Thursday, March 30, 2023

ஜம்பு மஹரிஷி’.இந்தப் படத்தில் புதியவரான பாலாஜி நாயகனாகவும், ‘மஸ்காரா’ புகழ் அஸ்மிதா

ஜம்பு மஹரிஷி 

 Tvs films நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் பி.பாலாஜி — பி.தனலட்சுமி இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஜம்பு மஹரிஷி’.இந்தப் படத்தில் புதியவரான பாலாஜி நாயகனாகவும், ‘மஸ்காரா’ புகழ் அஸ்மிதா நாயகியாகவும் நடிக்கிறார்கள்.மேலும் ராதாரவி, வாகை சந்திரசேகர், டெல்லி கணேஷ், நம்பிராஜ், மீரா கிருஷ்ணன், ‘பாகுபலி’ பிரபாகர், வையாபுரி, கராத்தே ராஜா ஆகியோரும் நடித்துள்ளனர்.

 பகவதி பாலா இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். சிவசங்கர் நடன பயிற்சியையும், டிராகன் பிரகாஷ் சண்டை பயிற்சி இயக்கத்தையும், ராஜ் கீர்த்தி படத் தொகுப்பையும், பி.புவனேஸ்வரன் வசனத்தையும் கவனித்துள்ளனர். ‘தேனிசை தென்றல்’ தேவா இசையமைக்க பாலாஜி, புவனேஸ்வர், ஜார்ஜ் மூவரும் பாடல்களை எழுதி உள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி நாயகனாக நடித்து பி-தனலட்சுமியுடன் இணைந்து தயாரித்துள்ள புதியவரான பி.பாலாஜி இதை தன் முதல் படமாக இயக்கி உள்ளார்.திருச்சி அருகே திருவானைக்காவலில் ஜீவ சமாதி அடைந்த ஜம்பு மகரிஷியின் உண்மை வரலாற்றோடு இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.ஓரே நேரத்தில் தமிழ்,தெலுங்கில் ஏப்ரலில் உலகமெங்கும் ரிலீசாகிறது
_____

Tharunam - திரைவிமர்சனம்

வாழ்க்கை எதிர்பாராத தருணங்களால் நிறைந்துள்ளது - சில மகிழ்ச்சியைத் தருகின்றன, மற்றவை தடைகளை ஏற்படுத்துகின்றன. இந்த தருணங்கள் நம்மை எவ்வாறு வட...