Saturday, October 7, 2023

கொலை தூரம் -( திரில்லர் படம்)

கொலை தூரம் 
-----------------------------
( திரில்லர் படம்) 

மூன்று சகோதரிகளுக்கு மணமுடித்து அவர்களுக்கு ஒரு நல்வாழ்க்கையை ஏற்படுத்திவிட்டு பின்  வெளிநாடு சென்று விடுகிறான் நாயகன். பின் கடுமையாக உழைத்து ஒரு மிகப்பெரிய தொழிலதிபராகிறான்.  ஆஸ்தி அந்தஸ்து சொத்து எல்லாமே கிடைக்கிறது. தாய் நாட்டுக்கு  வருகிறான். பிறந்த மண்ணுக்கு வருகிறான்.தன் மூன்று சகோதரிகளும்  சேர்ந்து பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கிறார்கள். கணவன் மனைவி இருவருக்கும் அளவு கடந்த அன்பு செலுத்தி வருகின்றனர். இவ்வேளையில் அவன் மீது கொலைப்பழி ஏற்படுகிறது. அந்த கொலைப்பழியிலிருந்து அவர் மீண்டாரா? யார் கொலைப்பழி ஏற்படுத்தியது? கொலை செய்யப்பட்டவர் யார் ?என்பதை க்ரைம் திரில்லர் சஸ்பென்ஸ்வுடன் கூறும் கதையே கொலை தூரம்.

ஹாசினி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தை காதல் பதிவு, நந்திவரம், சினிமா கனவுகள் ஆகிய படங்களை இயக்கிய பிரபு ராமானுஜம் இயக்குகிறார்.

யுவன் பிரபாகர் கதாநாயகனாக நடிக்க இவருடன் பிரபல பெங்களூர் மாடலிங் ஒருவர் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். அப்புகுட்டி இமான் அண்ணாச்சி, பிரபு ராமானுஜம் ஆகியோர் கதையின் பாத்திரங்களாக நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு-
செந்தில் மாறன்

தயாரிப்பு - 
ஹாசினி பிரபாகர்

கதை  திரைக்கதை வசனம்  இயக்கம்-
பிரபு ராமானுஜம்

இதன் படப்பிடிப்பு திருவண்ணாமலை, செஞ்சி, ஏற்காடு, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. 

-வெங்கட் பி.ஆர்.ஓ

Yamakaathaghi - திரைவிமர்சனம்

 கற்பனைக் கூறுகளை நம்பத்தகுந்ததாகவும் உணர்ச்சி ரீதியாகவும் ஈர்க்கக்கூடியதாகவும் வைத்திருக்கும் அதே வேளையில், கற்பனைக் கூறுகளை எவ்வாறு ஒரு கவ...