேன். மேலும் ஆசீர்வதிக்கப்பட்டவராகவும் உணர்கிறேன்.'' என்றார்.

இதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு படக்குழுவினர் பதிலளித்தனர்.

https://youtu.be/6WT6sXPF9wA

Thursday, March 28, 2024

BOOMER UNCLE - திரைவிமர்சனம்

திறமையான யோகி பாபுவால் சித்தரிக்கப்பட்ட நேசம், விரைவில் வரவிருக்கும் முன்னாள் மனைவி எமியுடன் விவாகரத்து முடிவடைய அவரது மூதாதையர் கோட்டைக்கு ஒரு பயணத்தைத் தொடங்குவது போன்ற ஒரு சாகசக் கதையை “நேசம்” முன்வைக்கிறது. நேசத்திற்குத் தெரியாது, எமி தனது தந்தையின் அறிவியல் முயற்சிகளுடன் இணைக்கப்பட்ட புதிரான ரகசியங்களை வைத்திருக்கிறார், அவர்களின் தப்பிப்பதில் ஒரு அற்புதமான திருப்பத்தை சேர்க்கிறார். அவர்களுடன், நேசத்தின் பழைய நண்பர்களான தாவூத், பாலா மற்றும் தங்கதுரை ஆகியோர் நகைச்சுவை மற்றும் உற்சாகத்தின் கலவையை உறுதியளிக்கும் வகையில் தங்கள் சொந்த நோக்கங்களைக் கொண்டு வருகிறார்கள்.

"பூமர் அங்கிள்" இலகுவான அபத்தத்தை உறுதியளிக்கிறது, அதன் ஸ்லாப்ஸ்டிக் நகைச்சுவை மற்றும் அயல்நாட்டு சதி திருப்பங்களுடன் பார்வையாளர்களின் வேடிக்கையான எலும்புகளை கூச்சப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன் நகைச்சுவை தாளத்தைக் கண்டறிவதில் அது எதிர்கொள்ளும் சவால்கள் இருந்தபோதிலும், படத்தின் நகைச்சுவையான முன்மாதிரி மற்றும் எதிர்பாராத முன்னேற்றங்கள் பார்வையாளர்களை முழுவதும் ஈடுபாட்டுடன் வைத்திருக்கின்றன. ஒரு ஹாலோகிராபிக் ஓவியாவின் அறிமுகமும், ரோபோ சங்கரின் உருவத்துடன் ஒரு பயங்கரமான உருவத்தை உருவாக்குவதும் கதைக்கு வேடிக்கையான அடுக்குகளைச் சேர்க்கிறது.

யோகி பாபுவின் கவர்ச்சியான நடிப்பு, குழப்பங்களுக்கு மத்தியில் பார்வையாளர்களை நங்கூரமிட்டு, ஆற்றலுடன் படத்தைப் புகுத்துகிறது. சிலர் வேகம் வெறித்தனமாகவும் நகைச்சுவை இளமையாகவும் காணப்பட்டாலும், பாபுவின் வசீகரம் ஒரு பொழுதுபோக்கு அனுபவத்தை உறுதிப்படுத்துகிறது. துணை நடிகர்கள், ஆழம் இல்லாவிட்டாலும், ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கு பங்களித்து, உண்மையான சிரிப்பின் தருணங்களை உருவாக்குகிறார்கள்

இருப்பினும் "பூமர் அங்கிள்" காட்சி முறையீடு மற்றும் ஈர்க்கக்கூடிய ஒலிப்பதிவு ஆகியவற்றை வழங்க நிர்வகிக்கிறது, பார்வை அனுபவத்தை மேம்படுத்துகிறது. மூதாதையர் மாளிகையின் எல்லைக்குள் கதை விரிவடையும்போது, ​​வரையறுக்கப்பட்ட அமைப்பு படத்தின் அழகைக் குறைப்பதற்குப் பதிலாக படத்தின் அழகைக் கூட்டுகிறது. சேசுவின் சித்தரிப்பு, முதன்மையாக நகைச்சுவை விளைவுக்காக இருந்தாலும், கதைக்கு மற்றொரு பரிமாணத்தை சேர்க்கிறது, ஒரு நடிகராக அவரது பன்முகத்தன்மையைக் காட்டுகிறது.

