Sunday, July 16, 2023

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடும் தருணத்தில்... எங்கள் சங்க "CD 23" விழாவை கொண்டாடுவதில் பெருமைப்படுகிறோம்


 முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடும் தருணத்தில்...

எங்கள் சங்க "CD 23" விழாவை கொண்டாடுவதில்

பெருமைப்படுகிறோம்


 


தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம் ஆரம்பித்து 23 ஆண்டுகளாக மிக சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.


அதை சிறப்பிக்கும் வகையில் CD-23 என்ற பெயரில் பிரம்மாண்டமான கலை விழா  மற்றும் விருதுகள் வழங்கும் விழா 30.7.2023 அன்று சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் மாலை 4 மணி முதல் நடக்க இருக்கிறது.


இந்த விழாவில் திரைப்படத் துறை மற்றும் சின்னத்திரையை சேர்ந்த பிரபல இயக்குநர்கள், எழுத்தாளர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள் இசையமைப்பாளர்கள், நடன கலைஞர்கள், சண்டை பயிற்சி கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஒலிப்பதிவாளர்கள், பாடலாசிரியர்கள், பாடகர்கள், தயாரிப்பு நிர்வாகிகள், ஒப்பனை கலைஞர்கள், தையற் கலைஞர்கள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும்  கலந்து கொள்ள இருக்கிறார்கள்... தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொள்கின்றனர்..   


இந்த விழாவில் நடைபெறும் நடன நிகழ்ச்சிகளை பிரபல நடன இயக்குநர் கலா மாஸ்டர் நடத்துகிறார்..


இசை நிகழ்ச்சிகளை பிரபல இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா நடத்துகிறார் ..


மேடையில் நடைபெறும் வீர விளையாட்டு நிகழ்ச்சிகளை பிரபல சண்டை பயிற்சியாளர்கள்   பாண்டியன் மாஸ்டர் மற்றும் தவசி மாஸ்டர்  நடத்துகிறார்கள்..


வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை நிகழ்ச்சிகளை பிரபல திரைப்பட மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் நடத்துகின்றனர்...


தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்த திரைப்படம் மற்றும் சின்னத்திரை நட்சத்திர தம்பதிகள் பங்குபெற்று வித்தியாசமான நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்...


திரைப்படம் மற்றும் சின்னத்திரை பிரபல இயக்குநர்கள் உருவாக்கிய பல்வேறு நிகழ்ச்சிகள் இந்த விழாவில் இடம் பெறும்...


பிரபல கலைஞர்கள் நடத்திக் காட்டும் பல குரல் நிகழ்ச்சிகளும் விழாவில் இடம் பெறும்....


இந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் இயக்குபவர்(Show Director) திரு. S.D.சபா.


திரைப்படத்துறை மற்றும் சின்னத்திரையில் சாதனைகள் நிகழ்த்திய சிறந்த கலைஞர்களுக்கு இந்த விழா மேடையிலே விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படும்....


 தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர் சங்க உறுப்பினர்களான இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்களுக்கும் வாய்ப்பளித்து கொண்டிருக்கும் தொலைக்காட்சி  நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கி  நன்றி செலுத்தப்படும்..


இந்த விழாவை ஒவ்வொரு நிமிடமும் பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நிகழ்ச்சியாக இது அமையும். மேலும், இது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போது அதை பார்க்கும் கோடிக்கணக்கான தமிழர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலும், எல்லா நிகழ்ச்சிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். 



Chennai retains its position among the top 3 cities on the social and industrial inclusion index in ‘Top Cities for Women in India (TCWI)’ Survey conducted by the Avtar Group

  Chennai retains its position among the top 3 cities on the social and industrial inclusion index in ‘Top Cities for Women in India (TCWI)’...