Monday, May 20, 2024

ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான “ஆல் வி இமேஜின் அஸ் லைட்” திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டி

*ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான “ஆல் வி இமேஜின் அஸ் லைட்”  திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டி !!* 

பாயல் கபாடியாவின் இயக்கத்தில், கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான “ஆல் வி இமேஜின் அஸ் லைட்”  ( all we imagine as light ) திரைப்படம்,  30 ஆண்டுகளுக்குப் பிறகு, கேன்ஸ் திரை விழாவில் முதன்மைப் போட்டிப் பிரிவில், cannes palme d or 2024 விருதுக்காக போட்டியிடும் முதல் இந்தியத் திரைப்படமாக சாதனை படைத்துள்ளது. உலகளவில் பிரபலமான பெரும் படைப்பாளிகளான பிரான்ஸ் ஃபோர்டு கப்போலா மற்றும் டேவிட் ரோஹன் ஆகியோரின் படைப்புகளுடன் இப்படம் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடதக்கது. 


இப்படத்தில் கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, சாயா கதம்  என விருது பெற்ற நடிகர்களுடன் கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இதற்கு முன்னதாக, பிருந்தா மாஸ்டரின் தமிழ் படமான தக்ஸ் திரைப்படத்தில்,  ஹிருது ஹாருன் நாயகனாக நடித்திருந்தார். மேலும் விஜய் சேதுபதி நடிப்பில், சந்தோஷ் சிவன் இயக்கிய மும்பைக்கார் படத்திலும், அமேசான் வெப் சீரிஸ் க்ராஷ் கோர்ஸிலிம் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்போது பாயல் கபாடியாவின் இயக்கத்தில், இவரது நடிப்பில் உருவாகியுள்ள “ஆல் வி இமேஜின் அஸ் லைட்” படத்தின் டிரெய்லர், சர்வதேச அரங்கில் பெரும் பாராட்டுக்களைக் குவித்து கவனம் ஈர்த்து வருகிறது. 

தற்போது ஹிருது ஹாரூன் வெற்றிமாறன் தயாரிப்பில் ஒரு தமிழ் படத்திலும், கப்பேலா புகழ் மலையாள இயக்குநர் முஸ்தபா இயக்கத்தில் ஒரு படத்திலும்,  நடித்து முடித்துள்ளார்.

வரும் மே 25 ஆம் தேதி கேன்ஸ் விருது அறிவிக்கப்படவுள்ளது.  உலகம் முழுக்க திரையுலக படைப்பாளிகளால் கொண்டாடப்படும் கேன்ஸ் விருதான cannes palme d or 2024 விருதுக்காக இந்த முறை ஒரு இந்தியப்படம் கலந்துகொள்வதால்,  இந்தியா முழுக்க படைப்பாளிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சென்னை, அண்ணா சாலையில் பிரம்மாண்டமாக திறக்கப்பட்டுள்ள 'கீதம் வெஜ்' ரெஸ்டாரண்ட்!*

*சென்னை, அண்ணா சாலையில் பிரம்மாண்டமாக திறக்கப்பட்டுள்ள 'கீதம் வெஜ்' ரெஸ்டாரண்ட்!*

இந்திய பாரம்பரியத்தை பெருமைப்படுத்தும் விதமாக நாங்கள், 'கீதம் வெஜ்' சிறந்த தரத்தில் நமது இந்திய உணவுகளை வழங்குகிறோம். பாரம்பரிய இந்திய உணவு வகைகளைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பு மற்றும் உள்நாட்டு சமையல் பொருட்களைப் பயன்படுத்தி உணவுப் பொருட்களைத் தயார் செய்கிறோம். சமையல் மற்றும் விருந்தோம்பல் துறையில் பத்து வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டிருக்கிறோம். உலக அளவில் இந்திய உணவின் சுவையை கீதம் மூலம் கொண்டு சென்று வெற்றி பெற செய்த, எங்கள் பார்ட்னர்ஸூக்கும் நன்றி. 

சென்னையை தளமாகக் கொண்ட 'கீதம் வெஜ்' அதன் உயர்தர, தூய்மையான சைவ தென்னிந்திய உணவு வகைகளுக்கு மிகவும் பிரபலமானது. நாங்கள் இந்தியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பிற பகுதிகளான இந்தோ- சைனீஸ், சாட், வட இந்திய உணவு வகைகள் மற்றும்
துருக்கிய இனிப்புகள் என பல்வேறு வகையான உணவுகளை வழங்குகிறோம். உணவகங்களைத் தவிர, 'கீதம் வெஜ்'ஜின் சுவையூட்டும் இனிப்புகளுக்கென தனி ஸ்டாலும் உள்ளது. 

'கீதம் வெஜ்'ஜின் இனிப்புகள் மற்றும் பிரத்தியேகமாக விற்கப்படும் உயர்தர பிற பொருட்கள் எல்லாம் எங்கள் ஒவ்வொரு உணவகத்தின் ஸ்டால்களிலும் உண்டு. இவை தவிர ஹோம் டெலிவரி, வெளிப்புற கேட்டரிங் சேவைகள், வெட்டிங் கேட்டரிங் ஆர்டர்கள் மற்றும் பஃபே நிகழ்வுகளையும் திருப்திகரமான மற்றும் மறக்கமுடியாத அனுபவத்தோடு உங்களுக்கு நடத்தி தருவோம்.

கூடுதலாக, எங்கள் திறமையான கால் சென்டர் குழு சரியான நேரத்தில் செயல்பட்டு வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள், குறைகள் இருந்தால் அவற்றை விசாரித்து உடனே நிவர்த்தி செய்கிறது. வாடிக்கையாளர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு ஒவ்வொரு முறையும் சுவையான உணவு வழங்குவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது 'கீதம் வெஜ்'.

இதன் 11வது கிளை திறப்பில் நடிகர்கள் நளினி, YG மகேந்திரன், ஆர்த்தி மற்றும் கணேஷ்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். "நல்ல வெஜ் உணவு சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது நம்முடைய 'கீதம் வெஜ்'. நீங்கள் எந்த நேரத்தில் பசி என்று சாப்பிட வந்தாலும் சுடச்சுட இங்கு உங்களுக்குப் பிடித்த வெஜ் உணவு கிடைக்கும். காலை 6 மணியில் இருந்து இரவு 2 மணி வரை 'கீதம் வெஜ்' திறந்திருக்கும். வயதாக வயதாக நான் வெஜ் குறைத்து கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். அதனால் நானும் வெஜ்தான். உணவின் சுவை இங்கு அவ்வளவு சிறப்பாக இருந்தது. ஒட்டுமொத்தத்தில் 'கீதம் வெஜ்' சிறப்பானது, நம்பகத்தன்மை மற்றும் அதன் அர்ப்பணிப்பிற்காக பெயர் பெற்றது. வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன உணவு அனுபவத்தை வழங்க காத்திருக்கிறது" என்றார்.

'ஏஸ்' ( ACE) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு!




'ஏஸ்' ( ACE) படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு!

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்  'ஏஸ்' ( ACE)' எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஏஸ்' எனும் திரைப்படத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, நடிகை ருக்மணி வசந்த், யோகி பாபு, பி. எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.‌ கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏ. கே. முத்து கையாள, படத்தொகுப்பு பணிகளை ஆர். கோவிந்தராஜ் கவனித்திருக்கிறார். கமர்சியல் அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7Cs  என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. 

இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இப்படத்தின். ஃபர்ஸ்ட் லுக்கில் விஜய் சேதுபதியின் தோற்றம் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதிலும் விஜய் சேதுபதியின் இளமையானத் தோற்றம் + புகை பிடிக்கும் குழாய் + தாயக்கட்டை ... என பல சுவாரஸ்யமான விசயங்கள் இடம் பிடித்திருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. டைட்டிலுக்கான டீசரில் படத்தில் தோன்றும் முன்னணி  நட்சத்திர கலைஞர்களின் அறிமுகமும், பின்னணி இசையும், விஜய் சேதுபதியின் திரை தோன்றலும் ரசிகர்களை ஈர்த்திருக்கிறது. டீசரில் சூதாட்டம்,  துப்பாக்கி, குண்டு வெடிப்பு,  கொள்ளை, பைக் சேசிங் ...போன்றவை இருந்தாலும், யோகி பாபுவின் ரியாக்ஷன் சிறப்பாக இருப்பதாலும்  இந்த திரைப்படம் கிரைம் வித் காமெடி திரில்லராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த டீசரில் அனிமேஷன் பாணியில் கதாபாத்திரங்கள் அறிமுகமாவதும், அதற்கு ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசையும் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதால் 'ஏஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் இப்படத்தின் சிங்கிள் ட்ராக் மற்றும் டீசர் வெளியாகும் என படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டில் வெளியாகும் இரண்டாவது படம் இது என்பதால் 'ஏஸ்' படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடமும், திரையுலக வணிகர்களிடமும் அதிகரித்திருக்கிறது.

https://youtu.be/T1MVmNUqUsA?si=Fwv9g015DPveclXp

 

Sunday, May 19, 2024

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'உப்பு புளி காரம்' சீரிஸை, மே 30 முதல் ஸ்ட்ரீம் செய்கிறது !!