முடிவில், "பூமர் அங்கிள்" திரைப்படம் ஒரு பொழுதுபோக்கு சவாரியை வழங்குகிறது, இது நகைச்சுவை சினிமா ரசிகர்களுக்கு ஒரு பயனுள்ள பார்வையாக அமைகிறது.

Cast:- Yogi Babu, Oviya, Robo Shankar, M.S. Bhasker, sheshu, bala, Thangadurai, Sona, Madhanbabu

Director:-Swadesh MS

 

NETRU INDHA NERAM - திரைவிமர்சனம்

"நேற்று இந்த நேரம்" படத்தில், ஏழு நண்பர்கள் குழு ஊட்டிக்கு ஒரு பயணத்தை மேற்கொள்கிறது. நண்பர்களில் ஒருவரான நிகில் மர்மமான முறையில் காணாமல் போனதும், சட்ட அமலாக்கத் துறையினரின் ஈடுபாட்டைத் தூண்டும் போது கதை ஒரு குளிர்ச்சியான திருப்பத்தை எடுக்கும். இந்தப் பின்னணியில், ஒரு நிழல் உருவம் வெளிப்படுகிறது-ஒரு தனித்தன்மையான தோற்றத்துடன், கருப்பு உடையில், வெள்ளை முகமூடி மற்றும் பாம்பு பச்சை குத்திய ஒரு தொடர் கொலையாளி.

கதைக்களம் விரிவடையும் போது, ​​நண்பர் குழுவின் ஒவ்வொரு உறுப்பினரையும் சுற்றி சந்தேகத்தின் வலையை பின்னுவதற்கு படம் முயற்சிக்கிறது. நேரியல் அல்லாத கதைசொல்லல் அணுகுமுறையின் மூலம், பார்வையாளர்களுக்கு நிகழ்வுகளின் மாறுபட்ட கண்ணோட்டங்கள் வழங்கப்படுகின்றன, சதி மற்றும் எதிர்பார்ப்பு அடுக்குகளைச் சேர்க்கின்றன. எவ்வாறாயினும், தொடர் கொலைகாரனை சித்தரிப்பதில் மரணதண்டனை தடுமாறுகிறது, அதன் நோக்கம் பயங்கரவாதத்தின் ஒளி குறைந்து, தற்செயலாக நகைச்சுவையாக மாறுகிறது.

தனிப்பட்ட குணாதிசயங்களை நிறுவி நண்பர்களின் உறவுகளின் சிக்கல்களை ஆராய்வதற்கான முயற்சிகள் இருந்தபோதிலும், படம் அதன் பார்வையாளர்களிடமிருந்து உணர்ச்சிகரமான ஈடுபாட்டைத் தூண்டுவதற்கு போராடுகிறது. விமர்சன வெளிப்பாடுகள் ஆழம் அல்லது தாக்கம் இல்லாத நிலையில் வழங்கப்படுகின்றன, இதனால் பார்வையாளர்கள் வெளிவரும் நாடகத்திலிருந்து பிரிக்கப்படுகிறார்கள். வியத்தகு தருணங்கள் கூட ஒரு கனமான ஒலிப்பதிவு மூலம் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகின்றன, உண்மையான உணர்ச்சி அதிர்வு இல்லாததை ஈடுசெய்ய முயற்சிக்கின்றன.

"நேத்ரு இந்த நேரம்" கதாபாத்திர மேம்பாடு மற்றும் கதை சொல்லும் லட்சியத்தில் போற்றத்தக்க அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. படம் ஒவ்வொரு நண்பரின் பயணத்தையும் உன்னிப்பாக சித்தரிக்கிறது, விவரங்களுக்கு கவனம் செலுத்துகிறது. இருப்பினும், விவரிப்பு சற்று முரண்பட்டதாக உணர்கிறது, மேலும் தீர்மானம் குறைவாக இருக்கலாம். இந்த அம்சங்கள் இருந்தபோதிலும், படம் குறிப்பிடத்தக்க ஆற்றலைக் கொண்டுள்ளது. மேலும் செம்மைப்படுத்துவதன் மூலம், இது மிகவும் ஒத்திசைவான மற்றும் உணர்வுப்பூர்வமாக எதிரொலிக்கும் பார்வை அனுபவத்தை வழங்க முடியும், இது பார்வையாளர்களை திருப்தியடையச் செய்து ஈடுபாட்டுடன் இருக்கும்.

