Friday, October 31, 2025

டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் திருமணம் !

*'டூரிஸ்ட் ஃபேமிலி'  பட இயக்குநர்  அபிஷன் ஜீவிந்த் திருமணம் !!*

'டூரிஸ்ட் ஃபேமிலி'  படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த  இளம் இயக்குநர்  அபிஷன் ஜீவிந்த்,  அவரது காதலி அகிலாவை கரம்பிடித்துள்ளார். இவர்கள் இருவரது  திருமணம்,  இன்று  அக்டோபர் 31 ஆம் தேதி, இருவரது பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ,  ஹனு ரெட்டி,  போயஸ் கார்டன், சென்னையில் கோலகலமாக  நடைபெற்றது. 

முன்னதாக நேற்று க்ரீன் பார்க் ஸ்டார் ஹோட்டலில்,  நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், நடிகர்கள் சசிகுமார், சிவகார்த்திகேயன், எம் எஸ் பாஸ்கர் , ரமேஷ் திலக், நடிகைகள்  சிம்ரன்,அனஸ்வரா விஜயன், தயாரிப்பாளர்கள் 2D Entertainment ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், சௌந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ் ராஜ் பசிலியான், அருண் விஷ்வா, ஷினீஷ், இயக்குநர்கள் 'பூ' சசி, ரஞ்சித் ஜெயக்கொடி, சண்முகப்பிரியன் (லவ் மேரேஜ்), பிரபு ராம் வியாஸ் (லவ்வர்) , மதன் (அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் படம்) இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், பாடலாசிரியர் மோகன்ராஜ், விநியோகஸ்தர் விர்தூஷ், எடிட்டர் பரத் ராம், திங் மியூசிக் சந்தோஷ், ஜியோ ஹாட்ஸ்டார் சபரி  ஆகியோர் கலந்துகொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தினர்.

அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி! ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்(Toxic): எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் -அப்ஸ்’ (A Fairy Tale for Grown-Ups)— முதலில் அறிவித்தபடியே மார்ச் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது !*

*அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி! ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும்  ‘டாக்ஸிக்(Toxic): எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் -அப்ஸ்’ (A Fairy Tale for Grown-Ups)— முதலில் அறிவித்தபடியே மார்ச் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது !*

அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் அதிரடி-டிராமா திரைப்படமான ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, முதலில் அறிவித்தபடியே. 2026 மார்ச் 19 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக, அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. படத்தின் வெளியீடு தாமதமாகும் என பரவிய வதந்திகளுக்குப் பின்னர், திரைப்பட வர்த்தக நிபுணர் தரண் ஆதர்ஷ் தயாரிப்புக் குழுவிடம் உறுதிப்படுத்திக் கொண்டு,  சமூக வலைதளத்தில் தெளிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


தற்போது ‘டாக்ஸிக்’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பெங்களூருவில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 2026 ஜனவரியில் படத்தின் முழு அளவிலான புரமோசன் பணிகள் துவங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான KVN Productions, சமூக வலைதளத்தில் “140 நாட்கள் மட்டுமே மீதமிருக்கிறது…
His Untamed Presence,
Is Your Existential Crisis.
#ToxicTheMovie — உலகளாவிய வெளியீடு 19-03-2026” என்று பதிவிட்டு வெளியீட்டு தேதியை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

படம் வெளியாகும் தேதி முக்கியமான பண்டிகை காலமாகும் — குடி பாட்வா(Gudi Padwa), உகாதி (Ugadi) மற்றும் பல பிராந்திய புத்தாண்டு கொண்டாட்டங்களுடன், அதனைத் தொடர்ந்து ஈத்  பண்டிகையும் வருவதால், பாக்ஸ் ஆபிஸில் நான்கு நாள் நீண்ட பண்டிகை வாய்ப்பு உருவாகியுள்ளது. KGF-க்குப் பிறகு யாஷ் மீண்டும் திரைக்கு வருவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை பல மடங்கு ஏற்படுத்தியுள்ளது.
கீத்து மோகன்தாஸ் (Geetu Mohandas) இயக்கத்தில் உருவாகும் இப்படம் ஆங்கிலம் மற்றும் கன்னடம் ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது.வெங்கட் K. நாராயணா மற்றும் யாஷ் இணைந்து KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்களின் சார்பில் தயாரிக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, வரவிருக்கும் பண்டிகை சீசனில் தேசிய மற்றும் உலகளாவிய அளவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கத் தயாராகி வருகிறது.


Tuesday, October 28, 2025

MRP Entertainment தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியான், 'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்திற்கு கல்யாண பரிசாக, கார் வழங்கியுள்ளார்*

*MRP Entertainment  தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியான்,  'டூரிஸ்ட் ஃபேமிலி'  இயக்குநர்  அபிஷன் ஜீவிந்த்திற்கு  கல்யாண பரிசாக,  கார் வழங்கியுள்ளார்*

தமிழ் திரையுலகில் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தந்த  'டூரிஸ்ட் ஃபேமிலி'  பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்திற்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி திருமணம் நடக்கவுள்ள நிலையில், அவருக்கு திருமணப் பரிசாக ஒரு விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசளித்துள்ளார் MRP Entertainment  தயாரிப்பாளர்  மகேஷ் ராஜ் பசிலியான்.

இலங்கை வாழ் மக்களின் கதைக்களத்தில்,  எளிமையான திரைக்கதையில், மனித உணர்வுகளின் குவியலாக, அசத்தலான ஃபேமிலி எண்டர்டெயினராக, இந்த ஆண்டில் விமர்சகர்கள், ரசிகர்கள் மற்றும் திரை உலகத்தினர் என அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த படம் “டூரிஸ்ட் ஃபேமிலி”. 

குட் நைட், லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி என தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களில், தொடர் வெற்றிப்  படங்களை வழங்கி வரும் MRP Entertainment நிறுவனத்தின் தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியான்,  இயக்குநர் அபிஷன் ஜீவிந்தின் கல்யாணத்திற்கு பரிசாக, ஒரு விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசாக வழங்கி  உற்சாகப்படுத்தியுள்ளார். 

இயக்குநர்  அபிஷன் ஜீவிந்த் தற்போது,  Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்க, பசிலியான் நஸ்ரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில்,  ஒரு புதிய படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். 

இயக்குநராக முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்து, தற்போது ஹீரோவாகவும் மாறியிருக்கும்  அபிஷன் ஜீவிந்த் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி, தன் காதலியை கரம்பிடிக்கிறார்.

தயாரிப்பாளர்  மகேஷ் ராஜ் பசிலியான், இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்திற்கு கார் வழங்கிய புகைப்படங்களை பகிர்ந்து,  ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வரவேற்பை பெறும் கலைஞர் டிவியின் "தமிழோடு விளையாடு சீசன் 3"..!

வரவேற்பை பெறும் கலைஞர் டிவியின் "தமிழோடு விளையாடு சீசன் 3"..!
 
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த "தமிழோடு விளையாடு" நிகழ்ச்சியின் முதல் இரண்டு சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், அதன் மூன்றாவது சீசன் தற்போது, ஞாயிறுதோறும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
 
பிரபல இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்று அசத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி மாணவர்களின் தமிழ் அறிவை சோதிக்காமல், தமிழ் அறிவை ஊட்டும் உணர்ச்சிப்பூர்வமான புதிய சுற்றுகளுடன் ஒளிபரப்பாகிறது.

Saturday, October 25, 2025

பிரபாஸ் எல்லோராலும்“டார்லிங்” என்று அழைக்கப்படுவதற்குக் காரணம் இருக்கிறது - இயக்குநர் ஹனு ராகவபுடி

*பிரபாஸ் எல்லோராலும்“டார்லிங்” என்று அழைக்கப்படுவதற்குக் காரணம் இருக்கிறது - இயக்குநர் ஹனு ராகவபுடி !!*

“ஃபௌசி” புராணக் கதை இல்லை , இது ஒரு அதிரடியான வரலாற்றுப் படம் - இயக்குநர் ஹனு ராகவபுடி !!

ரெபெல் ஸ்டார் பிரபாஸ், இயக்குநர் ஹனு ராகவபுடி இணையும் பான் இந்திய படமான  “ஃபௌசி” படத்தின்,  அதிராகரபூர்வ டைட்டில் லுக் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபாஸ் போர்விரனாக காட்சி தரும் ஃபௌசி  பட ஃபர்ஸ்ட் லுக்கின் பின்னணி குறித்து,  ரசிகர்கள் இணையம் முழுக்க விவாதித்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குநர் இயக்குநர் ஹனு ராகவபுடி படம் குறித்தான பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

