Wednesday, November 30, 2022
வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' வெப் சீரிஸ் சிறப்புத் திரையிடல்.. ப்ரைம் வீடியோ, வால்வாட்சர் ஃபிலிம்ஸ் ஏற்பாடு*
என் படைப்பு உலகம் முழுவதும் பயணிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி: அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள 'வதந்தி' ட்ரைலரில் பாராட்டுகளைக் குவித்த குமரன் தங்கராஜன் பெருமிதம்*
உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட சசிகுமார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
'கத்துக்குட்டி' , ‘உடன்பிறப்பே’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'நந்தன்'. இதில் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘பிக் பாஸ்’ புகழ் நடிகை சுருதி பெரியசாமி நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். ‘ஒரு கிடாயின் கருணை மனு’ புகழ் சரண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
யதார்த்தமான வாழ்வியலை மையப்படுத்தி தயாராகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டப் பகுதிகளில் நடைபெற்றது. படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதுவரை செய்திராத கெட்டப் சேஞ்சில் சசிகுமாரின் தோற்றம் ரசிகர்களை பெரிதாக கவர்ந்திருக்கிறது.
ஒரு படத்திற்கு 77 விருதுகளா? ; ‘சஷ்தி’ குறும்பட விழாவில் ஆச்சர்யப்பட்ட கே.பாக்யராஜ்*
Tuesday, November 29, 2022
விஜயானந்த் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு*
கெத்துல' சினிமா விமர்சனம்
திருநங்கைகளின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையும், திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையுமாக கமர்ஷியல் அம்சங்களோடு உருவாகியிருக்கிறது 'கெத்துல.'
கதை... அமைச்சரின் தம்பி என்ற கெத்தோடும், இளைமைத் திமிரோடும் சுற்றித்திரியும் சலீம் பாண்டாவுக்கு பெண்களைக் கடத்தி தனது 'அந்தரங்க ஆசை'க்கு பலியாக்குவது வழக்கம். அந்த வரிசையில் மதுபானக்கூடத்தில் நடனமாடும் ரீரினுவையும் அணுகுகிறார். அவரை, அந்த நேரத்தில் அங்கிருந்த ஸ்ரீஜித் காப்பாற்றுகிறார். அதனால் சலீம் பாண்டாவுக்கு ஸ்ரீஜித் மீது கொலைவெறி வருகிறது. அதே நேரம் ஆபத்தான சூழலிலிருந்து தன்னைக் காப்பாற்றிய ஸ்ரீஜித் மீது ரிரீனுவுக்கு காதல் உருவாகிறது. ஸ்ரீஜித் அந்த காதலை ஏற்க முடியாத நிலையில் இருக்கிறார்...
இப்படி பயணிக்கும் கதையில் ஸ்ரீஜித் காதலை ஏற்க மறுத்தது ஏன்? ஸ்ரீஜித்தை பழிவாங்கத் துடிக்கிற சலீம் பாண்டா என்ன மாதிரியான நடவடிக்கையில் இறங்கினார் என்பதெல்லாம் அடுத்தடுத்த காட்சிகளில் சிலபல திருப்பங்களோடு விரிகிறது. ஸ்ரீஜித் யார் என்ற முன்கதையில் அதிர்ச்சியும் விறுவிறுப்பும் இருக்கிறது.
இருவேறு தோற்றங்களில் வருகிற ஸ்ரீஜித்துக்கு உணர்வுகளை உள்ளத்திலிருந்து வெளிப்படுத்துகிற பாத்திரம். அதனை நேர்த்தியாக செய்திருப்பவர் ஆக்ஷன் காட்சிகளிலும் அதிரடி பாய்ச்சல் நிகழ்த்தியிருக்கிறார்.
ஆரம்பக் காட்சிகளில் கவர்ச்சியில் கவர்ந்தாலும் பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க முயற்சிப்பது, காதலனுக்கு நேர்ந்த பிரச்சனைகள் தெரிந்து மனம் கலங்குவது என தனது நடிப்புப் பங்களிப்பை நிறைவாகத் தந்திருக்கிறார்.
வில்லனாக வரும் சலீம் பாண்டாவின் மிரட்டலான நடிப்பு கதைக்கு பெரும் பலம். அமைச்சராக சாயாஜி ஷிண்டே, போலீஸ் கமிஷனராக ரவிகாலே என மற்ற கதாபாத்திரங்களில் வருகிறவர்களின் நடிப்பும் கவனிக்க வைக்கிறது!
திருநங்கைகளாக நடித்திருப்பவர்களின் பங்களிப்பை குறிப்பிட்டுப் பாராட்டலாம்.
பரபரப்பான கதையைத் தேர்ந்தெடுத்த இயக்குநர் வி.ஆர்.ஆர். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு கூட்டியிருக்கலாம்.
பாடல்களை ரசிக்கும்படி தந்திருக்கும் ஷீவா வர்ஷினி பின்னணி இசையிலும் பங்களிப்பை நிறைவாக செய்திருக்கிறார். கே.ஷஷிதர் ஒளிப்பதிவு கச்சிதம்!
Paulsons Beauty and Fashion Private Limited inaugurates the 112th outlet of Toni&Guy Hairdressing by Ms. Rajeshwari, IPS, Dr. Sam Paul at Kolathur
Monday, November 28, 2022
SHOCKING! South Distributors reportedly offer astronomical prices for Avatar 2!
SHOCKING! South Distributors reportedly offer astronomical prices for Avatar 2!
The South States have always supported big-ticket entertainers and more if its once in a lifetime VFX-driven films. The visuals of James Cameron's Avatar: The Way Of Water have created a considerable stir in the market. With new advanced technology multiplexes opening across South India, distributors and exhibitors are eyeing the massive box office collection of the film!