 


டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'உப்பு புளி காரம்'  சீரிஸை, மே 30 முதல் ஸ்ட்ரீம் செய்கிறது !! 

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் அடுத்த அதிரடி ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸ் 'உப்பு புளி காரம்'  சீரிஸை வரும் மே 30 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.

மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் கொண்டாடும் கலகலப்பான மற்றும் துடிப்பான 'குடும்பப் பாட்டு' எனும் அழகான தீம் பாடலுடன் இந்த சீரிஸ் வெளியாகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. வண்ணமயமான காட்சிகள் மற்றும் நட்சத்திர நடிகர்களின் பங்களிப்பில், ஒரு மகிழ்ச்சியான மற்றும் இளமை நிறைந்த குடும்ப பொழுதுபோக்கை இந்த சீரிஸ் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அற்புதமான பாடல் இப்போது சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகி வருகிறது. 

கனா காணும் காலங்கள் மற்றும் ஹார்ட் பீட் சீரிஸ்கள் பார்வையாளர்களின் இதயங்களை வென்றது போல, இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸான 'உப்பு புளி காரம்' சீரிஸானது, காதல், காமெடி, ஃபேமிலி செண்டிமெண்ட் மற்றும் பல அதிரடி திருப்பங்களுடன் அட்டகாசமான பொழுதுபோக்கை வழங்கும். 

'உப்பு புளி காரம்' ஒரு வயதான அழகான தம்பதிகள் மற்றும் அவர்களின் நான்கு குழந்தைகள் என அவர்களின் குடும்பத்தில் நிகழும் சம்பவங்களை சுற்றி பின்னப்பட்ட அழகான கதையாகும்.

இந்த சீரிஸில் நடிகர்கள் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா, தீபக் பரமேஷ் மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே இடம்பெற்றுள்ளது.

விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்துள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸை, M ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார். ஷேக் இசையமைக்க, பார்த்திபன் மற்றும் சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி: டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை மாற்றியுள்ளது - அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்ச்சிகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது.  மேலும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.

https://www.youtube.com/watch?v=265-Io026vc

போகுமிடம் வெகு தூரமில்லை" பத்திரிக்கையாளர் சந்திப்பு


 போகுமிடம் வெகு தூரமில்லை" பத்திரிக்கையாளர் சந்திப்பு  !!


Shark 9 pictures சார்பில்  சிவா கில்லாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க,  அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், மனதை உருக வைக்கும் அழகான திரைப்படமாக உருவாகியிருக்கும் படம் "போகுமிடம் வெகு தூரம் இல்லை".  விரைவில் திரைக்கு வரவிருக்கும் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வினில்…


தயாரிப்பாளர் சிவா கில்லாரி பேசியதாவது.. 

நான் தெலுங்குக்காரன் ஆனால் உங்கள் முன் தமிழில் தான் பேசப்போகிறேன், எங்கள் அழைப்பை ஏற்று வந்த திரைப்பிரபலங்களுக்கு நன்றி. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. படத்தின் பாடல், டிரெய்லர் எல்லாம் பார்த்தீர்கள், இந்தப்படத்திற்கு முன் வேறொரு படம் செய்வதாக இருந்தேன், அப்போது தான் இந்தக்கதை வந்தது. இன்னும் பல கதைகள் கேட்டு முடிவு பண்ணலாம் என்ற முடிவிலிருந்தேன். அப்போது நான் நியூசிலாந்திலிருந்தேன் காலை 5 மணிக்குக் கதை சொல்ல வரச்சொன்னேன் ஆனால் மைக்கேல் 4 மணிக்கே வந்தார். அவர் கதையை விட அவர் அர்ப்பணிப்பு எனக்குப் பிடித்து விட்டது. அவருக்காகத் தான் இந்தப்படம் செய்தேன். அப்போது கொரோனா வந்து எங்கள் கனவுகளைத் தகர்த்துப் போட்டது. கொரோனா முடிந்த பிறகு மீண்டும் ஆரம்பித்தோம். எனக்கு சினிமா தெரியாது முற்றிலும் புதிது. வியாபாரம் தெரியாது ஆனால் அதில் கருணாஸ் அண்ணா, டிஃபெண்டர் பிரதர்ஸ், ரகுநந்தன் மூவரும் சப்போர்ட் செய்ததால் தான் இந்தப்படம் செய்ய முடிந்தது. இது மிக எமோசனலான படம். 12த் பெயில் படம் பார்த்த போது அழுதேன் அதே போல் இந்தப்படம் பார்த்த போதும் அழுகை வந்துவிட்டது. கருணாஸ் அண்ணா குழந்தையாக மாறி நடித்திருக்கிறார். விமல் சார் எனக்காக நிறைய வசதிகளைக் குறைத்துக் கொண்டு நடித்தார். ஒரு நாள் கூட அவர் லேட்டாக வந்ததில்லை. அவருக்கு நன்றி. இந்தப்படத்தில் உழைத்த அனைவரும் தங்கள் படம் போல வேலை பார்த்தார்கள். இது குடும்பங்களோடு பார்த்து மகிழும் படமாக இருக்கும். அனைவருக்கும் நன்றி. குடும்பத்தோடு பார்க்கும் நல்ல படங்களை இந்த கம்பெனி எடுக்கிறார்கள் என அனைவரும் சொல்ல வேண்டும் அது தான் என் நோக்கம். இந்த இயக்குநர் இந்தக்கதைக்காக 10 வருடங்கள் உழைத்துள்ளார் அவருக்கு ஆதரவு தாருங்கள் நன்றி.  

இசையமைப்பாளர் ரகுநந்தன் பேசியதாவது.. 

எனக்கு இந்த வாய்ப்பளித்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி. மைக்கேல் கதை சொன்ன போதே எனக்குக் கண்களில் கண்ணீர் வந்தது. அயோத்தி சிறந்த படமாக இருக்கும் என இதே மேடையில் சொன்னேன் அதே போல் இந்தப்படமும் மிக எமோஷலான படமாக அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். இந்தப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு நல்ல இயக்குநர் கிடைத்துள்ளார். விமலுடன் நாலாவது படம் மிக அருமையாக நடித்துள்ளார். கருணாஸ் எல்லோரையும் அழ வைத்துவிடுவார். இந்தப்படம் கண்டிப்பாக மிகப்பேரிய வெற்றிப்படமாக இருக்கும். விஷுவலும் பாடலும் செம்மையாக இருக்கும். அனைவருக்கும் நன்றி. 

கதை நாயகி மேரி ரிக்கெட்ஸ் பேசியதாவது...

எனக்கு இந்த வாய்ப்பளித்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப்படத்தில் நடித்தது மிகவும் பெருமையாக உள்ளது. கருணாஸ் சார் நிறைய ஒத்துழைப்பு தந்தார். விமல் சார் நிறையச் சொல்லித் தந்தார். ஒரு அற்புதமான படம். உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 

ஜே பேபி இயக்குநர் சுரேஷ் மாரி  பேசியதாவது.. 

சினிமாவை நேசிக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். போகுமிடம் வெகு தூரமில்லை கதையை நான் படித்திருக்கிறேன். ஜே பேபி படத்தில் மைக்கேல் நிறைய வேலை பார்த்திருக்கிறார் அந்தப்படத்தை எல்லோரும் ரசிக்க அவரும் ஒரு காரணம். மைக்கேல் மிகக் கோபக்காரர். ஆனால் குழந்தை மனம் கொண்டவர். தான் நினைத்ததைத் திரையில் கொண்டு வர வேண்டுமென அடம்பிடிப்பார். நல்ல படைப்பாளி. இந்தப்படம் எல்லோருக்கும் திருப்புமுனையாக இருக்கும். படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி 

இயக்குநர் SR பிரபாகரன் பேசியதாவது.. 

போகுமிடம் வெகு தூரமில்லை தயாரிப்பாளருக்கு முதல் நன்றி. நல்ல கதைகளைத் தொடர்ந்து செய்வேன் எனச் சொன்ன அவர் மனதிற்கு நன்றி. படத்தின் நாயகன் விமல் எனக்கு நெருங்கிய நண்பர், விலங்கு மூலம் மீண்டும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார் என்கிற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளார். அவர் அடுத்தடுத்த படங்கள் நல்ல எதிர்பார்ப்பில் உள்ளது. இந்தப்படம் மிக எதார்த்தமாக இருக்கிறது எல்லோருக்கும் பிடித்த படமாக இது இருக்கும். மைக்கேல் பற்றி அனைவரும் பேசும்போதே அவரது திறமை தெரிகிறது வாழ்த்துக்கள். கருணாஸ் அண்ணன் உடன் ஏதாவது ஒரு படத்தில் வேலை பார்க்க ஆசை அது தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது. அவரது கெட்டப்பே வித்தியாசமாக இருக்கிறது. அவருக்கும் இப்படம் பெயர்  சொல்லும் படமாக இருக்கும். ரகுநந்தன் இளையராஜா போல தமிழ் மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார்.  அவருக்கும் என் வாழ்த்துக்கள்.  அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  படம் சிறப்பாக உள்ளது. படத்திற்குப் பத்திரிக்கையாளர்கள் ஆதரவு தாருங்கள் நன்றி. 