சமஸ்கிருத ஸ்லோகங்கள் மற்றும் பகவத்கீதையைச் சேர்ந்த குறிப்புகள் ஃபர்ஸ்ட் லுக்கில்  பயன்படுத்தப்பட்டுள்ளதே ஏன் ?
நாங்கள் திட்டமிட்டு தான் சமஸ்கிருத ஸ்லோகங்களை பயன்படுத்தினோம்,  போர்வீரனைப் பற்றிய இந்தக் கதைக்கு  அவை ஆழமான  பொருள் தருகிறது மற்றபடி இது புராணக் கதையை அடிப்படையாகக் கொண்ட படம் அல்ல. பகவத்கீதையிலிருந்து நாங்கள் எடுத்துக் கொண்டது வெறும் தத்துவ ரீதியான ஊக்கம் மட்டுமே. ஃபௌசி என்பது மனித உணர்வுகள், தேசப்பற்று மற்றும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்த சமூக-அரசியல் பதற்றங்களை மையமாகக் கொண்ட ஒரு அழுத்தமான அதிரடி டிராமா.   இன்றும் உலகளவில் அதேபோல் எதிரொலிக்கும் உண்மைகளை இப்படம் பேசும்.

ஃபௌசி டைட்டில் போஸ்டரில் அர்ஜுனன், கர்ணன் போன்ற புராண வீரர்களின் பெயர்கள் இருக்கிறதே  அதற்கான அர்த்தம் என்ன?
ஃபௌசியில் பிரபாஸ் ஒரு மிகப்பெரிய வீரராக நடிக்கிறார். அவருடைய கதாப்பாத்திரத்தின்  குணாதிசயத்தில் புராண வீரர்களின் சிறப்புகளை கலந்து காட்ட விரும்பினேன். அர்ஜுனன், கர்ணன், ஏகலைவன் ஆகியோர் திறமை, தியாகம், பக்தி  என சக்திவாய்ந்த பரிமாணங்களைக் குறிக்கிறார்கள் அதை தான் டைட்டில் பயன்படுத்தினேன்.  “கர்ணன் பாண்டவர்களுடன் சேர்ந்து இருந்தால் மகாபாரதப் போர் எப்படி மாறியிருக்கும்?” என்ற சிந்தனை தான் இந்தக் கதையின் மையக் கரு.  இப்போதைக்கு கதை பற்றி அதிகமாக சொல்ல முடியாது, ஆனால் இப்படம் 1940களின் காலனித்துவ பின்னணியில் நடக்கும் அதிரடி டிராமாவாக இருக்கும்.

ஃபௌசி பல மொழிகளில் உருவாகும் உலகளாவிய படமா?
பிரபாஸ் முன்னணி கதாபாத்திரமாக இருக்கும்போது,  படம் தானாகவே உலகளாவியதாகி விடுகிறது. அவருக்கு எல்லைகளைத் தாண்டி ரசிகர்கள் உள்ளனர். எங்கள் கதை இந்திய மண்ணில் வேரூன்றியிருந்தாலும், அதன் உணர்ச்சி மற்றும் மனிதநேயம் எல்லா மக்களையும் தொடும் வகையில் அமைந்துள்ளது. பிரபாஸ் உலகளவில் படத்தை எடுத்துச் செல்லுவார், ஆனால் உண்மையில் இதயத்தைத் தொடும் கதையும் உலகளாவிய வகையிலான உணர்வுகளுமே அனைவரையும் இணைக்கும்.

நீங்கள் உணர்ச்சி மிகுந்த காதல் கதைகள் செய்வதில் வல்லவர், இப்படத்தில் ரொமான்ஸ் இருக்கிறா?, இமான்வியின் பாத்திரம் எப்படி இருக்கும் ?

“அந்தால ராக்‌ஷசி”  முதல் “சீதா ராமம்” வரை என் காதல் கதைகள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. ஃபௌசியிலும் காதல் இருக்கிறது. அது வேறுவிதமான வகையில், தீவிரமான, உணர்ச்சிகரமான வடிவில் இருக்கிறது. பிரபாஸ் மற்றும் இமான்வி இடையேயான காதல் உங்கள்  இதயத்தைத் தொட்டுவிடும். இமான்வி “பாகிஸ்தானைச் சேர்ந்தவர் ” என பரவி வரும் வதந்திகளை முற்றிலுமாக மறுக்கிறேன். அவர் உண்மையில் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்தார். அவரது தந்தை அங்கு ஹோட்டல் துறையில் பணியாற்றுகிறார். ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர், அவர் முழுமையான அர்ப்பணிப்புடன் நடிப்பில்  கவனம் செலுத்தி வருகிறார். மக்கள் அவரை ஆதரிக்க வேண்டும். ஆதாரமற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்.

பிரபாஸுடன் பணிபுரியும் அனுபவம் எப்படி இருக்கிறது? அவர் உங்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கிறாரா ?
பிரபாஸ் எல்லோராலும்“டார்லிங்” என்று அழைக்கப்படுவதற்குக் காரணம் இருக்கிறது. அவர் தனது இயக்குநர்களுக்கு முழு சுதந்திரத்தையும் வழங்குகிறார்.  அவர்களின் கற்பனைக்கு முழு ஆதரவு தருகிறார். அவரது மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தினையும் மீறி, அவர் எளிமையானவர், கடினமாக உழைப்பவர், மிகுந்த பணிவுடன் இருப்பவர். என் முழு திரை வாழ்க்கையிலும் இப்படிப் பட்ட படைப்புச் சுதந்திரம் கிடைத்ததில்லை. பிரிட்டிஷ் காலத்தின் பின்னணியில் நடக்கும் இந்தக் கதையில் அவர் பல பரிமாணங்களுடன் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதற்கு நான் ஆவலாக இருக்கிறேன்.

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, T-Series நிறுவனத்தின் குல்ஷன் குமார் வழங்குகிறார்.

Friday, October 24, 2025

மெகா பவர் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர் இணையும் “பெத்தி” (peddi) பட பாடல் படப்பிடிப்பு இலங்கையில் ஆரம்பம்!*

*மெகா பவர் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர் இணையும் “பெத்தி” (peddi) பட பாடல் படப்பிடிப்பு இலங்கையில் ஆரம்பம்!*

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில்,  பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கிராமிய அதிரடி திரைப்படமான “பெத்தி” படத்தின் தயாரிப்பு பணிகள் வெகு வேகமாக நடந்து வருகின்றது. இயக்குநர் புச்சி பாபு சானா (Buchi Babu Sana) இயக்கும் இப்படத்தில், நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கின்றார். விருத்தி சினிமாஸ்  (Vriddhi Cinemas)  சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு ( Venkata Satish Kilaru) தயாரிக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் பெருமையுடன் வழங்கும் இப்படம், மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

இந்நிலையில், ராம் சரண், இயக்குநர் புச்சி பாபு சானா மற்றும் குழுவினர் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக இலங்கை சென்றுள்ளனர். அங்கு நாளை முதல் ஆரம்பமாகும் படப்பிடிப்பில், இலங்கை தீவின்  பல அற்புதமான இடங்களில், ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் பங்குபெறும், ஒரு அழகான பாடல் படமாக்கப்பட உள்ளது. இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற, மேஸ்ட்ரோ A.R. ரஹ்மான் இசையைமைக்கிறார்.

“பெத்தி” படம், இயக்குநர் புச்சி பாபு சானாவுக்கு மிகவும் பெருமைக்குரிய முயற்சி ஆகும். இதில், ராம் சரணை இதுவரை காணாத புதிய தோற்றங்களிலும் பல்வேறு வித்தியாசமான லுக்குகளிலும் காட்டத் திட்டமிட்டுள்ளார். தனது கதப்பாத்திரத்திற்காக  முழு அர்ப்பணிப்புடன், கடின உழைப்புடன், அதிரடி காட்சிகளில் தீவிரமாக பணிபுரிந்து வருகிறார் ராம் சரண்.

கருநாடக சக்கரவர்த்தி  சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவில் முன்னணி கலைஞர்கள் இணைந்துள்ளனர். R ரத்னவேலு ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். தேசிய விருது பெற்ற நவீன் நூலி எடிட்டராக பணிபுரிகிறார்.

“பெத்தி” படம் வரும்  2026 மார்ச் 27 அன்று பான் இந்திய அளவில் மிகப் பிரமாண்டமாக திரையிடப்பட உள்ளது.

நடிகர்கள் :
குளோபல் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா

தொழில்நுட்பக் குழு :
இயக்கம், திரைக்கதை: புச்சி பாபு சானா
வழங்குபவர்கள் : மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ்
தயாரிப்பு நிறுவனம்: விருத்தி சினிமாஸ்
தயாரிப்பாளர்: வெங்கட சதீஷ் கிலாரு
இணை தயாரிப்பாளர்: ஈஷான் சக்சேனா
இசை: A.R. ரஹ்மான்
ஒளிப்பதிவு: R. ரத்னவேலு
கலை இயக்கம்: அவினாஷ் கொல்லா
படத்தொகுப்பு: நவீன் நூலி
நிர்வாக தயாரிப்பாளர்: V.Y. பிரவீன் குமார்
மார்க்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ
மக்கள் தொடர்பு : யுவராஜ்


Tuesday, October 14, 2025

தீப ஔித் திருநாளை முன்னிட்டு கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் அமேசான் வெப் சீரியஸ்“சுழல்: தி வோர்டெக்ஸ்”

தீப ஔித் திருநாளை முன்னிட்டு கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் அமேசான் வெப் சீரியஸ்
“சுழல்: தி வோர்டெக்ஸ்”
 
அமேசான் பிரைம் ஓடிடி பிளாட்பார்மில் வெளியாகி பார்வையாளர்களை வெகுவாய் கவர்ந்த தமிழ் கிரைம் திரில்லர் வெப் சீரியஸான “சுழல்: தி வோர்டெக்ஸ்”, தீப ஔித் திருநாளை முன்னிட்டு கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.
 
பிரபல இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தத் தொடரில், கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுவாரஸ்யமான கதை, எதிர்பாராத திருப்பங்கள், சிலிர்ப்பூட்டும் நிகழ்வுகளின் மூலம் பார்வையாளர்களை ஈர்க்கும் விதமாக இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.
 
இந்தத் தொடர் தீபாவளி சிறப்பு வார இறுதியில், அக்டோபர் 18, 19, மற்றும் 20 ஆகிய மூன்று தேதிகளிலும் பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
 
சஸ்பென்ஸ், டிராமா, மற்றும் உணர்ச்சிகளின் சிறந்த கலவையுடன் உருவாகியிருக்கும் இந்த வெப் சீரியஸ், பார்வையாளர்களுக்கு புதுவித அனுபவத்தை வழங்கும் என்பதால் இந்த தீபாவளி வார இறுதியில் கலைஞர் டிவியில் “சுழல்: தி வோர்டெக்ஸ்” தொலைக்காட்சி பிரீமியரை காணத்தவறாதீர்கள்.
 
இதுதவிர, தீப ஒளித் திருநாளன்று காலை 9 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனியின் நகைச்சுவையான சிறப்பு பட்டிமன்றமும், காலை 10 மணிக்கு அஜித்குமார் - மஞ்சு வாரியர் நடிப்பில் “துணிவு” சூப்பர்ஹிட் திரைப்படமும், மாலை 6 மணிக்கு விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் “கட்டா குஸ்தி” சூப்பர்ஹிட் திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கிறது.

Friday, October 3, 2025

மூன்று காலகட்டங்களில் மூன்று நிலப்பகுதிகளில் நடக்கும் ஒரு அமர காதல் கதை " அமரம்


 மூன்று காலகட்டங்களில்  மூன்று நிலப்பகுதிகளில் நடக்கும்  ஒரு அமர காதல் கதை " அமரம் "

ராஜன் தேஜேஸ்வர் - ஐரா அகர்வால் நடிக்கும் " அமரம் " 

திருஅருள் கிருஷ்ணன் இயக்கத்தில் 

ராஜன் தேஜேஸ்வர், ஐரா அகர்வால் நடிக்கும் " அமரம் " 

திவ்ய சேத்ரா பிலிம்ஸ்  பட நிறுவனம் ம் சார்பில் நிர்மலா ராஜன் வழங்க C.R.ராஜன் தயாரிக்கும் படத்திற்கு " அமரன் "என்று பெயரிட்டுள்ளனர்.

ராஜன் தேஜேஸ்வர் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.கதாநாயகியாக ஐரா அகர்வால் நடித்துள்ளார். மற்றும் ஜார்ஜ், சாய் தீனா, நாகிநீடு, கல்கி ராஜன், ஹரிஷ் பெராடி, வாசுதேவன் முரளி ஆகியோர் நடித்துள்ளனர். 

கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ளார் திருஅருள் கிருஷ்ணன். இவர் இயக்குனர் கோகுல், ராஜன் மாதவ் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் பற்றி இயக்குனர் திருஅருள் கிருஷ்ணன் பகிர்ந்தவை.

இப்படம் மூன்று காலகட்டங்களில்  மூன்று நிலப்பகுதிகளில் நடக்கும்  ஒரு அமர காதல் கதை.

இதுவரை திரையில் பார்த்திராத அதிரடி காட்சிகளுடன்  முழுக்க முழுக்க ஆக்சன் விருந்தாக இந்த திரைப்படம் இருக்கும். மிராக்கிள் மைக்கேல்  புதுவிதமான பாணியில் ஸ்டண்டை வடிவமைத்துள்ளார். 

கிளைமேக்ஸ் காட்சியில் பிரபல பாலிவுட் குழு உதவியுடன், முழுக்க ரியல் ஸ்டண்ட்ஸ் செய்திருக்கிறோம். தெலுங்கு சூப்பர் ஹிட் இசையமைப்பாளர் மிக்கி J  மேயர்   இப்படம் மூலம், தமிழுக்கு முதன்முறையாக அறிமுகமாகிறார். 4 பாடல்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக இருக்கும். 5000 அடி உயரத்தில் ஒரு காட்சியை படமாக்கியுள்ளோம். இப்படி இப்படத்திற்காக ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து வடிவமைத்திருக்கிறோம்.  இப்படம் இதுவரை சொல்லப்படாத கிழக்கு காடு  மக்களின்  வாழ்க்கையை சொல்லும் படமாக இருக்கும். இப்படம் ரசிகர்களுக்கு முற்றிலும்  புது அனுபவமாக இருக்கும். 

பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் மிக்கி ஜெ .மேயர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 

வெற்றிமாறனின் வட சென்னை, அசுரன் படங்களில் பணியாற்றிய R. ஸ்ரீராமர்  எடிட்டிங் பணிகளை செய்துள்ளார். 

இந்தப் படத்தின் முதல் பார்வையை   இயக்குனரும், நடிகருமான சசிகுமார் நேற்று தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். தற்போது அது ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு, பகிரப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தொழில் நுட்ப குழு விபரம் :


எழுத்து இயக்கம் -  அருள் கிருஷ்ணன்


இசை - மிக்கி ஜெ .மேயர் 


பாடல்கள் - சினேகன், சௌந்தரராஜன். K


ஒளிப்பதிவு - பரத் குமார், கோபிநாத் 


எடிட்டிங் - R. ஸ்ரீராமர் 


கலை இயக்கம் - ஜனார்த்தனன்


ஸ்டண்ட் - மிராக்கிள் மைக்கேல்


நடனம் - பூபதி 


தயாரிப்பு மேற்பார்வை - A.P.ரவி 


மக்கள் தொடர்பு - புவன் செல்வராஜ் 


தயாரிப்பு - C.R.ராஜன்.


இணையத்தில் இலவசமாக திருக்குறள் திரைப்படம்


 இணையத்தில் இலவசமாக திருக்குறள் திரைப்படம்   !! 


திருவள்ளுவருக்கு ஓபனிங் சாங், துப்பாக்கி - தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் !!

எங்கு திருவள்ளுவர் சிலை வேண்டுமானாலும் எங்களை அணுகலாம் - விஜிபி சந்தோஷம் !! 

 திருவள்ளுவர் எந்த மதம், எந்த ஜாதி என தெரியாது ஆனால் அவர் பற்றி தெரிந்த ஒன்றே ஒன்று அவர் தமிழர் என்பது தான் - ராம்ராஜ் குழும தலைவர் கே ஆர் நாகராஜன் !!

பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை " Welcome Back Gandhi " என்ற பெயரிலும் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம் தயாரிப்பில்,  இயக்குநர் A.J.பாலகிருஷ்ணன் இயக்கத்தில்,  திருக்குறளை மையமாக வைத்து  உருவான   ‘திருக்குறள்’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.  

உலகப் பொதுமறையாம் திருக்குறளை உலகம் முழுக்க உள்ள மக்களுக்குக் கொண்டு செல்லும் வகையில், இப்படம் யூடுயூப் ( YouTube ) தளத்தில் வெளியிடும் விழா, இன்று படக்குழுவினருடன்   பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் இயக்குநர் A.J.பாலகிருஷ்ணன் பேசியதாவது.., 

இந்த படம் உருவாக காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி. படம் வெளிவந்த போது, நல்ல விமர்சனங்கள் வந்தது ஆனால் திரையரங்குக்குச் சரியான ஆட்கள் வரவில்லை. அதனால் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று, யூடுயூப்பில் இலவசமாக வெளியிடலாம் என முடிவு செய்தோம். ராம்ராஜ் குழும தலைவர் நாகராஜ் அவர்கள் விளம்பரம் தந்து வெறும் கார்ட் மட்டும் போடுங்கள், என்று பெருந்தன்மையோடு சொன்னார். அவருக்கு நன்றி.  இப்படம் உலகம் எங்கும் போய்ச் சேரும் காலம் கடந்து நிற்குமென நம்பிக்கை உள்ளது. அனைவருக்கும் நன்றி. 

