Wednesday, July 31, 2024

கடந்த பத்து வருடங்களில் விளையாட்டுத்துறை வளர்ந்திருக்கிறது” ; நாற்கரப்போர் விழாவில் நடிகை நமீதா பெருமிதம்


 கடந்த பத்து வருடங்களில் விளையாட்டுத்துறை வளர்ந்திருக்கிறது” ; நாற்கரப்போர் விழாவில் நடிகை நமீதா பெருமிதம் 

V6 பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் S.வேலாயுதம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நாற்கரப்போர்’.. ஹெச்.வினோத், ராஜபாண்டி உள்ளிட்ட இயக்குநர்களிடம் இவர் உதவி இயக்குநராக பணியாற்றிய இயக்குநர் ஸ்ரீ வெற்றி இப்படத்தை இயக்கியுள்ளார். 

குப்பை அள்ளும் சமுதாயத்தில் இருந்து வந்த ஒருவன் எப்படி ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆகிறான் ? அதற்காக அவன் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்பதை சொல்லும் அழகான ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாக சதுரங்க விளையாட்டை மையப்படுத்தி இந்த ‘நாற்கரப்போர்’ உருவாகி உள்ளது.

இறுகப்பற்று படம் மூலம் கவனம் பெற்ற நடிகை அபர்ணதி கதாநாயகியாக நடிக்க, படத்தின் மைய கதாபாத்திரமாக சேத்துமான் படத்தில் நடித்த அஸ்வின் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் காலா, கபாலி புகழ் லிங்கேஸ், வில்லனாக சுரேஷ் மேனன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். 

பிரபல மலையாள இயக்குனர் மேஜர் ரவியின் மகன் அர்ஜுன் ரவி இப்படத்தின் மூலம் தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். சந்தோஷ் நாராயணனிடம் பல படங்களில் இணைந்து பணியாற்றிய தினேஷ் ஆண்டனி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ரஞ்சித் சி கே என்பவர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். 


தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக இந்தப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன.. வரும் ஆகஸ்ட்-9ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில் நேற்று மாலை இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நடிகர் லிங்கேஷ் பேசும்போது, “ இந்த கதையை நம்பிக்கையுடன் தயாரிக்க முன் வந்த தயாரிப்பாளர் வேலாயுதம் அவர்களுக்கு நன்றி. படம் முடிவடைந்ததும் இதை மக்களிடம் கொண்டு செல்வதற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இதில் இணைந்ததுமே திருப்தியும் சந்தோசமும் ஏற்பட்டது. இந்த படத்திற்குள் நான் வந்ததற்கு காரணம் கலை இயக்குனர் ராகவன் தான். நான் கேட்ட சம்பளம் காரணமாக இந்த படத்தில் நடிப்பதற்கு இழுபறி ஏற்பட்ட நிலையில் இது துப்புரவு பணியாளர்கள் பற்றிய கதை என ராகவன் கூறியதும் மறு பேச்சின்றி இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இது முக்கியமான படம் பயங்கரமாக அரசியல் பற்றி பேசி இருக்கிறது” என்றார்.

இயக்குநர் லெனின் பாரதி பேசும்போது, “விளையாட்டை மட்டும்தான் இரண்டு பிரிவாக பிரிக்கலாம். ஒன்று உடல் உழைப்பு சார்ந்த விளையாட்டு. இன்னொன்று மூளை சார்ந்தது. உடல் உழைப்பு சார்ந்த விளையாட்டில் உலகம் முழுவதும் உள்ள கருப்பின மக்கள் தான் சாதனை செய்து கொண்டே இருப்பார்கள். ஆனால் உடல் உறுதியாக இருப்பவனுக்கு மூளை இருக்காது என்கிற தப்பான ஒரு எண்ணத்தை இங்கே உள்ள ஒரு கூட்டம்  தொடர்ந்து நம்ப வைத்துக்கொண்டே இருக்கிறது. விளையாட்டு மட்டுமல்ல சமீப காலமாக கவனித்துப் பார்த்தால் கிரிக்கெட், புட்பால் வர்ணனை செய்வதில் கூட ஒரு குறிப்பிட்ட கூட்டம் தான் இருக்கிறது. அதில் கூட சாதி ஆதிக்கத்தை காட்டிக் கொண்டே இருக்கின்றனர். அப்படிப்பட்ட நிலையில் எங்களுக்கும் மூளை இருக்கிறது என்று ஒரு ஒதுக்கப்பட்ட இடத்திலிருந்து ஒரு சிறுவனை கொண்டு வந்து இந்த படத்தை எடுத்திருப்பது ஜனரஞ்சகமாக இருக்கிறது” என கூறினார்.

நடிகை கோமல் சர்மா பேசும்போது, “தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியை பொருத்தவரை அவர் ஒரு சமூக ஆர்வலரும் கூட. அவருக்கு மிகப்பெரிய நட்சத்திரங்கள் கூட கால்சீட் கொடுக்க முன் வரும் நிலையில் அவர் இயக்கிய மிக மிக அவசரம் படமாகட்டும் அல்லது இப்போது வெளியிட இருக்கும் இந்த படமாகட்டும் லாப நோக்கத்தை மட்டுமே கணக்கில் கொள்ளாமல் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை எப்படி கொண்டு போய் சேர்க்க முடியும் என்று தான் பார்க்கிறார். நான் ஒரு விளையாட்டு வீராங்கனையாகத்தான் எல்லோருக்கும் முதலில் அறிமுகமாகி இருக்கிறேன். எப்போது வெற்றி பெற்றாலும் மற்றவர்களுக்கு உதவியாக இரு என்றுதான் என் அம்மா சொல்லிக் கொண்டிருப்பார். நிறைய மறுவாழ்வு முகாம்களில் சென்று பார்க்கும் போது மனதில் நிறைய வலி ஏற்படும். அவங்களும் நம்மைப் போலவே கடின உழைப்பை கொடுக்கிறார்கள். நம்மைப் போலவே அன்பாக இருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் திரும்பவும் அவர்கள் வீடு திரும்ப முடியுமா ? திரும்பவும் அவர்களால் பழைய வாழ்க்கை வாழ முடியுமா என நினைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு நமக்கும் இருக்கும் வித்தியாசம் என்றால் அது கல்வி மற்றும் விளையாட்டு மட்டும்தான் அவர்களுக்கும் விளையாட்டுக்கான முக்கியத்துவத்தை கொடுக்கும் போது அவர்களும் மேலே வர முடியும். சுரேஷ் மேனன் சாருடன் நான் மலையாள படத்தில் நடித்திருக்கிறேன். இந்த படத்தில் அவர் நடித்திருப்பது மிகப்பெரிய பலம். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்று கூறினார்.

நடிகர் கவிதா பாரதி பேசும்போது, “இந்த படத்தின் நோக்கம் மற்றும் கதை குறித்து படத்தின் இயக்குநர் தெளிவாக எடுத்துரைத்தார். இந்த விழாவில் மேடை ஏற்றி அழைத்துப் பேச வைத்த பலரும் ‘கருப்பு காய்’களாக இருந்தார்கள் என்பது நான் ரொம்பவே பெருமைப்படும் விஷயம். இந்த படம் எதைப்பற்றி பேசுகிறது என்பது மட்டுமல்ல. இதில் யார் யாரெல்லாம் பேசியிருக்கிறார்கள் என்பது கூட  எனக்கு பிடித்திருக்கிறது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி எந்த படத்தை வெளியிடுகிறாரோ அது நல்ல ஆழமான கருத்துள்ள படம் என்பது அடையாளமாகி விட்டது. யார் என்ன படிக்க வேண்டும், என்ன பெயர் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது சமூகத்தில் எப்படி ஒரு நீண்ட நெடிய போராட்டமாக இருந்து வருகிறதோ திரைப்படத்திற்குள்ளும் அப்படி ஒரு போராட்டம் நடந்து கொண்டே தான் இருந்திருக்கிறது. ஓடுக்கப்பட்டவர்களைப் பற்றி பேசுவதற்கு அவர்களை பற்றி யார் யாரெல்லாம் பேசலாம் என்பதற்கு இவ்வளவு காலம் ஆகி இருக்கிறது. பேலசோ தியேட்டரில் எந்த படம் போட வேண்டும் காசி தியேட்டரில் எந்த படம் ஓட வேண்டும் என்பதில் கூட ஒரு பாகுபாடு இருக்கிறது. அந்த இடத்தை அடைவதற்கு நம்முடைய கருப்பு காய்கள் நீண்ட நெடிய போராட்டத்தில் நடத்தி வந்திருக்கிறார்கள். நான் விஜய் டிவிக்காக சலனம் என்கிற ஒரு தொடரை இயக்கிய போது அதில் என்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் தான் லிங்கேஷ். அவர் பெரிய இயக்குனராக வருவார் என்று நினைத்தேன்.. நடிகராக மாறிவிட்டார்” இன்று கூறினார்.

நடிகை நமீதாவின் கணவர் வீரா பேசும்போது, ‘மிகப்பெரிய நட்சத்திரங்களுடன் சேர்ந்து படம் பண்ணக்கூடிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி போன்ற ஒருவர், ஒரு படத்தை பார்த்துவிட்டு எப்போது அதை வெளியிட முன் வருகிறாரோ அப்போதே இந்த படம்  வெற்றி பெற்று விட்டது என்று சொல்லலாம். சுரேஷ் காமாட்சி போன்ற வர்த்தகம் தெரிந்த நிறைய தயாரிப்பாளர்கள் இதுபோன்று படங்களை வெளியிட முன்வர வேண்டும்” என்றார்.



நடிகை நமீதா பேசும்போது, “தமிழ் ரசிகர்களுக்கு சினிமா என்றால் பொழுதுபோக்கு, அதன் கூடவே ஒரு சமூகத்திற்கு தேவையான செய்தி இருந்தால் போதுமானது. அதற்கு 100 கோடி ரூபாய் பட்ஜெட், மிகப்பெரிய இசையமைப்பாளர் என எதையும் அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. நம் நாட்டில் இப்போது விளையாட்டு துறையில் நல்ல வளர்ச்சி இருக்கிறது. 15 வருடங்களுக்கு முன்பு கபில்தேவ், சச்சின், சானியா மிர்சா என்று சில ஆட்கள் தான் பிரபலமாக இருந்தார்கள். இந்த பத்து வருடங்களில் தான் நிறைய வீரர்கள் விளையாட்டுத்துறையில் சாதிக்கிறார்கள். ஒலிம்பிக்கில் ஒரு பெண் தங்க மெடல் பெற்று தந்திருக்கிறார். தமிழ்நாட்டின் பெருமையாக பிரக்யானந்தா செஸ் சாம்பியன் ஆக ஜொலிக்கிறார். விளையாட்டு வீரர்களுக்கு இப்போது நிறைய நம்பிக்கை இருக்கிறது. பலன்கள் கிடைக்கிறது. உங்கள் வீட்டில், உங்கள் சுற்று வட்டத்தில் ஒரு குழந்தைக்கு விளையாட்டு ஆர்வம் இருக்கிறது என்றால் நிச்சயமாக அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும், விளையாட்டு ஒருவரை மிகவும் ஒழுக்கமானவராக மாற்றுகிறது, அதன் பிறகு வாழ்க்கையில் எல்லாமே எளிதாக வந்துவிடும், தயவுசெய்து அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் உங்களது வலது பக்க பாக்கெட்டில் மொபைல் ஃபோனை வைக்காதீர்கள், அதனால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும்” என்று கூறினார்.

இயக்குநர் அமுதகானம் ஆதவன் பேசும்போது, ‘நாற்கரப்போர் என இந்த டைட்டிலிலேயே ஒரு போராட்டம் தெரிந்தாலும் இந்த படத்தை தயாரிப்பதிலோ அல்லது இதை வெளியிடுவதிலோ எந்த போராட்டமும் இருக்கவில்லை என்று சொல்லலாம். நானும் ஒரு இயக்குநராக பல படங்களை இயக்கியுள்ளேன். அவை வெற்றி தோல்வி என்பதைவிட அவற்றையெல்லாம் ரிலீஸ் செய்துள்ளேன் என்பது தான் முக்கியம். ரிலீஸ் சமயத்தில் ஒவ்வொரு காலகட்டமும் சினிமாவில் போராட்டம் தான். இந்த படத்திற்கு மிகப்பெரிய யோகம் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வடிவில் வந்திருக்கிறது. இந்த படத்தை நான் ஏற்கனவே பார்த்து விட்டவன் என்கிற முறையில் சொல்கிறேன், சமீப காலமாக தமிழ் சினிமாவில் தரமான படம் என்கிற பெயரில் படங்கள் வெளிவரவில்லை. ஆனால் அதை உடைத்து எறியும் விதமாக இந்த நாற்கரப்போர் வருகிறது” என்று கூறினார்.