நடிகர் ரோபோ சங்கர் பேசியதாவது.. 

ஜே பேபி இயக்குநருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அந்தப்படம் மிக அழகாக இருந்தது. அதே போல் போகுமிடம் வெகுதூரமில்லை படமும் இருக்கும். இந்தப்படத்திற்கு என்னை அழைத்தது கோகுல் தான். என்னை ஏன் நடிக்கக் கூப்பிடவில்லை எனக் கேட்டேன்,  இரண்டே கேரக்டர் தான் என்று சொல்லி விட்டார். பிணமாக நடிக்கக் கூப்பிட்டிருந்தாலும் பாடி லாங்க்வேஜ் காட்டி நடித்திருப்பேன், அடுத்த படத்தில் மறந்து விடாதீர்கள். தயாரிப்பாளர் தமிழ் தெரியவில்லை என்றார் தமிழில் நீங்கள் போகுமிடம் நிறைய இருக்கிறது வாழ்த்துக்கள். என் அன்பு மாப்பிள்ளை விமலுக்கு வாழ்த்துக்கள். இயக்குநர் அவர் இந்தப்படத்திற்கே சம்பந்தமே இல்லாதவர் போல் அமைதியாக இருக்கிறார் வாழ்த்துக்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி. 


நடிகர் அருள் தாஸ் பேசியதாவது.. 

இந்தப்படத்தில் எனக்கு மிகவும் சின்ன ரோல், மைக்கேல் எனக்குப் பெரிதாக அறிமுகமில்லை ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் பார்த்தேன் அருமையான இயக்குநர். ஆர்டிஸ்டிடம் எப்படி வேலை வாங்க வேண்டுமென்று தெரிந்தவர். தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குநராக வருவார். தமிழில் டிராவலிங் படங்கள் வருவது அரிது, ஏனென்றால் பல இடங்களுக்குச் சென்று எடுப்பதே கஷ்டம் ஆனால் அந்த ஜானரில் அருமையாக  இந்தப்படத்தை  எடுத்துள்ளார்கள். படம் மிகச்சிறந்த ஃபீல் குட் படமாக இருக்கும். விமலுக்கும், கருணாஸுக்கும் இப்படம் திருப்புமுனையாக இருக்கும். எதிர்பார்க்காத க்ளைமாக்ஸ். இந்தப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.  

இயக்குநர் தினகரன் பேசியதாவது...

மைக்கேல் எனக்கு நெருங்கிய நண்பர். 2015ல் எனக்கு அறிமுகமானவர். அப்போது இப்படத்திற்காக பைலட் பண்ணியிருந்தார் அதைப்பார்த்த போது பிரமிப்பாக இருந்தது. எந்த அனுபவமும் இல்லாமல் எப்படி இப்படி எடுக்க முடியும் எனப் பிரமிப்பாக இருந்தது. ஆடியன்ஸை எப்படி எங்கேஜ் பண்ணுவது என்பதை அவரது திரைக்கதையில் அத்தனை நுணுக்கமாக வைத்திருந்தார். நான் வாய்ப்பு தேடிப் போகும் இடங்களில் எல்லாம் இவரைப்பற்றிச் சொல்லியிருக்கிறேன். இந்தப்படம் பலமுறை நின்று நின்று ஆரம்பித்தது. ஆனால் நம்பிக்கை குறையாமல் இருப்பார். ஜே பேபி படத்தில் நானும் மைக்கேலும் வேலை பார்த்தோம். அப்போதும் அவரை பார்த்துப் பிரமிப்பாக இருக்கும். இந்தப்படம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படைப்பாக இருக்கும். மிக முக்கியமான விசயத்தை இந்தப்படம் பேசுகிறது. இந்தப்படம் வெற்றிபெறவும் மைக்கேலுக்கும் என் வாழ்த்துக்கள். கருணாஸ் அண்ணன், விமல் இருவருக்கும் என் வாழ்த்துக்கள். நன்றி. 

கவிஞர் சினேகன் பேசியதாவது.. 

கோகுல கிருஷ்ணன் மற்றும் தாமோதரன் இருவருக்காகவும் தான் நான் வந்தேன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். போகுமிடம் வெகுதூரமில்லை, படத்தின்  தலைப்பே மிகப்பெரிய வாழ்வியல் தத்துவத்தை அழகாகச் சொல்கிறது அது எனக்கு மிகவும் பிடித்தது. தமிழ் தெரியாது எனச் சொல்லிவிட்டு தமிழில் பேசிய, தமிழில் படம் தயாரித்துள்ள தயாரிப்பாளருக்கு நன்றி. நியூசிலாந்தில் அவர் பார்லிமெண்டில்  போட்டியிட்டவர், நல்ல படங்கள் தொடர்ந்து செய்வேன் எனச் சொல்லும் அவர் மனது மிகச்சிறப்பானது. ஒரு இயக்குநருக்கான தயாரிப்பாளராக இருக்கிறார் அதற்காகவே அவருக்கு வாழ்த்துக்கள். கருணாஸ் அண்ணா பல தளங்களில் தன்னை நிரூபித்துவிட்டவர், விமல் அவர்களும் இந்தப்படம் மூலம் பெரிய வெற்றியைப் பெறுவார். மிகச்சிறந்த மெலடிகள் தரும் ரகுநந்தன் இன்னும் பெரிய இடம் செல்வார். விமலுக்கும் ரகுநந்தனுக்கும் பெரிய உயரத்தை இந்தப்படம் தரும். ஒரு நேர்த்தியான படைப்பு,  ஒரு ஷாட்டில் தெரிந்துவிடும் டிரெய்லரிலேயே அத்தனை பிரமிப்பாகத் தெரிந்து விடுகிறார் அவருக்கு வாழ்த்துக்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  நன்றி. 

இயக்குநர் செந்தில்நாதன் பேசியதாவது.. 

தயாரிப்பாளர் இயக்குநரின் 15 வருடப் போராட்டம் என்றார். இது எல்லோருடைய வாழ்க்கையிலும் நடப்பது தான். எனக்கும் 15 வருடப் போராட்டத்திற்கு பிறகுதான் பூந்தோட்ட காவல்காரன் வாய்ப்பு கிடைத்தது. உங்கள் அர்ப்பணிப்பிற்கு இந்தப்படம் பெரிய வெற்றியைத் தரும். கேமரா, மியூசிக், எடிட்டிங், ஆர்ட் என எல்லாமே அற்புதமாக இருக்கிறது. கருணாஸ், விமல் இருவரும் அசத்தியிருக்கிறார்கள். எல்லோருக்கும் மிகப்பெரிய வெற்றியை இந்தப்படம் தரும் வாழ்த்துக்கள். தாமோதரன் நிறைய ஆதரவு தந்ததாகத் தயாரிப்பாளர் சொன்னார், என் விட்டிலருகே தான் அவர் இருக்கிறார் வாழ்த்துக்கள். மைக்கேலுக்கு இந்தப்படம் இன்னும் நிறைய வாய்ப்புகள் வரட்டும் வாழ்த்துக்கள். 

தயாரிப்பாளர் PL தேனப்பன் பேசியதாவது… 

இயக்குநர் மைக்கேல் முதலில் என்னிடம் தான் கதையைச் சொன்னார். எனக்கு மிகவும் பிடித்த கதை. நானே பலருக்குச் சொல்லியிருக்கிறேன். நான் தயாரிக்க வேண்டிய படம். ஒரு சில காரணங்களால் முடியவில்லை. கருணாஸிடம் சொன்னேன் அவர் மூலம் இந்தப்படம் ஆரம்பமாகியுள்ளது. இந்தப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும். இந்த படத்தின் க்ளைமாக்ஸ் யாருமே எதிர்பார்க்காத படி இருக்கும். அத்தனை அற்புதமான படமாக இருக்கும். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். நன்றி.

இயக்குநர் மைக்கேல் K ராஜா பேசியதாவது.. 

