Monday, February 21, 2022

பாக்யராஜ் சார், நீங்க என்ன செஞ்சீங்க?வாட்ஸ்ஆப்பில் கேள்வி எழுப்பும் உறுப்பினர்!

பாக்யராஜ் சார், நீங்க என்ன செஞ்சீங்க?
வாட்ஸ்ஆப்பில் கேள்வி எழுப்பும் உறுப்பினர்!

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் வரும் 27ம் தேதி  நடக்கவிருக்கிறது இதில் இயக்குனர் திரு .RK.தலைமையிலும் இயக்குனர்  திரு K.பாக்யராஜ் அவர்கள் தலைமையில் இரண்டு அணிகள் போட்டியிடுகிறது இதைதொடர்ந்து சங்க உறுப்பினர்கள் இருதரப்பிலும் வாட்ஸ் அப் குழுக்களில் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள் சமீபத்தில் ஒரு வாட்ஸப்பில் ஒரு உறுப்பினர் பாக்யராஜ் அவர்களிடம் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

*எழுத்தாளர் சங்க தலைவர்  திரு. K.பாக்யராஜ் அவர்களுக்கு*

*தாங்கள் எழுத்தாளர்கள் சங்கத்தில் பதவிக்கு வந்த பிறகு, தாங்கள் செய்த இரண்டு நல்ல விஷயங்கள். ஒன்று, தீபாவளிக்கு இனிப்பு கொடுத்ததுடன் ஒவ்வொரு உறுப்பினரின் அக்கவுண்டிலும் ரூபாய் 1000 செலுத்தினீர்கள்.* 

*இந்தப் பணம் எந்த வழியில் வந்தது ?*
*எங்களுக்கு நன்றாக தெரியும்.*
*இது சன் டிவியில் பட்டிமன்றம் நடத்தியதன் மூலம் வந்த 15 லட்சத்தில் இந்த உதவிகளை செய்தீர்கள்.*

*சன்டிவியில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது யார்?*
*யார் முயற்சியால் இந்த பட்டிமன்றம் சன் டிவியில் நடத்தப்பட்டது ?*
*யாரால் அந்த 15 லட்சம்  சங்கத்துக்கு வந்தது!*

*இதற்கு மூல காரணம் எங்க தலைவர் ஆர்கே செல்வமணி சார்தான் என்பது, தங்களுக்கு மட்டுமல்ல எழுத்தாளர் சங்கத்தில் உள்ள அனைவருக்கும் நன்றாக தெரியும்.*

*இன்னொன்று கொரோனா காலகட்டத்தில் எழுத்தாளர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசி மற்றும், மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது. இதுவும்,     பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி சாரின் மூலமாக பெப்ஸியில் இருந்து வந்த உதவிதான்.*

 *ஆகவே, எழுத்தாளர் சங்கத்தில் உருப்படியாக செய்த இந்த இரண்டு உதவிகளுக்கும் மூல காரணமே ஆர்கே செல்வமணி அவர்கள்தான்.*

 *தங்கள்  முயற்சியில் அங்கே என்ன நடந்தது?*
*தங்களின் தனிப்பட்ட முயற்சியால் நீங்கள் அந்த சங்கத்திற்கு என்ன உதவி செய்தீர்கள்?*

*எங்கள் இயக்குனர் சங்கத்தில் தலைவர், செயலாளர், பொருளாளர், இவர்கள் எந்த திரைப்பட நிகழ்ச்சிக்கு  சென்றாலும் அந்த நிகழ்ச்சியின் மூலம் வரும் வருவாயை சங்கத்தில் ஒப்படைத்தார்கள் இதன்மூலம் எங்க சங்கத்திற்கு லட்சத்தைத் தாண்டி வருமானம் வந்திருக்கிறது.*

*தாங்கள், தங்கள் பதவி காலத்தில் பல பட்டிமன்றங்கள், பல நிகழ்ச்சிகளுக்கு போயிருக்கிறீர்கள்!*
*நிச்சயம் அதன் மூலம் உங்களுக்கு வருவாய் வந்திருக்கும்  அந்தப் பணத்தில் ஒரு ரூபாயாவது நீங்கள் தலைவராக இருக்கும் சங்கத்திற்கு அளித்திருக்கிறீர்களா?* 

*சார் பதவியில் அமர்வது பொறுப்பு அல்ல...*
*இறங்கி வேலை செய்வது தான் பொறுப்பு.*
*அந்த வகையில் எங்கள் தலைவர் RK. செல்வமணி அவர்களை அடித்துக் கொள்ள ஆளில்லை!* *எங்கள் ஓட்டு எங்க தலைவர் RK. செல்வமணி சார் அவர்களுக்கு தான்.*
*எங்கள் நிரந்தர தலைவர் திரு. விக்ரமன் சாரின் புது வசந்தம் அணிக்குதான்.*
                     இப்படிக்கு
    அசோக் அண்ணாமலை

Tharunam - திரைவிமர்சனம்

வாழ்க்கை எதிர்பாராத தருணங்களால் நிறைந்துள்ளது - சில மகிழ்ச்சியைத் தருகின்றன, மற்றவை தடைகளை ஏற்படுத்துகின்றன. இந்த தருணங்கள் நம்மை எவ்வாறு வட...