இயக்குநர் யுரேகா பேசும்போது, ‘மிக நுட்பமான சிறப்பான அரசியலை பேசும் ஒரு படமாக இந்த நாற்கரப்போர் இருக்கும் என நான் பார்க்கிறேன். நாற்கரப்போர் என்கிற தலைப்பு என்னை சற்று சிந்திக்க வைத்தது. விளையாட்டில் மட்டுமல்ல இசையிலும் கூட இனவெறி இருக்கிறது. பியானோவில் கூட கருப்பு வெள்ளை கட்டை இருக்கிறது. வெள்ளைக்காரர்கள் எதையெல்லாம் உருவாக்கினார்களோ தங்களை முன்னிறுத்தி தான் எல்லா சாதனங்களையும் உருவாக்கினார்கள் என்பது தான் வரலாற்று உண்மை. துப்புரவு தொழிலாளர்களை முன்னிறுத்தி இந்த விளையாட்டுடன் இணைத்து இருப்பது பெருமையாக இருக்கிறது. குப்பை போடும் நாம்தான் குப்பைக்காரர்கள்.. அதை துப்புரவு செய்யும் நபர்கள் சுத்தக்காரர்கள். இந்தப் படத்தில் நடித்திருக்கும் அஸ்வின் திரையில் மட்டுமல்ல தரையிலும் இன்னும் எமோஷனலாககவே இருக்கிறான் என்றால் அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி உணர்ந்து அவன் நடிப்பதற்கு காரணமான இயக்குநர் தான். இந்த படம் தேசிய விருதுக்கான திரைப்படம். அப்படி இந்த படத்துக்கு விருது கிடைக்கவில்லை என்றால் தேர்வுக்குழுவில் ஏதோ குழப்பம் என்று தான் அர்த்தம்” என கூறினார்.

இயக்குநர் மீரா கதிரவன் பேசும்போது, “நாற்கரப்போர் என தமிழில் பெயர் வைத்ததற்கு நன்றி. தமிழில் பெயர் வைக்க மாட்டோம் என பலர் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார்கள். இங்கே முதல் படம் எடுக்க வருபவர்களுக்கு ஒரு பயம் இருக்கிறது. ஆனாலும் முதல் படத்திலேயே சமூக அக்கறை கொண்ட படமாக இதை எடுத்து இருக்கிறார்கள். சாராயக்கடை அருகிலேயே இருக்கும் இளநீர் கடைக்கும் ஒரு வியாபாரம் உண்டு என்பது போல, இங்கே எல்லா படைப்புகளுக்கும் ஒரு வியாபாரம் இருக்கிறது. எளிய மனிதர்கள் குறித்து வரக்கூடிய படங்களுக்கு இப்போது நல்ல கமர்சியல் வேல்யூ இருக்கிறது. சுரேஷ் காமாட்சி போன்ற தயாரிப்பாளர்கள் அபூர்வமானவர்கள். இந்த படத்தை அவர் வெளியிடுவதை வெற்றியாக பார்க்கிறேன். மற்ற திரையுலகங்களில் பெரிய படங்கள் வெளியாகும் போது அவற்றுக்கு இணையாக சின்ன படங்களும் வெளியாகும்  ஆனால் துரதிர்ஷ்டவசமாக நம் தமிழ் திரை உலகில் அப்படி இல்லை.  தேசிய விருது பற்றி எல்லாம் யோசிக்க வேண்டாம். மக்கள் தரும் விருதுதான் முக்கியம்” என்றார்

இயக்குனர் சுப்பிரமணிய சிவா பேசும்போது, “சுரேஷ் காமாட்சி இயக்கிய மிக மிக அவசரம் படம் சின்ன படமாக இருந்தாலும் அதுதான் அதிக லாபத்தை கொடுத்த படம் என்று சொல்வார். அப்படி அதிக லாபத்தை கொடுக்கும் படம் பெரிய படம் ஆகிவிடுகிறது. அந்த வகையில் இந்த நாற்கரப்போர் படம் மிகப்பெரிய லாபகரமாக அமைய வேண்டும். சாதாரண மனிதர்கள் எல்லோருக்குமே அசாதாரண வாழ்க்கை தான் கிடைக்கும். இந்த உலகத்தில் ஏழைகள் தான் அதிகம் இருக்கின்றனர். அவர்களை முன்னேற விடமாட்டார்கள். தாங்களாகவே முன்னேறினால் தான் உண்டு. ஏழைகளின் முன்னேற்றத்திற்கு தான் கடவுள்கள் பாடுபட்டார்கள் என்றாலும் இப்போதும் அவர்கள் ஊரிலேயே இன்னும் ஏழைகள் தானே இருக்கிறார்கள். தனி மனிதனாக பார்த்து தான் முன்னேற வேண்டும். இங்கே பணக்காரர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக பணத்தை சேர்த்து வைத்து அவர்களை குட்டிச்சுவர் ஆக்கி விடுகிறார்கள். ஆனால் வெளிநாட்டில் அப்படி அல்ல.. அங்கே பணக்காரர்கள் பிள்ளைகளை விட இந்த சமூகத்திற்காக மிகப்பெரிய தொகையை ஒதுக்குகிறார்கள். அப்போதுதான் அவர்கள் மதிக்கப்படுகிறார்கள். கருப்பு வெள்ளை என இனியும் நாம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். கள்ளுண்ணாமை என 3000 வருடத்திற்கு முன்பே எழுதியிருப்பதால் அப்போதிருந்தே குடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இப்போது பார் சீன் வைத்து விட்டார்கள் என கத்துகிறார்கள். ஒரு படைப்பு என்பது அந்த சமூகத்தை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்” என்று கூறினார்



தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, “இந்த படத்தின் தயாரிப்பாளர் வேலாயுதம் இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்ததற்காக அவருக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். இயக்குநரும் அந்த கதையை மிக நேர்த்தியாக செய்திருக்கிறார். இங்கே வெற்றி தோல்வி என்பது சகஜம்.. நாம் நமது வேலையை சிறப்பாக செய்திருக்கிறோமா என்று தான் பார்க்க வேண்டும். அதன் பிறகு அது ரசிகர்கள் கையில். இங்கே நிறைய தயாரிப்பாளர்கள் தங்கள் முதல் படத்திலேயே நிறைய கசப்பான அனுபவங்களை பெற்றிருப்பார்கள். ஆனால் அந்த அனுபவங்கள் தான் அவர்கள் முதலீடு. அதனால் விட்டதை விட்ட இடத்தில் தான் பிடிக்க வேண்டும். எங்கே தொலைத்தோமோ அங்கே தான் தேட வேண்டும்..

இந்த படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள். நடிகை அபர்ணதி மிக சிறந்த நடிகை தான். ஆனால் என்ன வருத்தம் என்றால் அவர் இந்த விழாவிற்கு வரவில்லை. நடிகைகள் பிரமோசனுக்கு வர மாட்டார்கள் என்பது தமிழ் சினிமாவில் தொடர்ந்து இது ஒரு சாபக்கேடாகவே மாறிவிட்டது. அபர்ணதியை இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு அழைத்த போது அதற்கு தனியாக பணம் கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளரிடம் கேட்டுள்ளார். இது உண்மையிலேயே புதிதாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து நானே அந்த பெண்ணிடம் போன் செய்து பேசினேன். அப்போது இந்த நிகழ்ச்சிக்கு மூன்று லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே வர முடியும் என்று அவர் சொன்னதுடன் அவர் அமரும் மேடையில் அவர் அருகில் யார் யார் உட்கார வேண்டும் என்பது போன்று அவர் போட்ட நிபந்தனைகளை எல்லாம் சொன்னால் அது இன்னும் சர்ச்சையாக மாறிவிடும். ஆனால் இரண்டு நாட்கள் கழித்து அவரே போன் செய்து, ஸாரி சார்.. நான் தெரியாமல் பேசி விட்டேன். மன்னித்து விடுங்கள். நான் புரமோஷன் நிகழ்ச்சிக்கு வருகிறேன் என்று கூறினார். ஆனால் இன்று வரவில்லை. கேட்டதற்கு அவுட் ஆப் ஸ்டேஷன் என்று கூறி விட்டார்கள். தமிழ் சினிமாவிற்கு இப்படிப்பட்ட நடிகைகளே தேவையில்லை. அவர் அப்படியே அவுட் ஆப் ஸ்டேஷனிலேயே இருக்கட்டும். உள்ளே வர வேண்டாம். அதுதான் தமிழ் சினிமாவுக்கு நல்லது. இப்படி தயாரிப்பாளர்களை காயப்படுத்தி விட்டு அவர்கள் சினிமாவிற்குள் வந்து என்ன நல்லது செய்யப் போகிறார்கள். இந்த படத்திற்கு தொடர்பே இல்லாத கோமல் சர்மா, நமீதா ஆகியோரே முன்வந்து கலந்து கொண்டிருக்கும்போது படத்தில் நடித்த நடிகைக்கு இதில் கலந்து கொள்வதில் என்ன சிரமம் ?

என்னைப் பொருத்தவரை ஒரு படம் பிடித்தது என்றால் ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என மனசுக்குள் தோன்றும். கதையுடன் கூடிய கருத்தும் இருக்க வேண்டும். சமீபத்தில் கூட இயக்குநர் மீரா கதிரவானின் ஒரு படம் பார்த்தேன். இப்போதே குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நாற்கரப்போரில் பேசப்பட்டிருக்கக் கூடிய அரசியல் எனக்கு பிடித்திருக்கிறது. என்னுடைய மிக மிக அவசரம் படத்தில் யாரும் தொடாத ஒரு விஷயத்தை சொன்னது போல இதிலும் இதுவரை யாரும் சொல்லாத ஒரு விஷயத்தை இயக்குனர் தொட்டிருக்கிறார்.

நான் எப்போதுமே பத்திரிக்கையாளர்களுடன் நெருங்கி அண்ணன் தம்பியாக பழகக் கூடியவன். ஆனால் சமீப காலமாக ஒரு வார இதழில் என்னுடைய வணங்கான் படத்தை பற்றி தொடர்ந்து தவறான விஷயங்களாகவே வந்து கொண்டிருக்கிறது. எனக்கும் பாலாவிற்கும் பிரச்சனை, அதுவும் பணத்தினால் என்று சொல்கிறார்கள். அவர்களே இப்போது இந்த விழாவிற்கு நான் கிளம்பும் முன் ஒரு பேட்டிக்காக என்னிடம் வந்தார்கள்.. எழுதி வைத்துக்கொண்ட அமெச்சூர்தனமான கேள்விகளை கேட்டார்கள். இறுதியில் பாலாவை வைத்து படம் எடுத்து அனைவருமே தெருவுக்கு வந்து விட்டார்கள்.. நீங்கள் எப்போது தெருவுக்கு வரப் போகிறீர்கள் என நேரடியாக கேட்டார்கள். இந்த மேடையில் அமர்ந்திருக்கும் நேரத்தில் கூட அந்த கேள்விதான் என் மனதிலேயே ஓடிக்கொண்டிருந்தது. உண்மையிலேயே அது எங்களை காயப்படுத்துகிறது” என்று கூறினார்.

Tuesday, July 30, 2024

Indian Racing Festival takes street racing to the next level; Chennai to host India’s first night street race.

 


Indian Racing Festival takes street racing to the next level; Chennai to host India’s first night street race.

The Indian Racing League and the FIA-certified Formula 4 Indian Championship will compete in the first-of-its-kind night street race in India

Chennai, July 29, 2024: The Indian Racing Festival (IRF) is set to make history with its inaugural night race at the Chennai Formula Racing Circuit from August 30 to September 1, 2024. This groundbreaking event marks the first night race on a street circuit in India. Over three thrilling days, eight teams will light up the track with their high-speed machines in what promises to be the festival's most exhilarating and ambitious season yet.

Promoted by Racing Promotions Pvt. Ltd, the IRF strives to tap into a rapidly burgeoning motorsports fanbase in India. To capture the imagination of these fans, the IRF offers two championships: the Indian Racing League (IRL) and the FIA Formula 4 Indian Championship (F4IC). For the petrolheads, this Chennai night race, supported by the Government of Tamil Nadu, promises an unparalleled thrill for the region.

RPPL and the Tamil Nadu government announced the race on July 29 at Chennai's Taj Coromandel. The event was graced by J. Meghanatha Reddy IAS, Member Secretary of the Sports Development Authority of Tamil Nadu, and Akhilesh Reddy, Chairman & Managing Director of RPPL. They were joined by former Formula 1 driver Narain Karthikeyan, Dr. Atulya Mishra IAS, Additional Chief Secretary, SDAT, and FMSCI President Akbar Ebrahim. Also present were RPPL Director Abhinandan and rising stars in the racing world, Formula 4 drivers Mohammed Ryan and Sandeep Kumar.

Termed as the Detroit of Southern Asia, Chennai is the country's motorsports hub. While the metropolis boasts other race tracks and has held multiple race events in the past, the upcoming night race will add additional glory to its rich motorsports heritage and excitement to its burgeoning reputation as the center of all the high-octane action.

A 3.5-kilometre stretch, the Chennai Formula Racing Circuit was made by RPPL in collaboration with the Sports Development Authority of Tamil Nadu (SDAT). The competing speedsters zoom through the heart of India’s motorsports capital at breath-taking speed, within view of the iconic Marina Beach. The track commences at the Island Grounds and weaves past several key landmarks before rounding back to the starting point. Nineteen turns, multiple chicanes, andtricky elevations punctuate long stretches of the tarmac, keeping both drivers and fans on their toes.

As the motorsports fanbase in India grows to new heights, Chennai evolves with it. A dream destination for true petrol heads, India’s motorsports capital will now fall in line with the likes of Singapore and Saudi Arabia, offering a distinct and tantalizing street circuit that will light up under the city lights at night.

“We extend our heartfelt gratitude to the Tamil Nadu government for their exceptional leadership and steadfast backing in making this landmark event possible. Their unwavering support has been crucial in bringing India’s first-night street race to Chennai. This ground-breaking event will offer fans a thrilling new perspective and present

drivers with unique challenges in a stunning setting.

We are confident it will further establish Chennai as the premier destination for motorsports enthusiasts across the country and inspire a new wave of interest in the sport, which India will experience for the first time,” says Akhilesh Reddy, Chairman & Managing Director of RPPL.

“I assure you that this race will set a new benchmark for motorsports and serve as a dynamic showcase of India as a premier destination for global events. This thrilling spectacle will not only highlight Chennai’s exceptional capabilities but also attract international drivers, positioning India as a top choice for future motorsports competitions in the coming times” he further added.

The Chennai night race will mark another first for the Indian Racing Festival, which is the foremost event in the motorsports world to offer a gender-neutral racing championship.

The six-franchise team league is approved by FMSCI (Federation of Motor Sports Clubs of India), making it the most trusted and authentic race destination in the country. Meanwhile, the FIA-certified Formula 4 Indian Championship is an open-wheel, single-seater racing event that has begun attracting young, talented, and aspiring drivers from across the country, as well as around the world.

The Indian Racing Festival has also seen the support of heavyweights like Indian sporting great Sourav Ganguly and Bollywood star Arjun Kapoor as Team Owners, while many more are lined up to join the IRF’s exhilarating racing roster and make it one of the most sought-after sporting properties in India.

The latest, adrenaline-fueled season of the IRF gets underway with pre-season testing on August 22 and 23, followed by the opening round on August 24 and 25 at the Madras International Circuit ahead of the much anticipated night race for Round 2, starting August 30, 2024. Eight teams are confirmed to participate in the event with Kolkata and Ahmedabad joining seasons one and two stalwarts Delhi, Kochi, Goa, Chennai, Hyderabad, and Bengaluru at the tracks.

About Indian Racing Festival

The Indian Racing Festival (IRF) is a meticulously curated motorsport event designed to captivate the growing motorsport fan base in India. The Indian Racing League (IRL) and the Formula 4 Indian Championship (F4IC) are the two championships under the Indian Racing Festival banner. Notably, the Indian Racing League is FMSCI (Federation of Motor Sports Clubs of India) approved, adding a level of prestige and official recognition to the competition.

● The Indian Racing League (IRL) is India’s only 4-wheel racing league and the world's first gender-neutral racing championship series, promoting inclusivity and competitive spirit. IRL features six city-based teams competing in a dynamic franchise-based competition.

● Formula 4 is an open-wheel, single-seater racing category intended for junior drivers. It is the first step of the ladder for an aspiring racing driver from karting to single-seater racing.

The FIA-certified Formula 4 Indian Championship has begun to attract young and aspiring drivers from around the world and the country. It creates an opportunity for young drivers in their single-seater journey with minimal investment

from their end. The drivers gain Super License points and the Indian talent gets to do this at home instead of going abroad.

About Government of Tamil Nadu/SDAT

The Sports Development Authority of Tamil Nadu (SDAT) is dedicated to promoting sports and physical fitness across Tamil Nadu. SDAT aims to foster a thriving sports culture and enhance physical well-being throughout the State by leveraging resources from government, sports associations, philanthropists, institutions, and sports enthusiasts.

About Racing Promotions Pvt. Ltd.

Racing Promotions Private Ltd., co-founded by Akhilesh Reddy and professional race drivers Armaan Ebrahim and Aditya Patel in 2019, aims to bridge the gap between racing talent and opportunities. The franchise model, a first in Indian motorsports, emphasizes creating lasting engagement opportunities for teams, drivers, fans, and sponsors while promoting inclusivity and competitive spirit.

Racing Promotions Pvt. Ltd. (RPPL) is dedicated to forging a holistic motorsport ecosystem in India, with the mission to host FIA-caliber events and create pathways for aspiring individuals to pursue careers as drivers, engineers, and mechanics. Committed to revolutionizing motorsport, RPPL also aims to bolster motorsport education and awareness across the nation.

END

 

டெட்பூல் & வால்வரின்' திரைப்படத்தின் உலகளாவிய பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் ரூ. 3650 கோடி பெற்று சாதனை படைத்துள்ளது!*

*'டெட்பூல் & வால்வரின்' திரைப்படத்தின் உலகளாவிய பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் ரூ. 3650 கோடி பெற்று சாதனை படைத்துள்ளது!*

உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் 'டெட்பூல் & வால்வரின்' படத்தை திரையரங்குகளில் கொண்டாடி அதிரடி காட்டி வருகின்றனர். இதற்கு சான்று இந்தப் படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல்தான். இந்த படம், அதன் தொடக்க வார இறுதியில் உலகெங்கிலும் ரூ. 3650 கோடிகள் வசூலித்து, 2024 ஆம் ஆண்டின் நம்பர் 1 ஓப்பனிங் திரைப்படமாக வரலாறு படைத்துள்ளது. 

இந்தியாவில் 'டெட்பூல் 1' (40.79 கோடி ஜிபிஓசி) மற்றும் 'டெட்பூல் 2' (69.94 கிஆர் ஜிபிஓசி) ஆகிய இரண்டின் வாழ்நாள் வசூலை, 'டெட்பூல் & வால்வரின்' திரைப்படத்தின் முதல் வார இறுதி வசூல் முறியடித்துள்ளது. அதாவது, ரூ. 83.28 கோடி வசூலித்துள்ளது.  இது வரவிருக்கும் நாட்களில் இன்னும் அதிகமாகும் என்பதை எதிர்பார்க்கலாம். 

சிறந்த கேமியோஸ், நகைச்சுவை, ஆக்‌ஷன் மற்றும் பல கமர்ஷியல் பொழுதுபோக்கு விஷயங்களுடன் இந்தத் திரைப்படம் பார்வையாளர்களுக்குப் பிடித்த ஒன்றாக மாறியுள்ளது.
மார்வெல் ஸ்டுடியோவின் 'டெட்பூல் & வால்வரின்' ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

Monday, July 29, 2024

யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் 'ஸ்வீட் ஹார்ட் ' படத்தின் பிரத்யேக காணொளி வெளியீடு*

*யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் 'ஸ்வீட் ஹார்ட் ' படத்தின் பிரத்யேக காணொளி வெளியீடு*

நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் 'ஸ்வீட் ஹார்ட்' படத்தின் ப்ரமோ வெளியீடு

திறமையான படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் திரைப்படங்களை தயாரித்து வரும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'ஸ்வீட் ஹார்ட்' என பெயரிடப்பட்டு, இந்த டைட்டிலுக்கான பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஸ்வீட் ஹார்ட்' எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், அருணாச்சலம், பௌஸி , சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சிவசங்கர் கலை இயக்கத்தை கவனிக்க, படத் தொகுப்பு பணிகளை தமிழரசன் மேற்கொண்டிருக்கிறார். காதலை மையப்படுத்தி பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒய் எஸ் ஆர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கிறார். 

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டைட்டிலுக்கான காணொளி பிரத்யேகமாக வெளியிடப்பட்டிருக்கிறது. ஜூலை 27ஆம் தேதியன்று சென்னை ஒய் எம் சி ஏ மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் முன்னிலையில் நடைபெற்ற யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியின் போது, 'ஸ்வீட் ஹார்ட்' படத்தின் காணொளி வெளியிடப்பட்டதால் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றிருக்கிறது. 

இந்த காணொளியில் நடிகர் ரியோ ராஜ் - அருணாசலம் - இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் - யுவன் சங்கர் ராஜா கூட்டணியின் ஜாலியான உரையாடல்களும், அது தொடர்பான காட்சிகளும் பார்வையாளர்களிடத்தில் புன்னகையை ஏற்படுத்தி, இன்ப அதிர்ச்சியை அளித்திருப்பதால்...  இந்த பிரத்யேக காணொளிக்கு பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

https://youtu.be/tz5AEgix7C8?si=DuMgvuA2X3C9Z_Zm

Sunday, July 28, 2024

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் 'போட்' திரைப்படம் ஆகஸ்ட் 2 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.


 யோகி பாபு நடிக்கும் 'போட்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு


தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் 'போட்' திரைப்படம் ஆகஸ்ட் 2 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.



சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'போட்' திரைப்படத்தில் யோகி பாபு, கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், குலப்புளி லீலா, எம். எஸ். பாஸ்கர், சாம்ஸ், மதுமிதா, ஷாரா, மாஸ்டர் அக்ஷத் தாஸ் ஆகியோருடன் ஹாலிவுட் நடிகர் ஜெஸ்ஸி ஃபோக்ஸ்-ஆலன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். நடுக்கடலில் உருவான நெய்தல் நில கதையான இப்படத்தை மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்பு தேவன் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் பிரபா பிரேம்குமார் மற்றும் சி. கலைவாணி தயாரித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தின் டீசர், இரண்டு பாடல்கள், ப்ரோமோ பாடல், முன்னோட்டம் ஆகியவை வெளியாகி படத்தைப் பற்றிய பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நிர்வாக தயாரிப்பாளர் ஜிதேந்திரன், இயக்குநர் சிம்பு தேவன், ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம், இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா, நடிகர்கள் யோகி பாபு, எம். எஸ். பாஸ்கர், சாம்ஸ், மாஸ்டர் அக்ஷத் தாஸ் , நடிகைகள் மதுமிதா, கௌரி கிஷன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இயக்குநர் சிம்பு தேவன் பேசுகையில், ''நான் இதுவரை இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் ஃபேண்டஸி, காமெடி என வித்தியாசமான வகைமையில் இருக்கும். இந்த படத்திலும் இவை இரண்டும் இடம்பெற்றிருக்கின்றன. இந்த நல்ல வாய்ப்பை மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் பிரேம்குமார் தான் வழங்கினார்.  அவரை முதன்முதலாக சந்தித்து அரை மணி நேரம் இந்த கதையை விவரித்தேன். இந்தக் கதை என் மனதில் நீண்ட நாளாக இருக்கும் கதை.‌

கொரோனா காலகட்டத்தின் போது நான் எழுதிய 'கசடதபற' எனும் படைப்பு  வெளியானது. அந்தத் தருணத்திலேயே 'போட்' கதையை எழுதிக் கொண்டிருந்தேன்.‌ இந்த கதையை தயாரிப்பாளரிடம் சொன்ன போது, 'இதில் இடம் பெறும் உணர்வும், வித்தியாசமும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இதனை என்னிடம் விவரித்தது போல் படமாக உருவாக்கி தாருங்கள்' எனக் கேட்டுக் கொண்டார். என் மீது நம்பிக்கை வைத்து தயாரிப்பாளர் சொன்ன அந்த வார்த்தை தான் இதன் தொடக்க புள்ளி.

இந்தப் படத்தில் நானும் தயாரிப்பாளராக இணைந்திருக்கிறேன்.‌ இந்த கதைக்கு யார் நாயகன் என தேடும்போது நான் ஏற்கனவே யோகி பாபுவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தேன். அவரை ஒரு முறை மீண்டும் சந்தித்து இக்கதையை விவரித்தேன். அவருக்கும் பிடித்திருந்தது. 'இதில் நான் நடிக்கிறேன்' என்றார். அதன் பிறகு அனைத்து பணிகளும் விரைவாக நடைபெற்றன.

யோகி பாபுவை தொடர்ந்து எம் எஸ் பாஸ்கர், சின்னி ஜெயந்த் ஆகியோர் ஒப்பந்தமானார்கள். கௌரி கிஷன் - இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறார். அதன் பிறகு சாம்ஸ், மதுமிதா, ஷா ரா, அக்ஷத் ஆகியோரும், ஜெஸ்ஸி என்ற வெளிநாட்டு நடிகரும் நடிக்க ஒப்பந்தமானார்கள். அதன் பிறகு பாட்டி கேரக்டரில் குலப்புளி லீலா நடித்தார்கள். இந்த வயதிலும் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கினார். இப்படி திறமையான கலைஞர்கள் ஒரு பக்கம் ஒன்றிணைந்தார்கள்.