இது எனது முதல் மேடை, இந்தக்கதையை வைத்துக்கொண்டு 10 வருடம் சுற்றியிருக்கிறேன். அதற்கு முன்னால் இன்னும் பல கதைகளோடு சுற்றியுள்ளேன். போகுமிடம் வெகு தூரமில்லை ஆனால் இந்த இடத்திற்கு வர வெகு தூரம் பயணித்துள்ளேன். தயாரிப்பாளர் பற்றிச் சொல்ல வேண்டும், அவர் குழந்தை மாதிரி. கதை கேட்டவுடன் செய்யலாம் என்றார் நான் எதிர்பார்க்கவேயில்லை. ஆனால் கொரோனா வந்து 3 வருடத்தைத் தின்றுவிட்டது. அப்புறம் மீண்டும் எனக்கு இப்போதைய சூழ்நிலையில் படம் செய்யும் ஐடியா இல்லை ஆனால் உனக்காகத் தயாரிக்கிறேன் என்றார். அந்த வார்த்தையில் தான் இங்கு வந்துள்ளோம். நான் துவளும்போதெல்லாம் இந்தக்கதையைக் கேட்டு செம்மையாய் இருக்கு என சிலர் சொல்லும் வார்த்தை தான் ஒரு கலைஞனுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய ஊக்கம் . அது போல் இந்தக்கதையைக் கேட்ட அனைவரும் ஊக்கம் தந்துள்ளார்கள். தேனப்பன் சார் மூலம் கருணாஸ் சாரை சந்தித்து கதை  சொன்னேன், நாமே பண்ணலாம் என ஊக்கம் தந்தார். திறமை மட்டும் தான் சினிமாவில் உங்களைக் கொண்டு சேர்க்கும். அதில் நம்பிக்கையாக இருங்கள் ஜெயிப்பீர்கள். கேமராமேன் மிகப்பெரிய ஒத்துழைப்பு தந்தார். எடிட்டருடன் பயங்கர சண்டை போட்டுள்ளேன் ஆனால் அவர் எடிட்டிங் தான் படமே அதற்காக நன்றி. விமல் சார் பற்றிச் சொல்ல வேண்டும், அவரைப்பற்றி நிறையச் சொன்னார்கள் கொஞ்சம் பயமாக இருந்தது ஆனால் ஷீட்டிங்கில் 7 மணிக்குச் சொன்னால் மேக்கப்போடு வந்து நிற்பார். அத்தனை அர்ப்பணிப்போடு இருந்தார். இந்தப்படத்தில் டயலாக் இல்லாமல் வெறும் முக பாவனைகளில் நடிக்க வேண்டும், அசத்தியிருக்கிறார். இந்தக்கதைக்களமே புதிது ஆனால் இதை நம்பி எடுத்தது மிகப்பெரிய விசயம்,  தயாரிப்பாளருக்கு என் நன்றிகள். படம் நன்றாக வர வேண்டுமென என்னுடன் உழைத்த என் குழுவினர் அனைவருக்கும் நன்றிகள். படம் பாருங்கள் அற்புதமான அனுபவமாக இருக்கும் நன்றி. 

நடிகர் கருணாஸ் பேசியதாவது.. 

இயக்குநர் ஆணித்தரமாக அழுத்தமாகப் பேசக் காரணம் அவரது திறமை தான். அத்தனை சிறப்பாகப் படம் எடுத்துள்ளார். தயாரிப்பாளர் சிவா மிக நல்ல மனம் கொண்டவர். நியூசிலாந்து போய் சாதித்துக் காட்டிய இந்தியன். 24 ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் யாரிடமும் நான் போய் வாய்ப்பு கேட்டதில்லை.  சினிமா உலகம் யாரையும் மதிக்காது, நமக்கான வாய்ப்புக்களை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். திரைத்துறை என்பது மிகப்பெரிய பயணம். மைக்கேல் இந்தக்கதை இப்படி தான் வரவேண்டுமெனப் பிடிவாதமாக எடுத்துக் காட்டியுள்ளார். என்னையும் விமலையும் வித்தியாசமாகக் காட்டியுள்ளார். அவருடன் எனக்கு இது தான் முதல் படம், நான் ஒரு ஹீரோவுடன் நடித்த எல்லாப் படமும் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்தக்கதையைக் கேட்டு இந்தப்படம் நடித்தால் நாம் இறந்த பிறகு பேர் சொல்லிக்கொள்ளும் படமாக இருக்குமென என் குடும்பத்தினரிடம் சொன்னேன். ஆனால் ஒரு கட்டத்தில் இந்த வாய்ப்பு என் கையை விட்டுப் போனது, ஆனால் நாம் நடிக்கனும் எழுதியிருந்தால் அது நடக்கும் அப்படிதான் இப்போது  நடந்துள்ளது. மகிழ்ச்சி. இந்தப்படத்திற்காக உண்மையாக உழைத்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துக்கள். எல்லோருக்கும் பெருமை சேர்க்கும் படமாக இருக்கும் நன்றி.   

நடிகர் விமல் பேசியதாவது.. 

எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி.  தாமோதரன் மற்றும் கோகுல் தான் இந்தப்படத்தில் நான் நடிக்கக் காரணம் நன்றி. இயக்குநர் கதை சொல்லிப் பிடித்த பிறகு தான், தயாரிப்பாளரிடம் பேசினேன். வெள்ளை மனத்துக்காரர் கொடுத்த வாய்ப்பை காப்பாற்ற வேண்டுமென நினைப்பார். இந்த மேடையில் நாங்கள் எல்லோரும் இருக்க அவர் தான் காரணம். நான் நிறையப் புதுமுக இயக்குநர்களோடு வேலை பார்த்திருக்கிறேன் அவர்கள் எல்லோரும் பெரிய  இயக்குநர்களாக இருக்கிறார்கள் அதே போல் மைக்கேலும் பெரிய இயக்குநராக வர வாழ்த்துக்கள். எப்போதும் முதல் படத்தில் அவர்களின் வாழ்வின் ஜீவன் இருக்கும் இந்தப்படத்திலும் இருக்கிறது. இசையமைப்பாளர் ரகுநந்தனோடு நாலாவது படம் இதுவும் வித்தியாசமாக இருக்கும். கருணாஸ் அண்ணனும் நானும் 15 வருடப் பழக்கம் ஆனால் இந்தப்படத்தில் தான் ஒன்று சேர்ந்துள்ளோம். இது மாதிரியான படம் செய்ததில்லை மிக அழுத்தமான பாத்திரம், மெனக்கெட்டு உழைத்துள்ளோம்.  எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். படத்தில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். 

தமிழ் சினிமாவின் வழக்கமான கமர்சியல் அம்சங்களில் இருந்து மாறுபட்டு ஒரு வித்தியாசமான களத்தில், மனதில் புன்னகை வர வைக்கும், வாழ்க்கை அனுபவங்களுடன்,  அழகான படைப்பாக இப்படத்தை உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர்மைக்கேல் K ராஜா.

இதுவரையிலான  திரைப்பயணத்தில் தான் ஏற்றிராத வித்தியாசமான பாத்திரத்தில் நாயகனாக விமல் நடித்துள்ளார். கருணாஸ் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், மனோஜ்குமார், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். 

தொழில்நுட்ப வல்லுநர்கள்

இயக்குநர்: மைக்கேல் K ராஜா

தயாரிப்பாளர்: சிவா கில்லாரி (Shark 9 pictures)

இசையமைப்பாளர்: N.R.ரகுநந்தன்

ஒளிப்பதிவாளர்: டெமில் சேவியர் எட்வர்ட்ஸ்

தொகுப்பாளர்: M.தியாகராஜன்

கலை இயக்குநர்: சுரேந்தர்

ஸ்டண்ட் டைரக்டர்: மெட்ரோ மகேஷ்

நடன மாஸ்டர்: ரிச்சி ரிச்சர்ட்சன்

தயாரிப்பு ஒருங்கிணைப்பு : ராகேஷ் ராகவன்

நிர்வாக தயாரிப்பாளர்: வெங்கி மகி

மக்கள் தொடர்பு - சதீஷ், சிவா (AIM)

