நம் நகரத்தை பாதுகாப்போம் OUR CITY திட்டம் மூலம் நகரமெங்கும் 10,000 சிசிடிவி கேமரா (CCTV) இலவசமாக நிறுவுகிறது செக்யூர் கேம் நிறுவனம் !
நம் நகரத்தை பாதுகாப்போம் ‘SECURE OUR CITY’ என்பது நமது மக்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சீரமைக்கப்பட்ட ஒரு திட்டமாகும். இத்திட்டத்தின் ஆரம்ப கட்டமாக நகரம் முழுவதும் 10,000 (பத்தாயிரம்) கட்டிடங்களுக்கு பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்புகள், சிசிடிவி கேமரா (CCTV) இலவசமாக நிறுவப்படவுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு (உலகளாவிய தரநிலைகளின்படி) இலவச சேவை மற்றும் தயாரிப்பு உத்தரவாதத்தை அளிக்கும் என ரிஜாய் தாமஸ் கூறியுள்ளார்.
பொது மேலாளர் சினேகா மோகன்தாஸ் இது குறித்து கூறியதாவது…
செக்யூர் கேம் தனது டிஜிட்டல் மார்க்கெட்டிங் பிரச்சாரத்தை ‘சிருஷ்டி’ எத்திராஜ் மகளிர் கல்லூரி நாளை முன்னிட்டு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் பிரச்சாரம் பொதுமக்களிடையே, குறிப்பாக பெண்களிடம், தனிநபர் பாதுகாப்பைப் பாதுகாப்பதில் தொழில்நுட்பம் எவ்வாறு முக்கியப் பங்காற்ற முடியும் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கும் சமூகத்தில், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டை உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியா முழுவதும் நகர்ப்புறம், சிறு நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் மைக்ரோ அளவில் டிஜிட்டல் பாதுகாப்பு வலையமைப்பை உருவாக்குவதே எங்கள் திட்டமாகும். ஒரு தனியார் நிறுவனமாக, இந்தத் திட்டம் மற்றும் அது கொண்டு வரக்கூடிய சமூக-பொருளாதார மாற்றத்தைப் பற்றி நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். நம் நாட்டின் பெண்கள் பாதுகாப்பாக இருக்கும்போது, நம்மைச் சுற்றியுள்ள உலகம் சிறந்த இடமாக மாறும் என்று நாங்கள் நம்புகிறோம்.
செக்யூர் கேமின் தலைமை இயக்க அதிகாரி எமில் ஜோஸ் கூறியதாவது…
சரியான தொழில்நுட்ப தீர்வுகள் எவ்வாறு பாதுகாப்பான சூழலை உருவாக்கலாம் என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, எங்கள் டிஜிட்டல் பிரச்சாரத்தைத் தொடங்க எத்திராஜ் மகளிர் கல்லூரி நாளான சிருஷ்டி தினத்தை விட சிறந்த தளம் கிடைக்காது. நகரில் இன்னும் பாதுகாக்கப்படாத கட்டிடங்களுக்கு இந்த வசதி வழங்கப்படுவதை உறுதிசெய்ய விரும்புகிறோம் என்றார்.
செக்யூர் கேமின் அபுதாபி வணிக கூட்டாளர் அஹ்மத் சரூர் அல் மரார் கூறும்போது..
செக்யூர் கேம் இந்த பாதுகாப்பு சேவையை முற்றிலும் இலவசமாக வழங்குகிறது என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம் என்றார்.
செக்யூர் கேம், UAE-ஐ தளமாகக் கொண்டு, இந்தியாவில் இயங்கும் நிறுவனம் உள்ளது, நம் நகரத்தை பாதுகாப்போம் SECURE OUR CITY பிரச்சாரத்தை இந்நிறுவனம் இந்தியாவில் தொடங்க உள்ளது. இத்திட்டதின் முதல் நகரத்தின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பிரச்சாரம் இத்திடத்திற்கான முன்னோடியாக இருக்கும்.