Thursday, December 14, 2023

"தீதும் சூதும்" டிசம்பர் 15ஆம் தேதி வெளியீடு


 "தீதும் சூதும்"  டிசம்பர் 15ஆம் தேதி வெளியீடு


என் பெயர் ஸ்ரீ. இயக்குனர் ஷங்கர் அவர்களின் உதவி இயக்குனர். "டமால் டுமீல்" என்ற படத்தின் இயக்குனர். இந்த தீதும் சூதும் திரைப்படம் நானும் எனது நண்பர் எஸ். ஆர். ஜெ இருவரும் சேர்ந்து ஜெயந்தி புரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து இருக்கிறோம்.

கதையின் நாயகன் சிவா, நாயகி ஜெஸ்ஸியை உயிருக்கு உயிராய் காதலிக்கிறான். நாயகி தந்தை லாரன்ஸ் சதி திட்டத்தால் இவர்களின் காதல் பிரிகிறது. சிவா காதலியை அடைய கிரிமினல் உமரோடு கைகோர்த்து திட்டம் போடுகிறான். உமர் சிவாவை பயன்படுத்தி வேறு திட்டம் போடுவதால் ஜெஸ்ஸி உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. இந்த மூன்று பேரும் அறியாத இன்னொரு நபரின் திட்டத்தில் சிக்கிய இவர்கள் தப்பித்தார்களா? பின்னர் நடந்தது என்ன என்பது திரைக்கதை. நாம் தேர்வு செய்யும் காதல் நம் எதிர்காலத்தை எப்படி முடிவு செய்யும் என்பது கதையின் கரு.

கதையின் நாயகன் சிவாவாக ஸ்ரீ. நாயகி ஜெஸ்ஸியாக அங்கனா ஆர்யா. அப்பா லாரன்ஸ் கதாபாத்திரத்தில் அவினாஷ், உமர் கதாபாத்திரத்தில் ஸ்ரீனிவாசன், கிருபா, பேபி தாக்ஷிகா, கிரி, கவிதா ராதேஷ்யாம் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

Genre: Crime / Mystery / Thriller

தயாரிப்பாளர்கள் - ஸ்ரீ, எஸ். ஆர். ஜெ.
இணை தயாரிப்பாளர்கள் - ஜெயந்தி. பா, மணிகண்டன். பா, பாலாஜி.பா
இயக்கம் - ஜித்தா மோகன்
ஒளிப்பதிவு - பராந்தகன். இ (ஒளிப்பதிவாளர் செழியன் அவர்களின் உதவியாளர்)
இசை - பிரணவ் கிரிதரன்
படதொகுப்பு - புவனேஷ் மணிவண்ணன்
சண்டை பயிற்சி - ஜி
நடனம் - லலிதா ஷோபி
கலை - எஸ். எஸ். சுசீ தேவராஜ்
பாடல்கள் - ஜெ, மனோஜ் பிரபாகர். எம்
திரைக்கதை, வசனம் - ஸ்ரீ
மக்கள் தொடர்பு - சி. என். குமார்

ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த உதயாவின் 'அக்யூஸ்ட்' படக்குழு

  ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த உதயாவின் 'அக்யூஸ்ட்' படக்குழு ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி...