Tuesday, March 24, 2026

கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் மக்கள் மனம் கவர்ந்த “பிரியமானவள்”

கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் மக்கள் மனம் கவர்ந்த “பிரியமானவள்”
 
நமது கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு மக்கள் மனம் கவர்ந்த “பிரியமானவள்” மெகாத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
 
அன்பும், பொறுமையும் கொண்ட நல்ல மனைவியாகவும், தன் குடும்பத்திற்காகவும் வாழ்ந்து வரும் உமாவை அவளுடைய கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மதிக்காமல் தவறாக புரிந்து கொள்கிறார்கள். இதனால், அவர் தனது வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளையும், துன்பங்களையும் எதிர்கொள்கிறாள்.
 
நாள்கள் கடந்து போக, உமா தனது உரிமைகள் மற்றும் தன்னம்பிக்கையை அறிந்து கொண்டு, தன்னுடைய வாழ்க்கையை தானே உருவாக்கிக் கொள்ள முயல்கிறாள்.
 
இவ்வாறாக, குடும்ப உறவுகள், தியாகம், பெண்களின் வலிமை, மற்றும் வாழ்க்கை சவால்களை வெளிப்படுத்தும் உணர்ச்சிகரமான இந்த தொடர், ஒரு பெண் எதிர்கொள்ளும் குடும்பப் பிரச்சினைகள் மற்றும் அவற்றை கடந்து முன்னேறும் அவளது பயணத்தை வெளிப்படுத்துகிறது.

Tuesday, March 17, 2026

இறுதிக்கட்ட பரபரப்பில் கலைஞர் டிவி சீரியல் ருத்ரா..!

இறுதிக்கட்ட பரபரப்பில் கலைஞர் டிவி சீரியல் ருத்ரா..!
 
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 7.30 மணிக்கு ஔிபரப்பாகி வரும் “ருத்ரா” மொகாத்தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தற்போது இந்த தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது. சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் விறுவிறுப்பாக நகர்ந்து வரும் திரைக்கதையில் தற்போது, விக்ரம் கடத்த திட்டமிட்டிருந்த வைரங்கள் ருத்ராவின் கைக்கு கிடைக்க, ருத்ராவிடம் இருந்து அதனை அபகரிக்க ருத்ராவுக்கு உதவுவது போல் நடிக்கும் விக்ரம் நல்லவன் போல் நாடகமாடுகிறார்.
 
மறுபுறம், தற்கொலை செய்து கொள்வதாக ருத்ராவை ஏமாற்றும் காவ்யா, ருத்ராவை கொலை செய்ய திட்டமிட, காவ்யாவை வைத்து ருத்ராவிடம் இருந்து வைரத்தை வாங்க விக்ரம் திட்டமிடுகிறார்.
 
இறுதியில், ருத்ரா தன் தங்கை காவ்யாவை காப்பாற்றினாரா? வைரத்தை அபகரிக்க நினைக்கும் விக்ரம் கும்பலை கைது செய்வாரா? என்கிற பரபரப்போடு தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

Wednesday, March 11, 2026

இறுதிக்கட்ட பரபரப்பில் "காத்துவாக்குலரெண்டு காதல்"

இறுதிக்கட்ட பரபரப்பில் "காத்துவாக்குலரெண்டு காதல்"
 
 
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரைஇரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் "காத்துவாக்குலரெண்டு காதல்" மெகாத் தொடர் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. அதன்படி, தற்போதுசரவணனை விட்டு பிரிய முடிவெடுத்திருக்கும் ஈஸ்வரிஅதற்கு ஈடாக, ரம்யாவிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு தனது சொத்துக்களை மீட்கிறாள்.
 
விஷயம் தெரிய வந்து ஈஸ்வரியை சமாதனம் செய்யப்போகும் அபிராமி அவமானப்படுத்தப்பட, சரவணணுக்குரம்யாவுடன் திருமணம் செய்து வைக்க அவர்முடிவெடுக்கிறார்.
 
இதற்கிடையே, சரவணனை ஏமாற்றிய போலி ரெசார்ட்ஓனர் சரவணனின் கண்ணில் பட, தன் மீதான கலங்கத்தைசரவணன் போக்குவாரா? மற்றும் சரவணன் - ரம்யாதிருமணம் நடக்குமா? அல்லது சரவணன் ஈஸ்வரியுடன்மீண்டும் இணைவாரா? என்கிற பரபரப்போடு தொடர்விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.

கலைஞர் தொலைக்காட்சியில் இருவர் - புத்தம்புதிய நிகழ்ச்சி

நமது கலைஞர் தொலைக்காட்சியில் இருவர் - திலெஜெண்ட்ஸ் ரீ-லோடட் என்கிற புத்தம் புதிய நிகழ்ச்சிஞாயிறுதோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது....