Thursday, March 7, 2024

விபத்தால் உடலில் ஏற்படும் குறைபாடுகள் மொத்த குடும்பத்தையும் முடக்கிவிடும் சூழலில், விபத்து மறுவாழ்வு மையம் தொடங்கியுள்ள JH ரீஹாபிலிடேஷன் மருத்துவமனை உலக அளவில் புகழ் பெரும் என நடிகர் சத்யராஜ் பாராட்டியுள்ளார்.


 விபத்தால் உடலில் ஏற்படும் குறைபாடுகள் மொத்த குடும்பத்தையும் முடக்கிவிடும் சூழலில், விபத்து மறுவாழ்வு மையம் தொடங்கியுள்ள JH ரீஹாபிலிடேஷன் மருத்துவமனை உலக அளவில் புகழ் பெரும் என நடிகர் சத்யராஜ் பாராட்டியுள்ளார்.


இந்தியாவின் மிகப்பெரிய மறுவாழ்வு  மருத்துவமனையான JH ரீஹாபிலிடேஷன் மருத்துவமனையை சென்னையில் நடிகர் சத்யராஜ் மற்றும் பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் ஆகியோர் திறந்து வைத்தனர். 

நோயாளிகளுக்கு விரிவான மறுவாழ்வு சிகிச்சையை நாடுமுழுவதும் வழங்குவதில் உறுதியான அர்ப்பணிப்பைக்  கொண்ட இந்த மருத்துவமனையின் புதிய கிளை சென்னை முகப்பேரில் திறந்து வைக்கப்பட்டது. 

சிறப்பு  விருந்தினர்கள்,  சுகாதார நிபுணர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்த விழாவில், மருத்துவமனையின் பயணம், சாதனைகள் மற்றும்  தனிமனிதர்களுக்கு உடல்ரீதியான சவால்களை முறியடித்து அவர்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கும் அர்ப்பணிப்பு ஆகியவை விளக்கப்பட்டது. 

இந்த விழாவிற்கு தலைமை விருந்தினர்களாக நடிகர் திரு.சத்யராஜ் மற்றும் பத்திரிக்கையாளர்  திரு.நக்கீரன் கோபால் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி மருத்துவமனை நிர்வாகத்தினர் கௌரவித்தனர்.
  
JH மறுவாழ்வு மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர். இக்னேஷியஸ் ஜேக்கப், அவரது மருத்துவ பயணம், மற்றும் நிறுவனத்தின் நம்பிக்கை குறித்தும் விரிவாக எடுத்துரைத்து தெரிவித்தார். 

மேலும் மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் மீட்டெடுப்பு உள்ளிட்டவை குறித்து உரையாற்றினர்.

 அப்போது நக்கீரன் கோபால்,  மதுப்பழக்கத்தில் இருந்து மீட்பதற்கு செயல்படும் மறுவாழ்வு மையங்கள் குறித்து கேள்விப்பட்டு இருந்ததாகவும், விபத்து சிகிச்சையில் மறுவாழ்வு பயிற்சி எவ்வளவு அவசியம் என புரிந்து கொண்டதாகவும் குறிப்பிட்டார். 

நடிகர் சத்யராஜ் உரையாற்றும்போது, வியாபார நோக்கம் தாண்டி இந்த மறுவாழ்வு சிகிச்சை மையம் மிகச்சிறந்த சேவை வழங்குகிறது என்று தெரிவித்தார். மேலும் மருத்துவர் இக்னேசியஸ் ஜேக்கப் இந்தியாவை தாண்டி உலக அளவில் புகழ் பெறுவார் என்றும் குறிப்பிட்டார். 

 இது  புனர்வாழ்வு சிகிச்சையின் ஆழமான தாக்கம் மற்றும் JH மறுவாழ்வு மருத்துவமனை வழங்கிய அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றை உறுதிப்படுத்துவதாக அமைந்தது.

விழாவின் ஒரு பகுதியாக, தங்கள் புனர்வாழ்வு குறித்தும், நம்பிக்கையுடன் மீண்டு வந்தது குறித்தும் வெளிப்படுத்திய நோயாளிகள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.  

JH மறுவாழ்வு நிபுணர் குழு, பக்கவாதம், பார்கின்சன், தசைக்கூட்டு பிரச்சினைகள், புற்றுநோய், இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சனைகள், முதுகுத்தண்டு காயங்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்குகிறது.  

மறுவாழ்வு மருத்துவர்களின் வழிகாட்டுதலின் கீழ் பலவேறு குழுவின் தலைமையில் ஒரு விரிவான அணுகுமுறை மூலம், நோயாளிகள் சிறந்த சிகிச்சை பெறுகிறார்கள்.

இந்த ஆட்டம் ரொம்ப புதுசு !! ஆரம்பமே அதிர்ச்சி தந்த பிக்பாஸ், களை கட்டும் சீசன் 8

*இந்த ஆட்டம் ரொம்ப புதுசு !! ஆரம்பமே அதிர்ச்சி தந்த பிக்பாஸ், களை கட்டும் சீசன் 8 !!* *முதல் போட்டியாளர் வெளியேற்றம், பிக்பாஸ் ச...