Advance bookings opened 5 days ago and there has been a phenomenal response from the audiences down South. Many of the top distributors of Tamil and Telugu industries have come forward and quoted around 100-150 crores to release Avatar 2 in their states. While the details are still under wraps but the fan frenzy over the movie has made them take this decision.
Telugu Distributors are blocking their own theatres ahead of the release of the film on December 16. We are getting to know that some Tamil and Malayalam distributors are also in a rush to quote a price and get the movie.
Avatar 2 is indeed the biggest blockbuster and it is touted to beat many of the highest-grossing films from India.
சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட் (Chup: Revenge of the Artist) திரைப்படம் 24 மணி நேரத்தில் ZEE5 இல் 30 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளது
சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட் (Chup: Revenge of the Artist) திரைப்படம் 24 மணி நேரத்தில் ZEE5 இல் 30 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளது!.
~டாக்டர் ஜெயந்திலால் கடா (PEN Studios) தயாரிப்பில், R. பால்கி எழுதி இயக்கிய, இந்த உளவியல் த்ரில்லர் தற்போது ஜீ5-ல் கிடைக்கிறது.
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5, 'சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட்' (Chup: Revenge of The Artist) இன் உலக டிஜிட்டல் பிரீமியர் நவம்பர் 25, 2022 அன்று நடைபெற்றது. டாக்டர் ஜெயந்திலால் கடாவின் பென் ஸ்டுடியோ, கௌரி ஷிண்டே, ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மற்றும் அனில் நாயுடுவின் Hope production தயாரிப்பில், R.பால்கி இயக்கத்தில், சன்னி தியோல், துல்கர் சல்மான், ஸ்ரேயா தன்வந்தரி, பூஜா பட், சரண்யா பொன்வண்ணன் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஜீ-5-ல் இந்த படம் கிடைக்கிறது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய பிறகு, ZEE5 இல் திரையிடப்பட்ட 24 மணி நேரத்திற்குள் இந்த திரைப்படம் 30 மில்லியன் பார்வையாளர்களை எட்டியது.
குரு தத்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கும், சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட் திரைப்படம் திரைப்பட விமர்சகர்களைக் குறிவைத்து இயங்கும் ஒரு மனநோயுடைய கொலையாளியின் கதையை விவரிக்கிறது. திரைப்பட விமர்சனத்தின் நெறிமுறைகள் குறித்து பல கேள்விகளை எழுப்பும் பரபர த்ரில்லர் படம் இது. ஒரு சிலரின் கருத்துக்கள் ஒரு கலைஞனின் தலைவிதியை தீர்மானிப்பதா? மறுபுறம், கலை விமர்சிக்கப்படாமல் இருக்க முடியுமா? இதை அலசுவதே சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட். தனித்துவமான கதை, திறமைமிகு நடிகர்களின் நடிப்பு மற்றும் அசத்தலான ஒளிப்பதிவு என இப்படம் உங்களை இருக்கையின் நுனிக்குக் கூட்டி செல்லும்.
அமித் திரிவேதி மற்றும் சினேகா கான்வால்கரின் மெல்லிசை ட்யூன்கள் மற்றும் பின்னணியில் ஒலிக்கும் எஸ் டி பர்மனின் பாடல்களுடன், சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட் திரைப்படம் ஊடகங்களின் உலகத்தை அழகாகச் சித்தரிக்கிறது. இப்போது, ZEE5 இல் அதன் உலக டிஜிட்டல் பிரீமியர் மூலம், இப்படம் 190+ நாடுகளில் உள்ள பார்வையாளர்களுக்கு இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் என 5 மொழிகளில் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், பார்வையாளர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியில் சப்டைட்டில் உடன் அசல் மொழியிலும் இந்த திரைப்படத்தைப் பார்க்கலாம். .
ஜீ5 இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா கூறுகையில்.., "ஜீ5 தளத்தில், பார்வையாளர்களை புதிய கதைகள் மூலம் மகிழ்விப்பதே எங்கள் நோக்கம. ‘சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட்’ திரைப்படம் நட்சத்திர நடிகர்களுடன் உருவான தனித்துவமான ஒரு பொழுதுபோக்கு திரைப்படமாகும். இந்த படத்தை நாங்கள் ஜீ5-ல் வழங்குவதில் பெருமை கொள்கிறோம். இதன் மூலம் ‘சுப் ‘ திரைப்படம் பெரும்பான்மையான பார்வையாளர்களைச் சென்றடையும் மற்றும் இந்த திரைப்படத்தினை திரையரங்குகளில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்காத திரைப்பட ஆர்வலர்கள் இப்போது ஜீ5 இல் பார்த்து ரசிக்கலாம். ஆக்ஷன் த்ரில்லர்கள் இப்போது சிறப்பாக வரவேற்பை பெற்று வருகிறது, அந்த வகையில் ‘சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட்’ திரைப்படம் அதில் ஒன்றாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் சந்தாதாரர்கள் விரும்பும் திரைப்படமாக இது இருக்கும். இந்த சைக்கலாஜிக்கல் த்ரில்லரை வெளியிடுவதில் இந்த படக்குழுவுடன் இணைந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
MD of Pen Studios தலைவர் & MD டாக்டர் ஜெயந்திலால் கடாவ் கூறுகையில்,
"R. பால்கி கதை சொல்வதில் தனித்துவமானவர். மேலும் திறமையான படைப்பாளிகளுடன் இணைந்து பணியாற்றுவதில் PEN Studios பெருமிதம் கொள்கிறோம். ‘சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட்’ மிகவும் அர்ப்பணிப்புடன் உருவான கதையாகும், இது பார்வையாளர்களைப் பெரிதும் கவரும். ஜீ5 உடன் இணைந்து பயணிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். ஏனெனில் இது திரைப்படம் உலகளவில் சென்றடையும் வாய்ப்பை எங்களுக்கு வழங்குகிறது. மேலும் இது பார்வையாளர்களை அவர்கள் விரும்பும் மொழியில் பார்க்கும் வாய்ப்பை கொடுக்கும். தற்போது ஜீ5ல் இப்படத்தைக் கண்டுகளிக்கலாம்.