Saturday, May 18, 2024

The Great Mango Festival Returns - A Sweet Celebration of Summer

The Great Mango Festival Returns - A Sweet Celebration of Summer
Hanu Reddy Raghava Farms, a beacon of innovation and a celebration of the abundance of India, recently made headlines by hosting the supremely successful India’s Culinary Odyssey, at the iconic 156ft Hanu’s Table, where ten of the country's top chefs came together to create a gastronomic spectacle like no other. Now, this same 200-acre farm is set to come alive once again with the arrival of The Great Mango Festival.
This unique event marks a significant milestone in India's farm tourism, as it showcases the farm's abundant treasures and celebrates the richness of its bountiful ingredients. The Great Mango Festival isn't just an ordinary gathering; it's an immersive nature experience that promises to captivate the senses and ignite the spirit of adventure in visitors of all ages.
Set against the picturesque backdrop of Hanu Reddy Raghava Farms, this festival stands out as the first of its kind in India - a 100% sustainable event that is both engaging and educational for every member of the family. From farm-themed activities and traditional Indian games to workshops on sustainable practices, The Great Mango Festival offers a holistic experience that is as enriching as it is entertaining.
There is simply no other event in the country that offers such a comprehensive immersion into nature's bounty while promoting environmental consciousness and cultural heritage. As visitors explore the lush mango orchards and participate in a myriad of activities, they will gain a deeper appreciation for the interconnectedness of food, culture, and the environment.
Prepare to embark on an extraordinary journey as The Great Mango Festival, presented by Hanu Reddy Mango Tourism, on the first four Sundays of June (2nd, 9th, 16th, 23rd). Nestled in the heart of mango country, this festival stands as a testament to India's rich agricultural heritage and the undisputed reign of the mango, fondly hailed as the King of Fruits.
This immersive event isn't just a celebration; it's a living testament to the love affair between India and its beloved soil. The festival's cornerstone is its unique array of experiences, carefully curated to showcase nature in all its glory while paying homage to traditional practices and cultural heritage.
Beginning at the crack of dawn, we welcome you into the Mango Madness zone and treat your taste buds on Hanu’s Table, a 156 ft architectural marvel, to a mango-themed breakfast, featuring an assortment of delectable mango-infused dishes crafted with love and expertise. Experience the thrill of the Mango Eating Showdown, a riveting competition where participants showcase their prowess in devouring this succulent fruit. Dive into the Mango Picking activity, where visitors can pluck ripe mangoes straight from the trees, savouring the sweet taste of victory with each juicy bite.
Delve into the rich tapestry of Indian culture with our Cultural Exploration sessions, where traditional games, storytelling sessions, and workshops on sustainable practices transport you to a bygone era of simplicity and charm. Enjoy the art of Parai Attam, an ancient form of drumming that echoes the rhythms of rural India, or immerse yourself in the captivating world of Indian folklore through vibrant puppet shows and theatrical performances.
Take a journey back in time with Farmyard Fun activities that offer a glimpse into the agricultural traditions that have sustained communities for generations. Experience the thrill of ploughing the land and planting rice saplings, guided by seasoned farmers who share their wisdom and expertise. Hop aboard a traditional bullock cart for a leisurely ride through lush mango orchards, marveling at the beauty of nature's bounty.
For the adventurous souls, Active Play zones offer an adrenaline-pumping experience with obstacle courses, slacklining, and traditional martial arts demonstrations. Channel your inner warrior with Silambam, an ancient Indian martial art, or test your balance and agility on the Vazhuku Maram, a traditional slippery pole used by Tamil Nadu's rural communities to showcase their talent in climbing as high as possible.
No festival is complete without an ode to traditional craftsmanship, and we proudly showcases the artistic prowess of local artisans through Native Crafts workshops. Discover the ancient art of pottery and leaf craft, experience the art of block printing, or try your hand at creating intricate Kolam designs that adorn the thresholds of homes during festive occasions.
As the sun sets on each day of the festival, visitors are left with memories to cherish and stories to share, testament to the enduring legacy of India's beloved mangoes. This unique celebration isn't just about indulging in the sweetness of the fruit; it's about honoring the cultural significance and agricultural heritage that have shaped India's identity for centuries.
"This festival is not just about celebrating mangoes; it's about celebrating the essence of our land and the traditions that have sustained us for generations," says Hanu Reddy, visionary founder of Hanu Reddy Raghava Farms. "At Hanu Reddy Raghava Farms, we believe in showcasing the beauty and bounty of nature in a way that is both sustainable and soulful. The Great Mango Festival is a testament to our commitment to preserving our agricultural heritage and fostering a deeper connection with the land. 
Always thinking ahead for India, Mr Hanu Reddy, continues to elaborate that “Through this one of a kind immersive experience, my vision is two fold. One is about bringing the world to India to celebrate its mangoes, much like how people journey to Japan for the cherry blossom festival. Two is to give back to the farmer community by empowering them to sell experiences. While produce may hold a certain value, I believe that selling an experience can amplify its worth exponentially, by at least a hundredfold. This approach not only benefits our farmers but also contributes significantly to the country's GDP."
Experience the magic of The Great Mango Festival, where every moment is a celebration of India's vibrant culture and the timeless allure of the mango. 
Book your tickets now and join us for a day of fruity fun and festivities!
Dates: First Four Sundays of June (2nd, 9th, 16th, 23rd).
Venue: Hanu Reddy Raghava Farms
BOOK NOW: https://bit.ly/43riHSK
CONTACT US 📞Phone: +91 9884020848  | ✉Email: hanureddymangoes@gmail.com

Friday, May 17, 2024

மில்லியன் ஸ்டுடியோ புரொடக்‌ஷன்ஸ், எம்.எஸ். மன்சூர் வழங்கும் குகன் சென்னியப்பன் இயக்கத்தில், நடிகர்கள் சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!


 மில்லியன் ஸ்டுடியோ புரொடக்‌ஷன்ஸ், எம்.எஸ். மன்சூர் வழங்கும் குகன் சென்னியப்பன் இயக்கத்தில், நடிகர்கள் சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லர் படமான ’வெப்பன்’ மே மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. 

ஒளிப்பதிவாளர் பிரபு ராகவ் பேசியதாவது, “இந்த வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. சத்யராஜ் சார் லெஜெண்ட்! வசந்த்ரவி சார், தான்யா ஹோப் இவர்களுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. ராஜீவ் மேனன் சாருக்கு பிரேம் வைத்தது என்னுடைய பாக்கியம். படத்தில் என்னுடன் வேலைப் பார்த்த எல்லோருக்குமே நன்றி!”.

விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர் கோகுல், “படத்தின் தயாரிப்பாளர் மன்சூர் சாருக்கும் இயக்குநர் குகன் சாருக்கும் நன்றி. நிறைய சிஜி பணிகள், கரெக்‌ஷன் செய்திருக்கிறோம். புதிய டெக்னாலஜி, ஏஐ உபயோகப்படுத்தி இருக்கிறோம். நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டோம். சிறந்த பணியை கொடுத்திருக்கிறோம் என்ற நம்பிக்கை உண்டு. நீங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

தயாரிப்பாளர் தனஞ்செயன், “சமூகத்திற்கு தேவையான கருத்தோடு படம் வந்திருக்கிறது என்பது மகிழ்ச்சி. இந்தப் படத்திற்கு பிறகு ‘ராக்கி’ வசந்த்ரவி என்ற பட்டம் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். படத்தை சரியான முறையில் பார்வையாளர்களிடம் கொண்டு சென்று வெற்றிப் பெற செய்யுங்கள். ஆக்‌ஷன் - எண்டர்டெயினராக படம் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. வாழ்த்துகள்!”.

கலை இயக்குநர் சுபேந்தர், ”இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநர் குகன் சாருக்கு நன்றி. எல்லோருமே சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள்”.

எடிட்டர் கோபி, “சூப்பர் ஹூயூமன் கான்செப்ட்டோடுதான் இந்தப் படம் வந்திருக்கிறது. படப்பிடிப்பு முடித்த பின்னர்தான் இந்த படத்தையே நான் பார்த்தேன். வழக்கமான நக்கல், நையாண்டி எதுவும் இல்லாத இளமையான சத்யராஜ் சாரை இந்தப் படத்தில் பார்க்கலாம். விஷூவலாக படம் நன்றாக இருக்கும். தமிழ் சினிமாவில் இது அடுத்தக் கட்டத்திற்கான நகர்வு ‘வெப்பன்’. வித்தியாசமான ஜானரில் படம் உங்களுக்கு புது அனுபவம் கொடுக்கும்”.

இயக்குநர் கார்த்திக் யோகி, “இயக்குநர் குகன், வசந்த் ரவி ஆகியோர் எனது நண்பர்கள். படம் நிச்சயம் வெற்றி பெறும். வாழ்த்துகள்!”.

இயக்குநர் அஸ்வின், “குகன், நான், கார்த்திக் யோகி மூன்று பேருமே நாளைய இயக்குநர் சமயத்தில் இருந்தே நண்பர்கள். குகனுக்கு இந்த படம் வெற்றி பெற வேண்டும்”.

இயக்குநர் எழில், “சினிமாவை நேசிக்க கூடிய தயாரிப்பாளர்களின் படம் இது என்று சொல்லலாம். செட் எல்லாமே ‘பாகுபலி’ படத்திற்கு இணையாக பிரம்மாண்டமாக இருந்தது. படம் நன்றாக வந்திருப்பதாக சொன்னார்கள். இப்போது தமிழ் சினிமாவுக்கு படம் வெற்றி அடைந்து மிகப்பெரிய நம்பிக்கை கொடுக்க வேண்டும்”.

இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், “விஜயகாந்த் vs சத்யராஜ் என்று போட்டி ஆரோக்கியமாக இருந்த காலம் அது. அப்போதிருந்து இப்போது வரை சத்யராஜ் கலக்கி வருகிறார். அவர் பல இயக்குநர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். 'வெப்பன்' படத்தின் போஸ்டர், டிரெய்லர் வித்தியாசமாக இருக்கிறது. முதல் படத்திலேயே இப்படி ஒரு ஜானரை இயக்குநர் முயற்சி செய்திருப்பது பாராட்டுதலுக்குரியது. தொழில்நுட்ப குழுவினருக்கும் படத்திற்கும் வாழ்த்துக்கள்! ".

ஸ்டண்ட் இயக்குநர் சுதீஷ், "பட்ஜெட் பற்றி யோசிக்காமல் படம் செய்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. நிறைய ஆக்‌ஷன் இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் யோசிக்காமல் செய்த சத்யராஜ் சாருக்கு நன்றி. வசந்த் ரவி 100% சிறப்பாக வர வேண்டும் என்று முழு ஒத்துழைப்பு கொடுத்தார். உங்கள் எல்லோருடைய ஆதரவும் வேண்டும்". 

