Sunday, October 6, 2024

"2K லவ்ஸ்டோரி" நாயகன் ஜெகவீரை அறிமுகப்படுத்திய மக்கள் நாயகன் ராமராஜன்


 "2K லவ்ஸ்டோரி" நாயகனை அறிமுகப்படுத்தும் விழா   !! 

"2K லவ்ஸ்டோரி" நாயகன் ஜெகவீரை அறிமுகப்படுத்திய மக்கள் நாயகன் ராமராஜன் !! 

ராமராஜன் அறிமுகப்படுத்திய புது ஹீரோ !! 

City lght pictures தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில்,  இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம்   "2K லவ்ஸ்டோரி”. இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படக்குழுவினர் விரைவில் திரைக்குக்கொண்டுவரும் பணிகளைச் செய்து வருகின்றனர்.  

இந்நிலையில் படத்தின் அறிமுக நாயகன் ஜெகவீரை அறிமுகப்படுத்தும் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மக்கள் நாயகன் ராமராஜன் படக்குழுவினரை வாழ்த்தி, அறிமுக நாயகன் ஜெகவீரை பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு  அறிமுகப்படுத்தினார். 

இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது…

மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. 2கே லவ்ஸ்டோரி என்னை நானே மீட்டெடுத்துக்கொண்ட படம், வெண்ணிலா கபடி குழு படத்தைப்போல் நிறைய பாசிடிவ் விசயங்கள் நடந்தது. இயற்கையே நிறையச்  செய்து தந்தது. எதேச்சையாக நாயகனை ஒரு ஆபிஸில் சந்தித்தபோது, என்ன செய்கிறீர்கள் எனக் கேட்டேன், அவர்  ஒரு புராஜக்ட் செய்வதாகச் சொன்னார். சொல்லுங்கள் நாம் ஒரு படம் செய்வோம் என்றேன். நான் ஒர்க் பண்ணிய ஹீரோக்களிடம் கூட இப்படிக் கேட்டதில்லை, அவரும் உடனே சரி என்று வந்தார். அவரே அவரது நண்பர்கள் உதவியுடன் புரடியூஸ் செய்ய வந்தார், ஆனால் நடக்கவில்லை, அப்போது உங்கள் அக்கவுண்டில் இருந்து 10000 போடுங்கள், நாம் அடுத்த மாதம் படம் செய்யலாம் என்றேன். வெண்ணிலா கபடி குழு படத்தில் இப்படி தான் ஆரம்பமானது. யார் தயாரிப்பாளர் என்று தெரியாமல் தான் அந்தப்படமும் ஆரம்பித்தேன். அதே போல் இந்தப்படமும் தயாரிப்பாளர் தானாக வந்து சேர்ந்தார். படத்தில் பணியாற்றிய பலரும் அது போலவே வந்தார்கள். நிறையப் புதுமுகத்தை வைத்து எடுத்துள்ளேன். இசையமைப்பாளர் D இமான் இசையமைக்கிறார். அவருடன் எனக்கு 10 வது படம், அவருக்கு எப்போதும் ஒரு வகையான கிராமத்து முகம் தான் இருக்கிறது. அதை மாற்றி சிட்டி சப்ஜெக்ட், இளமை துள்ளலுடன் செய்யலாம் என கூட்டி வந்தேன், அட்டகாசமாகப் பாடல்கள் தந்துள்ளார். நிறைய ஃபன் இருக்கிற படமாக இப்படம் இருக்கும். பிரேமலு மாதிரி பெரிய கலக்சன் எடுக்கும் படமாக இப்படம் இருக்கும். பாண்டிய நாடு படத்திற்குப் பிறகு உன்னிடம் கான்ஃபிடண்ட் இல்லை என என் நண்பன் சொல்வான், இந்தப்படம் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என கான்ஃபிடண்டாக சொல்லிக்கொள்கிறேன். என்னுடன் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. தமிழ் சினிமாவில் எப்படி விஜய் சேதுபதி வந்தாரோ அப்படி ஒரு ஹீரோவாக ஜெகவீர் ஜொலிப்பார். சினிமாவின் மீது பேஷனோடு இருக்கும் இளைஞன், சூரி, விஷ்ணு போல் இவரும் ஜொலிப்பார். 