நடிகர் சன்னி தியோல் கூறுகையில்,
"இப்படத்தில் IG அரவிந்த் மாத்தூரின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. ஒரு புதிரைத் கண்டுபிடிக்கும் அனுபவமாக இருந்தது. இப்படம் தற்போது ஜீ5 இல் 5 வெவ்வேறு மொழிகளில் கிடைக்கிறது, அதிக ஸ்பாய்லர்களை வெளிப்படுத்தாமல் பார்வையாளர்கள் படத்தைப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இப்படம் உங்களை பலவிதமான சஸ்பென்ஸுடன் ஆச்சர்யப்படுத்தும். ”
நடிகர் துல்கர் சல்மான் கூறுகையில்.,
“இப்படத்தில் தொடர் கொலையாளியான டேனியின் பாத்திரத்தை ஏற்று நடித்தது என் திரை வாழ்வில் இன்றுவரை மிகவும் கடினமானப் பாத்திரமாக இருந்து வருகிறது. விமர்சகர்களைக் கொலை செய்து, நகரம் முழுவதும் அழிவை ஏற்படுத்தும் ஒரு கதாபாத்திரத்தை பற்றி நினைக்கையில் பயமாக தான் இருந்தது. இந்த திரைப்படம் ஒரு குற்றவாளியின் மனதின் ஒவ்வொரு அடுக்கையும் அலசி ஆராய்கிறது, இப்படம் பார்வையாளர்களின் மனதிற்குள் அழுத்தமான பாதிப்பை ஏற்படுத்தும். ‘சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட்’ ஒரு வழக்கமான துப்பறியும் படம் அல்ல. மிரளவைக்கும் ஒரு த்ரில்லர் அனுபவமாக உங்கள் எதிர்பார்ப்புகளை மீறி ஆச்சர்யப்படுத்தும்”
ஸ்ரேயா தன்வந்தரி கூறியதாவது..,
‘சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட்’ ஒரு காதல் கதை. சினிமாவின் காதல் கதை. ரத்தமும் சதையும் கலந்த உலகில் ஒருவரையொருவர் கண்டுபிடிக்கும் இருவரின் காதல் கதை. குரு தத்துடன் ஒரு காதல் கதை. கொலையில் கலை தேடும் காதல் கதை. இப்படத்தின் திருப்பங்கள் உங்களை க்ளைமாக்ஸில் ஆச்சர்யபட வைக்கும். ஒரு ஆர்வமுள்ள திரைப்பட விமர்சகராக நடிக்கும் நிலா கதாபாத்திரத்தில் நடித்தது மகிழ்ச்சியை அளித்தது. நிஜ வாழ்க்கையில் என்னைப் போலவே அவளுக்கும் சினிமா பிடிக்கும். நடிகர்களாகிய நாம் திரைப்பட விமர்சகர்களின் உடைய வேலையின் கடைசிக் கட்டத்தை மட்டுமே பார்க்கிறோம், ஆனால் மறுபக்கத்தைப் பார்க்கும் வாய்ப்பு அரிதாகவே கிடைக்கிறது. திரையில் நிலாவாக நடித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
இயக்குநர் R.பால்கி கூறியதாவது.,
“சுப் திரைப்படம் உணர்ச்சிமிக்க கலைஞர்களுக்கு நாங்கள் கொடுக்கும் ஒரு அஞ்சலியை போல, முக்கியமாக குரு தத் அந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். நீண்ட நாட்களாக என்னிடம் இந்த கதை இருந்தது, இறுதியாக இதை முழுமையாக எழுதியதில் மகிழ்ச்சி. குரு தத்தின் மிகச்சிறந்த படைப்பான Kaagaz Ke Phool கடுமையாக விமர்சிக்கப்பட்டது, படம் தோல்வியடைந்தது, அதன் பிறகு அவர் படம் எடுக்கவில்லை. கலையை விமர்சித்து கிழித்தெறியும்போது, கலைஞரின் உணர்வினை பற்றி சிலர் மட்டுமே சிந்திக்கிறார்கள். சுப் என்பது ஒரு கலைஞனின் படைப்பின் மீதான தாக்குதல் மற்றும் அத்தகைய விமர்சனத்திற்குக் கலைஞனின் எதிர்வினையை ஆராயும் கதை. அதிகாரத்திற்கான பொறுப்பைத் தவறாகப் புரிந்துகொள்வதால் ஏற்படும் அபாயகரமான விளைவுகளைப் பற்றிய படம் இது.”
இந்த மர்மம் நிறைந்த படத்தை நீங்கள் இன்னும் பார்க்கவில்லை என்றால்... இப்போதே பாருங்கள்!, ZEE5 இல் மட்டுமே ‘சுப்: ரிவஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட்’-படத்தை உங்களால் காண முடியும்
ஜீ5 பற்றி:
ஜீ5 என்பது இந்தியாவின் முன்னணி ஓடிடி தளம் மற்றும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்கு பன்மொழியில் கதைசொல்லும் ஒரு தளமாகும். ஜீ5 ஆனது Global Content Powerhouse, ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தில் இருந்து உருவானது. அனைவருக்கும் பிடித்தமான ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக நுகர்வோருக்கு இந்த தளம் இருந்து வருகிறது; இது 3,500 படங்களுக்கு மேல் உள்ளடக்கிய ஒரு விரிவான தளம் மற்றும் பலவிதமான கதைகள் கொண்ட ஒரு பெரும் திரை நூலகத்தை இது பார்வையாளர்களுக்கு வழங்குகிறது; 1,750 டிவி நிகழ்ச்சிகள், 700 ஒரிஜினல் மற்றும் 5 லட்சம் மணிநேர உள்ளடக்கங்கள். 12 மொழிகளில் (ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி) சிறந்த ஒரிஜினல் படங்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சிகள், Edtech, Cineplays, செய்திகள், Live TV, மற்றும் ஆரோக்கியம், வாழ்கை முறை சார்ந்த உள்ளடக்கங்கள் இதில் உள்ளன. உலகளாவிய தொழில்நுட்ப அமைப்பாளர்களின் கூட்டாண்மையிலிருந்து உருவான ஒரு வலுவான மற்றும் ஆழமான தொழில்நுட்ப அடுக்கு இது. பல சாதனங்கள் மற்றும் பல சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்றவாறு 12 மொழிகளில் தடையற்ற மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தை ஜீ5 வழங்குகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள பாபா படம் மீண்டும் வெளியாகும் என்ற செய்தி இணையத்தில் பரவியுள்ளது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள பாபா படம் மீண்டும் வெளியாகும் என்ற செய்தி இணையத்தில் பரவியதில் இருந்து கடந்த ஒரு வாரமாக ரசிகர்கள், ஊடகங்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் வரலாறு காணாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக, சமூக ஊடகங்களில் உருவாகியுள்ள எதிர்பார்ப்பு மற்றும் வரவேற்பு மிகவும் ஆச்சரியம் ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளன்று ஒரே ஒரு காட்சியாக திரையிட திட்டமிட்ட குழுவினர் , படத்திற்கு ஏற்பட்டிருக்கும் பெரும் எதிர்பார்ப்பினை கண்டு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் பல திரையரங்குகளில் வெளியிட தீவிரமாக யோசித்து வருகின்றனர்.
DI, மிக்ஸிங் போன்ற தொழில்நுட்ப மாற்றங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதுதவிர, படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், படத்தின் முன்னோட்டத்தை தான் முதலில் பார்வையிடுவதற்கு கோரிக்கை வைத்துள்ளார். இதன் மூலம், தன்னால் படத்தின் இசையினை மேலும் மேம்படுத்த இயலுமா? என்பதனை அவர் பார்வையிட உள்ளார்.
சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புதிய காட்சிகளுக்கு டப்பிங் பேசியிருந்தார். சூப்பர் ஸ்டார் மற்றும் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ஆகிய இருவரும் பாபாவின் மறுவெளியீட்டுக்கான ஹைப் மற்றும் 'அற்புதமான வரவேற்பினை கண்டு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தினர்.
Sunday, November 27, 2022
ஹாலிவுட் தரத்தில் மிரட்டும் ‘பாம்பாட்டம்’ 120 அடி நீள ராட்சத பாம்பு செய்யும் அட்டகாசம் இந்திய சினிமாவில் பார்க்காத ஆச்சரியம்
Saturday, November 26, 2022
Eco Friendly Electric Scooters launched to Avoid environmental pollution by BGauss Hemant Kabra, Go Zap Muthuraman & Vinodh Raj donated 50 vehicles to Food Delivery Companies.
உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்குதயாரிப்பாளர் சங்க தலைவர் என்.இராமசாமி பிறந்தநாள் வாழ்த்துதெரிவித்தார்.
"பட்டத்து அரசன்" - திரைவிமர்சனம்
ராஜ்கிரண் ஒரு மூத்த கபடி வீரர் மற்றும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாட்டில் விளையாடி வருகிறார். அவரது ஊர் மக்கள் ராஜ்கிரணையும் அவரது குலத்தையும் மதிக்கிறார்கள்.
ஆனால், ராஜ்கிரணின் மகன் ஆர்.கே.சுரேஷ் மரணம் அடைந்ததும் விஷயங்கள் மாறுகின்றன. இதனால் குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டு ஆர் கே சுரேஷின் மனைவி ராதிகா தனது மகன் அதர்வாவுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.
இருப்பினும், அதரவா தனது குடும்பத்துடன் மீண்டும் இணைவதற்கு ஏங்குகிறார். அவரால் அதைச் செய்ய முடிந்ததா, அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதையின் மையக்கருவாக அமைகிறது.
அதர்வாவும், ராஜ்கிரணும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அதர்வா அந்தக் கதாப்பாத்திரத்தை ஏற்று நடத்த தன்னால் இயன்றவரை முயற்சி செய்திருக்கிறார், அவருடைய முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை.
ராஜ்கிரண் வழக்கம் போல் அருமை. இரண்டாவது பாதியில் அவரது ஆட்டம் அபாரம். ஆஷிகாவுக்கு நல்ல ஸ்கோப் கிடைத்து அதை நன்றாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
மற்ற நடிகர்களும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். இயக்குனர் சற்குணம் விளையாட்டை மையமாக வைத்து திரைப்படம் மற்றும் குடும்ப நாடகம் மற்றும் உணர்ச்சிகளை திரைக்கதையில் புகுத்தியுள்ளார்.
இது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு வேலை செய்துள்ளது. இது படத்தின் பலம் என்றாலும், பலவீனமும் கூட.
காட்சியை உயர்த்தும் சில தருணங்கள் உள்ளன. ஒருசில காட்சிகள் எழுத்தின் மூலம் இறக்கிவிடப்படுகின்றன. ஜிப்ரானின் இசை ரசனைக்குரியது. மீதமுள்ள தொழில்நுட்ப அம்சங்கள் சரியாக உள்ளன.
