Tuesday, July 16, 2024

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2'*

*வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2'*

*வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2'*

தமிழ் திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா நடிப்பில் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் தயாராகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆண்டில் மட்டும் 'சிங்கப்பூர் சலூன்', 'ஜோஷ்வா இமைப் போல் காக்க', 'பி டி சார்' என வரிசையாக வெற்றி படங்களை தயாரித்து வழங்கிய வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில் அடுத்த வெற்றி படைப்பாக 'மூக்குத்தி அம்மன் 2' எனும் திரைப்படம் தயாராகவுள்ளது. இதில்  லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படத்தில் திரையுலக முன்னணி நட்சத்திர நடிகர்கள் பலர் இணைந்து நடிக்கவுள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தை நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியினரின் பட தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு காணொளியாக வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்தத் திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குநர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

இத்திரைப்படத்தை 2025 ல் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

https://youtu.be/nBzGN71OYYQ?si=cx6zKSrFyFcibR1e

இயக்குநர் சேரன், நடிகர் நட்டி இருவரும் வெளியிட்டுள்ள 'ப்ராமிஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

  ப்ராமிஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் : இயக்குநர் சேரன் மற்றும் நட்டி வெளியிட்டனர்! ப்ராமிஸ் 'படத்தின்  ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற...