சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ’அமரன்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸாகிறது.
சிவகார்த்திகேயனின் 22-வது திரைப்படமான இதில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் சென்னையைச் சேர்ந்த மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கைக் கதையைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (அக்டோபர் 18ஆம் தேதி) சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டார்.