Friday, January 21, 2022

தாய்க்கு மணிமண்டபம் கட்டிய திரைப்பட தயாரிப்பாளர் தாய் சரவணன்


 தமிழ் சினிமாவில் தரமான படைப்புகள் மூலம் கவனம் ஈர்த்த தயாரிப்பாளர் தாய் சரவணன் தனது தாய் நினைவாக மிகப்பெரும் மணிமண்டபம் கட்டியுள்ளார். 


ஆதலால் காதல் செய்வீர், மாவீரன் கிட்டு, வில் அம்பு, கென்னடி கிளப், என பல தரமான படைப்புகளை தயாரித்து தமிழ் திரையுலகில் சிறந்த தயாரிப்பளாராக வலம் வருபவர்  தாய் சரவணன். மேற்கு தொடர்ச்சி மலை போன்ற மக்கள் போற்றிய பல நல்ல திரைப் படங்களை ரிலீஸ் செய்து நல்  மதிப்பு பெற்றவர். 


தாயின் மீது மிகுந்த பாசம் கொண்ட இவர், தற்போது தனது சொந்த ஊரான ஒட்டன்சத்திரத்தில் ஒரு மணிமண்டம் கட்டியுள்ளார். கடந்த ஆண்டு அவரது தாய் மறைவடைந்ததை ஒட்டி, தனது தாய் திருமதி ஜெயலக்‌ஷ்மி நினைவாக,   ஒட்டன்சத்திரம் ரோட்டில்  உள்ள அவரது தோட்டத்தில் பிரமாண்டமாக ஒரு மணிமண்டபத்தை அமைத்துள்ளளார். 


தாயின் மீது பாசம் கொண்டு அவருக்கு கோயில் கட்டியிருக்கும் இவரது செயல் பாராட்டுக்குரியது .

Tharunam - திரைவிமர்சனம்

வாழ்க்கை எதிர்பாராத தருணங்களால் நிறைந்துள்ளது - சில மகிழ்ச்சியைத் தருகின்றன, மற்றவை தடைகளை ஏற்படுத்துகின்றன. இந்த தருணங்கள் நம்மை எவ்வாறு வட...