Friday, November 25, 2022
புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸுக்கு தயாராகும் பாபா
மறு படத்தொகுப்புடன் டிஜிட்டலில் மெருகேற்றப்பட்ட பாபா ; விரைவில் வெளியீடு
2002ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் பாபா. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார்.
அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக இந்த பாபா படத்தை இயக்கினார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.
கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ரியாஸ் கான் நடித்திருந்தார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பிருந்தா, பிரபுதேவா மற்றும் லாரன்ஸ் ஆகியோர் நடன இயக்குனர்களாக பணிபுரிந்தனர்.
மகா அவதார் பாபாஜியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம், வெளியான சமயத்தில், பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்தப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி அடிக்கடி காட்டும் அந்த பாபா முத்திரை, படம் வெளியான சமயத்தில் குழந்தைகளையும் வசீகரித்து, இப்போதுவரை அவருக்கான ஒரு தனி அடையாளமாகவே கருதப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இந்தப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய திரையிடலுக்கு தயாராகி உள்ளது. இதற்காக முற்றிலும் புதிய கோணத்தில் இந்தப்படம் புதிதாக மறு படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, இந்த நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு டிஜிட்டலில் ஒவ்வொரு பிரேமும் இன்னும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் 'மாயா மாயா ', 'சக்தி கொடு', 'கிச்சு கிச்சு' என ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ரசிகர்களின் மனதில் நீங்காமல் நிறைந்துள்ள இந்தப்படத்தின் பாடல்கள் அனைத்தும் புதிதாகவே ரீமிக்ஸ் செய்யப்பட்டு டால்பி மிக்ஸ் ஒலி அமைப்புக்கு மாற்றப்பட்டு உள்ளதால் மீண்டும் ஒரு புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு தரும் என்பதில் சந்தேகமே இல்லை. படத்திற்கான சிறப்பு சப்தங்களும் கூட இன்னும் விறுவிறுப்பு கூட்டப்பட்டுள்ளன.
விரைவில் இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.
தொழில்நுட்பக் குழு
ஒளிப்பதிவாளர் : சோட்டா K நாயுடு
தொகுப்பாளர்: VT விஜயன்
கலை இயக்குனர்: GK
சண்டை பயிற்சி: FEFSI விஜயன்
வரிகள்: கவிஞர் வாலி, கவிப்பேரரசு வைரமுத்து
ரங்கோலி” படத்தின் செகண்ட் லுக் வெளியீடு
ஃபர்ஸ்ட் லுக்கில் ரசிகர்களிடம் பேரெதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய ரங்கோலி படத்தின் செக்ண்ட் லுக் எம் ஜி ஆர் கல்லூரி கல்ச்சுரல் விழாவில் 2000 கல்லூரி மாணர்வகள் மத்தியில், கோலாகலமாக வெளியிடப்பட்டது.
Gopuram Studios சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரிப்பில் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் தற்போதைய காலகட்ட பள்ளி வாழ்க்கையை சொல்லும் திரைப்படமாக உருவாகியுள்ள படம் “ரங்கோலி”. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இப்படத்தின் இரண்டாவது லுக் நேற்று எம் ஜி ஆர் யுனிவர்சிடி & ரிசர்ச் கல்லூரி கல்ச்சுரல் விழாவில் 2000 கல்லூரி மாணவர்கள் மத்தியில் கல்லூரி பிரசிடண்ட் MR. ACS அருண்குமார் அவர்களால் கோலாகலமாக வெளியிடப்பட்டது.
குடும்பத்தினரின் வற்புறுத்தலால் ஒரு பள்ளியில் இருந்து வேறொரு உயர்தர பள்ளிக்கு மாற்றலாகும் மாணவனின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களே இப்படத்தின் கதை.
பள்ளி மாணவர்கள் குதூகலமான கொண்டாட்டத்துடன் அமர்ந்திருக்கும் இந்த செகண்ட் லுக் நம் பள்ளிக்காலத்தின் அழகான நினைவுகளை கிளறுகிறது. படத்தின் போஸ்டர்கள் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்து வருகிறது.
மாநகரம், தெய்வத்திருமகள் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹமரேஷ், இப்படத்தில் நாயகனாக அறிமுகாமகிறார். பிரார்த்தனா, சாய் ஶ்ரீ, அக்ஷயா ஆகியோர் இப்படத்தில் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆடுகளம் முருகதாஸ் முக்கிய பாத்திரமொன்றில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கடப்பா ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது.
Gopuram Studios சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரிக்கும் இப்படத்தினை அறிமுக இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ளார். சுந்தரமூர்த்தி KS இசையமைத்துள்ளார். I.மருதநாயகம் ஒளிப்பதிவு செய்துள்ளார். R.சத்யநாராயணன் எடிட்டிங் செய்துள்ளார். ஆனந்த் மணி கலை இயக்கம் செய்துள்ளார். மேலும் இப்படத்தில் பாடல்கள் கார்த்திக் நேத்தா, வேல்முருகன் மற்றும் இளன் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு விரைவில் வெளியாகவுள்ளது.
Agent கண்ணாயிரம் - திரைவிமர்சனம்
சந்தானம் ஒரு சிறிய துப்பறியும் நபர், பெரிய குற்றங்களைத் தீர்ப்பதன் மூலம் அதை பெரிதாக்குவதை நோக்கமாகக் கொண்டவர்.
திருமணத்திற்கு புறம்பாக பிறந்து குழந்தையாக இருந்தபோது அவமானப்படுத்தப்பட்டதால் தாயை விட்டு பிரிந்து வாழ்கிறார்.
விரைவில் அவரது தாயார் இறந்துவிடுகிறார், சந்தானம் தனது சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டும். ஆனால், அவன் கிராமத்தை அடைவதற்கு முன்பே அவளுடைய இறுதிச் சடங்குகள் செய்யப்படுகின்றன.
