Sunday, October 15, 2023
வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்கத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி, மிருணாள் தாக்கூர் நடிக்கும் 'hi நான்னா' திரைப்படத்தின் உணர்வுப்பூர்வமான டீசர் வெளியீடு
வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்கத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி, மிருணாள் தாக்கூர் நடிக்கும் 'hi நான்னா' திரைப்படத்தின் உணர்வுப்பூர்வமான டீசர் வெளியீடு
'hi நான்னா' திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டிசம்பர் 7 அன்று உலகெங்கும் வெளியாகிறது
நேச்சுரல் ஸ்டார் நானி மற்றும் மிருணாள் தாக்கூர் முதன்முறையாக ஜோடி சேரும் பான்-இந்தியா திரைப்படமான 'hi நான்னா' ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நிலையில், ஞாயிற்றுக்கிழமையை குடும்பத்துடன் கொண்டாடும் ரசிகர்களுக்கான பரிசாக இப்படத்தின் உணர்வுபூர்வமான டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
நானி மற்றும் கியாரா கண்ணா ஆகியோருக்கு இடையேயான அழகான தந்தை-மகள் கதையாக ஆரம்பிக்கும் இந்த டீசர், பின்னர் நானி மற்றும் மிருணாள் தாக்கூர் ஜோடியின் காதல் கதையை திரையில் காட்டுகிறது. கியாரா உண்மையிலேயே நானியின் மகளா, நானியும் மிருணாளும் இதற்கு முன் சந்தித்துள்ளார்களா, வேறொருவர் உடன் தனக்கு திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் மிருணாள் ஏன் நானியிடம் தன் காதலை சொல்கிறார் போன்ற கேள்விகளுக்கான விடைகளை தெரிந்து கொள்ள நீங்கள் திரைப்படத்தை பார்க்க வேண்டும்.
பல்வேறு உணர்வுகள் நிறைந்த சவாலான கதையை தனது முதல் படத்திலேயே இயக்குநர் ஷௌர்யுவ் மிகவும் அழகாக கையாண்டுள்ளார் என்பது டீசரில் புலனாகிறது. நானி மற்றும் கியாரா கண்ணாவின் தந்தை-மகள் பந்தம் ஆகட்டும், நானி மற்றும் மிருணாள் தாக்கூர் ஜோடியின் காதல் ஆகட்டும், அனைத்தையும் மிகவும் சிறப்பாக இயக்குநர் சமன் செய்துள்ளார்.
தனது சிறப்பான நடிப்பின் மூலம் நானி நம்மை கவர்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு உணர்வுப்பூர்வமான ஒரு பாத்திரத்தில் அவரை பார்க்க முடிகிறது. சில காட்சிகளில் இளைஞர் ஆகவும் சில காட்சிகளில் நடுத்தர வயது ஆணாகவும் அவர் ஜொலிக்கிறார். தனது இருப்பின் மூலமும் நடிப்பின் மூலமும் காட்சிகளை மிளிர வைக்கிறார் மிருணாள் தாக்கூர்.
சானு ஜான் வர்கீஸ் ஐஎஸ்சி-யின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் உயிரோட்டத்துடன் திகழ்கிறது. ஹேஷாம் அப்துல் வஹாப்பின் இசை கதைக்கும் காட்சிகளுக்கும் வலு சேர்க்கிறது. அவினாஷ் கோலாவின் தயாரிப்பு வடிவமைப்பும் குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தை பெரும் பொருட்செலவில் வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் மோகன் செருக்கூரி (சிவிஎம்) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா தயாரிப்பதால் காட்சிகளின் பிரம்மாண்டம் கண்களை கவர்கிறது.
மொத்தத்தில் மிகவும் சுவாரஸ்யமாக அமைந்துள்ள இந்த டீசர் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை வெகுவாக அதிகரிக்கிறது.
முழு நீள குடும்ப படமான 'hi நான்னா', பிரவீன் அந்தோணியின் படத்தொகுப்பில் உருவாகிறது. சதீஷ் ஈ வி வி நிர்வாக தயாரிப்பாளர் ஆவார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் பான்-இந்தியா திரைப்படமாக இந்த ஆண்டு டிசம்பர் 7 அன்று 'hi நான்னா' வெளியாகிறது.
படக்குழுவினர்:
நடிகர்கள்: நானி, மிருணால் தாக்கூர், பேபி கியாரா கண்ணா
இயக்கம்: ஷௌர்யுவ்
தயாரிப்பு: மோகன் செருக்கூரி (சிவிஎம்) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா
தயாரிப்பு நிறுவனம்: வைரா என்டர்டெயின்மென்ட்ஸ்
ஒளிப்பதிவு: சானு ஜான் வர்கீஸ்
இசை: ஹேஷாம் அப்துல் வஹாப்
தயாரிப்பு வடிவமைப்பு: அவினாஷ் கொல்லா
படத்தொகுப்பு: பிரவீன் அந்தோணி
நிர்வாகத் தயாரிப்பாளர் - சதீஷ் ஈ.வி.வி
ஆடை வடிவமைப்பாளர்: ஷீத்தல் ஷர்மா
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்
பிரம்மாண்டமாக தொடங்கிய ரவி மோகன் ஸ்டுடியோஸ்நான் இயக்குனராகி விட்டேன் - மகிழ்ச்சி வெள்ளத்தில் ரவி மோகன்அம்மா என்பது உறவல்ல; உணர்வு! - நடிகர் ரவி மோகன் நெகிழ்ச்சி
பிரம்மாண்டமாக தொடங்கிய ரவி மோகன் ஸ்டுடியோஸ் நான் இயக்குனராகி விட்டேன...
-
கே.ராஜன் வெளியிட்ட டீசர்! கதை , திரைக்கதை, வசனம் எழுதி கதையின் நாயகனாக ஜி.ராம் நடித்து தமது இரண்டாவது படமாக இயக்கியுள்ள " ப...
-
We all are aware that, our India is the 5th largest economy and the 3 rd largest consumer and importer of Crude oil in the World. Apart...