இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ், மகிமா நம்பியார், காளி வெங்கட், அருள்தாஸ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஈட்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ரவி அரசு இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தமிழகத்தில் நகைக்கடைகளில் ரூ.50 கோடி மதிப்பிலான நகைகளை வடமாநில கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளனர். இவர்களின் கொள்ளையடிக்கப்பட்ட நகை மூட்டை நாமக்கல்லில் உள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளது. அதை எடுக்க ஒரு குழந்தையை கடத்தி அந்த ஆழ்துளை கிணற்றில் போடுகிறார்கள்.
மறுபுறம், பொறியியல் பட்டதாரியான ஜி.வி.பிரகாஷ், கிணற்றில் இருந்து குழந்தையை மீட்க புதிய இயந்திரத்தை கண்டுபிடித்தார். ஆழ்துளை கிணற்றில் வீசப்பட்ட குழந்தையை மீட்கும் முயற்சி. அதன் பிறகு நடக்கும் பரபரப்பான சம்பவங்கள்தான் படத்தின் கதை. படத்தின் மிகப்பெரிய பலம் இயக்குனர் ரவிஅரசுவின் திரைக்கதை. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் ரவி அரசு.
ஜி.வி.பிரகாஷ்குமார் அனைத்து காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் ஒரு படி மேலே சென்றிருக்கிறார். வில்லனாக நடித்திருக்கும் சித்தார்த் சங்கர் மிரட்டும் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கதாநாயகி மஹிமாவுக்கு பெரிய விஷயமில்லை. காளிவெங்கட், ஹரிஷ் பேரடி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்திற்கு வலு சேர்க்கிறது. ஜி.வி.யின் இசையில் பாடல்களுடன் பின்னணி இசை ஒலிக்கிறது.