Saturday, December 4, 2021

நான்கு கதாநாயகிகள் நடிக்கும் புதிய படம் - எஸ்.எஸ்.பிரபு மற்றும் சங்கர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை


 எஸ்.எஸ்.பிரபு மற்றும் சங்கர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை இன்று போடப்பட்டது. இப்படத்தில்க் சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே, மனிஷா ஜஸ்னானி, சந்திரலேகா ஆகிய நான்கு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். வித்தியாசமான தோற்றத்தில் சார்பட்டா புகழ் டாடி ஜான் விஜய் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் கிரிதரன் இயக்குனராக அறிமுகமாகிறார்.



கார்த்திக் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு அசோக் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.ராமர் படத்தொகுப்பையும், எஸ்.ஜே.ராம் கலை இயக்குனராகவும் பணியாற்றுகிறார்கள். இன்று நடைபெற்ற இப்படத்தின் பூஜையில், மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.



நவீன உலகின் சருமப் பராமரிப்பு நிறுவனமான NXT FACE இன் பிராண்ட் அம்பாசடராக நடிகை கயாடு லோஹரை நேச்சுரல்ஸ் அழகு நிலையத்தின் நிறுவனருமான சி.கே.குமாரவேல் மற்றும் வீணா குமரவேல் ஆகியோர் அறிவித்தனர்.*

*நவீன உலகின் சருமப் பராமரிப்பு நிறுவனமான NXT FACE இன் பிராண்ட் அம்பாசடராக நடிகை கயாடு லோஹரை நேச்சுரல்ஸ் அழகு நிலையத்தின் நிறுவனர...