Sunday, December 24, 2023

மில்லியன் ஸ்டுடியோஸ் எம்.எஸ். மன்சூர் வழங்கும் ‘சிரோ’ படப்பிடிப்பு நிறைவடைந்தது!

*மில்லியன் ஸ்டுடியோஸ் எம்.எஸ். மன்சூர் வழங்கும் ‘சிரோ’ படப்பிடிப்பு நிறைவடைந்தது!*

மில்லியன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் எம்.எஸ். மன்சூர் தனது 'புரொடக்ஷன் நம்பர் 2' ஃபேண்டஸி கதையான 'சிரோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்தப் படத்தில் 'பதினெட்டாம் படி' மற்றும் 'வாலாட்டி' போன்ற பிளாக்பஸ்டர் மலையாளத் திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பிற்காக அங்கீகாரம் பெற்ற அக்ஷய் ராதாகிருஷ்ணன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சர்டிஃபைட் கமர்ஷியல் பைலட்டான நடிகை பிரார்த்தனா சாப்ரியா இதில் கதாநாயகியாக நடிக்கிறார். ரோகினி, 'போர் தோழில்' புகழ் லிஷா சின்னு, 'சூப்பர் டீலக்ஸ்' புகழ் நோபல் மற்றும் பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படக்குழுவினரின் சரியான திட்டமிடல் மற்றும் ஒத்துழைப்பு காரணமாக திட்டமிட்ட 45 நாட்களுக்குள் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. முன்னாள் விளம்பர பட இயக்குநரும் வடிவமைப்பாளருமான விவேக் ராஜாராம் இப்படத்தை எழுதி இயக்கி, இயக்குநராக அறிமுகமாகிறார்.

மில்லியன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளரான எம்.எஸ். மன்சூர் கூறும்போது, ​​“நாங்கள் தயாரித்திருக்கும் ‘சிரோ’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது என்பதை நாங்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இப்படத்தின் படப்பிடிப்பு 27 அக்டோபர் 2023 அன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. சென்னை, கோவளம், பிச்சாவரம், பாண்டிச்சேரி மற்றும் சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. 45 நாட்கள் விரைவான படப்பிடிப்பைத் தொடர்ந்து, டிசம்பர் 10, 2023 அன்று படப்பிடிப்பு முடிந்தது. தற்போது, ​​போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தை பிப்ரவரி 2024 இல் வெளியிட திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

இப்படத்தை 'தனி ஒருவன்', 'வழக்கு எண் 18/9', 'தில்லுக்கு துட்டு' புகழ் கோபி கிருஷ்ணா எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அஸ்வின் ஆர்யன் இசையமைத்துள்ளார். படத்தை பிப்ரவரி 2024 இல் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

NITK’s 23rd Convocation highlights record achievements, IPOs by alumni, first-of-its-kind four-stage ceremony

NITK’s 23rd Convocation highlights record achievements, IPOs by alumni, first-of-its-kind four-stage ceremony Chenna...