Monday, March 28, 2022

விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத் கூட்டணியில் அடுத்த மிஷன் ஆரம்பமாகிறது !*

*விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத் கூட்டணியில் அடுத்த மிஷன் ஆரம்பமாகிறது !*

பன் மொழிகளில் பிரபலமான இந்திய நட்சத்திர நடிகர் விஜய் தேவரகொண்டா, கலக்கல் கமர்ஷியல் இயக்குநர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் மற்றொரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளனர். இருவரும் தற்போது அவர்களின் கூட்டணியில், பன் மொழிகளில் உருவாகிய இந்தியா படமான ‘லைகர்’ வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்கள், இப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியிடப்பட உள்ளது.

இந்த அதிரடியான கூட்டணியில், புதிய படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. இந்த படத்தின் போஸ்டர்  பல வெடிபொருள் ஆயுதங்களுன் படு ஸ்டைலீஷாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில்: 14:20 மணிநேரம்- 19.0760° N, 72.8777° E - அடுத்த மிஷன் வெளியீடு 29-03-2022. என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

திரைப்பட ஆர்வலர்களுக்கு ஒரு  பெரிய விருந்து காத்திருக்கிறது, நாளை ஒரு உற்சாகமான அறிவிப்பு வெளிவரவுள்ளது.

மிகப்பிரமாண்டமாக உருவாகவுள்ள இப்படைப்பின் மேலதிக தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

Tharunam - திரைவிமர்சனம்

வாழ்க்கை எதிர்பாராத தருணங்களால் நிறைந்துள்ளது - சில மகிழ்ச்சியைத் தருகின்றன, மற்றவை தடைகளை ஏற்படுத்துகின்றன. இந்த தருணங்கள் நம்மை எவ்வாறு வட...