Saturday, September 28, 2024

வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் இறுதி டிரெய்லரிலிருந்து முக்கியமாக கவனிக்க வேண்டிய ஐந்து விஷயங்கள்!*

*’வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் இறுதி டிரெய்லரிலிருந்து முக்கியமாக கவனிக்க வேண்டிய ஐந்து விஷயங்கள்!*

வெனோம்: தி லாஸ்ட் டான்ஸின் இறுதி டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. எடி ப்ரோக் மற்றும் வெனோம் ஆகியோருக்கு ஒரு அற்புதமான ஆனால் திகிலூட்டும் முடிவை இந்த டிரெய்லர் உறுதியளிக்கிறது. இந்த உற்சாகமான டிரெய்லரில் இருந்து நாம் கவனிக்க வேண்டிய ஐந்து முக்கிய விஷயங்கள் பற்றி இங்கே பார்க்கலாம். 

*வெனோமிஷ்ட் மீன் (Venomised Fish):*
முதல் டிரெய்லர் வெனோமிஷ்ட் குதிரை இருந்தது நியாபகம் இருக்கலாம். இந்த கதாபாத்திரம் பெற்ற வரவேற்பை அடுத்து, இன்னும் அதிக விஷமத்தன்மை கொண்ட விலங்குகளை அடுத்த பாகத்தில் பார்க்க முடியுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது. டிரெய்லரில் நீங்கள் உற்று கவனித்துப் பார்த்தால் ஒரு ஷாட்டில் பின்தொடர்பவர்களிடமிருந்து தப்பிக்க முயற்சித்தபோது வெனோம் மீனை கைப்பற்றியிருப்பதைக் காணலாம்.

*சிம்பயோட்ஸ் (Symbiotes on the run):*
’வெனோம் டிரெய்லர்: தி லாஸ்ட் டான்ஸ்’ஸில் ஒரு முக்கிய காரணத்திற்காக சிம்பியோட்கள் பூமியில் இருப்பதை நிறுவுகிறது. காமிக்ஸைப் போலவே அவர்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். எல்ட்ரிட்ச் சிம்பியோட் கடவுளிடமிருந்து சிம்பயோட்டுகள் தப்பி ஓடி பூமியில் தஞ்சம் புகுந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

*ஜெனோபேஜ்களின் செயல்பாடு:*
முதல் ட்ரெய்லர் ஜெனோபேஜ்களைப் பற்றிய கிளிம்ப்ஸ் கொடுத்திருந்தாலும், இரண்டாவது டிரெய்லர் ஜெனோபேஜ்கள் பறிய அச்சுறுத்தும்படியான முழுமையான காட்சிகளைக் கொடுத்துள்ளது. ஜெனோபேஜ்கள் வேட்டையாடும் சிம்பயோட்டுகளுக்கு பெயர் பெற்றவை. இந்த விஷயத்தில், வெனோம் அவர்களின் சமீபத்திய இரையாகத் தெரிகிறது.

*ஃப்ளாஷ் ஆஃப் வெனோம்ஸ் ஹோம் வேர்ல்ட் (Flashes of Venoms Home World):*
வெனோம் ஃப்ரான்சைசில் முதன்முறையாக, வெனோமின் சொந்த உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை இதில் பார்க்க முடிகிறது. வெனோம் மற்றும் பிற சிம்பியோட்டுகள் எங்கிருந்து உருவாகின்றன என்பதை இந்த டிரெய்லர் காட்டுகிறது. அங்கு இப்போது சிம்பியோட்களை உருவாக்கியவருடன் ஜெனோபேஜ்கள் வசிக்கின்றன.

*குன்லின் வெளிப்பாடு: (The reveal of Knull)*
சிம்பியோட்களை உருவாக்கியவரும், இருளின் கடவுளுமான எல்ட்ரிச்சை இதில் பார்க்க முடிகிறது. காமிக்ஸில் அவர் தடுக்க முடியாத சக்தியாக இருந்தார். அவரது சக்தி பிரபஞ்சத்தை கைப்பற்றுவதாக அச்சுறுத்தியது. ஆனால், இறுதியில் அவர் உருவாக்கிய சிம்பியோட்களால் சிக்கினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் எடி ப்ரோக் மற்றும் வெனோம் ஆகியோரால் தடுக்கப்படும் வரை மீண்டும் பிரபஞ்சத்தை அச்சுறுத்தினார். ’வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ இந்த கதையை எப்படி மாற்றியமைக்கிறது மற்றும் இந்த போர் ஒட்டுமொத்த பிரபஞ்சத்திற்கு ஏற்படுத்தும் விளைவுகளையும் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

கேம் சேஞ்சர் பட முன் வெளியீட்டு நிகழ்வில், பிளாக்பஸ்டர் கூட்டணி ராம்சரண் - சுகுமார் ஒன்றாக தோன்றவுள்ளனர் !

 கேம் சேஞ்சர் பட முன் வெளியீட்டு நிகழ்வில், பிளாக்பஸ்டர் கூட்டணி ராம்சரண் - சுகுமார் ஒன்றாக தோன்றவுள்ளனர் ! பட முன் வெளியீட்டு நிகழ்வில், மா...