நடிகர் மைம் கோபி, "இயக்குநர் குகன் திறமைசாலி. சத்யராஜ் அண்ணன் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருடன் சேர்ந்து நடித்தது மகிழ்ச்சி. பிரம்மாண்டமான படமாக இது இருக்கும். உங்கள் ஆதரவு தேவை!"


படத்தின் கதாநாயகி தான்யா ஹோப் பேசியதாவது, “இந்தப் படத்தில் நான் வேலை செய்ததை என்னுடைய அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். படத்தில் வேலை செய்த அனைவருக்கும் நன்றி, வாழ்த்துகள்!”



நடிகர் வசந்த் ரவி, “தமிழில் சூப்பர் ஹூ்யூமன் கதைகளை எடுத்து செய்வது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதை இயக்குநர் குகன் விரும்பி செய்திருக்கிறார். சின்ன வயதில் இருந்தே நிறைய காமிக்ஸ் கதைகளை அவர் படித்து வளர்ந்ததால் சினிமாவில் அதை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்கான முதல்படியாக ‘வெப்பன்’ படத்தை எடுத்திருக்கிறார். இந்த மாதிரியான படங்களுக்கு பெரிய பட்ஜெட் தேவைப்படும். அதை செய்து கொடுத்த மில்லியன் ஸ்டுடியோவுக்கு நன்றி. படத்தின் டிரெய்லரை நெல்சன் சாரிடம் இரண்டு நாட்களுக்கு முன்பு காட்டினேன். ‘டிரெய்லர் ரொம்ப நல்லாருக்கு. இதுபோன்ற ஃபேண்டஸி ஆக்‌ஷன் படம் வந்து ரொம்ப நாள் ஆச்சு என்றார். ’ராக்கி’ படத்தில் பாரதிராஜா சாருடன் நடித்தேன். பின்பு, ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினி சாருடன். அவர்களிடம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேனோ அதேபோலதான், சத்யராஜ் சாரிடமும் நிறையக் கற்றுக் கொண்டேன். மனதில் இருக்கும் எதையும் வெளிப்படையாக சொல்லி விடுவார். அவர் எவ்வளவோ படங்கள் நடித்தி்ருந்தாலும் இந்த படம் அவரது கரியரில் மறக்க முடியாததாக இருக்கும். அவருடன் இணைந்து பணிபுரிந்தது மகிழ்ச்சி. தான்யா இதுவரை நடித்த படங்களிலேயே தனக்குப் பிடித்த படமாக ‘வெப்பன்’தான் சொன்னார். நான் எவ்வளவோ ஜானர்களில் படங்கள் செய்து இருந்தாலும் சூப்பர் ஹூயூமன் என்பது புது ஜானர். ஹாலிவுட் படங்களைப் போல இந்தப் படத்தைப் பாருங்கள். இது ப்ரீகுவல்தான். குகன் இந்த கதைக்கு ஒரு யுனிவர்ஸே வைத்துள்ளார். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார். 


நடிகர் சத்யராஜ், “திரையில காட்டுவதை விட, தரையில வீரத்தைக் காட்டுவதுதான் சூப்பர் ஹீரோ. இந்த மாதிரி படத்திற்கு அதிக பட்ஜெட் தேவைப்படும். படத்தின் கதையை நம்பி மட்டுமே இவ்வளவு பட்ஜெட் தயாரிப்பாளர் மன்சூர் செய்துள்ளார். என் நண்பர் விஜயகாந்த்திற்கு ‘வானத்தைப் போல...’ என்ற அற்புதமான பாட்டைக் கொடுத்தவர் ஆர்.வி. உதயகுமார். அவருக்கு நன்றி. இந்தப் படத்தின் இரண்டு ஹீரோக்களாக நான் நினைப்பது தயாரிப்பாளர் மன்சூரையும் இயக்குநர் குகனும்தான். தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படம் ரொம்ப ஸ்டிராங்க். கட்டப்பா போல இந்தப் படத்திலும் என்னுடைய கதாபாத்திரம் காலத்தால் அழியாத ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். படம் வெற்றிப் பெற வாழ்த்துகள்!”.

ELECTION - திரைவிமர்சனம்



“தேர்தல்” திரைப்படம், அரசியல் சார்புடைய படைப்புகளுக்கு பெயர் பெற்ற இயக்குனர் தமிழின் திறமையையும், “உறியடி” தொடரின் நடிகர் விஜய் குமாரின் திறமையையும் ஒன்றிணைக்கிறது. தமிழ் சினிமாவில் அரிதாகவே ஆராயப்படும் ஒரு விஷயமான உள்ளாட்சித் தேர்தல்களின் கண்கவர் உலகத்தை இந்த ஒத்துழைப்பு ஆராய்கிறது.

சசிகுமாரின் சக்திவாய்ந்த குரல்வழியில் படம் துவங்குகிறது, விஜய் குமாரின் கதாபாத்திரமான நடராசனை உள்ளடக்கிய ஒரு வியத்தகு பட்டி சண்டைக்கு களம் அமைக்கிறது. ஒரு கட்சி ஊழியரின் கவலையற்ற மகன் - மற்றும் தொடர்ச்சியான நிகழ்வுகள் அவரை எவ்வாறு அரசியல் அரங்கிற்குள் தள்ளியது என்பதை அவரது பின்னணியை நாங்கள் கற்றுக்கொள்கிறோம். இந்த பயணம் லட்சியம் மற்றும் சக்தி விளையாட்டுகள் நிறைந்த உலகில் ஒருமைப்பாட்டைப் பேணுவதற்கான குறிப்பிடத்தக்க சவால்களை எடுத்துக்காட்டுகிறது.

"தேர்தல்" அடிமட்ட அரசியலின் யதார்த்தமான சித்தரிப்பில் மிளிர்கிறது. இது சிறிய தேர்தல்களின் சிக்கல்களை ஆராய்கிறது, அங்கு வெற்றிகள் சிலருக்கு (சாதி மற்றும் வர்க்கப் பெருமிதத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும்) பெரும் எடையைக் கொண்டுள்ளன, மேலும் மற்றவர்களுக்கு உரிமைகள் மற்றும் மாற்றத்திற்கான போராட்டத்தை பிரதிபலிக்கின்றன. தேர்தல் செயல்பாட்டில் பணம் வகிக்கும் பங்கிலிருந்து திரைப்படம் வெட்கப்படாது, அடிப்படையான பார்வையை வழங்குகிறது.

இந்தத் திரைப்படத்தின் பலம், தேர்தல்களின் மனிதச் செலவை சித்தரிப்பதில் உள்ளது. அரசியலின் தனிப்பட்ட பக்கத்தைப் பற்றிய ஒரு அரிய பார்வையை வழங்கும், ஒரு வேட்பாளரின் கூட்டாளியில் முடிவுகள் ஏற்படுத்தும் தாக்கத்தை ஒரு கடுமையான காட்சி ஆராய்கிறது.

படம் ஜாதி அரசியலை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் அதே வேளையில், அது ஒரு மேற்பரப்பு ஆய்வாக உணரும் தருணங்கள் உள்ளன. கூடுதலாக, பாடல்கள் போன்ற வணிகக் கூறுகளைச் சேர்ப்பது முக்கிய செய்தியிலிருந்து திசைதிருப்பலாம். பெரிய நடிகர்கள், கதைக்கு அவசியமானாலும், படத்தின் சுருக்கமான இயக்க நேரம் இருந்தபோதிலும், பார்வையாளர்களை அதிகமாக உணர வைக்கலாம்.

இருப்பினும், "தேர்தல்" ஆழமாக எதிரொலிக்கும் மறக்கமுடியாத வரிகளுடன் தாக்கத்தை ஏற்படுத்தும் உரையாடலைக் கொண்டுள்ளது. இயக்குனர் தமிழ் தனித்துவமான தொடுகைகளை புகுத்துகிறார் .விஜய் குமார் முரண்பட்ட இலட்சியவாதியாக வலுவான நடிப்பை வழங்குகிறார். இருப்பினும், அவரது கதாபாத்திரத்தின் செயலற்ற பாத்திரம் சில சமயங்களில் கதையை முன்னோக்கி செலுத்தும் ஒரு உறுதியான கதாநாயகனை நீங்கள் விரும்புகிறது.

ஒட்டுமொத்தமாக, "தேர்தல்" என்பது உள்ளாட்சி அமைப்பு அரசியலின் சிந்தனையைத் தூண்டும் ஆய்வு ஆகும், இது ஒரு சில வாய்ப்புகளைத் தவறவிட்டாலும் மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகிறது. இது பாராட்டத்தக்க பலம் மற்றும் முக்கியமான உரையாடல்களைத் தூண்டும் திறன் கொண்ட படம்.


 

INGA NAN THAAN KINGU - திரைவிமர்சனம்


 



“இங்க நான் தான் கிங்கு” படத்தில் அட்டகாசமான சிரிப்பை அள்ளி வீசிய சந்தானம் மீண்டும் வந்துள்ளார். கடனாளியான ஜமீன்தார் குடும்பத்தில் திருமணம் செய்து கொண்ட வெற்றியின் தொடர் நகைச்சுவையான சாகசங்களில் சிக்கிய இளங்கலையை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. வெற்றியின் அபார்ட்மெண்டில் ஒரு பயங்கரவாதியின் தற்செயலான மரணம் தொடர்பான குழப்பமான நிகழ்வுகள், வெற்றி மற்றும் அவரது வினோதமான மாமியார் உடலை மீட்டெடுப்பதன் மூலம் வெகுமதியைப் பெற முயற்சிக்கையில், திருட்டுத் திருட்டுக்கு மேடை அமைக்கிறது.