Cast:-Shariq Hassan Haritha Monica Ramesh Kavya Amira Divakar Kumar Nithin Aaditya Anand Aravind Selva Bala

Director:-Sai Roshan KR.

 

IDI MINNAL KADHAL - திரைவிமர்சனம்

ஒரு அப்பாவி பாதசாரி கொல்லப்பட்ட ஒரு அபாயகரமான விபத்தில் சிபியின் வாழ்க்கை எதிர்பாராத திருப்பத்தை எடுக்கிறது.

சிபி தனது தவறை ஒப்புக்கொண்டு தண்டனை பெற விரும்பினாலும், அவன் காதலி பவ்யா திரிகாவால் தடுக்கப்படுகிறான்.

பாலாஜி மாதவன் இயக்கிய இப்படம் மனித உணர்வுகளின் சிக்கலான தன்மையை குறிப்பாக குற்ற உணர்வு மற்றும் மீட்பை பற்றி பேசுகிறது.


படத்தின் கதைக்களம் புதுமையானது மற்றும் அதை இயக்கிய விதமும் பாராட்டுக்குரியது.

இயக்குனரால் படத்தை இன்னும் சிறப்பாக எடுத்துச் சென்றிருக்க முடியும், அது படம் முழுவதையும் கவர்ந்திருக்கும்.

சிபி வருத்தத்துடன் போராடும் மனிதனாக ஒரு அழுத்தமான நடிப்பை வழங்குகிறார்.

பவ்யா த்ரிகா உறுதியான உணர்ச்சிகளுடன் ஒரு நுணுக்கமான நடிப்பை வழங்குகிறார்.

அதிர்ச்சியால் அவதிப்படும் குழந்தையின் சாரத்தை ஆதித்யா சித்தரித்து, பாராட்டத்தக்க நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

சாம் சி எஸ்ஸின் பின்னணி படத்தின் கருவுடன் நன்றாக இருக்கிறது.இதற்கிடையில், ஆதித்யா நடித்த பாதசாரியின் டீனேஜ் மகன் அனாதையாகி, அவனது உயிருக்கு ஆபத்து உள்ளது.

விதி தொடர்ச்சியான சம்பவங்களுக்குப் பிறகு சிபியையும் ஆதித்யாவையும் ஒன்றாகக் கொண்டுவருகிறது. அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதையின் கரு.

ஜெயச்சந்தர் பின்னம்நேனியின் ஒளிப்பதிவு நிகழ்ச்சிகளை சிறப்பாகப் படம்பிடித்துள்ளது.

IDI MINNAL KADHAL - Cast & Crew Details

Cast:

Ciby

Bhavya Trikha

Yasmin Ponnappa

Radha Ravi

Balaji Shaktivel

Jagan

Jayadithya

Vincent Nakul

Manoj Mullath 

Crew:

Written & Direction by: Balaji Madhavan 

Music: Sam CS

Original Background Score Sam CS

Dop: Jayachander Pinnamneni 

Executive Producer: JK

Editor: Anthony

Art Director: T. Balasubramanian

Singers: Kapil Kapilan, Malavika Sundar, Priyanka, Sam CS

Lyrics: Kabilan

Action Director: Stunner Sam

PRO: Diamond Babu - Sathish Kumar

Sound Design: Siddarth Dubey

Production house:  Pavaki Entertainment 

Producer: Jayachander Pinnamneni, Balaji Madhavan



 

“Veppam Kulir Mazhai” - திரைவிமர்சனம்

 