ஐ ஏ எஸ் அகாடமி தலைவர் தமிழய்யா பேசியதாவது.., 

திருக்குறள் சார்ந்த ஒரு திரைப்படம் என்பது திரைத்துறையின் நீண்ட நாள் கனவு. அதை யார் எடுத்திருக்கிறார்கள் என்றால் மிகச்சரியான ஒரு இயக்குநர் செய்துள்ளார். ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை " Welcome Back Gandhi " என்ற பெயரிலும் திரைப்படமாக உருவாக்கிய இயக்குநர் A.J.பாலகிருஷ்ணன் இதைச் செய்திருப்பது சிறப்பு. இப்போது இது மக்கள் அனைவருக்கும் செல்லும் வகையில் யூடுயூப்பில் வெளியிடுவது இன்னும் சிறப்பு. இப்படத்தின் கதையை செம்பூர்.கே.ஜெயராஜ் மிக அற்புதமாக உருவாக்கியுள்ளார். இது தமிழர்கள் அனைவரிடத்திலும் சென்று சேர வேண்டும். அனைவருக்கும் நன்றி. 

தயாரிப்பாளர் பிஎல் தேனப்பன் பேசியதாவது.., 

திரைத்துறையில் பலவிதமான படங்கள் உள்ளது அதில் திருக்குறளை வைத்துப் படமெடுத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி.  இதை உருவாக்கிய ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனத்திற்கும் A.J.பாலகிருஷ்ணன் அவர்களுக்கும் என் நன்றிகள். இப்படம் மக்கள் அனைவரிடமும் சென்று சேர வேண்டும் என்ற எண்ணத்தில் யூடுயூப்பில் வெளியிட்டிருப்பது மகிழ்ச்சி. இப்படத்தைக் கண்டிப்பாக மக்கள் கொண்டாடுவார்கள். நன்றி. 

தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பேசியதாவது.., 

திருக்குறள் படம் மிகச்சிறப்பாக வந்துள்ளதாக அனைத்து பத்திரிக்கைகளும் பாராட்டினார்கள் அதற்கு முக்கிய காரணம் பாலகிருஷ்ணன் தான். காமராஜ், காந்தி, திருக்குறள் என எல்லாவற்றையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற வேள்வியுடன் அவர் செயல்பட்டு வருகிறார். இப்போது சினிமா மாறிவிட்டதாகச் சொன்னார். ஆமாம் இப்போது புது புது துப்பாக்கிகளால் சுடுகிறார்கள். திருவள்ளுவருக்கு ஓபனிங் சாங், துப்பாக்கி எல்லாம் தந்தால் நன்றாக இருக்குமா?. திருக்குறள் படத்தின் முக்கிய நோக்கமென்ன மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்பது தான். அதை மனதில் வைத்து இதை யூடுயூப்பில் வெளியிடுவது மிகச்சிறந்த முயற்சி. இதற்கு உதவும் ராம்ராஜ் நிறுவனத்தின் நாகராஜ் அவர்களுக்கு நன்றி. திருவள்ளுவரை உலகம் முழுக்க கொண்டு சென்றுள்ள விஜிபி விஜி சந்தோஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இப்படத்திற்கு மக்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும் நன்றி. 

விஜிபி புகழ் விஜி சந்தோஷ் பேசியதாவது.., 

தருக்குறள் விழாவில் கலந்துகொள்வதே மகிழ்ச்சி. உலகம் முழுக்க புகழ்பெற்ற ஒருவரைப் பற்றிப் படமெடுப்பது சாதாரண விசயமில்லை. 

அன்பு நண்பர் பாலகிருஷ்ணன் அவர்களின் இந்த சீரிய முயற்சிக்கு நன்றி. ராம்ராஜ் குழும நாகராஜ் ஐயா அவர்கள் இதற்கு உதவியுள்ளார் அவருக்கு என் நன்றிகள். இந்தப்படம் இப்போது யூடுயூப்பில் வெளியாகியுள்ளது. இதனைப் பத்திரிக்கை நண்பர்கள் உலகம் முழுக்க கொண்டு செல்ல வேண்டும். விஜிபி தமிழ் சங்கம் 198 திருவள்ளுவர் சிலைகளை உலகம் முழுக்க வைத்துள்ளோம். ஆப்ரிக்கா,  அமெரிக்கா என உலகம் முழுக்க தந்துள்ளோம். எங்கு திருவள்ளுவர் சிலை வேண்டுமானாலும் எங்களை அணுகலாம் எனச் சொல்லிக்கொண்டு விடை பெறுகிறேன் நன்றி, 