வெற்றி (சந்தானம்) என்பது பலருடன் தொடர்புபடுத்தக்கூடிய ஒரு பாத்திரம், பணச் சிக்கல்கள் மற்றும் மனைவியைக் கண்டுபிடிக்கும் அழுத்தத்தால் சுமையாக இருக்கிறது. ஒரு திருமண நிறுவனத்தில் அவரது வேலை விஷயங்களுக்கு உதவவில்லை, மேலும் ஒரு பேரழிவு தரும் திருமண திட்டம் அவரை ஒரு விசித்திரமான அரச குடும்பத்துடன் இணைக்கிறது. தேன்மொழியுடன் (பிரியாலயா) முடிச்சுப் போடும் வெற்றி, தனது திறமையற்ற தந்தை (தம்பி ராமையா) மற்றும் சகோதரன் (பால சரவணன்) ஆகியோருடன் பொருளாதார ரீதியாக நிலைத்திருக்க போராடுவதைக் காண்கிறார். ஒரு நிறுவனத்தின் விருந்தில் ஏற்பட்ட ஒரு விபத்து வெற்றியை நிறுத்துவதில் விளைகிறது, இது அவரது துயரங்களைச் சேர்த்தது.

வெற்றியின் அபார்ட்மெண்டில் ஒரு பயங்கரவாதி (விவேக் பிரசன்னாவைப் போன்றவர்) இறக்கும் போது சதி ஒரு பெருங்களிப்புடைய திருப்பத்தை எடுக்கிறது. வெற்றி மற்றும் அவரது துப்பு இல்லாத மாமியார் ஒருவரின் உடலை அப்புறப்படுத்துகிறார்கள். பயங்கரவாதிக்கு ₹50 லட்சம் வெகுமதியைப் பற்றி அறிந்ததும், அவர்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை மாற்றுவதற்கான வாய்ப்பைப் பார்க்கிறார்கள், இது ஒரு கொந்தளிப்பான மற்றும் நகைச்சுவையான திருடலாகத் தொடங்குகிறது.

எழிச்சூர் அரவிந்தனின் அசல் ஸ்கிரிப்டிங் மிளிர்கிறது, அதிகபட்ச நகைச்சுவை விளைவுக்காக வடிவமைக்கப்பட்ட காட்சிகள். நகைச்சுவை, சில நேரங்களில் நியாயமற்றதாக இருந்தாலும், பார்வையாளர்களை மகிழ்விக்க வைக்கிறது. மறக்கமுடியாத தருணங்களில் வெற்றியின் திருமணக் காட்சியும் அடங்கும், அங்கு அவர் ஜமீன்தார் தரத்தை நிலைநிறுத்த ஒரு முந்திரி மற்றும் பாதாம் ஆகியவற்றை நகைச்சுவையாக வழங்கினார். இரண்டாம் பாதியில் கடுமையான சதி திருப்பங்களுடன் சில நீராவிகளை இழந்தாலும், பக்கவாட்டுக் காட்சிகளுடன் படம் வலுவாகத் தொடங்குகிறது. இருப்பினும், ஒரு பிணமாக நடிக்கும் அண்ணியின் கோமாளித்தனங்கள், கமல்ஹாசனின் "பஞ்சதந்திரம்" திரைப்படத்தை நினைவூட்டும் வகையில் நிலையான சிரிப்பை அளிக்கிறது.

சந்தானம், பால சரவணன், தம்பி ராமையா உள்ளிட்ட குழுவினர் படத்தின் அழகை அதிகரிக்கின்றனர். சந்தானம் தாராளமாக நகைச்சுவை ஸ்பாட்லைட்டை பகிர்ந்து கொள்கிறார், சக நகைச்சுவை நடிகர்களை பிரகாசிக்க அனுமதிக்கிறது. பாடி பலராமனாக முனிஷ்காந்தின் நடிப்பு ஒரு சிறப்பம்சமாகும், மேலும் சேசு மற்றும் மாறனின் சிறிய பாத்திரங்கள் கூட தனித்து நிற்கின்றன. ப்ரியாலயா தனது தோற்றம் மற்றும் நடனம் ஆகியவற்றால் ஈர்க்கிறார், அதே நேரத்தில் விவேக் பிரசன்னா தனது இரட்டை வேடத்தில் மகிழ்கிறார்.

சந்தானத்தின் கலகலப்பான நடிப்பு மற்றும் பாவம் செய்ய முடியாத நகைச்சுவை நேரமும் படத்தை ஈர்க்கிறது. இமானின் பாடல்களும் ஓம் நாராயணின் ஒளிப்பதிவும் படத்திற்கு நன்றாக துணை நிற்கிறது. இலேசாகத் தப்பிக்க வேண்டிய நேரத்தில், "இங்க நான் தான் கிங்கு" ஒரு மகிழ்ச்சியான ஓய்வு அளிக்கிறது, தியேட்டரில் நன்றாகச் சிரிப்பதற்கு ஏற்றது.

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் இன்று துவங்கியது.*

*இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும்  'மாஸ்க்'  திரைப்படம்  பூஜையுடன் இன்று துவங்கியது.*

'காக்கா முட்டை' ,'விசாரணை',  'கொடி' ,'வட சென்னை' உட்பட பல வெற்றி படங்கள்ளை தயாரித்த கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பனி பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ்
உடன் இணைந்து  தயாரிக்கும் புதிய படம் தான் "மாஸ்க்". இந்த படத்தின் மூலம் நிர்வாக தயாரிப்பாளர் sp சொக்கலிங்கம்  தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் .

இத்திரைப்படத்தை விகர்ணன் அசோக்  இயக்குகிறார். இவர் 'தருமி' என்ற குறும்படத்திற்காக   
பிஹைன்ட் வுட்ஸ் சிறந்த குறும்படம் கோல்ட் மெடல் விருது பெற்றுள்ளார்.

இத்திரைப்படத்தின் கதாநாயகனாக  கவின் நடிக்கிறார். இவருடன் ஆண்ட்ரியா ,சார்லி, ருஹானி ஷர்மா ,பாலா சரவணன், VJ அர்ச்சனா சந்தோக் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இத்திரைப்படத்திற்கு  
G.V. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார், ராமர் படத்தொகுப்பு கவனிக்கிறார், கலை இயக்குனராக ஜாக்கியும்,ஆடை வடிவமைப்பாளர்களக பூர்த்தி மற்றும் விபின் ஆகியோரும் பணியாற்றுகின்றனர். இன்று மாஸ்க் திரைப்படம் பூஜையுடன் 
இனிதே தொடங்கியது.

கிராஸ் ரூட்  ஃபிலிம் கம்பனி பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் மாஸ்க் திரைப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் இறுதியில் சென்னையில் துவங்குகிறது.

*நடிகர்கள்*
கவின் 
ஆண்ட்ரியா 
ருஹாணி ஷர்மா
சார்லி 
பாலா சரவணன் 
VJ அர்ச்சனா சந்தோக் 

*தொழில் நுட்பக்கலைஞர்கள்*
தயாரிப்பு நிறுவனம்:
கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பனி 
பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் 
எழுத்து இயக்கம்: விகர்ணன் அசோக் 
இசை: ஜி வி பிரகாஷ் குமார் 
ஒளிப்பதிவு: ஆர் டி ராஜசேகர் 
படத்தொகுப்பு: ஆர் ராமர் 
கலை: ஜாக்கி 
ஆடை அலங்காரம்: பூர்த்தி விபின் 
ஸ்டில்ஸ்: சாய்  சந்தோஷ் 
தயாரிப்பு: வெற்றிமாறன் 
SP சொக்கலிங்கம்
மக்கள் தொடர்பு:  ரியாஸ் K அஹ்மத்

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !! 

ரிஷிகேஷ் எண்டர்டெயிண்ட்மெண்ட்ஸ் சார்பில் லதா முருகனின் தயாரிப்பில், அறிமுக  இயக்குநர் முருகன் இயக்கத்தில், எட்டுத்தோட்டக்கள் புகழ் வெற்றி நாயகனாக நடிக்க சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “பகலறிவான்” 

விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று  படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. 

இவ்விழாவினில்..

