Monday, April 18, 2022

சாதனைப் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு அதிகாரமளித்தல் அமைப்பின் சார்பாக நடைபெற்ற பேஷன் ஷோ போட்டியை அப்சரா ரெட்டி மற்றும் புதுச்சேரி சுற்றுலா துறை இணைந்து புதுச்சேரி சீகல்ஸ் கடற்கரையில் பிரம்மாண்ட ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர் இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் கலந்து கொண்டு சிறப்பித்தார்

புதுச்சேரி சீகல்ஸ்  கடற்கரையில் நடைபெற்ற  ஃபேஷன் ஷோ போட்டியை அப்சரா ரெட்டி மற்றும் புதுச்சேரி சுற்றுலா துறை இணைந்து  சாதனை பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு  அதிகாரமளித்தல் அமைப்பின் சார்பாக ஏற்பாடு  செய்யப்பட்ட
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக  சுற்றுலாதுறை அமைச்சர் லஷ்மி நாராயணன், சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

பிரமாண்டமாக நடைபெற்ற இந்த  ஃபேஷன் ஷோவில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்வேறு துறைகளில்  சாதனை படைத்த பெண்கள் கலந்து கொண்டனர். கோலாகலமாக நடைபெற்ற பேஷன் ஷோ நிகழ்ச்சியை அங்கிருந்த மக்கள் அனைவரும் பிரமிப்புடன் கண்டு ரசித்தனர்.

அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய புதுச்சேரி சுற்றுலா துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் புதுச்சேரி மாநிலம்  தற்போது சுற்றுலாத்  துறையில் புதிய கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக  புதுச்சேரி சுற்றுலா துறையில் அனைத்து பங்குதாரர்களையும் முன்னிலைப்படுத்தியதற்காக அப்சரா ரெட்டிக்கு  தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அப்சரா ரெட்டி கூறுகையில்  புதுச்சேரி மாநிலத்தில் பேஷன் ஷோ நிகழ்ச்சி நடத்தியது மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக இருப்பதாகவும், ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியை புதுச்சேரி மாநிலத்தில் நடத்துவதற்கு உறுதுணையாக இருந்த  மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் உள்ளிட்ட   அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

 புதுச்சேரியில் நான்கு நாட்கள் நடைபெற்ற கடற்கரை திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியாக சாதனைப் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு அதிகாரமளித்தல் அமைப்பின் சார்பாக பிரம்மாண்ட  ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று  நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது

முதலமைச்சர் நடித்த 'ஒரே இரத்தம்' படம் ஏற்படுத்திய தாக்கம்!": 'காத்துவாக்குல ஒரு காதல்' பட விழாவில் ஆ.ராசா MP நெகிழ்ச்சி!

"முதலமைச்சர்  நடித்த 'ஒரே இரத்தம்' படம் ஏற்படுத்திய தாக்கம்!": 'காத்துவாக்குல ஒரு காதல்' பட விழாவில்  ...