இதனால் மனமுடைந்து போன சந்தானம் இன்னும் சில நாட்கள் கிராமத்திலேயே தங்கிவிடுகிறார்.
இந்த காலக்கட்டத்தில் கிராமத்தில் மர்ம மரணங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த மர்மத்தை தீர்க்க சந்தானம் முடிவு செய்கிறார்.
அவர் அதை எப்படி செய்கிறார், அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதையின் மீதியை உருவாக்குகிறது. சந்தானம் ஏஜெண்ட் கண்ணாயிரம் கேரக்டருக்குப் பொருத்தமானவர் மற்றும் படம் முழுவதையும் தாங்கி நிற்கிறார்.
அவரது நகைச்சுவையான ஒன் லைனர்களுக்கு பாத்திரம் பொருந்துகிறது மற்றும் அவரது இயல்பான உடல் மொழி பாத்திரத்திற்கு அதிக நம்பகத்தன்மையை வழங்குகிறது.
ரியா தனது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார் மற்றும் அவர் தோன்றும் காட்சிகளில் ஸ்கோர் செய்துள்ளார்.
முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, ராமதாஸ் உட்பட மற்ற நடிகர்கள் அனைவரும் அந்தந்த பாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.
இயக்குனர் மனோஜ் பீதா அசல் படமான ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’வின் அதே டெம்போவை பராமரிக்க முயன்றார்.
கதையும், திரைக்கதையும் சரியாக இருந்தாலும், காட்சிகள் பொருத்தமற்றவை. இதனால் படத்தின் ஓட்டம் பாதிக்கப்படுகிறது.
தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. யுவன் ஷங்கரின் பிஜிஎம் படத்தின் மனநிலைக்கு ஏற்றது.
"காரி" - திரை விமர்சனம்
சசிகுமார் ஒரு ஜோக்கி, அவர் தனது தந்தை ஆடுகளம் நரேனுடன் சென்னையில் வசித்து வருகிறார். தொடர்ச்சியான நிகழ்வுகளில், நரேனின் செல்லக் குதிரை அவன் கண் முன்னே சுட்டுக் கொல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
தந்தை சசிகுமார் இறந்ததையடுத்து ராமநாதபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு புறப்பட்டு சென்றார். அதிகாரத்திற்காக கிராமத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இருப்பினும் சசிகுமார் இதில் ஈடுபடுகிறார், அவரது தந்தையின் மரணத்தின் உண்மையான காரணம் என்ன என்பது கதையின் மீதியை உருவாக்குகிறது.
இயக்குனர் ஹேமந்த் வழக்கமான காளையை அடக்கும் கதையை திறம்பட இயக்கியுள்ளார்.
சில காட்சிகள் நன்றாக எழுதப்பட்டிருக்கும் அதே வேளையில் ஒருசில காட்சிகள் நன்றாக எழுதப்பட்டுள்ளன. கிளைமாக்ஸ் காட்சிகள் மற்றும் ஜல்லிக்கட்டு காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது.
சசிகுமார் காளையை அடக்கும் ஜாக்கி வேடத்தில் நன்றாக பொருந்துகிறார். அவர் தனது கதாபாத்திரத்திற்கு முழு நியாயம் செய்து, ஈர்க்கிறார்.
பார்வதி அருண் தனது கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
நரேன், பாலாஜி சக்திவேல், சம்யுக்தா, அம்மு அபிராமி உட்பட மற்ற நடிகர்கள் அனைவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். இமானின் இசை படத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் ரவி கிஷோரின் முதல் தமிழ் திரைப்படமான “கிடா” , கோவா இந்தியன் பனோரமா திரையடலில் அரிதான அங்கீகாரத்தை பெற்றுள்ளது !!
தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் ரவி கிஷோரின் முதல் தமிழ் திரைப்படமான “கிடா” , கோவா இந்தியன் பனோரமா திரையடலில் அரிதான அங்கீகாரத்தை பெற்றுள்ளது !!
ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில், உருவாகியுள்ள கிடா திரைப்படம், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது. இத்திரையிடலின் போது அரிய நிகழவாக மொத்த பார்வையாளர்களும் எழுந்து நின்று கைதட்டி படத்தினை பாராட்டினார்கள்.
கிடா திரைப்படத்தில் பூ ராமு, காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப்பிணைப்பை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இன்னும் திரைக்கு வராத நிலையில் திரைப்பட விழாவில் படத்திற்கு உட்சபட்ச பாரட்டுக்கள் கிடைத்து வருவதில் படக்குழு பெரும் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளது.
இது குறித்து தயாரிப்பாளர் ரவி கிஷோர் கூறியதாவது..