இவர்களுக்கு நிகராக என்னுடைய இனிய நண்பர் எஸ். ஆர். கதிர் மூலம் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம் அறிமுகமாகி, எங்களுடன் இணைந்தார்.
இந்தத் திரைப்படத்தை பொருத்தவரை இசையும் , ஒளிப்பதிவும் மிகவும் முக்கியமானவை. ஏனெனில் கடல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.‌ அனைவரையும் போல நானும் கடல் என்றால் அதன் கரையில் நின்று பாதத்தை நனைத்துக் கொண்டும், உற்சாகம் மிகுதியானால் கூடுதலாக பத்து அடி உள்ளே சென்று நீராடவும் மட்டும் தான் தெரியும். அதனால் இந்த படத்தில் என்ன கஷ்டங்கள் வரும் என்று எனக்குத் தெரியாது. எனவே என்னுடைய குழு வலிமையானதாக இருக்க வேண்டும் என தீர்மானித்தேன்.

மாதேஷிடம் முதன்முறையாக சந்தித்து உரையாடிய போது, 'இதில் நாம் ஏராளமான தடைகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்' என்று சொன்னேன். அந்தத் தருணத்தில் நான் எந்த படப்பிடிப்பு தளத்திற்கும் சென்று பார்வையிட்டு தேர்வு செய்யவில்லை. அலுவலகத்தில் அமர்ந்து கதையை மட்டும் ரசித்து ரசித்து எழுதினேன்.‌

கதை எழுதுவது எளிது. அதனை செயல்படுத்தும் போதும் நடைமுறைப்படுத்தும் போதும் தான் அதன் கடினம் தெரியும். எழுதிய கதையை காட்சிப்படுத்துவதற்காக குழுவாக நிறைய மெனக்கடல் இருந்தது.  இது கடினம் என்று தெரியும். இருந்தாலும் விரிவாக இதைப்பற்றி சிந்திக்கவில்லை.‌

இந்தப் படத்தின் கலை இயக்குநராக பணியாற்றிய சந்தானம் இன்று நம்மிடம் இல்லை. மறைந்துவிட்டார். இருந்தாலும் அவர்தான் இந்த கதைக்கான காட்சிப்படுத்துதலின் அடித்தளத்தை உருவாக்கினார்.‌

படத்தொகுப்பு பணிகளை தினேஷ் பொன்ராஜ் கவனித்துக் கொண்டார்.‌  இப்படி ஒரு திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் குழு எனக்கு பக்க பலமாக இருந்து செயல்பட்டனர்.

கதைப்படி போட் மூன்று நாள் கடலுக்குள் இருக்கும். இதனால் நடிகர்களுக்கு உடை பற்றிய கவலை இல்லை.  அனைவருக்கும் ஒரே உடை தான். ஆனாலும் படப்பிடிப்பின் போது நடிகர்கள் அணிந்திருந்த ஆடை பாழானது.  இந்த விஷயத்தில் நட்சத்திரங்கள் கஷ்டப்பட்டனர்.‌

இந்தப் படத்தின் திரைக்கதைக்கு 1943ம் ஆண்டு காலகட்டத்திய பின்னணியை அமைத்திருந்தோம்.‌ ஏனெனில் பொதுவாகவே வரலாற்றில் நம் விஷயங்கள் மறைக்கப்படுகிறது என்ற ஆதங்கம் என்னுள் இருக்கிறது. சுதந்திர போராட்டத்தை பொறுத்தவரை மும்பையையும், டெல்லியையும் முதன்மைப்படுத்தும் அளவிற்கு சென்னையையும், கொல்கத்தாவையும் கண்டு கொள்வதில்லை.‌ ஆனாலும்
பரவாயில்லை, இது தொடர்பாக நம் வரலாறு குறித்து ஆய்வு செய்ய தொடங்கினேன். குறிப்பாக இரண்டாம் உலக போர்.‌

1943ம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போர் குறித்த விவரங்களையும், ஆவணங்களையும் பார்வையிட தொடங்கினேன்.‌ இதில் திரைப்படங்களையும் இணைத்துக் கொண்டேன். டொரண்டீனோவின் ஆங்கில திரைப்படத்திலிருந்து பல திரைப்படங்கள் வரை இரண்டாம் உலகப்போர் குறித்த குறிப்புகளில் எதிலும் இந்தியர்கள் இடம்பெறவில்லை.  ஆனால் சரித்திரத்தின்படி இரண்டாம் உலகப்போரில் 25 லட்சம் இந்தியர்கள் இறந்திருக்கிறார்கள். இதுதான் எனக்கு கிடைத்த முதல் தகவல்.  இதிலிருந்து உந்துதலை பெற்று இரண்டாம் உலக போர் பற்றிய ஒரு கதை கருவினை உருவாக்கி, அதனை படைப்பாக்க வேண்டும் என திட்டமிட்டேன்.‌

அந்த காலகட்டத்தில் சென்னை மீது ஜப்பான் குண்டு வீச தயாராக இருந்திருக்கிறது. இதற்கான எச்சரிக்கை வெளியாகி ஆறு மாத காலம் வரை மக்கள் கடும் துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள். இது தொடர்பாக லண்டனில் உள்ள என்னுடைய நண்பர் ஸ்ரீ கணேஷ் மற்றும் பெங்களூரூவில் உள்ள நண்பர் ஜெயராஜ்  ஆகியோருடன் விவாதிக்கத் தொடங்கி, தகவல்களை சேகரிக்கத் தொடங்கினோம்.

அந்தத் தருணத்தில் சென்னையிலிருந்து ஐந்து லட்சம் மக்கள் வெளியேறி இருக்கிறார்கள். சென்னையிலிருந்து எழுபது சத மக்கள் வெளியேறி விட்டார்கள். மீதமிருந்த மக்கள் காவல்துறையின் அறிவுறுத்தலின்படி பதுங்கு குழிகளில் பதுங்கியபடி வாழ பழகியிருந்தார்கள்.  இது தொடர்பாக மக்களுக்கு போலீசார் பயிற்சி அளித்து இருந்தனர். எந்த அரசு அலுவலகமும் செயல்படவில்லை. உணவுப் பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் இவை அனைத்தும் ஒரு பொது இடத்தில் வைத்து வியாபாரம் செய்திருக்கிறார்கள். அந்த அளவிற்கு மக்கள் கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறார்கள்.

இந்த தகவல்களை எல்லாம் சேகரித்து, விவாதித்து அதன் பிறகு இது தொடர்பாக படைப்பை உருவாக்கலாம் என திட்டமிட்டோம். அந்த காலகட்டத்தில் துடுப்பு படகு தான் இருந்தது. 1980களுக்கு முன்னர் வரை துடுப்பு படகைத் தான் மீனவர்கள் பயன்படுத்தினார்கள்.

துடுப்பு படகை உருவாக்குவதற்கு கலை இயக்குநர் சந்தானம் கேரளா, ராமேஸ்வரம் என பல இடங்களுக்கு அலைந்து திரிந்து படத்தில் இடம்பெற்ற துடுப்பு படகை வடிவமைத்தார்.

இந்தக் கதையை எழுதும் போது நன்றாக இருந்தது. ஒரு படகில் பத்து பேர் அமர்ந்திருக்கிறார்கள் என எழுதினேன். ஆனால் இதனை படமாக்கும் போது என்னைவிட நடிகர்கள் சிரமப்பட்டார்கள்.  நாங்கள் வடிவமைத்த  'போட்'டில் நடிகர்கள் அமர்ந்து விடுவார்கள். ஆனால் அவர்களால் நகரவோ.. அசையவோ இயலாது. அந்த அளவிற்கு நெருக்கடியாக இருந்தது.

அதன் பிறகு படப்பிடிப்பு தளத்தை தேடி தமிழக கடற்கரையோரம் முழுவதும் பயணித்தோம். இறுதியாக திருச்செந்தூர் அருகே அமைந்துள்ள உவரியை தேர்ந்தெடுத்தோம். இங்குதான் முதற்கட்ட படப்பிடிப்பை தொடங்கினோம்.

அடர்ந்த வனப் பகுதியில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம், உயர்ந்த மலைப் பகுதியில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம். இங்கெல்லாம் கடினம் இருந்தாலும், பிறகு பழகிவிடும். ஆனால் கடல் என்பது ஒவ்வொரு நிமிடமும் புதிராக இருந்தது. எதையுமே தீர்மானிக்க இயலாது. முதலில் எங்களுக்கு எதுவும் புரியவில்லை.

மாதேஷ் ஒரு காட்சியை படமாக்க தொடங்குவார். அதை காட்சிப்படுத்துவதற்குள் கடல் அலையின் காரணமாக நட்சத்திரங்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல் நிறைவு செய்ய இயலாது. எங்களுக்கும், கடலுக்கும் இடையேயான ஒரு ரிதம் கிடைப்பதற்கு நான்கு நாட்கள் ஆனது.  

நடிகர்களுக்கு நீச்சல் தெரியாது.‌ தொழில்நுட்ப குழுவினர்களில் பலருக்கும் நீச்சல் தெரியாது. அதனால் அந்த மீனவ கிராமத்தில் உள்ள இளைஞர்களை எங்களுக்கு உதவியாக அமர்த்திக் கொண்டோம். அவர்கள் எங்களுக்கு உதவி செய்வதற்காக தொடர்ச்சியாக தண்ணீரில் இருந்ததால் அவர்களின் கை கால்கள் எல்லாம் ஊதி வெளுத்து விட்டன. ஏராளமான தருணங்களில் படப்பிடிப்பிற்கான உபகரணங்கள் வீணாகி இருக்கின்றன.  இப்படி தொழில்நுட்ப ரீதியாக பல சவால்களை எதிர்கொண்டோம்.

ஒரு அலை வந்தால் எங்களுடைய எல்லா உழைப்பும் வீணாகிவிடும். ஒரு காட்சியை நிறைவு செய்வதற்குள் சூரிய ஒளியில் நிறைய மாறுபாடு ஏற்படும்.

நடிகர்களுக்கு இது மிகப்பெரும் சவாலாக இருந்தது. எனக்கு கடலுக்குள் இறங்கினாலே தலை சுற்றி விடும். ஆனால் நடிகர்கள் இவற்றையெல்லாம் கடந்து, படகில் அமர்ந்து கலகலப்பாக பேசிக் கொண்டிருப்பார்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இந்த படம் கடின உழைப்பால் உருவாகி இருக்கிறது.  நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த குழுவினரும் வியர்வை சிந்தி உழைத்திருக்கிறார்கள்.‌

இப்படத்தின் படப்பிடிப்பு பெரிய அனுபவமாக இருந்தது. ஏனெனில் என்னைப் பொருத்தவரை கடல் என்பதை தனி உயிரினமாகத் தான் பார்க்கிறேன். சில நேரங்களில் கோபமாக இருக்கும். சில நேரங்களில் அமைதியாக இருக்கும். கடலின் வண்ணங்கள் மாறிக்கொண்டே இருக்கும். காலையில் தொடங்கி மாலைக்குள் இருபது  வண்ணங்களை காணலாம். நாங்கள் எதை எல்லாம் சந்தித்தோமோ எங்களது அனுபவம் என்னவாக இருந்ததோ.. அவற்றை எல்லாம் காட்சிப்படுத்தி இருக்கிறோம். அதனால் இந்த திரைப்படம் சுவாரசியமாக இருக்கும். அனைத்து வகையிலும் ரசிகர்களை திருப்திப்படுத்தும் என நாங்கள் நம்புகிறோம்.

நடுக் கடலுக்கு சென்று படம் எடுத்தால் யார் வேண்டுமானாலும் கஷ்டப்பட்டு தான் ஆக வேண்டும். நாங்கள் மட்டும்தான் கஷ்டப்பட்டு படமாக்கினோம் என்று சொல்ல வரவில்லை. கடல் என்று சென்றாலே கஷ்டம் தான்.‌

நாங்கள் அனைவரும் கஷ்டப்பட்டு உருவாக்கியது ஒரு பாதி தான். மீதி பாதியை சென்னையில் ஒரு அரங்கத்தில் அமர்ந்து இசையமைப்பாளர் ஜிப்ரான் உருவாக்கினார். ஜிப்ரானுடன் இணைந்து பணியாற்றியது மறக்க இயலாத அனுபவம். படத்தை பார்ப்பதற்கு முன் அதைப்பற்றி அவர் பேசியதற்கும் படத்தை பார்த்த பிறகு கதையை உள்வாங்கி அவர் பணியாற்றிய விதமும் வித்தியாசமாக இருந்தது. கதைகளை அவர் உள்வாங்கி இசை மூலமாக வெளிப்படுத்தும் போது சிறப்பாக இருக்கும். ஒரு வகையில் பார்க்கும் போது, இது சிங்கிள் லொகேஷனில் எடுக்கப்பட்ட படமாக இருக்கும். அதை உடைத்து இசை வடிவில் ஒரு கதையை சொல்லி ரசிகர்களை அவர் வழி நடத்தும் விதம் பிரமிக்க வைத்தது. உண்மையிலேயே இந்த படத்தில் அவருடைய பங்களிப்பு சிறப்பானது. ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கத்தின் கடும் உழைப்பு பாராட்டுக்குரியது. படத்திற்கு  வண்ணக் கலவையை சீராக்கும் பணியை மேற்கொண்ட கலரிஸ்ட் பாலாஜியின் பங்களிப்பும் பாராட்டுக்குரியது.  இவர் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் இந்த கதையை செழுமை படுத்தினார். சுரேன் மற்றும் அழகியகூத்தன் ஆகிய இரண்டு தொழில்நுட்ப கலைஞர்களும் இணைந்து ஒலி வடிவமைப்பில் சிறப்பாக பணியாற்றினார்கள். என்னுடைய குழுவின் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் அளித்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு, யோகி பாபு நடிக்க ஒப்புக்கொண்டு, அவருடன் இத்தனை நட்சத்திரங்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் இணைந்து பணியாற்றி நல்லதொரு படைப்பாக 'போட்'டை உருவாக்கி இருக்கிறோம். நிச்சயமாக இந்த திரைப்படத்தை நீங்கள் திரையரங்குகளில் பார்க்கும் போது உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறோம். எனக்கும், என்னுடைய குழுவினருக்கும் ஆதரவு தாருங்கள்," என்றார்.

