Friday, August 4, 2023

ரோஹித் ஷெட்டியின் அதிரடி போலீஸ் படங்களின் காட்சிளால் ஈர்க்கப்பட்ட லக்‌ஷ்மி மஞ்சுவின் 'அக்னி நட்சத்திரம்' படத்தின் பிராமாண்ட பாடல் காட்சி

ரோஹித் ஷெட்டியின் அதிரடி போலீஸ் படங்களின் காட்சிளால் ஈர்க்கப்பட்ட லக்‌ஷ்மி மஞ்சுவின் 'அக்னி நட்சத்திரம்' படத்தின் பிராமாண்ட பாடல் காட்சி

நடிகை, தாரிப்பாளர், சமூக சேவகர், கொடையாளி என பன்முகத்திறன் கொண்ட லக்‌ஷ்மி மஞ்சு, தனது புதிய படமான ' அக்னி நட்சத்திரம்' படத்தில் பிசியாக இருக்கிறார். அப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்புகளும் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏர்படுத்திய நிலையில், சமீபத்தில் வெளியான  ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த "வானம் தூரமில்லையே..." பாடல் அதிரடியாக மட்டும் இன்றி பிரமாண்டமாக இருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

இந்த நிலையில், 'அக்னி நட்சத்திரம்' படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த அட்டகாசமான பாடல் காட்சி குறித்து கூறிய லக்‌ஷ்மி மஞ்சு, "அக்னி நட்சத்திரம்' படத்தின் பாடல் காட்சி இப்படி அதிரடியாக இருப்பதற்கு பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டியும் ஒரு காரணம். அவருடைய போலீஸ் படங்களின் காட்சிகளால் ஈர்க்கப்பட்ட நான் 'அக்னி நட்சத்திரம்' படத்தின் காட்சிகளை அதன் பாதிப்பால் உருவாக்கியது மட்டும் இன்றி அதனுடன் பிரமாண்டத்தை புகுத்தி காட்சிகளை உருவாக்க முடிவு செய்தேன். 

என் கதாபாத்திரத்தை விளக்கும் வகையில் அமைந்துள்ள பாடல் மற்றும் வரிகள் சிறப்பாக இருப்பதோடு மக்களிடம் வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.  

போலீஸ் வேடத்தில் நடிப்பது பெருமையாக இருப்பதோடு, என் கடமையாகவும் நினைக்கிறேன்." என்று லக்‌ஷ்மி மஞ்சு கூறினார்.

Vaanam Thuram Illaiye Song 

Link :: 

► youtu.be/1xq1fGfXasI

Heritage Meets High Performance as Bajaj Pune Grand Tour 2026 Trophy Arrives in Chennai

Heritage Meets High Performance as Bajaj Pune Grand Tour 2026 Trophy Arrives in Chennai Chennai : The heritage-inspired Trophy f...