Friday, October 7, 2022

Youthpreneur awards 2022தமிழகத்தில் இளம் தொழில்முனைவோரை அங்கீகரிக்கும் விழா, 27 அக்டோபர் 2022 அன்று மாலை 4:30 மணி முதல் நடைபெறுகிறது.

Youthpreneur awards 2022
தமிழகத்தில் இளம் தொழில்முனைவோரை அங்கீகரிக்கும் விழா, 27 அக்டோபர் 2022 அன்று மாலை 4:30 மணி முதல் நடைபெறுகிறது.

இந்த கொண்டாட்டத்தில் 25 வெவ்வேறு பிரிவுகளில் தகுதியான 25 தொழில்முனைவோருக்கு விருது வழங்கப்பட உள்ளது. 20 ஆண்கள் மற்றும் பெண்கள், கட்டாயப் பிரிவாக 3 பெண்கள், ஒரு திருநங்கை மற்றும் ஒரு உடல் ஊனமுற்றவர் 
கௌரவிக்கப்பட உள்ளனர்.

இதுதொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள MSME வளாகத்தில் நடைபெற்றது. 

இதில் Manacle குழுமத்தின் பிரதிநிதி செல்வி. அபின்யா அன்புசெல்வன், IGOT அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திருமதி. Ishaa, Contique Global இன் CEO திரு. முருகன் மற்றும் Global Services நிறுவனர் திரு. முரளிதாஸ் திரு. சுதாகர் ஆகியோர் கலந்துகொண்டு
இவ்விழாவின் நோக்கத்தை விவரித்தார்.

விழாவில் Manacle குழுமத்தின் பிரதிநிதி செல்வி. அபின்யா அன்புசெல்வன்,  பேசுகையில் ஒன்பது பொது நிறுவனங்களை கொண்ட manacle குழுமம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.  நிறுவனத்துடன் 
Contique Global , Audet Solutions மற்றும் IGOT and Thought Hugs அறக்கட்டளை இணைந்து இந்த விருதினை வழங்க உள்ளோம்.

Contique Global இன் CEO முருகன் பேசுகையில் Youthpreneur awards இளைஞர்களுக்காக இளைஞர்கள் நடத்தும் விருது வழங்கும் திருவிழா. 25 வெவ்வேறு பிரிவுகளில் தகுதியான 25 வளர்ந்து வரும் தொழில்முனைவோர்களை கௌரவிக்க உள்ளோம். இதனுடைய முக்கிய நோக்கம் எங்களுக்கு கிடைக்காத அங்கீகாரமும் ஊக்கமும் வருகின்ற தலைமுறையினருக்கு கிடைக்க வேண்டும் என்பதாகும். இவ்விருதினை தவிர ஒரு தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்க ரூபாய் 5லட்சம் வழங்க உள்ளோம். நாங்கள் என்ன தூரம் சென்றாலும் தமிழ் மொழிக்கு சிறப்பு செய்ய வேண்டும் என்ற தீராத முனைப்பு எங்களுக்கு உண்டு. அதனை வெளிப்படுத்தும் விதமாக விகர்த்தனன் விருது ஒருவருக்கு வழங்கப்பட உள்ளது.

IGOT அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திருமதி. Ishaa பேசுகையில்

வளர்ந்து வரும் தொழில்முனைவோரை ஊக்குவித்து அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் இந்த முயற்சியில் IGOT அறக்கட்டளையும் இணைந்து பணியாற்றுவதில் பெருமை கொள்கிறோம். எங்கள் தலைமையில் தொழில் தொடங்குவது இத்தனை சுலபம் அல்ல. இக்காலத்தில் உள்ள சலுகைகள், வசதிகள் போன்று எங்களுக்கு கிடைத்ததில்லை. வருடந்தோறும் நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு நம் ஆதரவு மிக அவசியம்.

சிறப்பு விருந்தினர் Global Services நிறுவனர் திரு. முரளிதாஸ் பேசுகையில்

நாங்கள் கிராமப்புறத்தில் இருந்துதான் எங்கள் தொழிலை தொடங்கினோம். எந்தவித வசதியும் சலுகையும் அவ்வளவு எளிதாக எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆயினும் விடாமுயற்சியினால் இன்று பலநூறு தொழில்முனைவோர்களை உருவாக்கி அவர்கள் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்தியிருக்கிறோம். Youthpreneur 2022 awards தொழில் முனைவோர்களுக்கு ஒரு கனவு விருதாக அமைய எங்கள் நிறுவனம் சார்பாக வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அகத்தியா பட முதல் சிங்கிள் பாடல் வெளியானது

அகத்தியா பட முதல் சிங்கிள் பாடல் வெளியானது !!  அகத்தியா படத்தின் முதல் சிங்கிள் பாடல் “காற்றின் வைரல்” வெளியிடப்பட்டது: இப்படம் ...