“வீட்ல விசேஷம் உணர்வுகளும் சந்தோஷமும் நிறைந்த ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும்” - ஆர்.ஜே.பாலாஜி
குடும்பங்களையும் நண்பர்களையும் திரையரங்குகளில் ஒன்றிணைப்பதில் குடும்ப பொழுதுபோக்கு படங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. Zee Studios & Bayview Projects LLP சார்பில் போனி கபூர் Romeo Pictures உடன் இணைந்து தயாரித்துள்ள ஆர்ஜே பாலாஜியின் "வீட்ல விசேஷம்" திரைப்படம் இந்த வகை படங்களுக்கு புத்துயிர் தருவதாக இருக்கும். இத்திரைப்படம், ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிகரும், இயக்குநருமான ஆர்ஜே பாலாஜி படம் பற்றி கூறுகையில்..,
'பதாய் ஹோ' இந்தி திரையுலகில் மிகப்பெரிய வெற்றிப்படமாக போற்றப்படுகிறது, மேலும் அதன் பொழுதுபோக்கு அம்சங்களுக்காக அப்படம் அனைத்து தரப்பு பார்வையாளர்களிடையேயும் அமோக வரவேற்பைப் பெற்றது. நாங்கள் அதன் ரீமேக்கில் வேலை செய்யத் தொடங்கியபோது, அதை ரீமேக் செய்யாமல், நமது மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பது போல், இங்குள்ளவர்களுக்கு ஏற்றவாறு செய்ய நினைத்தோம். Zee Studios & Bayview Projects LLP தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் Romeo Pictures ராகுல் உட்பட அனைவரும் வீட்ல விஷேசம் படத்தின் இறுதி வடிவத்தில் மிகவும் திருப்தியாக உள்ளனர். சமீபத்தில், ஜீ ஸ்டுடியோஸ் குழு உறுப்பினர்கள் மும்பையில் படத்தைப் பார்த்தனர், தொலைபேசி மூலம் அவர்களின் கைதட்டலைக் கேட்டது உணர்ச்சிகரமான தருணமாக இருந்தது. வீட்ல விஷேசம் எங்கள் மொத்த குழுவினருக்கும் பெரும் திருப்தியை அளித்துள்ளது. N.J.சரவணன் இந்தத் திரைப்படத்தின் வலுவான தூணாக இருந்துள்ளார். அவர் இப்படத்தை என்னுடன் இணைந்து இயக்கியுள்ளார். அவரது ஈடுபாடு படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்துள்ளது. சத்யராஜ் சார், ஊர்வசி மேடம், அபர்ணா பாலமுரளி மற்றும் நட்சத்திர பட்டாளத்தில் உள்ள அனைவருமே இந்த படத்தின் ஆன்மா. அவர்கள் தங்களது சிறப்பான நடிப்பால் படம் முழுவதையும் கலகலப்பாக்கியிருக்கிறார்கள்.
விரைவில் படம் வெளியாவது குறித்து ஆர்.ஜே.பாலாஜி தொடர்ந்து கூறும்போது..,
வீட்ல விசேஷம் 100% ஃபேமிலி என்டர்டெய்னர் என்பதால், 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மற்றும் பிற கல்வித் தேர்வுகள் முடிந்த பிறகு வெளியிட நினைத்தோம். தவிர, இந்தப் படத்தை குடும்பத்தினரும் நண்பர்களும் ரசிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம், எனவே ஜூன் 17 அன்று வெளியிட முடிவு செய்தோம். உணர்வுகளும் சந்தோஷமும் நிறைந்த ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்கு படமாக இப்படம் இருக்கும்.
வீட்ல விஷேசம் படத்தில் ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி, KPAC லலிதா, பவித்ரா லோகேஷ், விஸ்வேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக் குழுவில் கார்த்திக் முத்துக்குமார் (ஒளிப்பதிவு), விஜயகுமார் (கலை), RJ.பாலாஜி (வசனம்), பா.விஜய் (பாடல் வரிகள்), செல்வா RK (எடிட்டிங்), கிரிஷ் கோபாலகிருஷ்ணன் (இசை), தினேஷ் (நடன அமைப்பு), அக்சத் கில்டியல்-சாந்தனு ஸ்ரீவஸ்தவ் (கதை) திவ்யா நாகராஜன் (ஆடைகள்), S. விஜய் ரத்தினம் MPSE (ஒலி வடிவமைப்பு), AM ரஹ்மத்துல்லா (ஒலி கலவை), R. ஹரிஹர சுதன் (லார்வன் ஸ்டுடியோ) (விஷிவல் எபெக்ட்ஸ்), நந்தினி கார்க்கி (வசனங்கள்), ராஜராஜன் கோபால் (DI வண்ணக்கலைஞர்) ), ராமமூர்த்தி (ஸ்டில்ஸ்), M செல்வராஜ் (காஸ்ட்யூமர்), கபிலன் (பப்ளிசிட்டி டிசைன்ஸ்), N விக்கி (தயாரிப்பு நிர்வாகி), S.பாண்டியன் (முடி அலங்காரம்), N.சக்திவேல் (மேக்கப்), P.செல்வகுமார்-சிவ குமார் (தயாரிப்பு மேலாளர்), சுரேஷ் சந்திரா-ரேகா D’One (மக்கள் தொடர்பு) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.