இயக்குநர் தயாரிப்பாளர் முருகன் பேசியதாவது.. 
இந்த திரைப்படம் பல இன்னல்களுக்கிடையில் உருவான திரைப்படம்.  பல வருடக் கனவு இது.  இப்படத்தின் அனைத்து கலைஞர்களும் எனக்கு பெரும் உறுதுணையாக இருந்து உழைத்தார்கள், அவர்கள் அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றி சொல்லிக்கொள்கிறேன். எங்களை வாழ்த்த வந்திருக்கும் அனைத்து திரைக் கலைஞர்களுக்கும் நன்றி. விநியோகஸ்தர் காசிநாதன் மற்றும் கண்ணன் சார் படம் பார்க்காமலே விநியோகிக்க ஒப்புக்கொண்டனர். அவர்களுக்கு நன்றி. இப்படம் முடிவதற்கு பணம் தந்தவர்கள் சடையாண்டி கஜேந்திரன், விஸ்வை கருப்பசாமி  இருவர் தான். அவர்களால் தான் இப்படம் சாத்தியமானது.  அவர்களுக்கு என் மிகப்பெரிய நன்றிகள். இப்படம் உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும். அனைவருக்கும் என் நன்றிகள். 

இசையமைப்பாளர் விவேக் சரோ பேசியதாவது.. 
இது என் முதல் படம்,  நான் பல டீவி  விளம்பர்ங்கள் நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்திருந்தாலும், திரைப்படம் என்பது மிகப்பெரிய விசயமாகத்தான் இருக்கிறது.  இந்தப்படம் என்னால் முடியும் என நம்பி, என்னிடம் ஒப்படைத்த இயக்குநர் தயாரிப்பாளர் முருகனுக்கு நன்றி. இந்தப்படத்திற்காக 4,5 முறை மாற்றி, மாற்றி இசையமைத்துள்ளேன். இதுவரை பார்த்தவர்கள் எல்லோரும் பாராட்டியுள்ளார்கள் உங்களுக்கும் பிடிக்குமென நம்புகிறேன். நடிகர் வெற்றிக்கு இந்தப்படம் மிக வித்தியாசமானதாக இருக்கும். இதுவரை பார்த்திராத வெற்றியைப்
பார்க்கலாம். படம் கண்டிப்பாக மிக வித்தியாசமான அனுபவமாக இருக்கும். மே 24 ஆம் தேதி படம் வருகிறது ஆதரவு தாருங்கள். 

நடிகை விஷ்ணு பிரியா பேசியதாவது..,
எனக்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. நல்ல கதாப்பாத்திரம் மிக நல்ல அனுபவமாக இருந்தது. படத்தில் அனைவருமே எனக்கு மிகுந்த  ஆதரவாக இருந்தார்கள். இப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் ஜனரஞ்சகமான படமாக இருக்கும், பார்த்து ஆதரவு தாருங்கள் அனைவருக்கும் நன்றி.. 

நாயகி அக்ஷயா கந்தமுதன் 
பேசியதாவது..,
எனக்கு இயக்குநர் முருகன் அண்ணாவை பர்ஸனலாகவே  தெரியும். மிகத் திறமையானவர். சினிமா மீது காதல் கொண்டவர். என்னை நம்பி இந்த கதாப்பாத்திரத்தைத் தந்ததற்கு நன்றி. இந்தப்படத்தில் உழைத்த அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் உழைத்தனர். நிறைய இரவுக்காட்சிகள் என்பதால் மிகவும் கஷ்டப்பட்டு உருவாக்கினோம். வெற்றி சார் இந்தபடத்தில் மிக வித்தியாசமாக நடித்துள்ளார். அவர் இந்தப்படத்திற்காக நிறைய உழைத்துள்ளார். இந்தப்படம் எனக்கு கனவுப்படம். இரண்டு வருட உழைப்புக்கு பிறகு வரும் படம்,  அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. 


இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது..,
ஒவ்வொருவரும் பேசும்போது இப்படம் சிரமப்பட்டு எடுத்ததாக சொன்னார்கள். சினிமா என்பது சாதாரணமில்லை, தாயின் பிரசவ வேதனைக்கு நிகரானது. சோதனைகளையும், வேதனைகளையும் கடந்து சாதித்தால் மட்டுமே சினிமாவில் ஜெயிக்க முடியும். நடிகர் வெற்றி மிக தனித்துவமானவராக, தனக்கு பிடித்த நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். எல்லாவற்றையும் தாண்டி இத்தனை புதுமுகங்களுடன் இணைந்து பணியாற்றுவதை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். இன்று முழுக்கதையும் சொல்லும் தைரியம் இயக்குநர்களிடம் இல்லை.  இம்மாதிரி சூழ்நிலையில் நல்ல கதைகளை தேடி, தேர்ந்தெடுத்து நடிக்கும் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.  டிரெய்லரிலேயே படத்தின் தரம் தெரிகிறது.  இப்படத்தை உண்மையான அர்ப்பணிப்புடன் உருவாக்கியிருக்கும் குழுவிற்கும் என் வாழ்த்துகள்.  படம் வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


இயக்குநர் சுப்பிரமணியம் சிவா  பேசியதாவது… 
இந்தக்குழுவில் யாரையுமே எனக்கு தெரியாது. நேற்று என் நண்பர், ஒளிப்பதிவாளர் வேல்முருகன் மூலம் இந்தபடத்தின் குழுவினரைச் சந்தித்தேன். 15 வருடங்களாக கோடம்பாக்கத்தில் நடிகராக அலைந்தவர் தான்  முருகன். இவர் மாதிரி பலரை பார்த்திருக்கிறேன். இன்னும் கனவுகளோடு அலையும் மனிதர்களின் சோகம் சொல்ல முடியாதது. அப்படி இருந்த முருகன் தனக்கான வாய்ப்பைத் தானே உருவாக்க எண்ணி இந்தப்படத்தை எடுத்துள்ளார். அதிலும் வித்தியாசமான படங்கள் மட்டுமே செய்யும் வெற்றியை ஒப்புக்கொள்ள வைத்துள்ளார், அதிலேயே ஜெயித்து விட்டார். வாய்ப்புகள் தந்து புதியவர்களை உருவாக்கியவன் சின்ன வயதுக்காரன் என்றாலும் அவன் குருவாகிவிடுவான் அந்த வகையில் வெற்றி குரு தான். இந்த புதிய முகங்கள் எல்லோரும்  இணைந்து தமிழ் சினிமாவிற்கு புத்துணர்ச்சியை ஊட்டட்டும் என வாழ்த்துகிறேன். இந்தப்படத்திற்கு என் வாழ்த்துக்கள். 

இயக்குநர் பேரரசு பேசியதாவது…
பகலறியான் என்றால் பகலை பார்க்காதவன் என்பது தான் அர்த்தம். இன்றைய இளைஞர்கள் பகலறியானாகத்தான் இருக்கிறார்கள். சினிமாவில் இசையமைப்பாளர்கள் எப்போதும் பகலறியானாகத்தான் இருக்கிறார்கள். ஒரு இரவில் நடக்கும் கதையை பரபரப்பாக படமாக்கியுள்ளார்கள். நடிகர் வெற்றி தொடர்ந்து தேர்ந்தெடுக்கும் கதைகள் வியப்பைத் தருகிறது. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுத்து ஜெயிக்கிறார்.  ஒரு புதுமையான கதையில் அர்ப்பணிப்போடு உழைத்திருக்கும் குழுவினருக்கு என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். 

நடிகர் வெற்றி பேசியதாவது…
எங்களை மதித்து எங்களை வாழ்த்த வந்த ஜாம்பவான்களுக்கு நன்றி. இந்தப்படம் முழுக்க முழுக்க ஒரு நாள் இரவில் நடக்கும் கதை. நண்பர் கிஷோர் மூலம் தான் இந்தப்படம் கிடைத்தது.  கதை சொன்ன போதே எனக்கு மிகவும் பிடித்திருந்தது, உடனே நான் செய்கிறேன் என ஒப்புக்கொண்டேன். ஒளிப்பதிவாளர் அபிலாஷ் இந்தப்படத்திற்கு பிறகு, பெரிய அளவில் பேசப்படுவார். பின்னணி இசை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எல்லோரும் படத்தின் பட்ஜெட்டை புரிந்துகொண்டு, படத்திற்காக முழு அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள். நல்ல படத்திற்கு ஆதரவு தரும் பத்திரிக்கை நண்பர்கள் இந்தப்படத்திற்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.  

'8 தோட்டாக்கள்' மற்றும் 'ஜீவி' ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ள வெற்றி, இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அக்ஷயா கந்தமுதன் நாயகியாகவும், பிரபல நடிகர் சாய் தீனா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்திற்கான மூலக்கதை கிஷோர்குமார் எழுதியுள்ளார்.  விவேக் சரோ இசையமைக்க, அபிலாஷ் PMY ஒளிப்பதிவு செய்துள்ளார் மேலும், கோபி கருணாநிதி கலை வடிவமைப்பாளராகவும், ராம் குமார் சண்டை  பயிற்சியாளராகவும் இத்திரைப்படத்தில் பணியாற்றியுள்ளனர்.

பகலறியான் தமிழ் த்ரில்லர் படங்களில் முக்கியமானதாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வரும் மே 24 ஆம் தேதி உலகமெங்கும் இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான “ஆல் வி இமேஜின் அஸ் லைட்” திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டி

*ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான “ஆல் வி இமேஜின் அஸ் லைட்”  திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டி !!*  பாயல் கபாடியாவின் இயக...