நிர்வாக தயாரிப்பாளர் ஜிதேந்திரன் பேசுகையில், ''போட் திரைப்படம் நன்றாக வந்திருக்கிறது.‌ இயக்குநர் சிம்பு தேவன் அற்புதமாக இயக்கி இருக்கிறார். ஜிப்ரானின் இசையில் படம் நேர்த்தியாக அமைந்திருக்கிறது. இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் , பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள், இயக்குநர் சிம்பு தேவன் உள்ளிட்ட அனைவருக்கும் தயாரிப்பாளர் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.‌ 'போட்' திரைப்படம் ஆகஸ்ட் இரண்டாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது திரையரங்கிற்கு வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.

நடிகர் எம். எஸ். பாஸ்கர் பேசுகையில், ''சிம்பு தேவனின் இயக்கத்தில் பல படங்களில் நடித்திருக்கிறேன்.‌ இதில் 'இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்' படத்தில் நடிக்கும் போது கஷ்டப்பட்டேன். இந்த படத்திலும் நடிக்கும் போது கஷ்டப்பட்டேன். அந்தப் படத்தில் குதிரை என்றால் இந்த படத்தில் போட்.‌

தம்பி சிம்பு தேவன் சொன்னது போல் கடலை கணிக்க முடியவில்லை.  திடீரென்று தண்ணீர் உள்வாங்குகிறது. திடீரென்று தண்ணீர் அதிகரிக்கிறது. திடீரென்று அலை அடிக்கிறது. போட்டில் அமர்ந்து நடிக்கும் போது முதுகு வலியும் ஏற்பட்டது.

சிம்பு தேவன் பேசும் போது, 'எழுதுவது எளிதாக இருந்தது' எனக் குறிப்பிட்டார். ஆனால் இப்படி எழுத வேண்டும் என்று மனதிற்குள் தோன்ற வேண்டும் அல்லவா, அது கடினம் தானே. கற்பனையில் உதித்ததை எழுதி, அதற்காக படப்பிடிப்பு தளத்தை தேடி பயணித்து தேர்வு செய்து அதில் படபிடிப்பு நடத்தி நாங்கள் கொடுக்கும் தொல்லைகளை எல்லாம் பொறுத்துக் கொண்டு  படமாக்கினார். படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு குடும்ப உறுப்பினர்களுடன் இன்பச் சுற்றுலா சென்றது போல் தான் இருந்தது.‌  என்னுடன் நடித்த சக நடிகர்கள் அனைவரும் அதே போட்டில் தான் இருக்க வேண்டும். யாரும் எங்கும் செல்ல முடியாது.

இந்தப் படத்தில் அவர் எனக்கு கொடுத்த வேடத்தில் நடிக்கும் போது, நான் யாரை குருவாக மனதிற்குள் நினைத்திருக்கிறேனோ.. அவருடைய சீடனாகவே நடிக்க கூடிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அது என்ன கதாபாத்திரம் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.  நான் ரசித்து ரசித்து செய்து கதாபாத்திரங்களில் இதுவும் ஒன்று," என்றார்.

நாயகி கௌரி கிஷன் பேசுகையில், ''நல்ல படங்களில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னைப் போன்ற வளரும் கலைஞர்களின் கனவாக இருக்கும். இந்தப் படத்தில் நடித்ததை பெருமிதமாக கருதுகிறேன்.  இந்தப் படத்தில் நடிக்கும் போது கஷ்டங்களும் சவால்களும் இருந்தன. இருந்தாலும் மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டே படத்தின் பணிகளை நிறைவு செய்து இருக்கிறோம். இந்தப் படம் எப்போது வெளியாகும் என்று ஆவலுடன் காத்திருந்தோம்.  

படத்தின் மேக்கிங் வீடியோவை பார்க்கும் போது அந்த தருணங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் சிம்பு தேவனுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் லட்சுமி என்ற இளம் பெண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்த வேடத்தை ஏற்று நடிக்க முடியும் என்று என் மீது நம்பிக்கை வைத்தது பெரிய விஷயம். நான் தமிழ் பெண் அல்ல.‌ கேரளாவில் பிறந்து தமிழ்நாட்டில் வளர்ந்த பெண். அதனால் ஓரளவிற்கு தான் தமிழ் பேசுவேன்.‌ இந்தப் படத்தில் செந்தமிழை  பார்ப்பனர்களின் பேச்சு மொழியுடன் பேசி இருக்கிறேன்.  இதனை பேசும் போது எனக்குள் தயக்கம் இருந்தது. இருந்தாலும் இயக்குநர் அதனை உடைத்து உன்னால் முடியும் என்று நம்பிக்கை அளித்தார்.‌

படப்பிடிப்பு நடைபெற்ற படகுக்குள் நான் பாதுகாப்பாக இருந்தேன். படத்தில் நடித்திருக்கும் சக கலைஞர்களுடன் இதற்கு முன் நான் பணியாற்றியதில்லை. இருந்தாலும் அவர்களுடைய எனர்ஜி, மேஜிக்கை நிகழ்த்தியது.‌ இந்தப் படத்தின் மூலம்  மதுமிதா எனக்கு சொந்த சகோதரி போல் ஆகிவிட்டார்.

படப்பிடிப்புக்காக படகிற்குள் அமர்ந்து விட்டால் அவ்வளவுதான். அதன் பிறகு படப்பிடிப்பு நிறைவு என்று சொன்ன பிறகுதான் படகிலிருந்து இறங்கி கரைக்கு வருவோம். அதுவரை எங்களுடைய மேக்கப்பை சீராக்கிக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்காது. என்னைப் பொருத்தவரை ஒரு நடிகைக்கு அழகான தோற்றத்திற்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். ஆனால் இந்த படத்தில் தோற்றத்தை விட ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தின் மூலம் நடிப்பை வெளிப்படுத்துவது தான் சிறந்தது என்ற எண்ணம் உதித்தது. இந்த ஒரு விஷயத்தை இந்த படத்தில் கற்றுக் கொண்டேன்.  

மாலி & மான்வி பட தயாரிப்பு நிறுவனத்தில் நான் நடிக்கும் இரண்டாவது படம். அவர்கள் தயாரிப்பில் நான் நடித்த முதல் படமான 'அடியே' திரைப்படமும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தான் வெளியானது.  அந்த வகையில் இந்தப் பட நிறுவனத்துடன் மீண்டும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்தப் படத்திலும் பாடகியாக தான் நடித்திருக்கிறேன்.  இந்தப் படத்தில் ஜிப்ரானின் இசை அற்புதமாக இருக்கிறது. நானும் அவரின் தீவிர ரசிகை. இந்தப் படத்தில் கானா பாடல் கலந்த ஒரு நாட்டுப்புற பாட்டு இருக்கிறது.  அந்த பாடல் காட்சியை நான் நன்றாக ரசித்து அனுபவித்து நடித்தேன்.  

இந்தப் படத்தில் நடித்த ஜெஸ்ஸி ஒரு ஆஸ்திரேலிய நடிகர்.  எனக்கு கிடைத்த சிறந்த நண்பர்.‌ படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு சில விஷயங்களை மொழிபெயர்ப்பதில் உதவியிருக்கிறேன்.  

இந்தப் படத்தில் என்னை தவிர்த்து
என்னுடன் நடித்தவர்கள் அனைவரும் நகைச்சுவை கலைஞர்கள்.  அதனால் படப்பிடிப்பு தருணத்தின் போது அனைவரும் பேசி காட்சிகளை மேம்படுத்துவார்கள். அதை நேரில் பார்த்து வியந்திருக்கிறேன்.‌ எனக்கு அவர்களைப் போல் உடனடியாக காமெடியாக பேச முடியாது, பேசவும் தெரியாது. இது தொடர்பாக இயக்குநரிடம் பேசும் போது, அவர் 'லட்சுமி என்கிற கதாபாத்திரம் ரசிகர்களிடம் நிறைய பேசும்' என்றார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பை பொருத்தவரை எனக்கு ஒரு பயிற்சி பட்டறை போல் தான். தினமும் ஏதாவது ஒரு புதிய விஷயத்தை கற்றுக் கொண்டே இருந்தேன்.

இந்தத் திரைப்படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்க்கும் போது பிரமிப்பை ஏற்படுத்தும். அந்த அளவிற்கு விஷுவல் ட்ரீட் இருக்கிறது. கடல் பேரழகு. அதனைக் காண ஆகஸ்ட் இரண்டாம் தேதி திரையரங்கத்திற்கு வருகை தந்து இந்த படத்திற்கு ஆதரவு தாருங்கள்,'' என்றார்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா பேசுகையில், ''சிம்பு தேவனுடன் இணைந்து பணியாற்றும் மூன்றாவது படைப்பு இது.‌ '24ம் புலிகேசி' படத்தில் இணைந்தோம். அதற்காக விவாதித்து பாடல்களையும் உருவாக்கினோம். அவருடன் பணிபுரிந்த அனுபவம் இனிமையாக இருந்தது. அதன் பிறகு அவருடன் ஒரு குறும்படத்தில் இணைந்தேன். அதன் பிறகு இந்தப் படத்தின் கதையை விவரித்தார். கேட்கும்போதே எனக்கு ஆவலாக இருந்தது. முழுவதும் கடல் தானா..! என கேட்டேன். அவர் ஆமாம் என்றார்.  அத்துடன் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் கடலுக்குள் சென்று தான் நடத்த திட்டமிட்டிருக்கிறோம் என்றார்.  ஆனால் அதன் பின்னணியில் இவ்வளவு கடினமான உழைப்பு இருக்கும் என்று எனக்குத் தெரியாது.

பாடலை உருவாக்கும்போது அவருக்குள் எப்போதும் இருக்கும் கவிதைத்தனம் எட்டிப் பார்க்கும். பார்த்திபன் சார் ஒரு விஷயத்தை வெவ்வேறு கோணங்களில் பார்ப்பது போல் சிம்பு தேவன் ஒரு விஷயத்தை வித்தியாசமான கோணங்களில் பார்ப்பார். முதலில் கர்நாடக இசை பாணியில் ஒரு பாடல் என்றார். உடனே நல்லதொரு ராகத்தின் பின்னணியில் நேர்த்தியாக உருவாக்கலாம் என மனதிற்குள் நினைத்தேன். ஆனால் பாடல் வரிகள் சென்னை மக்களின் பேச்சு மொழியில் இருக்க வேண்டும் என்றார்.  அப்படித்தான் 'சோக்கா..' எனும் பாடல் உருவானது.

அடுத்த பாடலை உருவாக்கலாம் என பேச தொடங்கிய போது.. சென்னையில் இசை மொழியான கானா பாடலை உருவாக்குவோம் என்றார். ஆனால் இந்தப் பாடல் கர்நாடக இசையில் பயன்படுத்தும் 'சரிகம' என்ற சொல்லாடலை பயன்படுத்த வேண்டும் என்றார். சிம்பு தேவனின் இந்த முரண்பாட்டை ரசித்தேன். இது சவாலாகவும் இருந்தது. ஏனெனில் இந்தப் பாடலை 'பத்ம பூஷன்' சுதா ரகுநாதன் பாடினார்கள். முதலில் அவரை தொடர்பு கொண்டு விவரத்தை கூறிய பிறகு அவர்கள் பாட சம்மதிப்பார்களா என்ற தயக்கம் எங்களுக்குள் இருந்தது. ஆனால் பாடலைக் கேட்டுவிட்டு, இந்த பாடல் ராகத்தில் அழகாக அமைந்திருக்கிறது, நான் பாடுகிறேன் என்றார். அப்போதுதான் எங்களுக்குள்  மகிழ்ச்சி ஏற்பட்டது.

இரண்டாவதாக கானா பாடல். கானா என்றவுடன் நம் அனைவரின் நினைவுக்கு வருவது இசையமைப்பாளர் தேவா தான். அவரை தொடர்பு கொண்டு விவரத்தை சொன்ன போது, அவரும் பாடலை கேட்டு விட்டு, மகிழ்ச்சியுடன் பாட ஒப்புக்கொண்டார்.

இந்த ரெண்டு பாடலில் பணியாற்றிய அனுபவம் தனித்துவமாக இருந்தது. சுதா ரகுநாதனின் பாடலுக்கு நடிகை கௌரி கிஷன் பொருத்தமாக இருப்பாரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அவர் தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் எங்களை வியக்க வைத்தார்.