"வேப்பம் குளிர் மழை"யில், குழந்தையின்மை சவாலை எதிர்கொள்ளும் ஆழமான பிணைப்புள்ள கிராமத்து ஜோடியான பெத்த பெருமாள் (திரவ் சித்தரிக்கப்பட்டவர்) மற்றும் பாண்டி (இஸ்மத் பானுவால் உயிர்ப்பிக்கப்பட்ட) கதை விரிவடைகிறது. அவர்களின் அசைக்க முடியாத காதல் இருந்தபோதிலும், திருமணமாகி அரை தசாப்தத்திற்குப் பிறகு கருத்தரிக்க இயலாமை சமூக கேலிக்கூத்துகளை வெளிப்படுத்துகிறது மற்றும் அவர்களின் குடும்ப மகிழ்ச்சியைக் குறைக்கிறது, குறிப்பாக பாரம்பரிய எதிர்பார்ப்புகள் மற்றும் குடும்ப முரண்பாடுகளின் எடையின் கீழ், குறிப்பாக பாண்டியின் தாயுடன்.

அவர்களின் போராட்டங்களுக்கு மத்தியில், சென்னையிலிருந்து வருகை தரும் தம்பதியர், நகரத்தில் உள்ள மருத்துவ விருப்பங்களை ஆராய்வதற்கான நம்பிக்கையை வழங்குகிறார்கள். ஆரம்பத்தில் தயங்கிய பெத்த பெருமாள், மத வைத்தியத்தில் சாய்ந்தார், ஆனால் சமூக அழுத்தங்கள் அதிகரிக்கும் போது, ​​அவரது மனநலம் குலைந்து, அவரது தாயாரால் முன்மொழியப்பட்ட அவநம்பிக்கையான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கிறது. ஆயினும்கூட, பாண்டியின் உறுதியான ஊக்கமே இறுதியில் அவர்களை மருத்துவ உதவியைக் கருத்தில் கொள்ளத் தூண்டுகிறது.

இந்தத் திரைப்படம் தம்பதியரின் உணர்ச்சிப் பயணத்தின் உண்மையான சித்தரிப்பில் பிரகாசிக்கிறது, அவர்களின் விரக்தி, கனவுகள் மற்றும் வளர்ந்து வரும் உறவு இயக்கவியல் ஆகியவற்றின் மூலத் தீவிரத்தைக் காட்டுகிறது. திரவ் மற்றும் இஸ்மத் பானு நேர்மை மற்றும் ஆழம் நிறைந்த நிகழ்ச்சிகளை வழங்குகிறார்கள், அவர்களின் திரை வேதியியல் ஒவ்வொரு கணமும் ஊடுருவுகிறது, குறிப்பாக மென்மையான காதல் காட்சிகளில்.

"வேப்பம் குளிர் மழை" உள்ளூர் பழக்கவழக்கங்கள், பேச்சுவழக்குகள் மற்றும் இசை ஆகியவற்றை தடையின்றி ஒருங்கிணைக்கிறது, கிராமப்புற வாழ்க்கையை அதன் உண்மையான சித்தரிப்பில் பார்வையாளர்களை மூழ்கடிக்கிறது. பிருத்வி ராஜேந்திரனின் ஒளிப்பதிவும், ஷங்கர் ரங்கராஜனின் இசையும் படத்தின் உணர்ச்சிகரமான அதிர்வை மேலும் உயர்த்தி, பார்வை அனுபவத்தை மெருகேற்றுகிறது.

தனிப்பட்ட போராட்டங்களுக்கு அப்பால், மலட்டுத் தம்பதிகள் எதிர்கொள்ளும் பரந்த சமூக சவால்கள் மற்றும் நெறிமுறை இக்கட்டான சூழ்நிலைகளை படம் ஆராய்கிறது, தீர்ப்பின் மீது பச்சாதாபத்தை வலியுறுத்துகிறது. இது பாரம்பரியம் மற்றும் நவீனத்துவம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள நுட்பமான சமநிலை மற்றும் பெற்றோருக்கான பல்வேறு பாதைகளைத் தழுவுவதன் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கிறது.

