Friday, April 22, 2022

குழந்தைகள் குடும்பமாக கொண்டாடும் “அக்கா குருவி”. பிரபல நிறுவனம் PVR வெளியிடுகிறது.

குழந்தைகள் குடும்பமாக கொண்டாடும் “அக்கா குருவி”. 
பிரபல நிறுவனம் PVR வெளியிடுகிறது. 

மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரிக்க,  இயக்குநர் சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள குழந்தைகள் திரைப்படம்  ‘அக்காகுருவி’.  
இசைஞானி இளையராஜா இசையில் தமிழ் சினிமாவின் தரமான படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தை,  
பிரபல தியேட்டர் நிறுவனமான PVR பிக்சர்ஸ் நிறுவனம் மே 6 ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறது. 

உலகப்புகழ் பெற்ற திரைப்படமான சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் அதிகாரப்பூர்வ மறுபதிப்பாக இப்படம் உருவாகியுள்ளது. 
ஒரு ஏழை குடும்பத்தில் வசிக்கும் அண்ணன் தங்கை என இரு குழந்தைகள், இவர்களுக்கிடையே ஒரு ‘ஷீ’ - 
 இதை,  மனதை உலுக்கும் அற்புத படைப்பாக , உயிர், மிருகம் போன்ற படங்களை இயக்கிய சாமி புதிய முயற்ச்சியாக உருவாகியுள்ளார். 

இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெறுகிறது. மூன்று பாடல்களையும் இளையராஜாவே எழுதியுள்ளார்.  
சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் மறுபதிப்பான அக்கா குருவியை அதன் ஒரிஜினல் கெடாமல் படமாக்கியுள்ளார் இயக்குநர் சாமி.


இரண்டு குழந்தைகள், அப்பா அம்மா இவர்களுடைய உணர்ச்சிகளின் தாக்கம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும். இந்த காட்சிகளுக்கு பின்னணி இசையில் பல உணர்ச்சிகரமான இடங்களில் இளையராஜாவின் பழைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அது ரசிகர்களுக்கு ஒரு பேருணர்வை தரும். 


இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரங்களான 11 வயது அண்ணன், 7வயது தங்கை கதாபாத்திரங்களுக்கான 200க்கும் மேற்பட்டவர்களை தேர்வு நடத்தி இறுதியாக மாஹின் என்ற சிறுவனும், டாவியா என்ற சிறுமியும் தேர்வு செய்யப்பட்டார்கள். மேலும் கிளாசிக்கல் டான்ஸரான தாரா ஜெகதாம்பா அம்மா கதாபாத்திரத்திலும், செந்தில்குமார் அப்பா கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

இப்படத்தினை பார்த்த PVR பிக்சர்ஸ் குழுவினர்,  உடனடியாக படத்தை வெளியிட சம்மதித்து, குடும்பத்தோடு அனைவரும் பார்க்க வேண்டுமென கோடை கொண்டாட்டமாக, மே 6ம் தேதி இப்படத்தை வெளியிடுகிறார்கள். 

ஏப்ரல் 25 ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீடு கோலாகலமாக நடைபெறவுள்ளது.

- ஜான்சன்

கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணிகொண்ட "கற்றது சமையல்"

கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணிகொண்ட "கற்றது சமையல்"   கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் - வெள்ளி வரை மாலை...