பின்னணி இசைக்காக படத்தின் காட்சிகள் என்னிடம் வந்தன. இதில் எதிர்பாராத விதமாக மிகப்பெரும் சவால் ஒன்று இருந்தது. படத்தின் தொடக்கத்தில் பத்து நிமிடம் வரை காட்சிகள் நிலத்தில் நடைபெறும்.  அதன் பிறகு கடலுக்குள் சென்று விடும். பிறகு கடலிலிருந்து கடைசி பத்து நிமிடத்தில் மீண்டும் கரைக்கு திரும்புவார்கள். மீதமுள்ள பெரும்பாலான காட்சிகள் கடலில் தான் இருக்கும்.  அதை பார்க்கும் போது எங்கே முற்றுப்புள்ளி வைப்பது, எங்கே தொடர் புள்ளி வைப்பது என்று தெரியாமல், சிம்பு தேவனை தொடர்பு கொண்டேன். பொதுவாக மாற்றங்கள் இசையமைப்பாளருக்கு உதவி புரியும்.‌ ஏதேனும் ஒரு இடையூறு இருக்கும் அல்லது பின்னணியில் மாற்றம் இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் எங்கு தொடங்குவது எங்கு முடிப்பது என்று தெரியாமல் குழப்பம் ஏற்பட்டது.  ஆனால் படத்தில் உணர்வு என்பது தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கும். அதிலும் அதில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் திறமையாக நடித்திருப்பார்கள். ஒருவருடைய நடிப்பிலிருந்து மற்றவர்கள் அதை புரிந்து கொண்டு பேசுவார்கள். அதை துல்லியமாக உணர்ந்து கொண்டு இதற்கு பின்னணி இசை அமைக்க வேண்டியதாக இருந்தது.  

இந்த படத்தில் இயக்குநர் சிம்பு தேவனை ஒரு தயாரிப்பாளராகவும் பார்த்திருக்கிறேன். கடும் போராட்டத்திற்கு இடையே அனைவரையும் ஒருங்கிணைத்து தன்னுடைய கற்பனையை சாத்தியமாக்கி இருக்கிறார். அவரிடம் இருந்த பாசிட்டிவிட்டி பாராட்டத்தக்கது.  

திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்க்க வேண்டிய ஒரு படம் இது. அதனால் அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து இந்த படத்தை பார்த்து ரசித்து ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.

நடிகர் யோகி பாபு பேசுகையில், "போட் திரைப்படம் இந்த அளவுக்கு சிறப்பாக உருவாகி உள்ளதற்கு இயக்குநர் சிம்பு தேவன் தான் காரணம், அவருக்கு எனது நன்றி. இப்படத்தின் தயாரிப்பாளர், என்னுடன் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இங்கு வருகை தந்திருக்கும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. கடின உழைப்போடு இப்படம் உருவாகியுள்ளது. நீங்கள் அனைவரும் உங்கள் மேலான ஆதரவை 'போட்' திரைப்படத்திற்கு வழங்க வேண்டும். மிக்க நன்றி," என்று கூறினார்.


Friday, July 26, 2024

RAAYAN - திரைவிமர்சனம்


தனுஷின் சமீபத்திய படமான ராயன், அவரது 50வது திரைப்படமாக ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது, எழுத்தாளர், இயக்குனர் மற்றும் முன்னணி நடிகராக அவரது திறமைகளை வெளிப்படுத்துகிறது. இந்த மூன்று-அச்சுறுத்தல் முயற்சி சிறிய சாதனையல்ல, மேலும் தனுஷ் ஒரு அழுத்தமான திரைப்படத்தை வழங்குகிறார், அது அதன் பார்வையாளர்களுக்கு நிறைய வழங்குகிறது.

அதன் இதயத்தில், ராயன் தனது உடன்பிறப்புகளுக்கு ஒரு மூத்த சகோதரனின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் எளிய மற்றும் கடுமையான கதையைச் சொல்கிறார். ராயன், பெயரிடப்பட்ட கதாபாத்திரம், தனது இரண்டு இளைய சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரியை வழங்குவதற்கான பொறுப்பில் நுகரப்படுகிறார், பெரும்பாலும் இந்த செயல்பாட்டில் தனது சொந்த மகிழ்ச்சியை தியாகம் செய்கிறார். தமிழ்நாட்டின் ஒரு தொலைதூர கிராமத்தில் அமைக்கப்பட்ட கதை, ராயன் தனது உடன்பிறந்தவர்களைக் கவனித்துக் கொள்ள அவரது பெற்றோரால் பணிக்கப்படுவதுடன் தொடங்குகிறது, அவர்கள் திரும்பி வரமாட்டார்கள். இது தனுஷால் சித்தரிக்கப்பட்ட ராயனை அவர்களின் பிழைப்புக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணிக்க வைக்கிறது.

சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் ராயனின் உடன்பிறப்புகளாக நடித்துள்ளனர், ஒவ்வொருவரும் தங்கள் பாத்திரங்களுக்கு ஆழத்தை கொண்டு வருகிறார்கள். சந்தீப் இரண்டாவது மூத்தவர், காளிதாஸ் மூன்றாவது, துஷாரா இளையவர் மற்றும் குடும்பத்தின் செல்லம். ராயனின் பாத்திரம் ஒரு தயக்கமுள்ள போர்வீரன், சிறு வயதிலிருந்தே தனது உடன்பிறந்தவர்களைக் காக்க கொலை செய்யும். அவனது போர்க்குணமிக்க திறன்கள் இருந்தபோதிலும், தனக்குள் இருக்கும் அழிவுத் திறனை உணர்ந்து, மோதலை தவிர்க்க முயல்கிறான். அவரது ஸ்டோயிக் நடத்தை மற்றும் ஒல்லியான உடலமைப்பு அவருக்கு பழைய பள்ளி மேற்கத்திய ஹீரோவின் பிரகாசத்தை அளிக்கிறது.

ஒரு தியாகம் செய்யும் ஹீரோவின் பழக்கமான கதைக்களத்தில், ராயன் மீது மட்டுமே கவனம் செலுத்தியிருந்தால் படம் படுதோல்வி அடைந்திருக்கும். இருப்பினும், தனுஷ் புத்திசாலித்தனமாக துணை கதாபாத்திரங்களுக்கு கவனம் செலுத்துகிறார், கதைக்கு அடுக்குகளை சேர்க்கிறார். அவர் ஆண்மை மற்றும் பெண்மை பற்றிய பாரம்பரிய கருத்துகளுக்கு சவால் விடுகிறார், குறிப்பாக அபர்ணா பாலமுரளியின் கதாபாத்திரத்தின் மூலம், அவர் சுந்தீப்பின் கதாபாத்திரத்தின் பிளஸ்-சைஸ் காதலராக நடிக்கிறார். அவரது சித்தரிப்பு வழக்கமான அழகு தரநிலைகளை மீறுகிறது மற்றும் உடல் தோற்றத்தின் மீது உணர்ச்சி பொருந்தக்கூடிய தன்மையை வலியுறுத்துகிறது.

துஷாரா விஜயனும் பிரகாசிக்கிறார், மணப்பெண்ணாக இருந்து ராயனின் கடுமையான பாதுகாவலராக மாறுகிறார். வழக்கத்திற்கு மாறான திருப்பத்தில், அவர் மீட்பரின் பாத்திரத்தை ஏற்றுக்கொள்கிறார், இது தனுஷ் தழுவிய ஒரு கதை தேர்வு, ஈகோவை விட கதையை முதன்மைப்படுத்துகிறது.

படத்தின் நீளத்தை நிர்வகிப்பதற்கு சில திட்டமிடப்பட்ட சதித் தேர்வுகள் இருந்தபோதிலும், தனுஷ் பிரமிக்க வைக்கும் வகையில் எடுக்கப்பட்ட மற்றும் நடனக் காட்சிகளை ஈடுபடுத்துகிறார். இடைவெளி நடவடிக்கை தொகுதி குறிப்பாக மறக்கமுடியாதது. குறிப்பாக எஸ்.ஜே.சூர்யாவின் கேரக்டருடன் கூடிய காட்சிகளில் நகைச்சுவையை பேலன்ஸ் செய்த படம்.

ராயன் அதிரடி, உணர்ச்சி மற்றும் நகைச்சுவையை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து, ராயன் குலத்தைப் பற்றிய சாத்தியமான எதிர்கால கதைகளுக்கு களம் அமைக்கிறார்.

Cast: Dhanush, SJ Suryah, Selvaraghavan, Sundeep Kishan, Kalidas Jayaram, Dushara Vijayan, Aparna Balamurali and others
Director: Dhanush


 

SR PRODUCTIONS தயாரிப்பில், “மெட்ராஸ்காரன்” திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா*

*SR PRODUCTIONS தயாரிப்பில், “மெட்ராஸ்காரன்”   திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா*

நடிகர்கள் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில்,  இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கும் புதுமையான திரில்லர் டிராமா “மெட்ராஸ்காரன்”  திரைப்பட டீசர் வெளியீட்டு விழா  !!

SR PRODUCTIONS சார்பில் B.ஜெகதீஸ்  தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர்  வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மெட்ராஸ்காரன்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வினில்…

தயாரிப்பாளர் B.ஜெகதீஸ்  பேசியதாவது...
நம் மெட்ராஸின் அடையாளம் எல்லா ஊர்க்காரரும் இங்கு இருப்போம், எல்லா ஊர்க்காரரும் வேலை பார்ப்போம், அதே போல் இந்த மெட்ராஸ்காரனில் எல்லாமே இருக்கிறது. எந்த ஒரு தயாரிப்பாளரும் முழு கதை கேட்டுத் தான் ஒகே செய்வார்கள், ஆனால் நான் பாதி கதை கேட்ட போதே, படத்தை ஆரம்பிக்க சொல்லிவிட்டேன். இயக்குநர் மீது இருந்த நம்பிக்கை தான் காரணம். படம் பார்த்து விட்டேன் திருப்தியாக இருக்கிறது. ஷேன் அவ்வளவு அர்ப்பணிப்பாக உழைத்துள்ளார். ஷேன் நிகாம் படப்பிடிப்பிற்கு எப்போதும் சீக்கிரம் வந்து விடுவார், இப்படத்திற்காக அவர் கடுமையாக உழைத்துள்ளார், அவருக்குத் தமிழில் பெரிய எதிர்காலம் இருக்கிறது. கலை பிரதர் மிக உரிமையாகப் பழகுவார். மெட்ராஸ் அன்பு பாத்திரத்திற்குப் பிறகு, இந்தப்படத்தில்  துரை சிங்கமாகக் கலக்குவார்.  நிஹாரிகா மிக அழகாக, அற்புதமாக நடித்துள்ளார். நான் தயாரிப்பாளராக இருக்க ஐஸ்வர்யாவும் ஒரு காரணம், அவர் கதாபாத்திரம் நன்றாக வந்துள்ளது. சாம் சிஎஸ் ஒரு மியூசிக் டாக்டர், படத்தை எப்படி கொடுத்தாலும் சரியாக்கி விடுவார். கேமராமேனும் நானும் எப்போதும் சாப்பாடு பற்றித் தான் பேசுவோம் அவ்வளவு நெருக்கம். எடிட்டர் சின்னப் பையன் தான் ஆனால் கலக்கிவிட்டார். படம் மிக அருமையாக வந்துள்ளது. படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. 
இயக்குநர் வாலி மோகன் தாஸ் பேசியதாவது...
என் புரோடியூசர் முதலாளி ஜெகதீஸ், இந்தப்படம் ஆரம்பமாக, காரணமாக இருந்த ஐஸ்வர்யா தத்தா  இருவருக்கும் நன்றி. என் மீது நம்பிக்கை வைத்து கதையை முழுதாகக் கூட  கேட்காமல்  தயாரித்தார். இந்தப்படம் பற்றி அனைவரும் சொல்லிவிட்டனர்.  படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் நன்றி.

நடிகர் ஷேன் நிகம் பேசியதாவது...
அன்புள்ள மனிதர்களுக்கு வணக்கம், என்ன சொல்வதென்றே தெரியவில்லை, மனது நிறைவாக இருக்கிறது. வாலி ப்ரோ, ஜெகதீஸ் ப்ரோ இருவருக்கும் நன்றி. என் மீதே, எனக்கே சந்தேகம் இருந்தபோது, வாலியும், ஜெகதீஸும் என் மீது நம்பிக்கை வைத்து, இப்படத்தை உருவாக்கியுள்ளனர். என் பட டீசரை வெளியிட்ட  நடிகர் எஸ் டி ஆருக்கு நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத்  தாருங்கள் நன்றி. 

நடிகை நிஹாரிகா பேசியதாவது...
எனக்கு ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி. டீசர் அனைவருக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். மிக நல்ல திறமையாளர்கள் ஒன்றாக இணைந்து, ஒரு நல்ல படைப்பைத் தந்துள்ளனர், ஷேன் உடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை தந்த  வாலிக்கு, என் நன்றிகள்.

நடிகர் கலையரசன் பேசியதாவது...
மெட்ராஸ்காரன், என் ஊர் மெட்ராஸ் ஆனால் இந்தப்படத்தில் புதுக்கோட்டை ஆளாக நடித்துள்ளேன்.  ஷேன் நிகாம் மிக அருமையான நடிகன், அவருடன் நடித்தது மிக மகிழ்ச்சி. வாலி அவர் முன்பு செய்த படத்தின் டீசர் காட்டினார், மேக்கிங் பிடித்திருந்தது, படத்தின் கதையும் பிடித்தது, உடனே நடிக்க ஒத்துக்கொண்டேன். படம் அருமையாக வந்துள்ளது. சின்னப்படம் பெரிய படம் என்பதெல்லாம் முக்கியமில்லை, நல்ல படத்தில் இருக்கிறோம் என்பது தான் முக்கியம். இப்படத்தின் தயாரிப்பாளர் ஜெகதீஸ் மிக ஆதரவாக இருந்தார். கதையை நம்பி நல்ல படத்தை எடுத்துள்ளார். எல்லோருக்கும் நன்றி. 

இசையமைப்பாளர் சாம் சி எஸ் பேசியதாவது...
பணம் கொடுத்துப் பார்க்கும் ஆடியன்ஸுக்கு தரமான படைப்பைத் தர வேண்டும். நல்ல கதை வைத்து படம் செய்யும் இயக்குநருக்குக் கதை எழுதும்போது,  இந்த மாதிரி நடிகர்கள் தான் நினைவுக்கு வருவார்கள், பெரிய ஹீரோ படம் என்றால் அவருக்கு எனக் கதை மாற்றி, சீன் மாற்றி, இறுதியாக நினைத்தது வராது. இந்த மாதிரி சின்ன படத்தில் அது நிகழாது. பெரிய ஹீரோ படம் நல்லாயில்லை என்றாலும், அது வைரலாகிறது. ஆனால் சின்ன படத்திற்கு நல்லா இருந்தாலும் அது நிகழ்வதில்லை, ரசிகர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஷேன் உடன் மலையாளத்தில் வேலை பார்த்தாலும், தமிழில் வேலை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக  இருந்தது. ஒரு படம் நன்றாக எடுக்கும் போது,  எல்லோருடைய பங்களிப்பும் மிக நன்றாக வந்து விடும். இப்படம் மிகத் தரமான படைப்பாக வந்துள்ளது. படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். இளன் பாடல் மிக நன்றாக எழுதியுள்ளார். கல்யாணம் பற்றி மிக அருமையான பாடலாக வந்துள்ளது. இப்படத்தில் வேலை பார்த்தது மிக மகிழ்ச்சி, வாலி உடன் பணியாற்றியது மகிழ்ச்சி  நன்றி. 

இயக்குநர் இளன் பேசியதாவது...
இந்தப்படத்தில் பணியாற்றிய அனைவரும் என் ஃப்ரண்ட்ஸ். இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். ஒரு பாடல் எழுதியுள்ளேன் உங்கள் ஆதரவைத் தாருங்கள்,  இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி. 

நடிகர் பாண்டியன் பேசியதாவது...
மெட்ராஸ்காரன் படத்தில் நான் ஒரு அப்பா கேரக்டர் செய்துள்ளேன். இயக்குநர் தான் என் ஃபெர்பார்மன்ஸ் பற்றிச் சொல்ல வேண்டும். என் மகன்  இளன் இப்படத்தில் பாடல் எழுதியிருப்பது இப்போது தான் தெரியும். பாடல் அருமையாக உள்ளது. பாடல் தனியே, இசை தனியே, எனக் கேட்க இனிமையாக உள்ளது.  படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள். 

நடிகை ஐஸ்வர்யா தத்தா பேசியதாவது...
தமிழ் சினிமாவில் இது எனக்கு 11 வது வருடம், பல தடைகளைத் தாண்டி எனக்கு இந்தப்படம் கிடைத்துள்ளது. பல படங்கள் நடித்துள்ளேன் ஆனால் சில படங்கள் வெளியாகவே இல்லை. வாலி மோகன் தாஸ் ஒரு முறை என்னிடம் கதை சொன்னார் , மிக அருமையாக இருந்தது, அந்தப்படம் 5 நாளில் நின்று விட்டது. மிக அருமையான படம், தயாரிப்பாளர் ஜெகதீஸ் என்னோட ஃபிரண்ட், ஃபெண்டாஸ்டிக் ஹியூமன் பீயிங், அவரிடம் எல்லாமும் சொல்வேன், வாலி பற்றிச் சொன்னேன். அப்படித்தான் இந்தப்படம் ஆரம்பித்தது. எனக்கும் இந்த வாய்ப்பு கிடைத்தது. பிடிச்ச டைரக்டர், பிடிச்ச புரோடியூசர். ஒரு நல்ல படம். தமிழில் இந்தப்படம் மூலம் நான் மீண்டும் வருவேன். இந்தப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி. 

நடிகர் சரண் பேசியதாவது...
இந்தப்படத்தின் ஒருங்கிணைப்பாகவும் நடிகராகவும் பணியாற்றியிருக்கிறேன். இப்படத்தில் எல்லோருமே மிக அருமையாக நடித்துள்ளார்கள். நான் வாலி ப்ரோ, இருவரும் ரங்கோலி படம் முடித்த பிறகு, நிறையப் பேசிக்கொண்டிருந்தோம், அவருக்குக் கல்யாணம் நடந்தது. அப்போது தான் இந்தக்கதையை எழுதினார். அப்போது இரண்டாவது பாகத்தை எப்படி முடிப்பது என விவாதித்துக் கொண்டிருந்தோம்,  ஆனால் தயாரிப்பாளர் இரண்டாம் பாகம் கேட்காமலே படத்தைத் தயாரிக்க ஒத்துக்கொண்டு செக் கொடுத்துவிட்டார். ஷேன் நிகம் ரங்கோலி படம் பார்த்து விட்டு இந்தப்படத்தை ஒத்துக்கொண்டார். இந்தப்படத்திற்காக அவர் கொடுத்த உழைப்பு பிரமிப்பானது. கலை பிரதர் பல வருடம் பழகியவர் போலவே, அன்பைப் பொழிவார். ஐஸ்வர்யா இந்தப்படம் ஆரம்பிக்க ஒரு காரணமாக இருந்தார். நிஹாரிகா அருமையாக நடித்துள்ளார். சாம் சிஎஸ் அவர் கையில் இந்தப்படத்தின் மூச்சு உள்ளது. படம் மிக அருமையாக வந்துள்ளது,  அனைவருக்கும் நன்றி. 


மலையாளத்தில் புகழ்பெற்ற கும்பளாங்கி நைட்ஸ், ஆர் டி எக்ஸ், இஷ்க் படப்புகழ் நடிகர் ஷேன் நிகம், இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.  இவருக்கு ஜோடியாக தெலுங்குத் திரையுலகின் மிகப்பெரும் நட்சத்திரக்குடும்பமான சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து முன்னணி நடிகை நிஹாரிகா நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் கலையரசன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இணைந்து நடித்துள்ளனர். 

ரங்கோலி படம் மூலம், பள்ளிச் சிறுவர்களின் வாழ்வியலை வண்ணங்களாகத் தீட்டிய, இயக்குநர் வாலி மோகன் தாஸ், இப்படத்தில் ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாக, இருவர் வாழ்க்கையைப் புரட்டி எடுப்பதை, பரபரப்பான திரைப்படமாக உருவாக்கியுள்ளார். இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சாம் CS இசையமைத்துள்ளார்.


பெரும் பொருட்செலவில்,  உயர்தர தொழில் நுட்ப கலைஞர்களுடன் தரமானதொரு படைப்பாக SR PRODUCTIONS சார்பில் B. ஜெகதீஸ் இப்படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பைச் சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் திரையரங்கு வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Chutney Sambar - Web Series விமர்சனம்


 டிஸ்னி+ ஹாட்ஸ்டார், யோகி பாபு நடிப்பில், ராதா மோகன் இயக்கிய “சட்னி சாம்பார்” என்ற வெப் சீரிஸை அறிமுகப்படுத்தியுள்ளது, இது “மொழி,” “அபியும் நானும்,” மற்றும் “பயணம்” போன்ற படங்களில் பணியாற்றியதற்காக புகழ்பெற்றது. ராதா மோகன் பொன் பார்த்திபனுடன் எழுத்து வரவைப் பகிர்ந்து கொள்கிறார், அவருடன் "பொம்மை" படத்திலும் ஒத்துழைத்தார்.

“சட்னி சாம்பாரில்” யோகி பாபு, சாலையோர உணவகத்தின் உரிமையாளரான ‘அமுதா உணவகம்’ உரிமையாளராகவும், நிழல்கள் ரவி ஊட்டியில் உள்ள ‘அமுதா கஃபே’ என்ற பழங்கால உணவகத்தின் உரிமையாளராகவும் நடித்துள்ளார். கதையானது நகைச்சுவை மற்றும் நாடகத்தின் மகிழ்ச்சிகரமான கலவையுடன் தொடங்குகிறது மற்றும் ஒரு அனாதை தெரு வியாபாரியைப் பின்தொடர்கிறது, அவர் எதிர்பாராத விதமாக தனது பணக்கார மாற்றாந்தாய் குடும்பத்தின் ஒரு பகுதியாக தன்னைக் கண்டுபிடித்தார், அவரது புதிய வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ளும் சவால்களை எதிர்கொள்கிறார்.

யோகி பாபுவுடன் வாணி போஜன் மற்றும் கிரிஷ் ஹாசன் நடித்துள்ளனர். இந்த தொடர் சிரிப்பு மற்றும் கடுமையான தருணங்களின் கலவையை வழங்குவதாக உறுதியளிக்கிறது. துணை நடிகர்கள் நிதின் சத்யா, இளங்கோ, சம்யுக்தா விஸ்வநாதன், சந்திரமௌலி பிஎஸ் மற்றும் மைனா நந்தினி ஆகியோர் அடங்குவர்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரித்த, “சட்னி சாம்பார்” ஜூலை 26 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ‘ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ்’ டேக் கீழ் திரையிடப்பட உள்ளது. இந்த வலைத் தொடர் அதன் ஈர்க்கும் கதைக்களம் மற்றும் குழும நடிகர்களுடன் ஒரு தனித்துவமான கதையை வழங்குகிறது, இது தமிழ் சினிமா மற்றும் OTT உள்ளடக்கத்தின் ரசிகர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.

Cast:-Starring: Yogibabu, Vani Bhojan, Kayal Chandramouli, Nitin Sathyaa, Myna Nandini, Samyuktha, Kumaravel, Nizhalgal Ravi and others

Director:Radha Mohan

பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ், மகேஷ் சந்து, சிவன் ராமகிருஷ்ணா, லுதீர் பைரெடி மூன்சைன் பிக்சர்ஸ் இணையும் பான் இந்திய திரைப்படம் #BSS12 அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது !!*


*பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ், மகேஷ் சந்து, சிவன் ராமகிருஷ்ணா, லுதீர் பைரெடி மூன்சைன் பிக்சர்ஸ் இணையும் பான் இந்திய திரைப்படம் #BSS12 அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது !!*

லெஜண்ட் கோடி ராமகிருஷ்ணாவின் 75வது பிறந்தநாளை நினைவுகூறும் வகையில், ஆக்‌ஷன்-அதிரடி ஸ்டார் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸின் 12வது படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. #BSS12 என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படம், 10 வருடங்களைத் திரையுலகில் முடித்த பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸுக்கு ஒரு மதிப்புமிக்க திரைப்படமாக உருவாகவுள்ளது. #BSS12 மிகப்பெரிய பட்ஜெட் மற்றும் உயர்தர தொழில்நுட்ப தரத்துடன்     மிகப் பிரமாண்டமான திரைப்படமாக இப்படம் உருவாகிறது.  மூன்ஷைன் பிக்சர்ஸ் மூலம் மகேஷ் சாந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் லுதீர் பைரெட்டி இயக்குகிறார். பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் திரைவாழ்வில்  மிக அதிக பொருட்செலவில் உருவாக்கப்படும்  இப்படத்தை சிவன் ராமகிருஷ்ணா வழங்குகிறார்.
400 ஆண்டுகள் பழமையான கோவிலை மையமாக கொண்டு  ஒரு அமானுஷ்ய த்ரில்லராக உருவாகும் இந்தத் திரைப்படத்தில், பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸை இதுவரை திரையில் கண்டிராத அவதாரத்தில் காணலாம். கோவிலில் சூரியக் கதிர்கள் விழும் தெய்வீக அதிர்வுகள் நிறைந்த இந்த அறிவிப்பு போஸ்டரில் கதாநாயகன் பழமையான கோவிலின் முன் நிற்பதைப் பார்க்கலாம். பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ், கோவிலை வெறித்துப் பார்த்தபடி, துப்பாக்கியுடன் நிற்கிறார். போஸ்டர் சுவாரஸ்யமாக இருப்பதுடன் பெரும் தாக்கத்தை உருவாக்குவதாகும் உள்ளது.
லுதீர் பைரெட்டி கமர்ஷியல் அம்சங்களுடன் கூடிய, ஒரு அசத்தலான திரைக்கதையை உருவாக்கியுள்ளார். படத்தின் இரண்டாவது ஷெட்யூல் நாளை தொடங்குகிறது.
இத்திரைப்படத்தில் மிகவும் திறமையான தொழில்நுட்ப வல்லுனர்கள் பணியாற்றுகின்றனர். சிவேந்திரா ஒளிப்பதிவு செய்ய, லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். கார்த்திகா ஸ்ரீனிவாஸ் ஆர் படத்தொகுப்பாளராகவும், ஸ்ரீநாகேந்திரன் தங்கலா கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர்.
நடிகர்கள்: பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ்
தொழில்நுட்பக் குழு: 
எழுத்து , இயக்கம் : லுதீர் பைரெட்டி
தயாரிப்பாளர்: மகேஷ் சந்து 
இணை தயாரிப்பாளர்: சாய் ஷஷாங்க் 
பேனர்: மூன்ஷைன் பிக்சர்ஸ் 
வழங்குபவர்: சிவன் ராமகிருஷ்ணா 
ஒளிப்பதிவு : சிவேந்திரா 
இசை: லியோன் ஜேம்ஸ் 
எடிட்டர்: கார்த்திகா ஸ்ரீனிவாஸ் ஆர் 
கலை: ஸ்ரீநாகேந்திரன் தாங்கலா 
விளம்பர வடிவமைப்பாளர்: அனந்த் கஞ்சர்லா மக்கள் தொடர்பு : யுவராஜ் 
மார்க்கெட்டிங் - வால்ஸ் & டிரெண்ட்ஸ்



