"குற்றம் புரிந்தால்" படத்தின் முதல் பாடலை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி இராம நாராயணன் வெளியிட்டார்!
அவரது அலுவலகத்தில் எளிமையாக நடந்த இசை வெளியீட்டு விழாவில், தயாரிப்பாளர் விஜயகாந்த் சுப்பையா, இயக்குனர் வீரா, தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி ஆகியோர் கலந்துக் கொண்டனர்!
அமராவதி பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில், ஆத்தூர் ஆறுமுகம் தயாரிக்கும் "குற்றம் புரிந்தால்" படத்தை, நான் சிவனாகிறேன், இரும்பு மனிதன் ஆகிய வெற்றி படங்களை இயக்கிய டிஸ்னி இயக்குகிறார்.
இப்படத்தில் ஆதிக் பாபு கதாநாயகனாக நடிக்கிறார். பெங்களூர்வைச் சேர்ந்த அர்ச்சனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், அபிநயா, அருள் டி.ஷங்கர், ராம், ரேணிகுண்டா நிசாந்த் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பாடல்களை கபிலன் மற்றும் கார்த்திக் நேதா இருவரும் எழுதியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு கே.கோகுல், இசை கே.எஸ்.மனோஜ்.
"குற்றம் புரிந்தால்" திரைப்படம் பிப்ரவரி மாதம் 24'ம் தேதி திரைக்கு வருகிறது.
@GovindarajPro