Sunday, May 1, 2022

42வது தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் 2022 - நிறைவு விழா

42வது தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் 2022 - நிறைவு விழா

ஆசிய மாஸ்டர்ஸ் தடகளம் மற்றும் உலக மாஸ்டர்ஸ் தடகள சம்மேளனத்துடன் இணைந்து, இந்திய மாஸ்டர்ஸ் தடகள கூட்டமைப்பு, 42வது தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் 2022 ஐ நடத்தியது. இந்திய மாஸ்டர்ஸ் தடகள போட்டிகளில் வெல்பவர்கள் ஆசிய மற்றும் உலக மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள்.

42வது தேசிய முதுநிலை தடகள சாம்பியன்ஷிப் 2022 என்பது இந்தியாவின் 26 மாநிலங்களில் இருந்து 3500க்கும் மேற்பட்ட தடகள வீரர்களுடன் போட்டியிடும் மிகப்பெரிய தடகளப் போட்டியாகும், 13 வயது முதலான பிரிவுகளில் மொத்தம் 22 தடகளப் பிரிவுகள் கொண்ட போட்டிகள் ஏப்ரல் 27 முதல் மே 1 வரை நடத்தப்பட்டது

42வது தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் நிறைவு விழாவில் நடிகர் திரு ஆர்யா அவர்கள் கலங்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார். நிகழ்வின் போது இந்திய மாஸ்டர்ஸ் தடகள கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் திரு.டி டேவிட் பிரேம்நாத், சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கத்தின் தலைவர் திரு.செண்பகமூர்த்தி உடனிருந்தார்.

கேம் சேஞ்சர் பட முன் வெளியீட்டு நிகழ்வில், பிளாக்பஸ்டர் கூட்டணி ராம்சரண் - சுகுமார் ஒன்றாக தோன்றவுள்ளனர் !

 கேம் சேஞ்சர் பட முன் வெளியீட்டு நிகழ்வில், பிளாக்பஸ்டர் கூட்டணி ராம்சரண் - சுகுமார் ஒன்றாக தோன்றவுள்ளனர் ! பட முன் வெளியீட்டு நிகழ்வில், மா...