Sunday, June 30, 2024
15 கோடியில் வைஸாக் நகரை உருவாக்கிய மட்கா படக்குழு
Saturday, June 29, 2024
மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!
இந்திய திரையுலகில் புதிய சாதனையை படைக்கும் பிரபாஸின் 'கல்கி 2898 கிபி'
இந்திய திரையுலகில் புதிய சாதனையை படைக்கும் பிரபாஸின் 'கல்கி 2898 கிபி'
வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரான திரைப்படம் 'கல்கி 2898 கிபி'. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படம் ஜூன் 27 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாள் முதல் காட்சியிலேயே இத்திரைப்படம் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தது. இதனால் இந்திய திரையுலகில் இதுவரை எந்த திரைப்படங்களும் நிகழ்த்தாத வகையில் இப்படம் வெளியான முதல் நாளே 191.5 கோடி ரூபாய் மேல் வசூலித்து புதிய சாதனையை படைத்திருக்கிறது. இரண்டாவது நாள் முடிவில் 298.5 கோடி வசூலித்து தொடர் சாதனையை படைத்துக் கொண்டிருக்கிறது.
இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா படானி ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படம்.. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. வியக்க வைக்கும் வி எஃப் எக்ஸ் காட்சிகள்- ரசிகர்களின் மனம் கவர்ந்த நட்சத்திரங்களின் வித்தியாசமான தோற்றம் - மயக்கும் பின்னணி இசை- வசீகரிக்கும் வசனங்கள்- விறுவிறுப்பான திரைக்கதை என அனைத்து அம்சங்களும் வலிமையாக கூட்டணி அமைத்திருப்பதால்.. திரையரங்குகளில் இந்த அறிவியல் புனைவுடன் கலந்த காவிய படைப்பினை காணும் ரசிகர்கள்.. கண்களை இமைக்க மறந்து, அகல விரித்து ஆச்சரியத்தில் ஆழ்ந்து போகிறார்கள். இதனால் ரசிகர்கள் கரவொலி எழுப்பி தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார்கள்.
'கல்கி 2898 கிபி' படத்தின் முதல் பாகத்தின் நிறைவு.. இரண்டாம் பாகத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. பிரபாஸ் கதாபாத்திரத்தின் சரித்திர பின்னணி- சுப்ரீம் யாஸ்கினின் அடுத்த கட்ட நடவடிக்கை- சிருஷ்டியை பாதுகாக்கும் அஸ்வத்தாமாவின் பகிரத முயற்சி- புஜ்ஜி வாகனத்தின் மாயாஜால செயல்பாடு.. என இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது.
ரசிகர்களின் வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்தத் திரைப்படம் இந்திய திரையுலகில் இதுவரை நிகழ்த்தியிராத வசூல் சாதனையை படைக்கும் என திரையுலக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட இந்திய திரையுலகின் முன்னணி பிரபலங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி, நடிகர்கள் நாகார்ஜுனா, அபிஷேக் பச்சன், யஷ், நடிகை நிதி அகர்வால் உள்ளிட்ட ஏராளமானவர்கள் படத்தைப் பற்றி தங்களது கருத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்து, பாராட்டுவதுடன், அன்பினையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
பிரபாஸின் 'கல்கி 2898 கிபி' இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் புதிய வசூல் சாதனையை படைத்து வருகிறது.
நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் 'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா
நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் 'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா!
XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் 'நேசிப்பாயா' படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் லான்ச் விழா நடைபெற்றது.
தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ பேசியதாவது, "பிஸி ஷெட்யூலில் நேரம் ஒதுக்கி வந்த நயன்தாரா மேம்க்கு நன்றி. ஆர்யா சாருக்கும் நன்றி. எங்கள் குடும்பத்திற்கே எமோஷனலான நாள் இது. 'மாஸ்டர்' படம் தயாரிக்கும்போது நிறைய சவால்கள் இருந்தது. ஆனால், விஜய் சார் கரியரில் அது சிறந்த படம் எனும்போது நாங்கள் பட்ட கஷ்டமெல்லாம் ஒன்றும் இல்லை என்று நினைத்தோம். அதற்கடுத்த பெரிய படம் என்னுடைய மருமகன் ஆகாஷூக்கு அமையும் என்று நினைக்கவில்லை. என் மகள் சிநேகா, ஆகாஷை விரும்புகிறேன் என்று சொன்னதும் நாங்கள் எந்த விதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. சவால்களை வாய்ப்பாக மாற்றி கடின உழைப்பை நாம் விரும்பும் ஒன்றுக்கு தர வேண்டும். நடிப்பில் அதெல்லாம் தாக்குப் பிடிப்பீர்களா என்று ஆகாஷிடம் கேட்டேன். அந்த நம்பிக்கை ஆகாஷிடம் இருந்தது. ஆகாஷை பெரிய அளவில் அறிமுகம் செய்ய வேண்டும், அவரிடம் இருக்கும் ப்ளஸை திரையில் சரியாக கொண்டு வர வேண்டும். இதற்கெல்லாம் சரியான இயக்குநர் விஷ்ணு வர்தன் தான் என என்னுடைய மகள் முடிவெடுத்து மும்பை போய் அவரைப் பார்த்து பேசி சம்மதிக்க வைத்தாள். விஷ்ணு வர்தனும் கதையை சிறப்பாக செய்து கொடுத்துள்ளார். அதிதியும் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார். யுவன் இசையில் பாடல்கள் நன்றாக வந்துள்ளது. தொழில்நுட்ப குழுவினர் சிறந்த பணி கொடுத்துள்ளனர். படம் நன்றாக வர வாழ்த்துக்கள்".
இணைத்தயாரிப்பாளர் சிநேகா, “நிகழ்வுக்கு வந்திருக்கும் நயன்தாரா மேம்க்கு நன்றி. இந்த வாய்ப்பு கொடுத்த அப்பாவுக்கும் இப்படியான ஒரு ஸ்டைலிஷ் படத்தை எனக்கும் ஆகாஷூக்கும் கொடுத்த விஷ்ணு சாருக்கும் நன்றி. எல்லோரும் ஆகாஷை அன்போடு வரவேற்பீர்கள் என்று நம்புகிறேன்”.
நயன்தாரா, "'நேசிப்பாயா' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஆகாஷ் முரளிக்கு வாழ்த்துகள்! எனக்கு அதிதி ஷங்கரை ரொம்பவே பிடிக்கும். மிகத் திறமையானவர். நான் பொதுவாக எந்த விழாவுக்கும் போக மாட்டேன். ஆனால், இது ரொம்பவே ஸ்பெஷல். இயக்குநர் விஷ்ணு வர்தன், அனுவுடைய படம் இது. பதினைந்து வருடமாக எனக்கு இருவரும் நல்ல பழக்கம். என்னுடைய குடும்பம் போலதான் இவர்கள். அதனால், இந்த நிகழ்வுக்கு என்னால் நோ சொல்ல முடியவில்லை. இவர்கள் ஆகாஷை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி. ரொம்ப நாள் கழித்து ஒரு ஸ்வீட்டான லவ் ஸ்டோரி பார்க்க இருக்கிறீர்கள்" என்று வாழ்த்திவிட்டு படத்தில் ஆகாஷ் முரளியின் ஃப்ர்ஸ்ட் லுக்கை லான்ச் செய்தார்.
ஆகாஷ் முரளி, "இந்த விழாவிற்காக நேரம் எடுத்து என்னை அறிமுகப்படுத்திய நயன்தாரா மேம்க்கு நன்றி. என்னுடைய தயாரிப்பாளர் பிரிட்டோ சார், சினேகாவுக்கு நன்றி. என்னுடைய கோ-ஸ்டார் அதிதிக்கு நன்றி. நடிக்க ஆரம்பித்த புதிதில் நடுக்கமாக இருந்தது. அவர்தான் என்னை கூல் செய்தார். இயக்குநர் விஷ்ணு வர்தன் சார், அனு வர்தன் மேம், தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோருக்கும் நன்றி. யுவன் சார் இசையில் நடித்திருப்பது மகிழ்ச்சி. அம்மா, அண்ணன் வந்திருக்கிறார்கள். அண்ணாவிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். எல்லோருக்கும் நன்றி".
நடிகர் ஆர்யா, “எனக்குப் பிடித்த இயக்குநர் விஷ்ணு இயக்கத்தில் ஆகாஷ் அறிமுகம் ஆவதில் மகிழ்ச்சி. கொடுத்த காசில் ஸ்டைலிஷ்ஷாக படம் எடுப்பார் விஷ்ணு. அனுவுடைய காஸ்ட்யூமும் சிறப்பாக இருக்கும். இது எங்களுக்கு குடும்ப நிகழ்வு போலதான். படக்குழுவுக்கு வாழ்த்துகள்” எனச் சொல்லி ’நேசிப்பாயா’ படத்தில் அதிதியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அறிமுகப்படுத்தினார்.
நடிகை அதிதி, “முதலில் என்னுடைய தயாரிப்பாளர்கள் சேவியர் சார், சிநேகாவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் விஷ்ணு சாருக்கு நன்றி. என்னுடைய முதல் காதல் கதை இது. எல்லோருக்கும் பிடிக்கும். ஆகாஷூக்கு முதல் படம். சிறப்பாக செய்திருக்கிறார். முரளி சார், அதர்வா சார் மற்றும் எனக்கு கொடுத்த அன்பும் ஆதரவும் ஆகாஷூக்கும் கொடுங்கள். இந்த இண்டஸ்ட்ரியில் எனக்கு மிகவும் பிடித்த நயன் மேம் மற்றும் ஆர்யா சார் இருவரும் இந்த நிகழ்வை சிறப்பித்துக் கொடுத்ததற்கு நன்றி”.
இயக்குநர் விஷ்ணு வர்தன், “விழாவிற்கு வந்துள்ள நயன், ஆர்யா, தயாரிப்பாளர்கள் பிரிட்டோ சார், சிநேகா எல்லோருக்கும் நன்றி. இந்தப் படம் ஒரு லவ் டிராமா. கதையில் ஆக்ஷனும் உள்ளது. ஆகாஷூக்கு இது முதல் படம் போல இல்லாமல் சிறப்பாக நடித்துள்ளார். அதிதி பயங்கர எனர்ஜியாக உள்ளார். படம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்”.
தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, “இந்த நாள் எங்கள் எல்லோருக்கும் சிறப்பான நாள். படத்தின் முதல் பார்வையே நம்பிக்கை தந்துள்ளது. படக்குழுவுக்கு வாழ்த்துகள்!”.
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், “படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். பிரிட்டோ எதைத் தொட்டாலும் வெற்றிதான். இப்போது அவர் மருமகனை வைத்து படம் எடுத்துள்ளார். நிச்சயம் பெரிய வெற்றி கிடைக்கும்”.
தயாரிப்பாளர் தேனப்பன், “முரளி சாருடன் நிறைய படங்கள் வேலை பார்த்திருக்கிறேன். அவருடைய மகன் ஹீரோவாக அறிமுகமாகும் நிகழ்வில் நான் இருப்பது மகிழ்ச்சி. எல்லோருக்கும் வாழ்த்துகள்!”.
இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், “முரளியுடன் நிறைய நல்ல நினைவுகள் எனக்கு உள்ளது. அவருடைய குடும்பமும் எனக்கு நல்ல பழக்கம். அதர்வா இப்போது கலக்கிக் கொண்டிருக்கிறார். ஆகாஷை இந்த போஸ்டரில் பார்த்தபோது, ‘உதயா’ படத்தில் நாகர்ஜூனாவைப் பார்த்தது போல இருக்கிறது. இதற்கெல்லாம் பின்னால் ஸ்டைலிஷ் இயக்குநர் விஷ்ணு வர்தன் இருக்கிறார். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்!”.
இயக்குநர் இளன், “விஷ்ணு வர்தன் - யுவன் காம்பினேஷனில் ஒரு ஹீரோவுக்கு சூப்பரான அறிமுகம் இது. ஆகாஷ்- அதிதி காம்பினேஷன் போஸ்டரில் சூப்பராக உள்ளது. வாழ்த்துகள்”.