இயக்குனர் பாஸ்கல் வேதமுத்து, எடிட்டர் திரவ், சவுண்ட் டிசைனர் ஆனந்த், திரவ், அருண் ஆகியோர் முன்னின்று நடத்திய இப்படத்தின் தொழில்நுட்ப திறமை பாராட்டுக்கு உரியது. ராமாவின் மாமியார் சித்தரிப்பு உட்பட குறிப்பிடத்தக்க துணை நிகழ்ச்சிகள் கதையின் தாக்கத்தை ஆழமாக்குகின்றன.

"வேப்பம் குளிர் மழை" மனித அனுபவத்தின் இதயப்பூர்வமான ஆய்வை வழங்கும், துன்பங்களுக்கு மத்தியில் அன்பின் நெகிழ்ச்சிக்கு ஒரு அழுத்தமான சான்றாக நிற்கிறது. எப்போதாவது மெலோடிராமா மற்றும் திரும்பத் திரும்பக் குறிப்பிடப்பட்டாலும், அதன் நேர்மையும் சக்திவாய்ந்த நடிப்பும் அதை உண்மையிலேயே வசீகரிக்கும் சினிமா அனுபவமாக ஆக்குகின்றன, எம்.எஸ்.பாஸ்கரின் தனித்துவமான சித்தரிப்பு இந்த மனதைத் தொடும் கதைக்கு கூடுதல் ஆழத்தை சேர்க்கிறது.

Cast:-MS Bhaskar, Dhirav, Ismath Banu, Rama, Master Karthikeyan, Dev Habibullah, Vijayalakshmi 

Director:-Pascal Vedamuthu




Wednesday, March 27, 2024

எஸ்.எழிலின் 'தேசிங்கு ராஜா 2'வுக்காக மும்பை நடன அழகியுடன் விமல் அதிரடி குத்தாட்டம்


 50 லட்சம் செலவில் ‘பங்களா’ செட்!

எஸ்.எழிலின் 'தேசிங்கு ராஜா 2'வுக்காக மும்பை நடன அழகியுடன் விமல் அதிரடி குத்தாட்டம்


சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் கண்டெடுத்த பல ரத்தினங்களில் ஒருவர் தான் இயக்குநர் எழில். 

'துள்ளாத மனமும் துள்ளும்' படம்  மூலம் இயக்குநராக அறிமுகமான எழில், 'தேசிங்கு ராஜா' படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கி வருகிறார்.



இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிச்சந்திரன் தயாரிக்கும் இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார் பூஜிதா பொன்னாடா கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய கேரக்டரில் ஜனாவும் இரண்டாவது கதாநாயகியாக ஹர்ஷிதாவும் நடிக்கின்றனர்.

மேலும் ரவிமரியா, ரோபோ சங்கர், மொட்ட ராஜேந்திரன், விஜய் டிவி புகழ், லொள்ளு சபா சாமிநாதன், சிங்கம் புலி, சாம்ஸ், வையாபுரி, மதுரை முத்து, மதுமிதா, விஜய் டிவி வினோத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


'பூவெல்லாம் உன் வாசம்' படத்தை தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் வித்யாசாகர் மீண்டும் 'தேசிங்கு ராஜா 2'வுக்காக்க இயக்குநர் எஸ்.எழிலுடன் இணைந்துள்ளார்.



முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் கடந்த மார்ச் 20ஆம் தேதி இதன் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது.  இப்படத்தில், கவிஞர் சூப்பர் சுப்பு பாடல் வரிகளில், ஜித்தின் ராஜ், எம்.எம்.மானசி குரலில் உருவான "டோலி டாங்க் ஆனா டேஞ்சரு.. ரொம்ப டேஞ்சரு.." என்கிற பாடல் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.


இதற்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஐம்பது லட்சம் செலவில் கலை இயக்குனர் சிவசங்கர் பிரமாண்ட பங்களா செட் ஒன்றை உருவாக்கிக் கொடுத்துள்ளார். நடன இயக்குனர் தினேஷ் நடன வடிவமைப்பில் உருவாகி வரும் இந்த பாடலில் விமல் மற்றும்  பிரபல பாலிவுட் டான்சர் சினேகா குப்தா இருவரும் இணைந்து அதிரிபுதிரியான குத்தாட்டம் போட்டுள்ளனர்.


