வெளிவர இருக்கும் வரலட்சுமி சரத்குமார் நடித்த அரசி பட
இயக்குனர்
சூரிய கிரண் காலமானார்
-----------------------------------------------
மௌன கீதங்கள் படிக்காதவன் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றிய மாஸ்டர் சுரேஷ் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் 200 படங்களில் நடித்திருக்கிறார். பிறகு சூரிய கிரண் என்ற பெயரில் தெலுங்கில் சத்யம், தானா 51, பிரம்மஸ்திரம்,
ராஜு பாய், அத்தியாயம் 6 போன்ற படங்களை இயக்கியவர்.தமிழில் வரலட்சுமி சரத்குமார் நடித்த அரசி படத்தை இயக்கியுள்ளார்.இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. உடல்நிலை குறைவால் இருந்த சூரிய கிரண் இன்று காலமானார். குழந்தை நட்சத்திரமாக இரண்டு மத்திய அரசு விருதும், இயக்குனராக இரண்டு மாநில விரும் (நந்தி அவார்டு) பெற்றவர்