அதர்வா முரளி, "என்னுடைய குடும்பத்திற்கு சந்தோஷமான, அதே சமயம் எமோஷனலான நாள் இது. ஆகாஷூக்கு முதல் படத்திலேயே பிரிட்டோ சார் போன்ற ஒரு தயாரிப்பாளர் கிடைப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆகாஷ் கனவுக்கு வடிவம் கொடுத்த இயக்குநர் விஷ்ணுவுக்கு நன்றி. என்னுடைய முதல் படமான 'பாணா காத்தாடி'யில் யுவன் இசைக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்தேனா அதேபோலதான், ஆகாஷூக்கும். நான் அறிமுகமாகும் போது அப்பா இருந்தார். அந்த சமயத்தில் அவர் என்ன யோசித்திருப்பார் எனத் தெரியவில்லை. ஆனால், ஆகாஷ் மேடையில் பேசுவதை நான் கீழிருந்து பார்க்கும்போதுதான் எனக்கு அப்பாவின் மனநிலை புரிகிறது. ரொம்பவே எமோஷனலாக இருக்கு. அப்பாவின் கடைசி தருணத்தில் அம்மா, அக்கா, நான் என எல்லோருமே எமோஷனலாக இருந்தோம். அப்போ ஆகாஷ் சின்ன பையன். பாத்துக்கலாம் அண்ணா என எனக்கு ஆறுதல் சொன்னார். இப்போ அவர் ஹீரோவாக அறிமுகம் ஆவது மகிழ்ச்சி. அப்பாவுக்கும் எனக்கும் என்ன அன்பும் ஆதரவும் கொடுத்தீர்களோ அதைவிட ஒருபடி மேலே என் தம்பிக்கு நீங்கள் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்".
Round Table India and Ladies Circle India Collaborate on Transformative HEAL Project at Coimbatore GH Neonatal Ward
Round Table India and Ladies Circle India Collaborate on Transformative HEAL Project at Coimbatore GH Neonatal Ward
Coimbatore, June 28, 2024: In a commendable joint effort, Coimbatore Metropolitan Round Table 62 and Coimbatore Metropolitan Ladies Circle 23 have successfully completed a highly deserving HEAL project at the Coimbatore Government Hospital's Neonatal Ward. The two organizations have generously donated essential medical equipment, significantly enhancing the healthcare services provided to newborns and their mothers.
The donations include a state-of-the-art Stainless Steel Water Purifier with Hot and Cold Function, valued at Rs. 61,360, and an Ameda Breast Pump along with Breast Pump kits, worth Rs. 141,000. The total value of these contributions is Rs. 204,000.
These valuable additions are expected to have a profound impact on the Neonatal Ward, providing clean, safe drinking water for both staff and patients and facilitating breastfeeding for new mothers.
Photo Caption: Members from CMRT 62 and CMLC 23 donating towards HEAL project at the Coimbatore Government Hospital's Neonatal Ward.
Thanks & Regards
G. Sreenivasan
Friday, June 28, 2024
தளபதி' விஜய் கல்வி விருது வழங்கும் விழா
தளபதி' விஜய் கல்வி விருது வழங்கும் விழா!
'தளபதி' விஜய் அவர்களின் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெறும் கல்வி விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.*
32 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவை தனது பக்கம் கட்டி போட்டிருக்கும் 'தளபதி' விஜய் அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவங்கினார்.
கட்சியை துவங்கும் முன் பல்லாண்டுகளாக இயங்கி வந்த தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி, அதன் மூலம் பல நற்பணிகள் செய்து வந்தார். இந்த ஆண்டு கட்சியை துவங்குவதற்கு அடித்தளம் அமைப்பது போல், கடந்த ஆண்டு ஜுன் 17-ஆம் தேதி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புத் தேர்வில் தொகுதி வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களை அங்கீகரிக்கும் விதமாக சான்றிதழும் ஊக்கத் தொகையும் அளித்து உத்வேகப்படுத்தினார்.
இந்த ஆண்டு தமிழக வெற்றி கழக கட்சித் தலைவராக மீண்டும் இந்த கல்வி விருது வழங்கும் விழாவின் மூலம் 21 மாவட்டங்களைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புத் தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தொகுதிகள் வாரியாக தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு, அவர்களது பெற்றோர் முன்னிலையில் சான்றிதழும் ஊக்கத்தக்கையும் வழங்கி கௌரவிக்கிறார்.
இந்நிகழ்வு சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா திருமண மண்டபத்தில் இன்று(28-06-24) நடைபெற்று வருகிறது. 800-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் நிகழ்வில் கலந்து கொண்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை பெற்று வருகிறார்கள்.
இந்நிகழ்வில் 12-ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த, சென்னை மாவட்டம் கொளத்தூர் தொகுதியைச் சேர்ந்த
S.பிரதிக்ஷா, திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதியைச் சேர்ந்த E.மகாலட்சுமி, செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் தொகுதியைச் சேர்ந்த தோஷிதா லட்சுமி ஆகிய மாணவிகளுக்கு 'வைர தோடு' வழங்கி கௌரவித்தார் 'தளபதி'விஜய்.
அதேபோல 10-ஆம் வகுப்பிலும் தருமபுரி மாவட்டம் அரூர் தொகுதியைச் சேர்ந்த தேவதர்ஷினி மற்றும் A.சந்தியா, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியைச் சேர்ந்த K.காவ்யாஶ்ரீ, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியைச் சேர்ந்த R.கோபிகா, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியைச் சேர்ந்த D.காவ்யா ஜனனி, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியைச் சேர்ந்த சஞ்சனா அனுஷ் ஆகியோருக்கு வைர மோதிரம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வரும் புதன்கிழமை(03-07-2024) அன்று மீதி உள்ள 19 மாவட்டங்களைச் சார்ந்த மாணவ,மாணவியருக்கும் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா இதே திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
விழாவிற்கு வந்த அனைவருக்கும் சிறப்பான மதிய உணவு வழங்கப்பட்டது.
Celebrating the 10th United Nations International Yoga Day in Chennai Jointly Organized by Born To Win Research Foundation Trust and Sustainable Development Council
Mad Gala 2024 Fashion Meet celebrated with Rap Singer Iykki Berry, Actress Sanchita Shetty, Actress Upasana RC, Ms.Harisha, Mr.Vicky Kapoor, Mr.Ramesh & Mr.Raj
சமூக செயற்பாட்டாளர் அப்சரா ரெட்டி மற்றும் அவரது குட் டீட்ஸ் கிளப் இணைந்து பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான மெகா மருத்துவ முகாமை நடத்தினர்.
Thursday, June 27, 2024
Kalki 2898 AD - திரைவிமர்சனம்
KALKI 2898 AD - CAST AND CREW
PRODUCTION - VYJAYANTHI FILMS
PRODUCER – C ASWINI DUTT
RELEASE – SRI LAKSHMI MOVIES – N.V PRASAD
CAST
PRABHAS as BHAIRAVA
AMITABH BACHCHAN as ASHWATTHAMA
KAMAL HAASAN as SUPREME YASKIN
DEEPIKA PADUKONE as SUMATHI
DISHA PATANI as ROXIE
SHOBHANA as MARIAM
PASUPATHY as VEERAN
BRAHMANANDAM as RAJAN
CREW
DIRECTOR – NAG ASHWIN
DOP – DJORDJE STOJILJKOVIC
MUSIC – SANTHOSH NARAYANAN
EDITOR – KOTAGIRI VENKATESWARA RAO
BANNER - VYJAYANTHI FILMS
PRODUCED BY – C ASWINI DUTT
RELEASE – SRI LAKSHMI MOVIES – N.V PRASAD.
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பில் உருவாகும் 'யூ ஆர் நெக்ஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது!
மொஃஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி ஆகியோரது தயாரிப்பில் முன்னணி நடிகர்களுடன் புதுமுகங்கள் அறிமுகமாகும் 'யூ ஆர் நெக்ஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் துவங்கியது.
ஐமேக் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்கை ஃபிரேம் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய இரு நிறுவனங்கள் சார்பில் மொஃஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி ஆகியோரது தயாரிப்பில், ஷரீஃப் அவர்களது எழுத்து மற்றும் இயக்கத்தில் தயாராகும் படமே 'யூ ஆர் நெக்ஸ்ட்'.
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் இளைஞர்களைச் சுற்றி நடைபெறும் பல்வேறு சம்பவங்களை ஹாரர் பின்னணி கொண்ட திரைப்படமாக உருவாக்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். உள்ளது. இத்திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக தமிழ்,கன்னடம்,தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது.
இந்திய சினிமா ரசிகர்களுக்கு இத்திரைப்படத்தின் மூலம் புதுவிதமான அனுபவத்தை வழங்க படக்குழு தயாராகியுள்ளது.
முன்னதாக படத்தில் நடிக்கும் கே.எஸ் ரவிக்குமார் ரச்சிதா மகாலட்சுமி மற்றும் பல நட்சத்திரங்கள், படக்குழுவினர் முன்னிலையில் இத்திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது.