ராம்ராஜ் குழும தலைவர் கே ஆர் நாகராஜன் பேசியதாவது.., 

திருக்குறள் என்பது நமக்குப் பள்ளிகளிலேயே சொல்லித்தரப்பட்டது. 1330 குறளை படித்து, பாஸ் செய்வதை விட அதில் ஒரு குறள் படி நடந்தால் வாழ்க்கை சிறக்கும். திருவள்ளுவர் எந்த மதம், எந்த ஜாதி எனத் தெரியாது ஆனால் அவர் பற்றி தெரிந்த ஒன்றே ஒன்று அவர் தமிழர் என்பது தான். அவருக்கு உருவமில்லை என்பதால் தான், அவரை தெய்வப்புலவர் எனப் பெயர் கிடைத்துள்ளது. எந்த இடத்திலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாமல் மக்களுக்காக குறள் தந்தவர். எல்லா நாடுகளிலும் மக்களை நல்வழிப்படுத்த பல நூல்கள் உண்டு. அதிலெல்லாம் சிறந்தது திருக்குறள். பொய்க்கு நிறைய அவதராம் உள்ளது, உண்மைக்கு ஒரே வடிவம் தான் அது திருக்குறள். அதை மிக அழகான கதையாக்கி அதற்குச் சரியான நடிகர்களைப் பிடித்து படத்தைச் செய்துள்ளார்கள். வாசுகியாக நடித்தவர் எங்கள் திருப்பூர் பெண் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி.  இப்படி ஒரு சாதனை செய்துவிட்டு  நான் ஒரு அணில் மாதிரி என்று எளிமையாக இருக்கிறார், ஏ ஜே பாலகிருஷ்ணன். காமராஜ் வாழ்க்கை வரலாற்றை இவர் தான் எடுத்தார் என தெரியவந்தபோது அவர் மீது பெரிய மரியாதை வந்தது. மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு இருக்கிறது. நான் காமராஜ் படம் பார்த்து அவரை வாழ்த்துவது போல, உலகம் முழுக்க இனி திருக்குறளைப் பார்த்து இவரைக் கொண்டாடுவார்கள். அறம் அன்பு இதைத்தான் திருவள்ளுவர் சொல்லியுள்ளார். இது தான் உலகம் முழுமைக்குமானதாக உள்ளது. இப்படத்தை எடுத்த குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. 

இப்படத்தில் வள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி, பாண்டிய மன்னனாக ஓ.ஏ.கே.சுந்தர், நக்கீரராக இயக்குநர் சுப்ரமணிய சிவா, புலவர் பெருந்தலைச்சாத்தனாக கொட்டாச்சி ஆகியோரோடு, குணாபாபு, பாடினி குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசைஞானி இளையராஜா பாடல்கள் எழுதி,  இசையமைத்துள்ளார்.

கலை இயக்குநராக சுரேஷ் கலேரியும், ஆடைவடிவமைப்பாளராக சுரேஷ் குமாரும் பணியாற்றியுள்ளனர். செம்பூர்.கே.ஜெயராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுத, எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இத்திருப்பணியில் மதுரை டி.பி.ராஜேந்திரன் முதன்மைப் பங்களிப்புச் செய்துள்ளார். வி.ஐ.டி.வேந்தர் கோ.விஸ்வநாதன் தலைமையிலான  தமிழியக்கமும் இப்பணியில் இணைந்துள்ளது.   

ரமணா கம்யூனிகேஷன்ஸ் இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.

தயாரிப்பு நிர்வாகம் - S. ஜெய்சங்கர்

மக்கள் தொடர்பு - புவன் செல்வராஜ் 


இயக்குநர் A.J.பாலகிருஷ்ணன்.


தற்போது Sri Ramana Studio என்ற

 யூடுயூப் தளத்தில் இப்படம் இலவசமாக கிடைக்கிறது.


டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் திருமணம் !

*'டூரிஸ்ட் ஃபேமிலி'  பட இயக்குநர்  அபிஷன் ஜீவிந்த் திருமணம் !!* 'டூரிஸ்ட் ஃபேமிலி'  படம் மூலம் அனைவரது கவனத்தையு...