*தேஜா சஜ்ஜாவின் அடுத்த சூப்பர் ஹீரோ திரைப்படம் மிராய் !!*
*சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா, கார்த்திக் கட்டம்நேனி, டிஜி விஸ்வ பிரசாத், பீப்பிள் மீடியா ஃபேக்டரி இணையும் படத்திற்கு மிராய் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் ஏப்ரல் 18, 2025 அன்று திரையரங்குகளில் 3டியில் வெளியாகிறது !!*
டோலிவுட்டின் வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி சமீபத்தில் தங்களது அடுத்த தயாரிப்பான புரடக்சன் நம்பர் 36 ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது, இப்படத்தில் சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா சூப்பர் யோதா கேரக்டரில் நடிக்க, திறமைமிகு இயக்குநர் கார்த்திக் கட்டம்நேனி இயக்குகிறார். நல்ல சினிமா ரசனையும், திரைப்படத் தயாரிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவருமான டிஜி விஸ்வ பிரசாத், சிறந்த தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பத் தரத்துடன் இப்படத்தை மிகப்பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளார். முன்னர் அறிவித்தபடி படக்குழுவினர் படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஒரு அறிமுக வீடியோவை இன்று வெளியிட்டுள்ளனர்.
இந்த படத்திற்கு எதிர்காலம் என்று பொருள்படும் எக்ஸ்ட்ராடினரி மிராய் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தலைப்பு லோகோ ஜப்பானிய எழுத்துருவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தேஜா சஜ்ஜா ஒரு சூப்பர் யோதா தோற்றத்தில் கையில் யோ (ஸ்டாஃப் ஸ்டிக்) உடன், வெடிக்கும் எரிமலையின் மேல் நிற்பதைப் பார்க்கலாம். தேஜா சஜ்ஜா மிரட்டும் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். பின்னணியில், நாம் ஒரு கிரகணத்தையும் காணலாம்.
படத்தின் களத்தை விவரிக்கும் வகையில் இந்த முதல் பார்வை வெளியாகியுள்ளது. இது மன்னன் அசோகர் மற்றும் அவரது 9 வீரர்கள் காக்கும் ரகசியத்தை அடிப்படையாகக் கொண்டது. கலிங்கப் போர் அசோகருக்கு வரலாற்றில் ஒரு மோசமான அடையாளமாக உள்ளது. அந்த போரில் தெய்வீக மர்மம் ஒன்று வெளிப்பட்டது. அதுவே மனிதனைத் தெய்வீகமாக மாற்றும் 9 வேதங்களின் பரந்த அறிவு ஆகும். இந்த ரகசியத்தைக் காக்க தலைமுறை தலைமுறையாக 9 வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அத்தகைய அறிவை ஒரு கிரகணம் நெருங்குகிறது. பின்னர் கிரகணத்தை நிறுத்தும் ஒரு பிறவி எடுக்கிறது. இது தலைமுறை தலைமுறையாகத் தவிர்க்க முடியாத பெரும் போராக நீடிக்கிறது.
இந்தக்கதை நமக்கு ஒரு புத்த துறவியின் கதையின் விவரிப்பில் நீண்டு, நம்மை பிணைக்கிறது. இந்த பின்கதை மட்டுமே நமக்கு பெரும் கூஸ்பம்ப்ஸைத் தருகிறது மற்றும் நாம் இதுவரை கண்டிராத ஒரு அனுபவத்திற்கு நம்மைத் தயார் செய்கிறது. ப்ரீ புரொடக்ஷன், புரொடக்ஷன் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் ஆகியவற்றில் கார்த்திக் கட்டம்நேனியின் தீவிரமான உழைப்பு இந்த வீடியோவில் பார்வையில் தெளிவாகத் தெரிகிறது. கதை ஒரு வரலாற்று பின்னணியில் அமைந்திருந்தாலும், அது ஈர்க்கும் வகையில் சொல்லப்பட்டுள்ளது. தேஜா சஜ்ஜா ஒரு சூப்பர் யோதாவாக அறிமுகப்படுத்தப்படுகிறார், அவர் கிரகணம் அசோகாவின் ரகசியம் 9 ஐ அடைவதைத் தடுக்கிறார். அவர் கர்ரா சாமு (குச்சி சண்டை) மற்றும் பிற வகையான சண்டைகளில் சிறந்து விளங்குகிறார். அவர் சூப்பர் யோதாவாக கச்சிதமாகப் பொருந்துகிறார் மற்றும் சிறந்த தோற்றத்துடன் வந்துள்ளார். நாயகியாக நடித்திருந்த ரித்திகா நாயக்குக்கு மிக வலுவான பாத்திரம் கிடைத்துள்ளது.
கார்த்திக் காட்டம்நேனி ஒளிப்பதிவில் தனது நிபுணத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளார், ஒவ்வொரு பிரேமும் வைரம் போல ஜொலிக்கிறது. கௌரா ஹரி தனது அட்டகாசமான ஸ்கோர் மூலம் கதைக்கு உயிர் கொடுத்துள்ளார் . VFX உயர் தரத்தில் உள்ளது. பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் தயாரிப்பு தரம் உலகத் தரத்தில் உள்ளன, ஏனெனில் ஒரு சர்வதேச திரைப்படத்தைப் பார்க்கும் உணர்வை இந்த வீடியோ தருகிறது. இந்த அறிமுக வீடியோ அனைவரையும் கவர்வதோடு, அடுத்த அறிவிப்புகளுக்கான ஆவலைத் தூண்டுகிறது.
கார்த்திக் காட்டம்நேனி திரைக்கதையை எழுதியுள்ளார், அவருடன் இணைந்து மணிபாபு கரணம் வசனங்களை எழுதியுள்ளார். இப்படத்தின் கலை இயக்குநராக ஸ்ரீ நாகேந்திரா தங்காவும், இணை தயாரிப்பாளராக விவேக் குச்சிபோட்லாவும் பணியாற்றுகிறார்கள். க்ரித்தி பிரசாத் கிரியேட்டிவ் தயாரிப்பு பணிகளையும் , சுஜித் குமார் கொல்லி நிர்வாக தயாரிப்பு பணிகளையும் கவனிக்கிறார்கள்.
மிராய் திரைப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம், பெங்காலி, மராத்தி மற்றும் சீன மொழிகளில் ஏப்ரல் 18 ஆம் தேதி கோடையில் 2டி மற்றும் 3டி பதிப்புகளில், சரியாக ஒரு வருடத்திற்குப் பிறகு வெளியிடப்படும் எனத் தயாரிப்பாளர்கள் இந்த க்ளிம்ப்ஸ் வீடியோ மூலம் அறிவித்துள்ளனர்.
https://youtu.be/TBCbqJx2KrQ