சிவண்ணாவின் 131வது படம் தயாராகிறது

*சிவண்ணாவின் 131வது படம் தயாராகிறது… ஹாட்ரிக் ஸ்டாரை சந்தித்தது படக்குழு*
*சிவண்ணாவின் 131வது படம், ரசிகர்கள் உற்சாகம்*
கர்நாடக சக்கரவர்த்தி சிவண்ணா ரசிகர்களுக்கு பெரும் உற்சாகம் தரும், புதிய அப்டேட் வந்துள்ளது, சிவண்ணாவின்  131வது படம் இனிதே துவங்கவுள்ளது. சமீபத்தில், சிவண்ணாவின் பிறந்தநாளில் அறிமுக டீசரை வெளியிட்டு அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது தயாரிப்பு குழு. தற்போது படத்தைத் தயாரிக்கத் தயாராகி விட்டது. சிவன்னாவின் 131வது படத்தின் பூஜை (மங்கல ஆரம்பம்) விரைவில் நடக்கவுள்ளது.

*சிவண்ணாவின்  131வது படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது*
ஹாட்ரிக் ஹீரோ சிவராஜ்குமாரின் 131வது படத்திற்கான படப்பிடிப்பை பிரமாண்டமாக துவங்கிட படக்குழு தயாராகி வருகிறது. இந்நிலையில் இன்று ஒட்டுமொத்த படக்குழுவும் இன்று  சிவண்ணாவைச் சந்தித்தது.


இயக்குநர் கார்த்திக் அத்வைத், தயாரிப்பாளர்கள் N.S. ரெட்டி மற்றும் சுதீர், ஒளிப்பதிவாளர் A.J.ஷெட்டி, மற்றும் எடிட்டர் தீபு S.குமார் ஆகியோர் ஹாட்ரிக் ஸ்டார் சிவண்ணாவை அவரது நாகவாரா இல்லத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பு புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் உற்சாகமாக பகிர்ந்து வருகின்றனர். 


இயக்குநர் கார்த்திக் அத்வைத் இந்த படத்தின் மூலம் சாண்டல்வுட்டில் அறிமுகமாகிறார், இது அவருக்கு இயக்குநராக இரண்டாவது படமாகும். ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக தயாராகும் இப்படத்தில், சிவண்ணா வித்தியாசமான கதாபாத்திரத்தில் மிக வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார். மோஸ்ட் புகழ், V.M.பிரசன்னாவும், 'சீதாராமம்' புகழ் ஜெயகிருஷ்ணாவும் இப்படத்திற்கு எழுத்தாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர். 'விக்ரம் வேதா', 'ஆர்டிஎக்ஸ்', 'கைதி' புகழ் சாம் C.S. இசையமைக்க, A.J. ஷெட்டி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். படத்தொகுப்பை தீபு S. குமார் செய்ய, கலை இயக்கத்தினை ரவி சந்தேஹக்லு செய்கிறார். இப்படத்தை புவனேஷ்வரி புரொடக்ஷன்ஸ் சார்பில் S.N. ரெட்டி மற்றும் சுதீர் P. தயாரிகின்றனர்.  ரமணா ரெட்டி நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் இணையும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (LIK) படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

*விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் இணையும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (LIK) படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!*

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் - இயக்குநர் விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் தயாராகும் புதிய படத்திற்கு  “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (LIK) என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதனின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (LIK) எனும் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ் ஜே சூர்யா, சீமான், கிரித்தி ஷெட்டி, யோகி பாபு, ஆனந்த் ராஜ்,  மாளவிகா, சுனில் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொண்டிருக்கிறார்.‌ இன்றைய இளம் இணைய தலைமுறையினரின் காதலை நகைச்சுவையுடன் சொல்லும் படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்  மற்றும் ரவுடி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தினை தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படத்தில் L . K. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராகியிருக்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு  தற்போது  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் 'லவ் டுடே' பிரதீப் ரங்கநாதனின் தோற்றம் வடிவமைக்கப்பட்டிருப்பதால்... இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 

'நானும் ரவுடிதான்', 'காத்து வாக்குல ரெண்டு காதல்' போன்ற வெற்றி படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன் - 'லவ் டுடே' படத்தின் மூலம் பிரமாண்ட வெற்றியை பெற்று, தமிழ் திரையுலகத்தின் நம்பிக்கைக்குரிய நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கும் பிரதீப் ரங்கநாதன் - 'மாஸ்டர்', ' லியோ' போன்ற பிரம்மாண்டமான படைப்புகளை தயாரித்த 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம்-  ஆகியோரின் கூட்டணியில் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' தயாராகி இருப்பதால் இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது. இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்க நாதனின் பிறந்த நாளில் அவர் நடிக்கும் 'எல் ஐ கே' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருப்பதால்... அவரின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

Wednesday, July 24, 2024

பிதா" படத்தை பாராட்டும் பிரபலங்கள்!

"பிதா" படத்தை பாராட்டும் பிரபலங்கள்!

'பிதா' படத்தின் போஸ்டரை இயக்குனர்கள் அரவிந்தராஜ், பேரரசு, நடிகர் மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் வெளியிட்டனர்!

ஜூலை 26'ம் தேதி வெளியாகவுள்ள பிதா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வில், 23' மணி நேரம், 23' நிமிடங்களில் எடுக்கப்பட்ட 'பிதா' படம் திரையிடப்பட்டது. பார்த்த பிரபலங்கள் அனைவருமே படத்தையும், பட குழுவினரையும் வெகுவாக பாராட்டினார்கள்!
தயாரிப்பாளர்கள் ஜி.சிவராஜ், அன்புச் செழியன், ஆக்ஷன் ரியாக்ஷன் ஜெனீஷ், இயக்குனர்கள் அரவிந்தராஜ், பேரரசு, கேபிள் சங்கர், எஸ்.சுகன், நடிகர்கள் மாஸ்டர் மகேந்திரன், ஆதேஷ் பாலா, சாம்ஸ், சம்பத்ராம், ஸ்ரீராம் சந்திரசேகர், மாரிஸ் ராஜா, மாஸ்டர் தர்ஷித், நடிகை  ரிஹானா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
இந்திய திரைப்பட வரலாற்றில், 23 மணி நேரம், 23 நிமிடத்தில் எடுத்து முடிக்கப்பட்ட முதல் திரைப்படம் 'பிதா'!
எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி ஜி.சிவராஜ் தயாரிப்பில், எஸ்.சுகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை,  தரமான  சிறு முதலீட்டு திரைப்படங்களை தொடர்ந்து வெளியிடும்  'ஆக்‌ஷன் ரியாக்‌ஷன்' சார்பில், உலகெங்கும் வெளியிடுகிறார் ஜெனீஷ்.
காது கேளாத, வாய் பேச முடியாத பத்து வயது சிறுவன், கடத்தப்பட்ட தொழில் அதிபரையும், தனது அக்காவையும் காப்பாற்றுவது தான் கதை.
ஆதேஷ் பாலா, சாம்ஸ், மாஸ்டர் தர்ஷித், ஸ்ரீராம் சந்திரசேகர், அனு கிருஷ்ணா, ரிஹானா, மாரீஸ் ராஜா, அருள்மணி ஆகியோர் நடித்துள்ளனர்.
எஸ்.சுகன் விறுவிறுப்பாக இயக்கியுள்ளார். வசனம் பாபா கென்னடி, ஒளிப்பதிவு இளையராஜா, இசை நரேஷ், எடிட்டர் ஸ்ரீவர்சன், கலை கே.பி.நந்து, மக்கள் தொடர்பு கோவிந்தராஜ், தயாரிப்பு எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி ஜி.சிவராஜ், 'ஆக்‌ஷன் ரியாக்‌ஷன்' ஜெனீஷ், பிதா படத்தை ஜூலை 26'ம் தேதி உலகெங்கும் வெளியிடுகிறார்!

@GovindarajPro

Tuesday, July 23, 2024

Director Susi Ganeshan Launches Brand New Motion Poster for 'Ghuspaithiya' Starring Vineet Kumar Singh, Urvashi Rautela, and Akshay Oberoi; Movie Releases on 9th August*

*Director Susi Ganeshan Launches Brand New Motion Poster for 'Ghuspaithiya' Starring Vineet Kumar Singh, Urvashi Rautela, and Akshay Oberoi; Movie Releases on 9th August*

*Susi Ganeshan Reveals Exciting Motion Poster for 'Ghuspaithiya' Featuring Vineet Kumar Singh, Urvashi Rautela, and Akshay Oberoi; To be Release on 9th August*
The makers of the highly anticipated film 'Ghuspaithiya' have launched a brand new motion poster featuring the names of Vineet Kumar Singh, Urvashi Rautela, and Akshay Oberoi. The motion poster showcases a fleet of ships, among which a sudden appearance of a black ship wearing headphones and a police cap catches the eye. The poster gives the impression that a hidden Ghuspaithiya is lurking among the fleet, signaling a sense of caution to the audience. This unique and intriguing concept has created a buzz among fans, who are eagerly waiting to discover which of these stars is the real 'Ghuspaithiya'.
The makers shared the motion poster on their social media platforms, sparking excitement and anticipation. They captioned the post with a mysterious message, *"caption to be added,"* further adding to the suspense.
Directed by Susi Ganeshan, 'Ghuspaithiya' is produced by M. Ramesh Reddy, Jyotika Shenoy, and Manjari Susi Ganeshan. The film's cinematography is helmed by Sethu Sriram, with music directed by Akshay Menon and Saurabh Singh. The film promises to be a thrilling experience, blending suspense, action, and stellar performances by the lead cast.
Talking about recent incident, actress Urvashi Rautela's bathroom video was leaked, and the next day, her phone call with her manager was tapped, which went viral on the internet. Later, fans started linking the video to the film and posting it on social media.
'Ghuspaithiya' is set to release  in theaters on August 9th. Fans and moviegoers are eagerly waiting to unravel the mystery and witness the thrilling journey on the big screen.

Madras Couture Fashion Week – Season 10


 Madras Couture Fashion Week – Season 10

CELEBRATING A DECADE OF FASHION 

The TENTH edition of KLOTHBERG Madras Couture Fashion Week 2024 a spectacular fusion of style, creativity, glamour curated and managed by Satish Jupiter was held on 21st July 2024 at Hyatt Regency, Chennai. The event showcased fashion, artistry, and innovation, bringing together renowned designers, celebrities, influencers and fashion enthusiasts


MCFW Season 10 choreographed by Faheem, styled by Jackie saw an array of gorgeous models and trendy outfits that ruled the ramp. The opening sequence of the fashion show by Chriss Legacy. Other sequences were by Syed Creations, KCG, Page 3, Utppalakshi, Shree Nandi Jewels, Vishali Kola and grand finale by Klothberg and a few exclusive brands took part in this edition 


Satish Jupiter says “we are extremely happy that we have been able to successfully sustain this property since 2014 and now in its 10th season, we are happy to partner and collaborate with Mr Rajiv Raj Jagasia of Klothberg, the Title Sponsor for this edition

Tharunam - திரைவிமர்சனம்

வாழ்க்கை எதிர்பாராத தருணங்களால் நிறைந்துள்ளது - சில மகிழ்ச்சியைத் தருகின்றன, மற்றவை தடைகளை ஏற்படுத்துகின்றன. இந்த தருணங்கள் நம்மை எவ்வாறு வட...