காட்சிப்படி, போலீஸ் அதிகாரியான விமல் பல பிரச்சனைகளால் டென்ஷனாக இருக்கிறார். அதனால் அந்த சூழலில் இருந்து அவர் சற்று ரிலாக்ஸ் ஆகும் விதமாக இப்படி ஒரு பாடல் படத்தில் இடம் பெறுகிறது. 


இதுவரை விமல் நடித்த படங்களில் அவர் ஆடிய நடனங்களில் இருந்து இதுபோல் இப்படி அவர் ஆடியது இல்லை என்று சொல்லும் அளவிற்கு நடனத்தில் மிரட்டி இருக்கிறார் விமல். இதற்காக சில நுணுக்கமான நடன அசைவுகளையும் தினேஷ் மாஸ்டரிடமிருந்து கற்றுக்கொண்டு சினேகா குப்தாவுக்கு ஈடு கொடுக்கும் விதமாக அதிரடி நடனம் ஆடி அசத்தியுள்ளார்,விமல்.


படப்பிடிப்பில் இருந்த அனைவரும் விமலின் நடனத்தை பாராட்டினார்கள். படம் வெளியான பிறகு விமலின் நடனம் குறிப்பிடும் வகையில் பேசப்படும் என படக்குழுவினர் இப்போதே கூறுகின்றனர்.


தற்போது இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த மாதம் வரை  தொடர்ந்து இந்த படப்பிடிப்பு நடைபெறுகிறது. 


காமடி கலாட்டாவாக சம்மர் வெளியீடு!


இசை:  வித்யாசாகர்

இணை தயாரிப்பு: ஆர்.பாலகுமார் 

ஒளிப்பதிவு: செல்வா.ஆர்

எடிட்டிங்: ஆனந்த் லிங்கா குமார்

ஆர்ட்: சிவசங்கர்

வசனம்-முருகன்

ஸ்டண்ட் : ஸ்டண்ட்: ‘ஃபயர்’ கார்த்திக் ( Fire Karthik )

நடனம் : தினேஷ்

பாடல்கள்:யுகபாரதி, விவேக்,சுப்ரமணியம்

பி.ஆர்.ஓ: ஜான்சன்

HOT-SPOT - திரைவிமர்சனம்

'ஹாட் ஸ்பாட்' நான்கு வெவ்வேறு ஜோடிகளைப் பற்றிய நான்கு சிறுகதைகளை உள்ளடக்கியது மற்றும் அவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது.

முதல் கதை கௌரி ஜி கிஷன் மற்றும் ஆதித்யா பாஸ்கர் சம்பந்தப்பட்டது. அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்யும் போது அவர்களின் உறவில் ஏற்படும் சிக்கல்கள் இந்தக் கதையின் மையக் கருவாக அமைகிறது.

அடுத்த கதை அம்மு அபிராமி மற்றும் சித்தார்த் ஆகியோரை உள்ளடக்கியது, அவர்கள் உடன்பிறந்தவர்கள் என்பதை பின்னர் கண்டுபிடிக்க மட்டுமே காதலிக்கிறார்கள்.

மூன்றாவது சதி ஜனனி மற்றும் சுபாஷ் சம்பந்தப்பட்டது. இந்த அத்தியாயம் காமம் மற்றும் காதல் பற்றி பேசுகிறது. பின்னர், கலையரசன் மற்றும் சோபியா சம்பந்தப்பட்ட மற்றொரு கதை உள்ளது.

இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் படத்தை முழுக்க முழுக்க பெண்ணியக் கண்ணோட்டத்தில் சித்தரிக்க முயன்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

அனைத்து பெண்களையும் பாதிக்கப்பட்டவர்களாகவும், ஆண்களை பார்வையாளர்களாகவும் வில்லனாகவும் சித்தரிக்கும் விதத்தில் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். முன்னணி நடிகர்களின் சில நல்ல நடிப்பால் திரைப்படம் நன்றாகப் பாராட்டப்பட்டது.

