Monday, July 10, 2023

சுயசக்தி விருதுகள் 2023 க்கான 12 விருத்தாளர்களை தேர்வுக்குழு தேர்ந்தெடுத்துள்ளது

சுயசக்தி விருதுகள் 2023 க்கான 12 விருத்தாளர்களை தேர்வுக்குழு தேர்ந்தெடுத்துள்ளது.

சக்திமசாலா வழங்கும் சுயசக்தி விருதுகள் 2023 க்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு முழுவதும் இருந்து பெறபட்டன. 2000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் தகுதியுடைய 600 விண்ணப்பங்கள் முதல்நிலையாக தேர்வு செய்யப்பட்டது.

 இவர்களுக்கான நேர்காணல் சென்னை சவேரா விடுதியில் இரண்டு நாட்கள் நடைபெற்றன. 

 தன்வி ஜூவல்லரியின் மேலாண் இயக்குனர் பிரிந்தா சிவகுமார், ஆர்கே ப்ரோடக்ஷன்ஸின் கிருத்திகா ராதாகிருஷ்ணன், மாஃபோய் நிறுவனர் லதா ராஜன், வேல்ஸ் கல்விக்குழும துணை தலைவர் பிரீதா கணேஷ், கல்வியியல் உளவியல் நிபுணர் சரண்யா ஜெயக்குமார், நடிகை ஷைலஜா செத்லுர், அருணா சுப்பிரமணியம்,  அகிலா ராஜேஷ்வர், ஹேமா ருக்மணி, ஜெயஸ்ரீ உம்மிடி, லட்சுமி ரவிச்சந்திர்,டாக்டர் மது சரண்,  டாக்டர் மணிமேகலை மோகன், மீனா சப்பிரயா, பிரசன்னா வசனாடு, பூர்ணிமா ராமசாமி, ராஜி ராஜூ, ராதா சஞ்சீவ், ரத்னா சிவராமன், ரவூஃபா, ருக்மணி தியாகராஜ ன், டாக்டர் சௌந்தர்யா ராஜேஷ், சுவர்ணமுகி ரகுபதி, டாக்டர் ஸ்ரீநிஷா மாறன், சுசீலா ரவீந்திரநாத், ஷைனி சுரேந்திரன், டாக்டர் ஃபர்ஹானா உள்ளிட்ட 31 பேர் கொண்ட நடுவர் குழு இந்த நேர்காணலை நடத்தினர்.  

இதில் வீட்டில் இருந்து தொழில் தளத்தில் சாதனை படைத்த பெண்கள் 12 பேர் 12 பிரிவுகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 சுயசக்தி விருதுகள் 2023 பிரமாண்ட விழா வரும் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி, சென்னை சேத்துப்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் அரங்கத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Madraskaaran - திரைவிமர்சனம்

 இந்தப் படம் திருமணம் மற்றும் உறவுகள் பற்றிய ஒரு சுவாரஸ்யமான பார்வையை வழங்குகிறது, இது விசுவின் பாரம்பரிய பாணியை நினைவூட்டுகிறது. முக்கிய கத...