ஜிபி முத்து பேசியதாவது…

இந்தப்படத்தில் நடிக்க சொன்ன போது பயமாக இருந்தது.  சிங்கம் புலி சார் ஏற்கனவே இயக்குநர், நடிப்பிலே ஊறியவர்கள் எல்லோரும் அதனால், அவர்களுடன் நடிப்பது பயமாகத்தான் இருந்தது. பின்னர் எல்லோரும் ஊக்கம் தந்தார்கள். இளைஞர்கள், எல்லோரும் ரொம்ப அன்பானவர்களாக இருந்தார்கள். என்னை அன்பாகப் பார்த்துக் கொண்டார்கள். என்னை ரெண்டு படம் நடிக்க வைத்த இயக்குநர் சுசீந்திரன் சாருக்கு நன்றி. சக்திவேல் பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். சார் மிக உறுதுணையாக இருந்தார் நன்றி. 

நடிகர் முருகானந்தம் பேசியதாவது..,

முதல் நாள் ஷூட்டிங்கில் ரெடியா இருக்கீங்களா என்று கேட்டார்கள், நான் ரெடி சார் என்றேன்.  காலை 6 மணி தான் நான் ரூமில் இருந்தேன். பார்த்தால் ஷூட் போய்க்கொண்டு இருந்தது. இப்படத்தில்  அவ்வளவு விரைவாக எல்லோரும் வேலை பார்ப்பார்கள். சுசீந்திரன் சார் மிகச் சிறப்பாக இயக்கியுள்ளார். இளைஞர்கள் எல்லோரும் மிக அருமையாக நடித்துள்ளார்கள். நான் நடிக்கும் போது, கோயம்புத்தூர் பாஷை பேசி நடிக்கக் கொஞ்சம் கஷ்டப்பட்டேன். வாய்ப்பு தந்த சுசீந்திரன் சாருக்கு நன்றி.  என் படக்குழு அனைவருக்கும் நன்றி. ஹீரோ மிக நட்புடன் பழகினார்.  அவருக்கும் நன்றி. 

நடிகை வினோதினி வைத்தியநாதன் பேசியதாவது..

அனைவருக்கும் வணக்கம், 2013 ல மேனேஜர் போன் செய்து, ஆதலால் காதல் செய்வீர் படத்திற்காகக் கூப்பிட்டார், அப்படத்தில் அம்மா கேரக்டர், நான் மதர் கேரக்டர் செய்வதில்லை என சொன்னேன், சுசி சார் ஓகே பை என சொல்லி விட்டார். பின்னர் ஈஸ்வரன் படத்தில் நல்ல வாய்ப்பு தந்தார். அதிலிருந்து தொடர்ந்து வாய்ப்பு தருகிறார். இந்தப்படத்திலும் நல்ல கேரக்டர். சுசி சார் ஈஸியாக வேலை வாங்கி விடுவார். எல்லோரும் மிக நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். ஹீரோ அறிமுகம் தான் என்றாலும் நன்றாக நடித்துள்ளார். மீனாட்சி எனக்கு பொண்ணாக மிக நன்றாக  நடித்திருக்கிறார். ஆதலால் காதல் செய்வீர் போல, ரிலேஷன்ஷிப் குறித்த  அழுத்தமான புரிதல் இந்த படத்திலும் இருக்கிறது. உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

இயக்குநர் நடிகர் ஆண்டனி பாக்யராஜ் பேசியதாவது..,

சுசி சார் எதோ குளத்து வேலைக்கு ஆள் பிடிப்பது போல்  நடிக்க ஆள் பிடிக்கிறார். காலை 6 மணிக்கெல்லாம் ஷாட் வைக்கிறார்.  எல்லோரையும் வைத்து அவ்வளவு விரைவாக வேலை வாங்கி விடுகிறார். போன் செய்து பிரதர் ஃப்ரீயா எனக்கேட்டார்,  நடிக்க வரலாமே என்றார். என்னை நம்பி கூப்பிடுகிறாரே என உடனே நடிக்க போய் விட்டேன். அவ்வளவு அழகாகப் படத்தை எடுத்துள்ளார். தயாரிப்பாளருக்கு என் வயது தான், மிக இளமையான தயாரிப்பாளர். நன்றாக வர வேண்டும் வாழ்த்துக்கள். இந்த படத்திற்கு ஆபிஸே போடவில்லை, என்னை ஜூடியோவிற்கு கூப்பிட்டு,  அங்கு தான் டெஸ்ட் எடுத்தார் இயக்குநர். படம் முழுக்க ஃபன்னாக இருந்தது. ஹீரோ ஆரம்பத்தில் தடுமாறினார் ஆனால் பின்னர் எனக்கே சொல்லித்தர ஆரம்பித்து விட்டார். மீனாட்சி அருமையாக நடித்துள்ளார். எல்லோருடனும் இணைந்து  நடித்தது மகிழ்ச்சி. ஒளிப்பதிவாளர் ஆனந்த் மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். 38 நாளில் இந்தப்படத்தை முடித்துள்ளார், சுசீந்திரன் சாருக்கு மீண்டும் ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும். 

