தமிழ்நாடு ஜூடோ அசோசியேஷன் மற்றும் வீர் விவேகா நமோ அகாடமி ஆகியவை இந்திய விளையாட்டு ஆணையத்துடன் இணைந்து இந்திய ஜூடோ கூட்டமைப்பின் ஆதரவுடன் 4 வது தென் மண்டல மகளிர் கேலோ இந்தியா பிரீமியர் லீக் தொடங்கியது.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில், 3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டிகளில் 12 வயது முதல் 21 வயதிற்கு மேல் வரையுள்ள 800 மாணவிகள் தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா ஆகிய 6 தென் மண்டல மாநிலங்களில் இருந்து 23 முதல் 57 கிலோ வரையிலான எடைப்பிரிவுகளில் 1500 போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
12 முதல் 15 வயது சப் ஜூனியர் எடை அடிப்படை பிரிவு 9 வகையான போட்டிகள்
16 முதல் 17 வயது கேடட் எடை அடிப்படை பிரிவு 8 வகையான போட்டிகள்
18 முதல் 20 வயது ஜூனியர் அடிப்படை எடை பிரிவு 7 வகையான போட்டிகள்
21 வயதிற்கு மேல் சீனியர் எடை அடிப்படை பிரிவு 7 வகையான போட்டிகள்
இவர்களில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் கேரளாவில் இந்த மாதம் இறுதியில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்வர்.
ஜூடோவை கற்பிப்பது மட்டுமல்லாமல், ஜூடோவின் மதிப்பை அதிகரிப்பதற்கும், 70 புதிய பிளாக் பெல்ட் பெட்ரா வீரர்களுக்கு ஜூடோவை ஒரு தொழிலாக எடுத்துச் செலவதற்கான ஒரு நிகழ்வாகவும் இந்த போட்டியை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சிக்கு இந்திய விளையாட்டு ஆணையத்தின் பிரதிநிதி யோகேஷ் தஹதேவ், தமிழ்நாடு ஜூடோ சங்கத்தின் தலைவர் விஜய் மோகன் முரளி, அதன் செயலாளர் நா. முரளி, நவீன் மற்றும் இந்திய ஜூடோ கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் திரு. யதிஷ் பங்கேரா ஆகியோர் தலைமை தாங்கினர்.
தமிழ்நாடு ஜூடோ சங்கத் தலைவர் விஜய் தெரிவிக்கையில், இந்த போட்டிகள் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அவர் உருவாக்கிய இந்திய தேசிய இராணுவம், அதன் பெண் போர்வீரர்கள் ஆகியோருக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார். மேலும் எதிர்கால சந்ததியினருக்கு சுதந்திரத்திற்காக நமது முன்னோர்கள் எவ்வளவு போராடினார்கள் என்பதை நினைவு கூறவும், உலகின் சிறந்த நாடாக இந்தியாவை மேம்படுத்துவது எப்படி என்பதை உணரவும் இந்த ஜூடோ போட்டிகள் பயன்படுத்தப்படும் என்றார்.
ஜூடோ ஒரு தற்காப்புக் கலை மட்டுமல்ல, ஒரு வாழ்க்கை முறை மற்றும் தூய உயிர் இயற்பியலை அடிப்படையாகக் கொண்டது, இது வயது பாலின எடை அல்லது உயரத்தைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் சிறந்த தற்காப்பாக அமைகிறது. இது "மென்மையான வழி" என்று அழைக்கப்படும் மற்றொரு ஞானம்.
இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட ASMITA என்ற இந்த நோபல் மகளிர் பிரீமியர் லீக் 3 நாட்கள் நடைபெறும் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வட சென்னை எம்பி திரு. கலாநிதி வீரசாமி, ரஞ்சனி மணியன், பிரஷாந்த் திவாரி புகழ்பெற்ற ஜூடோ பயிற்சியாளருமான டோனி லீ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.