படத்தின் பூஜை நிறைவுற்றவுடன் முதலாவதாக பேசிய இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்,"இந்த படத்தின் கதையை கேட்டவுடன் வித்தியாசமான ஹாரர் கதையாக இருந்தது.என்னுடைய கதாபாத்திரம் எனக்கு பிடித்திருந்தது.மேலும் இந்த திரைப்படம் இளைஞர்களுக்கான திரைப்படமாக உருவாகிறது..இயக்குனர் ஷரீஃப் இந்த திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆகிறார். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்,” என்றார்.
அடுத்ததாக பேசிய ரச்சிதா மகாலட்சுமி,”இந்த படம் எனக்கு ஒரு புதிராகவே உள்ளது. கடைசி நிமிடத்தில் படத்தின் கதையை கூறினார்கள். கதை பிடித்திருந்ததாலும் படத்தில் நடிக்கும் சிறந்த நட்சத்திரங்களாலும் நடிக்க ஒத்துக் கொண்டேன். படத்தின் கதை ஹாரர் கதையம்சத்தை கொண்டது. உங்கள் அனைவரது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் திரைப்படமாக இருக்கும்" என்றார்.
இத்திரைப்படத்தில் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் திரு கே.எஸ்.ரவிக்குமார், ரச்சிதா மகாலட்சுமி, உதயா, ஜனனி, தினேஷ், திவ்யா கிருஷ்ணன், அர்ஷத், கே பி ஒய் வினோத், ரஃபி, 'புல்லட்' சமி மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.
பின்னர் பேசிய இயக்குனர் ஷரீஃப்,"யூ ஆர் நெக்ஸ்ட் திரைப்படத்தின் மூலம் நான் தமிழ் திரையுலகுக்கு இயக்குனராக அறிமுகம் ஆகின்றேன். என்னையும் என் கதையும் நம்பி இந்த படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்ட தயாரிப்பாளர்கள் மொஃஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி ஆகிய இருவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல இங்கு வந்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் படத்தில் நடிக்கும் நடிகர்,நடிகைகளுக்கும் ஊடகத்துறையினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்",என்றார்.
இத்திரைப்படத்தில் கே ஜி ரத்தீஷ் ஒளிப்பதிவாளராகவும், அஜித் படத்தொகுப்பாளராகவும், டிஜிட்டல் மீடியா மூலமாக பிரபலமான அறிமுக இசையமைப்பாளர் 'இசை பேட்டை'வசந்த் இசையமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.வேணு கலை இயக்கத்தையும், ஓம் பிரகாஷ் சண்டை பயிற்சியையும், 'கலைமாமணி'ஸ்ரீதர் நடனத்தையும் கவனிக்கிறார்கள்.
ஆடை வடிவமைப்பாளராக ஈகா பிரவீனும், தயாரிப்பு நிர்வாகியாக நந்தகுமாரும் இத்திரைப்படத்தில் பணியாற்றுகின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது.
நடிகர்கள் :-
கே.எஸ்.ரவிக்குமார்
ரச்சிதா மகாலட்சுமி
உதயா
ஜனனி
தினேஷ்
திவ்யா கிருஷ்ணன்
அர்ஷத்
கேபிஒய் வினோத்
ரஃபி
‘புல்லட்’சமி
படக்குழு :-
தயாரிப்பு : ஐமாக் ஃபிலிம்ஸ் பிரைவேட்.லிட்., & ஸ்கை ஃபிரேம் என்டர்டெயின்மென்ட்
தயாரிப்பாளர் : மொஃஹிதீன் அப்துல் காதர் & மணி
எழுத்து & இயக்கம் : ஷரீஃப்
ஒளிப்பதிவு : கே ஜி ரத்தீஷ்
படத்தொகுப்பு : அஜித்
இசை : ‘இசைப்பேட்டை’ வசந்த்
கலை : வேணு
நடனம் : 'கலைமாமணி' ஸ்ரீதர்
ஆடை வடிவமைப்பு : ஈகா பிரவீன்
படங்கள் : சக்தி பிரியன்
விளம்பர வடிவமைப்பு : மோனிக் | டிஜின் ஸ்டுடியோஸ்
தயாரிப்பு நிர்வாகி : நந்தகுமார்
மக்கள் தொடர்பு : ரியாஸ் K அஹ்மத்
Wednesday, June 26, 2024
கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் இணையும் “இந்தியன் 2” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !
Monday, June 24, 2024
கல்கி 2898 கி.பி க்ரோனிக்கிள்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது - இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களை ஒன்றாக கண்டுகளியுங்கள்
Bayamariya Brammai - திரைவிமர்சனம்
Cast:-JD, GURU SOMASUNTHARAM, HARISH UTHAMAN. , JOHN VIJAY. , SAI PIRIYANKA RUTH. , VISHVANTH., HARISH RAJU., JACK ROBBIN., VINOTH SAGAR, AK., DIVYA GANESH
Director:-RAHUL KABALI.
Sunday, June 23, 2024
Indo Cine Appreciation Foundation, Instituto Cervantes in New Delhi and Consulate of Spain in Chennai Presents: Spanish Film Festival at Avichi College of Arts & Science*
கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை போட்டி 2024
Jugalbandhi Rangapravesam of Miss. Aaraadhana Radhakrishnan and Mrs Malar Radhakrishnan
Jugalbandhi
Rangapravesam of Miss. Aaraadhana Radhakrishnan and Mrs Malar Radhakrishnan
Chennai, June 21, 2024 – The prestigious Jugalbandhi Rangapravesam of Miss. Aaraadhana Radhakrishnan and Mrs Malar Radhakrishnan was
held at Rani Seethai Hall, Anna Salai, Chennai on June 21st 2024.
This grand event, organized by Koothambalam (Academy of Bharathanatyam &
Mohiniyattam), featured a remarkable Jugalbandhi Rangapravesam in
Bharathanatyam by Selvi. Aaraadhana Radhakrishnan, a disciple of Acharya Ms.
Saathvika Aravindan, and Mohiniyattam by Smt. Malar Radhakrishnan, disciple of
Guru Smt. Vasantha Aravindan.
Ms. Aaraadhana, aged 14, began her dance
journey at six and has since participated in numerous events, showcasing her
dedication to Bharathanatyam. Under the tutelage of Acharya Ms. Saathvika
Aravindan, she has honed her skills and remains actively engaged in academic
pursuits and extracurricular activities. Aaraadhana is also known for her IT
skills, Carnatic music talents, and multifaceted interests in arts, sports, and
crafts.
Mrs. Malar Radhakrishnan, aged 42,
performed her Bharatanatyam Arangetram in 1995 and has been an IT professional
while pursuing her passion for Carnatic music and Mohiniyattam. Trained under
Guru Kalaimamani Ms. SV Usha, she has won accolades in various music and dance
platforms, including the "Bhajan Samrat" title by Sankara TV in 2018.
She has also presented
film songs in popular program “QFR” under the guidance of Film Music Analyst
Smt. Subhasree Thanikachalam.
The event was graced by esteemed chief
guests, “Kalaimamani” Sri. Chitra Lakshmanan (Actor & Producer), Music
Producer and Analyst Smt. Subhasree Thanikachalam (Founder & Curator,
Maximum Media), and "Sarva Lakshana Natya Mayuri" and "Natya
Ratnam" Smt. Smrithi Vishwanath (Disciple of Kalaimamani Smt. Anitha Guha,
Chennai).
The Arangetram was a beautiful blend of
tradition, culture, and talent, leaving a lasting impression on all attendees,
friends and relatives. The
story depiction of Mahishasuramardhini in Varnam by Malar and Depiction of
Krishna’s mischiefs in Sabdham by Aaraadhana received special applause from
audience. Malar’s “Thalaattu” in Mohiniyattam and Aaraadhana’s “Ananda Nadam”
in Bharathanatyam were appreciated by Chief guests. “Krithi” and “Thillana” performed
as Jugalbandhi by Malar and Aaraadhana was a visual treat for the audience to
witness two beautiful dance forms at the same time on the stage.
Saturday, June 22, 2024
The Former captain of the Indian women's cricket team Sudha Shah Inspires at Unified Special Carnival 2024: Celebrating Inclusivity for Special Children
சென்னைஸ் அமிர்தா குழுமம் நிறுவனம் தனது 8வது பட்டமளிப்பு விழாவைக் கொண்டாடியது.
LAANDHAR - திரைவிமர்சனம்
கோயம்புத்தூரைச் சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரியான விதார்த், தனது மனைவியுடன் அழகான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். ஒரு இரவில் ஒரு போலீஸ்காரர் சாலையில் சந்தேகத்திற்கிடமான நபரைப் பார்க்கிறார்.