ஆடை வடிவமைப்பாளர் மீரா பேசியதாவது..,

எல்லோருக்கும் நன்றி. ஒரு வருடம் முன்னரே சாரை மீட் பண்ணினேன், என்னைக் கூப்பிடுவார் என நினைக்கவில்லை. வந்தவுடனே காஸ்ட்யூம் பர்சேஸ் பண்ண சொல்லிவிட்டார், பயந்து விட்டேன். என் கூட வந்து, மிக உறுதுணையாக எல்லாவற்றையும் சொல்லித் தந்தார். 

மிக நல்ல அனுபவமாக இருந்தது.

நடிகர் ஜெயப்பிரகாஷ்  பேசியதாவது..,

இந்தப்படம் ஷூட் போன போது சின்ன பதட்டம் இருந்தது, சுசீந்திரன்  சொன்னால் எதுவும் மறுக்க மாட்டேன், நான் மகான் அல்ல படத்தில் இவர் தந்த கேரக்டர், என்னை மிகப்பெரிய இடத்திற்குக் கூட்டிச் சென்றது. தெலுங்கில் என்னைப் பிரபலமாக்கியது. இவர் படத்திற்குப் போனால் மீண்டும் மீண்டும் நிறையக் கற்று கொள்ளலாம். சுசி எப்போதும் ஒரு எக்ஸ்ட்ரா கூட எடுக்க மாட்டார். 2K கோயம்புத்தூரை இவ்வளவு அழகாகக் காட்ட முடியும் என ஆச்சரியம் தந்துள்ளார். ஹீரோ மிக அழகாக நடித்துள்ளார். மிக நல்ல அனுபவம் என்றார்.

நடிகர் துஷ்யந்த் பேசியதாவது… 

இந்தப்படம் அழகான  ரொமாண்டிக் படமாக இருக்கும். எனக்கு ஈசன் கருடன் படத்திற்கு நேரெதிரான படமாக இருக்கும், இந்தப்படம் வாய்ப்பு தந்ததற்கு சாருக்கு நன்றி. நல்ல படம் அனைவருக்கும் நன்றி. 

அறிமுக நாயகன் ஜெகவீர் பேசியதாவது..,

கடவுளுக்கு நன்றி. பிரஸ் மீடியா நினைத்தால், ஒருவரை ஜீரோவாக்குவதும் ஹீரோவாக்குவதும் பத்திரிக்கையாளர்கள் கையில் தான் உள்ளது. இந்தப்படம் எல்லாமே இயற்கை அருளால் தானாக நடந்தது. கன்டன்டாக மிக அருமையாக வந்துள்ளது. சுசி சார் அற்புதமாக எடுத்துள்ளார். ஒரு புராஜக்டில் சரியான லீடர் இருந்தால் போதும், கண்டிப்பாக நல்ல படைப்பு வரும்,  சுசி  சார் சொல்வதை எல்லோரும் சரியாக செய்தால் போதும், அதைச் சரியாகச் செய்துள்ளோம் என நம்புகிறேன். எங்களை நீங்கள் ஆதரித்து வளர துணை புரிவீர்கள் என்று நம்புகிறேன். 


தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்ரமணியன் பேசியதாவது…

ஜெகவீர் சொன்ன மாதிரி, இந்தப்படம் எல்லாம் தானாக நடந்தது. ஹீரோ தான் சுசி சாரை அறிமுகப்படுத்தினார். எப்படி இவர் 2 கே கிட்ஸ் கதை செய்வார் என  தயங்கினேன், ஆனால் கதை சொல்லும் போதே அசத்திவிட்டார். டைட்டிலே எனக்கு  மிகவும் பிடித்திருந்தது. சொன்ன தேதிக்கு முன்னரே படத்தை முடித்துத் தந்துவிட்டார். நண்பன் ஜெகவீர் நாயகனாக  அறிமுகமாகிறார், மீனாட்சி நன்றாக நடித்துள்ளார். சரவணன் பிரதர் நன்றாக நடித்துள்ளார். ஜேபி சார், சிங்கம் புலி சார் எல்லோரும் அருமையாக நடித்துள்ளார்கள். படம் மிக அருமையாக வந்துள்ளது.  அனைவரும் ஆதரவு தாருங்கள், அனைவருக்கும் நன்றி. 

நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் பேசியதாவது…

சுசீந்திரன் சாருடன் மூன்றாவது படம், எங்க வீட்டில் நம்பி தனியாக ஷூட் அனுப்புவது சாரோட ஷூட்டிங் ஸ்பாட் தான். இன்னொரு வீடு மாதிரி தான். சார் காலை 6 மணிக்கு ஷூட் வைத்தாலும் சீக்கிரம் முடித்து மதியமே அனுப்பி விடுவார். அவ்வளவு பரபரப்பாக வேலை பார்ப்பார்.  ஷூட்டிங் மிக ஜாலியாக இருந்தது. ஜெகவீர் நன்றாக நடித்துள்ளார். இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 


நடிகர் ராமராஜன் பேசியதாவது…

City light pictures தயாரிப்பாளர் விக்னேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள், படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள், நான் இந்தப்படத்திற்கு வரக் காரணம் சுசீந்திரன், அவர் மாமா கலைச்செல்வன் என் 38 வருட நண்பர், அவர் அழைப்பில் தான் இந்த விழாவில் கலந்துகொண்டேன். காதல் நம் மனதை விட்டு அகலாத ஒன்று, இன்று எல்லோரும் சொல்வது 2கே கிட்ஸ் கதை இது.  அவர்களின் கதையை அருமையாகச் சொல்லக்கூடிய சுசீந்திரன் இருக்கிறார். இந்தப்படம் மிக நல்ல படமாக அமையும். இந்தப்படத்திற்குப் பத்திரிக்கையாளர்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும். சுசீந்திரன் மிக அழகாக எடுத்திருப்பார். புதுமுகங்களை வைத்துப் படமெடுத்திருக்கும் தயாரிப்பாளருக்கு என் வாழ்த்துக்கள். எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.  தம்பி ஜெகவீருக்கு வாழ்த்துக்கள் நன்றி. 

வெட்டிங்க் போட்டோஃகிராஃபி எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வண்ணம், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. 

கோயம்புத்தூரில் நடக்கும் கதை என்பதால், இப்படத்தின் படப்பிடிப்பைக் கோவை மற்றும் சென்னையில் படக்குழு நடத்தி முடித்துள்ளது. 

இப்படத்திற்கு D இமான் இசையமைக்கிறார். இயக்குநர் சுசீந்திரன் மற்றும் D இமான் இணையும் 10 வது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. City light pictures சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் இப்படத்தைத் தயாரிக்கிறார். 

புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடிக்கும் இப்படத்தில்  மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன்  பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். 

தொழில் நுட்ப குழு 


இயக்கம் - சுசீந்திரன்

ஒளிப்பதிவு  -V.S.ஆனந்த கிருஷ்ணன் 

இசை - டி.இமான்

பாடல் வரிகள்.    - கார்த்திக் நேதா 

எடிட்டர் - தியாகு 

கலை - சுரேஷ் பழனிவேலு 

நடனம் - ஷோபி, பால்ராஜ்

மக்கள் தொடர்பு - சதீஷ் (AIM)

ஆடை வடிவமைப்பாளர் - மீரா

போஸ்டர் வடிவமைப்பாளர் - கார்த்திக் 

தயாரிப்பு நிர்வாகி -T.முருகேசன் 

தயாரிப்பாளர் - விக்னேஷ் சுப்ரமணியன்

Nesippaya - திரைப்பட விமர்சனம்

ஒரு தசாப்தத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவுக்கு மீண்டும் திரும்பும் இயக்குனர் விஷ்ணுவர்தன், நவீன காதல் கதையையும், போர்ச்சுகல் பின்னணியில் அமைக...