Sunday, April 7, 2024

நேர்மையுடன் வாழ்ந்த உதவி கமிஷனர் ஒருவரின் வாழ்க்கை " கடமை" என்ற பெயரில் படமாகிறது! _________ புது இயக்குனர் அறிமுகமாகிறார்!


 நேர்மையுடன் வாழ்ந்த உதவி கமிஷனர் ஒருவரின் வாழ்க்கை         " கடமை" என்ற பெயரில் படமாகிறது!

_________

புது இயக்குனர் அறிமுகமாகிறார்!

_________


பணியின் போது நேர்மையாக வாழ்ந்து வந்த உதவி கமிஷனர் பணிக்காலம் முடிந்த பின் சட்டத்தை கையில் எடுத்து நேர்மறை எண்ணம் கொண்டு செயல்படும் அயோக்கியர்களை களை எடுக்க புறப்படுகிறார். இப்படி ஒரு கதைக்களத்தை மையமாக கொண்ட படத்திற்கு " கடமை " என பெயரிட்டுள்ளனர்.


இந்த படத்தில் கே.சீராளன், சந்தியா, பீமாராவ், காயத்ரி, சுக்ரன் சங்கர், மோகன சுந்தரி, கோபி, சாந்தி , தேவராஜ் , பிரியா , டெலிபோன் தேவா மற்றும் பலர் நடித்துள்ளனர்.


பாபு ஒளிப்பதிவையும், பன்னீர்செல்வம் படத்தொகுப்பையும், பிரசாத் கணேஷ் இசையையும் கவனித்துள்ளனர்.


மக்கள் திலகம்  எம்.ஜி.ஆர். நாயகனாக நடித்து வெளிவந்த " கடமை " 50 வருடங்களுக்கு முன்பு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படமாகும். அதே தலைப்பை இதற்கும் சூட்டி இந்த கதையின் நாயகனாக நானே நடித்தால் நன்றாக இருக்கும் என்று டைரக்டர் சுக்ரன் சங்கர் கூறியதால் கே.எஸ்.என்.எஸ். பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் நானே இதை தயாரித்துள்ளேன் என்கிறார் கே.சீராளன்.


படத்தை பற்றி இயக்குனர் சுக்ரன் சங்கர் கூறியதாவது , :- " இன்றைய காலகட்டத்தில் குற்றப் பிண்ணனியில் நடைபெறும் ஆணி வேரான நபர்களை கண்டுபிடித்து வேரோடு அழிக்க முற்படும் நாயகன் தான் இதன் மையக்கரு. அன்றாடம் நம் கண் முன்னே நடைபெற்றுக் கொண்டிருக்கும் சம்பவங்களை கோர்வையாக்கி விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து , " கடமை " என பெயர் சூட்டி டைரக்ட் செய்துள்ளேன்" என்று இயக்குனர் சுக்ரன் சங்கர் தெரிவித்தார்.


பிரபல முன்னணி இயக்குனர்கள் பலரிடம் உதவியாளராக பயிற்சி பெற்றுள்ள சுக்ரன் சங்கர் கதை, திரைக்கதை, வசனம் , எழுதி தமது முதல் படமாக இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



விஜயமுரளி

PRO

Tharunam - திரைவிமர்சனம்

வாழ்க்கை எதிர்பாராத தருணங்களால் நிறைந்துள்ளது - சில மகிழ்ச்சியைத் தருகின்றன, மற்றவை தடைகளை ஏற்படுத்துகின்றன. இந்த தருணங்கள் நம்மை எவ்வாறு வட...