Wednesday, January 21, 2026

கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணிகொண்ட "கற்றது சமையல்"

கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணிகொண்ட "கற்றது சமையல்"
 
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் - வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் "கற்றது சமையல்"நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
 
மண் மனம் மாறாமல் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் காடு, மேடு என வித்தியாசமான இடங்களை தேர்வு செய்து கிராமத்து சமையலை மிக்ஸி, கிரைண்டர்  போன்ற எந்த வித நவீன உபகரணங்களும் இன்றி, இயற்கையாகவே கிடைக்கும் பொருட்களை வைத்து முழுக்க முழுக்க கிராமத்து பாணியில், கைப்பக்குவத்திலேயே சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவை சமைப்பதே இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம்.
 
இதுவரை நாம் அறிந்திராத பல சுவையான பாரம்பரிய உணவு வகைகளை, அதன் இயற்கை மனம் மற்றும் ருசியுடன் சமைப்பதுடன், தினமும் ஒரு வித்தியாசமான சமையலை நம் கண் முன்னே விருந்தளிக்கும் விதமாக "கற்றது சமையல்" நிகழ்ச்சி உருவாகி வருகிறது.

Wednesday, January 14, 2026

கலைஞர் தொலைக்காட்சியில் "தமிழோடு விளையாடு" நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஞாயிறுதோறும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

கலைஞர் டிவியின் "தமிழோடு விளையாடு சீசன் 3" - காலிறுதி வாய்ப்புக்கான போட்டியில் மோதும் பள்ளி மாணவர்கள்..!
 
 
கலைஞர் தொலைக்காட்சியில் "தமிழோடு விளையாடு" நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஞாயிறுதோறும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
 
பிரபல இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்று அசத்தி வருகின்றனர். தற்போது நடந்து வரும் விறுவிறுப்பான சுற்றுகளில் வெற்று பெறும் பள்ளிகள் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற இருப்பதால் போட்டி விறுவிறுப்பாகி இருக்கிறது.
 
இந்த நிகழ்ச்சி மாணவர்களின் தமிழ் அறிவை சோதிக்காமல், தமிழ் அறிவை ஊட்டும் உணர்ச்சிப்பூர்வமான புதிய சுற்றுகளுடன் ஒளிபரப்பாகிறது.

Thursday, January 8, 2026

கலைஞர் டிவியின் பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சிகள்

கலைஞர் டிவியின் பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சிகள்
 
கலைஞர் தொலைக்காட்சியில் பொங்கல் வாரத்தை முன்னிட்டு வருகிற ஜனவரி 14 காலை 10 மணிக்கு பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் "லவ் டுடே" சூப்பர்ஹிட் திரைப்படமும், பிற்பகல் 1.30 மணிக்கு எஸ்.ஜே.சூர்யா, லைலா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடிப்பில் அமேசான் பிரைமில் வௌியாகி வரவேற்பை பெற்ற திரில்லர் வெப் சீரியஸான "வதந்தி - பகுதி 1" ஒளிப்பரப்பாக இருக்கிறது.
 
ஜனவரி 15 அன்று காலை 9 மணிக்கு திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் நகைச்சுவையான சிறப்பு பட்டிமன்றமும், காலை 10 மணிக்கு விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லெட்சுமி நடிப்பில் "கட்டா குஸ்தி" சிறப்பு திரைப்படமும், பிற்பகல் 1.30 மணிக்கு "வதந்தி - பகுதி 2" மற்றும் மாலை 6 மணிக்கு மணிகண்டன் நடிப்பில் "குடும்பஸ்தன்" சூப்பர்ஹிட் திரைப்படமும் ஒளிப்பரப்பாக இருக்கிறது.
 
ஜனவரி 16 காலை 10 மணிக்கு சிவகார்த்திகேயன் - பிரியங்கா மோகன் நடிப்பில் "டான்" சூப்பர்ஹிட் திரைப்படமும், பிற்பகல் 1.30 மணிக்கு "வதந்தி - பகுதி 3" ஒளிப்பரப்பாகிறது.
 
