Monday, November 21, 2022

The leaders of Round Table India, Santhosh and Vijayaragavendra, have said that more than 7,890 classrooms have been built across India through the project 'Freedom Through Education'.

ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பு 'கல்வி மூலம் விடுதலை' எனும் திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் 7890 க்கும் மேற்பட்ட வகுப்பறைகளை கட்டமைத்து உள்ளதாக அந்த அமைப்பின் தலைவர்கள் சந்தோஷ் மற்றும் விஜயராகவேந்திரா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வோராண்டும் நவம்பர் 14 ஆம் தேதி முதல் ரவுண்ட் டேபிள் இந்தியா வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்த ஆண்டும் சமத்துவத்தை ஊக்குவிக்கும் பொருட்டு திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிடயோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டன. இதனையடுத்து சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அந்த அமைப்பின் தலைவர் சந்தோஷ், கல்வி மூலம் விடுதலை என்கிற திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் 7890 வகுப்பறைகள் கட்டமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

மேலும் குழந்தைகளுக்கான இலவச இருதய அறுவை சிகிச்சை, ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்ட சேவைகளை வழங்கி வரும் இந்த அமைப்பு, ஐ.ஐ.டி யுடன் இணைந்து பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வீல் சேர்களை உருவாக்கி சுமார் 200 பேருக்கு வரழங்கியுள்ளதாகவும் கூறினார். இது தவிர நிதி நிறுவனங்களுடன் இணைந்து 500 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு உதவி செய்து வருகிறது என்றும் தெரிவித்தார். 

ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் ஏரியா 2 என்பது சென்னை, புதுச்சேரி மற்றும் நெல்லூர் ஆகிய இடங்களை உள்ளடக்கிய பகுதி என்றும் , இந்த பகுதியில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும் ஏரியா 2இன் தலைவர் விஜய் ராகவேந்திரா தெரிவித்தார்...

சேலம் மாநகர மேயர் வெளியிட்ட 'கள்ள நோட்டு' திரைப்படத்தின் டீசர்

சேலம் மாநகர மேயர் வெளியிட்ட  'கள்ள நோட்டு' திரைப்படத்தின் டீசர்! 'கள்ள நோட்டு' திரைப்படத்தின் டீசரை சேலம் மாநகரா...