“முதன்முதலில் கிடா கதையை சென்னையில் இருந்தபோது ஒரு நண்பர் சொன்னார். பின் இயக்குநர் வாய்ஸ் நோட் மூலம் அளித்த குறிப்பை கேட்டேன். அந்தக் கதை என் மனதினை உலுக்கியது. உடனடியாக இயக்குனரை ஒப்பந்தம் செய்து படத்தை துவக்கிவிட்டேன். அவருக்கான முழு சுதந்திரம் கொடுத்து அவருடைய கதைக்கு உயிர் கொடுத்தேன். இப்படியாகத்தான் இந்தப் படம் நடந்து, இன்று பல திரைவிழாக்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இது எங்கள் பேனரில் வரும் முதல் தமிழ் படம். சினிமாவுக்கு மொழி பேதம் இல்லை. அதனால்தான் தமிழில் இப்படத்தை செய்தேன். விரைவில் படத்தை அனைத்து ரசிகர்களும் ரசிக்கும்படி திரையரங்குகளில் வெளியிடுவோம்”
இயக்குனர் ரா.வெங்கட் கூறுகையில், “எங்கள் படத்துக்கு இவ்வளவு அரிய அங்கீகாரம் கிடைத்ததை பெருமையாக உணர்கிறேன். மதுரைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் எளிமையான கதை. ஒரு தாத்தா, அவரது பேரன் மற்றும் ஒரு ஆடு ஆகிய மூன்று முக்கிய கதாபாத்திரங்கள். மூவரின் உணர்ச்சிகளே இந்தக்கதையின் உந்து சக்தி. இப்படம் இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்டபோது, இளைஞர்கள் இக்கதையுடன் ஒன்றமாட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள்தான் படத்தை அதிகமாக கொண்டாடினார்கள். பெரும் மகிழ்ச்சி. நான் என் தாத்தா பாட்டியுடன் வளர்ந்தேன், திரைப்படத்தை உருவாக்கும் போது எனது குழந்தை பருவ நினைவுகளிலிருந்து படத்திற்கான உத்வேகம் பெற்றேன். எனது தயாரிப்பாளர் ரவிகிஷோர் அவர்களுக்கு நன்றி. எனது சினிமா பயணத்தின் துவக்கத்தில் அவரைப் போன்ற ஒரு சிறந்த மனிதருடன் பணிபுரிந்ததை நான் பெருமையாக உணர்கிறேன். அவர் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். அவருக்கு என் இதயப்பூர்வமான நன்றி.
பூ ராமு, காளிவெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப குழு விபரம்
ஆடியோகிராஃபி - தபஸ் நாயக்
கலை இயக்கம் : K.B.நந்து
பாடல்கள் : ஏகாதசி
எடிட்டர் : ஆனந்த் ஜெரால்டின்
இசை : தீசன்
ஒளிப்பதிவு : M.ஜெயப்பிரகாஷ்
தயாரிப்பு : ஸ்ரவந்தி ரவி கிஷோர்
இயக்கம் : ரா. வெங்கட்
Thursday, November 24, 2022
Gold Winners' "Little Miss & Master Chef" Comes to a Grand Closure in The City
Gold Winners' "Little Miss & Master Chef" Comes to a Grand Closure in The City
- Six kids of ages 7 to 12 from the city won the coveted title of Young Chef along with exciting prizes
- The event also showcased an exclusive fashion and talent show for kids - Little Prince and Princess on the sidelines
Chennai, 22 November, 2022: The maiden edition of Gold Winners’ Little Miss and Master Chef co-powered by Freshey’s came to a grand closure today in the city. The finale witnessed kids contesting for the coveted title ‘Young Chef’ at Palladium Mall, Phoenix Marketcity, Velachery. Among the 500 contestants participating across two levels of competition. The contest was judged by an exemplary panel of judges comprising Mad Chef Koushik, and Chef Yashwanth. The winners were handed over prizes in the presence of the judges and Chief Guest.
Winners of Little Miss and Master Chef were announced in the following categories
Super Chef - Nikita & HAYAN
Little Miss Chef – Karishma, Disha, Deepti & Ananya
Little Master Chef – Keshav & Rupak
Commenting on the occasion, Mr. Dilip Kumar Krishna -AGM. Marketing, Gold Winner “The finale round witnessed contestants showcasing their culinary talent and creativity live to judges. An array of mouthwatering dishes from across global cuisines were prepared by the kids. From scrumptious appetizers to decadent desserts, the kids put forth their cooking prowess with a tinge of innovation”.
Adding to this, Mr. B P Ravindran, Chief Business Officer - WayCool Foods said “It is a delight to witness young culinary talents come under one roof and showcase their skills. Cooking in kitchens especially for children has elevated to a whole new dimension altogether with Little Miss and MasterChef. With children partaking in the entire process of cooking, they are now aware of the nutritional benefits of the ingredients, and we at Freshey's are glad to be a part of this journey. The event is a platform for us to celebrate the curiosity and creativity in each child and welcome their innovative dishes. It was indeed an inspiring experience to behold these little chefs use our Freshey's products and bring to the table their unique recipes.”
In addition to the Little Miss and MasterChef finale, an exclusive fashion and talent show for children was also conducted on the sidelines. Titled as Little Prince & Princess, the contest witnessed 26 kids of age 5 to 12 walking the ramp and put their best foot forward. The Jury for the fashion show were Mr. Vishwanath, model and Mr. India runner-up, Actor/Model Ms. Manasa and Model Ms. Pooja Sethia. The event was choreographed by Ramees Meeran, the winner of the Chennai 2022 beauty pageant. Winners of Little Princess & Little Prince in the junior categories are Ms. Shaashini & Mr.Krishanth and in the senior categories are Ms Vamshika & Mr. Somanth
Thanks
வி. ஆர்.கம்பைன்ஸ் சார்பில் விமலா ராஜநாயகம் தயாரிக்கும் " மஞ்சக்குருவி"
ரவுடியின் தங்கை காதலுக்கு எதிர்ப்பு?
குணா. இந்த பெயருக்கு ஏற்றவன் இவன் இல்லை. ஊரே இவனை பார்த்து மிரளும். இவன் பார்வை பட்டாலே பார்ப்பவர் குலைநடுங்கும். ரவுடியிசத்தில் உச்சத்தில் திரியும் இவனுக்கு ஒரு அழகான அழகு மங்கை தங்கையாக ஊரில் பவனி வந்தாள்.அண்ணன் செய்யும் அட்டகாசத்தால் மக்கள் அனைவரும் நடுக்கத்துடனே வாழ்ந்துவந்தனர். அண்ணனின் ரவுடித்தனம் தங்கைக்கு அறவே பிடிக்கவில்லை. ஆனால் அண்ணனோ தங்கை மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தான். தங்கைக்கு அண்ணனின் பாசமோ, அவனின் கனிவான கவனிப்போ அவள் மனதை மாற்றவில்லை. ஒவ்வொரு நாளும் கனத்த இதயத்துடன் நாட்களை நகர்த்தி வந்த தங்கை பதினெட்டு வயதை கடந்தாள். இந்த நாளுக்காக காத்திருந்த தங்கை அண்ணனையும், வீட்டையும் விட்டுவிட்டு வெளியேறுகிறாள். அண்ணன் எவ்வளவோ தடுத்தும் முடியவில்லை.
தனியே வசித்து வந்த அவளை கதிர் காதலிக்க தொடங்கினான். அவன் காதலை அவள் ஏற்காமல் புறக்கணித்து வந்தாள். தனது அண்ணன் ரவுடியாக இருப்பதால் தனக்கு வாழப் பிடிக்கவில்லை என கதிரிடம் கூறுகிறாள்.
தங்கையை அண்ணனிடம் பேச வைத்து இருவரின் மனதில் உள்ள கசப்பான எண்ணத்தை வேரோடு பிடுங்கி எறிய நினைத்த கதிர் அவளின் அண்ணனிடம் சென்று சேருகிறான்.அண்ணன் குணாவிற்கு வாழ்வியலை உணர்த்தி, பாசத்தை புரியவைக்கிறான். அண்ணனும் திருந்தி தங்கையை பார்க்க வருகிறான்.அப்பொழுது யாரும் எதிர்பாரா வண்ணம் அந்த திடுக்கிடும் சம்பவம் நிகழ்கிறது. அதன்பிறகு நடைபெறும் சம்பவத்தை விறுவிறுப்பான திரைக்கதையிலும் "நறுக்" என்ற வசனத்திலும் சொல்லி இருக்கிறேன்" என்று இடைவிடாமல் சொல்லி முடித்தார் இயக்குனர் அரங்கன் சின்னத்தம்பி.
வி. ஆர்.கம்பைன்ஸ் சார்பில் விமலா ராஜநாயகம் தயாரிக்கும் " மஞ்சக்குருவி" படத்தின் கதைச்சுருக்கம்தான் இது.
தேசிய விருது பெற்ற ராஜா முகமது படத்தொகுப்பையும், மிரட்டல் செல்வா சண்டை பயிற்சியையும், சௌந்தர்யன் இசையையும், கபிலன் மற்றும் டாக்டர் கிருதியா இருவரும் பாடல்களையும், ஸ்ரீதர் தயாரிப்பு நிர்வாகத்தையும்
கதை, திரைக்கதை, வசனம், டைரக்சனை அரங்கன்சின்னத்தம்பியும் கவனித்துள்ளனர்.
டிசம்பர் இரண்டு முதல் உலகமெங்கும் திரைக்கு வரும் " மஞ்சக்குருவி"யில் ரவுடி குணாவாக கிஷோர், கதிராக விஷ்வா, கிஷோர் தங்கையாக நீரஜா மற்றும் கஞ்சா கருப்பு, கோலிசோடா பாண்டி, சுஜாதா சிவகுமார், சுப்புராஜ் இவர்களுடன் கதையின் முக்கிய பாத்திரத்தில் மாஸ்டர் ராஜநாயகம் நடித்துள்ளார்.
Wednesday, November 23, 2022
கமலஹாசனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய S.K.செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள குறும்படம் " தனித்திரு "
குதிரைப்பந்தயத்திற்கு மட்டும் ஏன் தடை இல்லை ; காரி பட தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் அதிரடி பதில்*
The Pre-wedding Meet of Actor Gautham Karthik & Actress Manjima Mohan
Tamil actors Manjima Mohan and Gautham Karthik are the new couples in the town. The couple, who recently made their relationship official, are all set to tie the knot this month, on November 28. Ahead of their big day, Manjima and Gautham interacted with the media and revealed details about their wedding. The couple also posed for shutterbugs with bright smiles.
Manjima and Gautham interacted with the media. While the actress opted for a simple green ethnic suit, he complemented his lady in a light-toned kurta for their special day before the D Day.
Manjima Mohanan and Gautham Karthik will tie the knot on Monday, November 28. During the press meet, the couple spoke to the media and revealed that their parents are extremely happy about their marriage. The wedding will be an intimate and simple event with close family and friends. It's a one-day event with no reception or any other festivities. The first pics as husband and wife will be out on November 28 around 1 PM.
Gautham Karthik and Manjima Mohan joined hands for the first time in Devarattam (2019). The two became best friends and eventually decided to take their relationship to the next level. However, the film received mixed reviews from critics and audiences alike.
https://www.youtube.com/watch?v=4ARKlN8pCOU
டூப் போடாமல் ஸ்டண்ட் காட்சியில் நடித்த நடிகர் சோமுவுக்கு நடிகர் விஷால் பாராட்டு!
Tuesday, November 22, 2022
Naga Chaitanya's NC 22 fantabulous first look with intriguing title is here
ராணா டகுபதி வெளியிட்ட விராட் கர்ணா நடிக்கும் ' நாக பந்தம் ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்*
*ராணா டகுபதி வெளியிட்ட விராட் கர்ணா நடிக்கும் ' நாக பந்தம் ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்* நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா-...
-
நேர்மையுடன் வாழ்ந்த உதவி கமிஷனர் ஒருவரின் வாழ்க்கை " கடமை" என்ற பெயரில் படமாகிறது! _________ புது இயக்குனர் அறிமுகமாகிறார...
-
நான் இசையமைத்த முதல் ஹாரர் திரைப்படம் - " P 2 - இருவர் " தான் இசை விழாவில் இசையமைப்பாளர் தேவா !! "...