ஜனவரி 17 காலை 10 மணிக்கு சிலம்பரசன் நடிப்பில் "வெந்து தணிந்தது காடு" திரைப்படமும், பிற்பகல் 1.30 மணிக்கு ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் "சிங்கப்பூர் சலூன்" சூப்பர்ஹிட் திரைப்படமும் ஒளிபரப்பாக இருக்கின்றன.

Sunday, January 4, 2026

ராட்ட* குழந்தைகள் முதல் பார்க்கக் கூடிய குடும்பப்பாங்கான "U" சான்றிதழ் பெற்ற திரைப்படம்....

*ராட்ட* குழந்தைகள் முதல் பார்க்கக் கூடிய குடும்பப்பாங்கான  "U" சான்றிதழ் பெற்ற திரைப்படம்....

2026 பொங்கல் வெளியீடாக வரும் விஜயின் ஜனநாயகன், சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி படங்களோடு ராட்ட திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது...

*ராட்ட* இன்றைய திரையுலகில் வருமானத்திற்காக மட்டும் திரைப்படம் எடுக்காமல் சமுதாயத்திற்காக வேண்டி ஒரு திரைப்படம் எஃப் எம் எஸ் மீடியாஸ் நிறுவனம் எடுத்துள்ளது. விசைத்தறி தொழிலை மையமாக வைத்து ஒரு வாழ்வியல் திரைப்படத்தை காதலோடு கண்ணியம் கலந்து கர்வத்தோடு எடுத்துள்ளது இது திரை சமூகம் பெருமை கொள்ள வேண்டிய விஷயம் இத் திரைப்படத்தை சக்திவேல் நாகப்பன் இயக்கி கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார் திருமணத்திற்கு முன் சேமிப்பு என்ற பழக்கம் இல்லாத இளைஞன் திருமணத்திற்கு பின் அத்தியாவசிய தேவைக்கு கடன் வாங்க அதன் மூலம் அவன் வாழ்வில் வரக்கூடிய மாற்றம், தன் கணவனின் சிரமத்தை புரிந்த மனைவி கணவனை எவ்வாறு தேற்றி வாழ்க்கையில் வெற்றி பெற இணைந்து பயணிக்கிறார்கள் இறுதியில் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பது தான் இத் திரைப்படத்தின் மையக்கரு... 
இத்திரைப்படத்தை விரைவில் சி எஸ் எம் கிரியேஷன் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியீடு செய்கிறது... 
இத்திரைப்படத்தில் ஹெலன் சித்தா தர்ஷன் சாப்லின் பாலு, சந்திரன், கிருஷ்ணன், முத்துராஜா, பம்பாய் சுப்ரமணி,கல்பனா, வசந்தி, ஜெயஸ்ரீ ,ரத்னா, செல்லம்மா மற்றும் பலர் நடித்துள்ளார்கள்... 
இத்திரைப்படத்திற்கு எடிட்டிங் லோகேஷ் கேமரா வெற்றி ஒளிப்பதிவில் இசை அமைத்திருக்கிறார் மணி கிருஷ்ணன்... 
அனைத்து பணிகளும் முடிந்து சென்சார் பெற்று விரைவில் திரைக்கு வர உள்ளது அனைத்து விசைத்தறி தொழிலாளர்களுக்கும் மாபெரும் புத்தாண்டு பரிசாகவும் பொங்கல் கொண்டாட்டமாகவும் அமையும் என படத்தின் இயக்குனர் சக்திவேல் நாகப்பன் கூறி இருக்கிறார்...

விஜயமுரளி
கிளாமர் சத்யா
PRO

கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணிகொண்ட "கற்றது சமையல்"

கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணிகொண்ட "கற்றது சமையல்"   கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் - வெள்ளி வரை மாலை...