ஒவ்வொரு நடிகரும் தத்தம் பாத்திரங்களைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப கதாபாத்திரங்களை வழங்கியுள்ளனர். இருப்பினும், கலையரசன் மற்றும் சோபியா சம்பந்தப்பட்ட அத்தியாயம் தனித்து நிற்கிறது.

அவர்கள் இருவரும் ஒரு வலுவான செய்தியை வெளிப்படுத்தும் பாராட்டத்தக்க செயல்திறனை வழங்கியுள்ளனர்.

சதீஷ் ரகுநாதன் மற்றும் வான் ஆகியோரின் இசை நன்றாக உள்ளது மற்றும் படத்தின் கருவுடன் நன்றாக உள்ளது.

கோகுல் பெனாயின் ஒளிப்பதிவு நிகழ்ச்சிகளை சிறப்பாகப் படம்பிடித்துள்ளது. படத்தின் மற்ற தொழில்நுட்ப அம்சங்களும் கவனிக்கத்தக்கவை.

ஹாட்ஸ்பாட்

KJB Talkies,  பட நிறுவனம் சார்பில் K.J பாலமணிமார்பன், சுரேஷ் குமார், கோகுல் பினாய் ஆகியோர் இணைந்து  தயாரித்துள்ள படம் "ஹாட்ஸ்பாட்".சிக்ஸர் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தினேஷ் கண்ணன் வெளியிடுகிறார்..

நடிகர், நடிகைகள் :

கலையராசன் - ஏழுமலை

சோஃபியா - லக்ஷ்மி

சாண்டி - சித்தார்த்

அம்மு அபிராமி - தீப்தி 

ஜனனி - அனிதா 

சுபாஷ் - வெற்றி

கௌரி ஜி. கிஷன் - தன்யா 

ஆதித்யா பாஸ்கர் - விஜய்

தொழில்நுட்ப கலைஞர்கள் :

எழுத்து & இயக்கம்  - விக்னேஷ் கார்த்திக்

தயாரிப்பாளர்கள் - K.J    பாலமணிமார்பன் | சுரேஷ் குமார் | கோகுல் பினோய்.

வெளியீடு :சிக்ஸர் எண்டர்டெயின்மெண்ட் | தினேஷ் கண்ணன் 

ஒளிப்பதிவு - கோகுல் பினோய்

இசை - சதீஷ் ரகுநாதன் | வான்

படத்தொகுப்பு - முத்தையன் யூ

கலை - சிவா சங்கரன்

நிர்வாக தயாரிப்பாளர் - ஆர். பாலாகுமார்

தயாரிப்பு மேற்பார்வை - பிரியான்

சேர்க்கை உரை & திரைக்கதை - கிஷோர் சங்கர்

VFX - Fix it in போஸ்ட் ஸ்டூடியோ

DI - நாக் ஸ்டூடியோ

கலரிஸ்ட் - பிரசாத் சோமசேகர்

ரி- ரிகார்டிங் மிக்ஸர் -  ஹரி பிரசாத் எம் ஏ

கூடுதல் கலை- கோபிநாத் எம்

கூடுதல் தொகுப்பு - அஷ்வின்

பிரமோஷன் - திஜிட்டலி பவர்புல்

பி.ஆர்.ஓ - வேலு

பப்லிசிட்டி டிசைனர் - ராஜின் கிருஷ்ணன்

டைட்டில் டிசைன் - ட்வென்டி ஒன் ஜி

இயக்குநர் குழு:

எம் பி எழுமலை | சபரி மணிகண்டன் | மாதவன் ஜெயராஜ் | M பிரபாகரன் ஜாய் | வெற்றி AJK

 

Tharunam - திரைவிமர்சனம்

வாழ்க்கை எதிர்பாராத தருணங்களால் நிறைந்துள்ளது - சில மகிழ்ச்சியைத் தருகின்றன, மற்றவை தடைகளை ஏற்படுத்துகின்றன. இந்த தருணங்கள் நம்மை எவ்வாறு வட...