Monday, June 20, 2022

தேசிய விருதுபெற்ற ஜல்லிக்கட்டு படத்தை தமிழில் வெளியிட்ட AR என்டர்டைன்மெண்ட்ஸ் அமித் குமார் அகர்வால் !!

தேசிய விருதுபெற்ற ஜல்லிக்கட்டு படத்தை தமிழில் வெளியிட்ட AR என்டர்டைன்மெண்ட்ஸ்  அமித் குமார் அகர்வால் !! 

தமிழ் மொழியில் வெளியான  தேசிய விருதுபெற்ற ஜல்லிக்கட்டு படம் !

மலையாளத்தின் பிரபல இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய ஜல்லிக்கட்டு  படம் கடந்த 2019 ம் ஆண்டு வெளியானது.கேரள அரசின் விருது பெற்ற இந்த படம், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது.சிறந்த ஒளிபதிவிற்காக இப்படம் தேசிய விருதினையும் வென்றுள்ளது . மேலும் ஆஸ்கர் விருத்திற்காகவும் தேர்ந்தெடுத்து பரிந்துரை செய்யப்பட்டது . இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், சாபுமோன் அப்து சமது ,சாந்தி பாலச்சந்திரன்  ஆகியோர்  நடித்திருந்தனர். 

கிரிஷ் கங்காதரன் இந்த படத்திற்காக ஒளிப்பதிவு செய்து தேசிய விருதினை பெற்றுத்தந்தார் . தீப்பு ஜோசப் இப்படத்திற்கு பின்னணி இசையை உருவாக்கியுள்ளார் . மாபெரும் வெற்றி மற்றும் வரவேற்பை பெற்ற இந்த படத்தின் தமிழ் உரிமையை AR என்டர்டைன்மெண்ட்ஸ்  தயாரிப்பாளர் அமித் குமார் அகர்வால் கைப்பற்றி தமிழில் டப்பிங் செய்து தற்போது அமேசான் பிரைமில் வெளியிட்டுள்ளார் . 

கேரளாவில் ஒரு மலையோர கிராமத்தில் இறைச்சிக்காகக் கொண்டு வரப்படும் ஒரு எருமை, கட்டை அவிழ்த்து ஓடுகிறது. அந்த எருமையை ஊர் மக்களே சேர்ந்து பிடிப்பது தான் இந்தப் படத்தின் கதையாகும். மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான இப்படம் தற்போது தமிழிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது .

Dawn Pictures தயாரிப்பில், சிலம்பரசன் TR நடிப்பில் பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும், #STR49 படம் பூஜையுடன் துவங்கியது

 Dawn Pictures தயாரிப்பில், சிலம்பரசன் TR நடிப்பில் பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும், #STR49 படம்  பூஜையுடன் துவங்கி...