Wednesday, July 27, 2022

தேசிய விருது வென்ற நடிகை லட்சுமி பிரியா சந்திரமெளலிக்கு ‘யாமா’ படக்குழு வாழ்த்து

தேசிய விருது வென்ற நடிகை லட்சுமி பிரியா சந்திரமெளலிக்கு ‘யாமா’ படக்குழு வாழ்த்து


நடிகை லட்சுமி பிரியா சந்திரமெளலிக்கு, சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவருக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், லட்சுமி பிரியா சந்திரமெளலி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் ‘யாமா’ திரைப்பட குழுவினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  இது குறித்து ‘யாமா’ படக்குழு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ”தனது மாறுபட்ட நடிப்பாலும், அழுத்தமான கதாப்பாத்திரங்கள் மூலமாகவும் ரசிகர்களை கவர்ந்து வரும் லட்சுமி பிரியா சந்திரமெளலிக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டதை ‘யாமா’ படக்குழு கொண்டாடி மகிழ்கிறது.  இந்த அங்கீகாரத்திற்கு மிக பொருத்தமானவரான லட்சுமி பிரியா சந்திரமெளலி, இதுபோன்ற பல உயரிய விருதுகளை வென்று சிறந்த நடிகைக்கான பல உச்சங்களை தொடுவார், என்று வாழ்த்துகிறோம்.” என்று தெரிவித்துள்ளனர்.

துபாயை சேர்ந்த மென்பொருள் நிபுணர் வெங்கடேஷ் சங்கர் முன்னணி திரைப்பட பாடகர்களுடன் இணைந்து சென்னையில் நடத்தும் புதுமையான இசை நிகழ்ச்சி RRR (ரீல் ரியல் ராகா)

*துபாயை சேர்ந்த மென்பொருள் நிபுணர் வெங்கடேஷ் சங்கர் முன்னணி திரைப்பட பாடகர்களுடன் இணைந்து சென்னையில் நடத்தும் புதுமையான இசை நிகழ...