அவர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் அளித்து காப்புப்பிரதிக்கு அழைப்பு விடுக்கிறார். அந்த மர்ம நபரை போலீசார் பிடிக்க முயன்றபோது, அந்த நபர் அவர்களை தாக்கிவிட்டு தப்பியோடினார்.
அப்போது அந்த நபரை பிடிக்க விதார்த் முயன்றார். இதற்கிடையில் மர்ம மரணங்கள் தொடர்ந்து நடைபெறுவது காவல் துறைக்கு பெரும் சவாலாக உள்ளது.
யார் அந்த மர்ம மனிதன்? கொலைகளின் பின்னணி என்ன? லாந்தரின் முக்கியப் பகுதியான தொடர் கொலையாளியை விதார்த்தால் பிடிக்க முடிந்ததா?
சாஜிசலீம் இயக்கிய இந்தப் படம், போலீஸ்காரர்களுக்கும் தொடர் கொலையாளிக்கும் இடையே நடக்கும் பூனை மற்றும் எலி விளையாட்டு.
படத்தின் கதைக்களம் ஒன்றும் புதிதல்ல, திரைக்கதையும் பெரும்பாலும் தட்டையானது.
இருப்பினும், பார்வையாளர்களை ஆர்வமாக வைத்திருக்க போதுமான முக்கிய தருணங்கள் உள்ளன. சிறப்பாக எழுதினால் திரைப்படம் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.
விதார்த் வழக்கம் போல் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார், அவரது நடிப்பு படத்தின் சேமிப்பு கருணைகளில் ஒன்றாகும்.
சஹானா மஞ்சு நல்ல திரைவெளியைப் பகிர்ந்துள்ளார் மற்றும் அவரது பாத்திரத்தில் ஈர்க்கிறார்.
நகுல் மற்றும் ஸ்வேதா டோரத்தி முக்கிய வேடங்களில் அவர்களிடமிருந்து எதிர்பார்த்ததை வழங்கியுள்ளனர்.
பிரவீனின் பின்னணி இசை சுவாரஸ்யமாக உள்ளது மற்றும் ஞானசௌந்தரின் ஒளிப்பதிவினால் பாராட்டப்பட்டது.
படத்தின் மற்ற தொழில்நுட்ப அம்சங்களும் கவனிக்கத்தக்கவை.
'நடன புயல்' பிரபுதேவா நடிக்கும் 'பேட்ட ராப்' படத்தின் டீசர் வெளியீடு
மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட பிரபுதேவாவின் 'பேட்ட ராப்' பட டீசர்!
நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான பிரபுதேவா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'பேட்ட ராப்' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் எஸ் ஜே சினு இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பேட்ட ராப்' எனும் திரைப்படத்தில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், ரியாஸ் கான், மைம் கோபி, ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி கே தினில் கதை எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்ய, டி. இமான் இசையமைத்திருக்கிறார். A.R மோகன் கலை இயக்கத்தை கவனிக்க பட தொகுப்பு பணிகளை நிஷாத் யூசுப் மேற்கொண்டிருக்கிறார். இன்னிசையுடன் கூடிய ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை புளூ ஹில் ஃபிலிம்ஸ் மற்றும் புளூ ஹில் நைல் கம்யூனிகேஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோபி பி. சாம் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த டீசரில் நடனப்புயல் பிரபுதேவாவின் அசத்தலான நடனமும் , ஆக்சன் காட்சிகளும், வேதிகாவின் வித்தியாசமான தோற்றமும்.. ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது.
Friday, June 21, 2024
காது கேளாத இளைஞர் கதாநாயகனாக நடித்திருக்கும் "சூரியனும் சூரியகாந்தியும்"!
ராணா டகுபதி வெளியிட்ட விராட் கர்ணா நடிக்கும் ' நாக பந்தம் ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்*
*ராணா டகுபதி வெளியிட்ட விராட் கர்ணா நடிக்கும் ' நாக பந்தம் ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்* நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா-...
-
நேர்மையுடன் வாழ்ந்த உதவி கமிஷனர் ஒருவரின் வாழ்க்கை " கடமை" என்ற பெயரில் படமாகிறது! _________ புது இயக்குனர் அறிமுகமாகிறார...
-
நான் இசையமைத்த முதல் ஹாரர் திரைப்படம் - " P 2 - இருவர் " தான் இசை விழாவில் இசையமைப்பாளர் தேவா !! "...