Wednesday, October 2, 2024

பிரம்மாண்ட தயாரிப்பில் வெகு விரைவில் வெளிவர உள்ளது படை தலைவன்

*பிரம்மாண்ட தயாரிப்பில் வெகு விரைவில் வெளிவர உள்ளது படை தலைவன்*

சிபி ராஜ் நடித்த வால்டர் படத்தை வெற்றிகரமாக இயக்கிய  இயக்குனர் அன்பு இயக்கத்தில் சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிப்பில் இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் படைதலைவன் படம் வெகு விரைவில் வெளிவர உள்ளது.

வி ஜே கம்பைன்ஸ் சார்பில் பரமசிவம் அவர்கள் தயாரிப்பில், ராஜு காளிதாஸ் அவர்களின் இணை தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம், படை தலைவன். இப்படத்தில் ஆக்சன் அதிரடியில் சண்முகபாண்டியன் விஜயகாந்த்  வெறித்தனமாக பெரும் மெனக் கெடல் எடுத்து நடித்துள்ளார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பின் படி படத்தின் வெளியீட்டு வேலைகள் துவங்கி உள்ளன.  இசைஞானி இளையராஜா அவர்களின் அற்புதமான இசை படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது. கஸ்தூரி ராஜா அவர்கள் முக்கிய கதா பாத்திரத்தில் மிக நேர்த்தியாக நடித்துள்ளார். படை தலைவன் படத்தை ஓப்பன் தியேட்டர் நிறுவனம் சார்பில் ஏ. செந்தில் குமார் வெளியிட உள்ளார். இசை வெளியீடு,  படம் வெளியிடும் தேதி குறித்து  விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

Thalaivan Thalaivii - திரைப்பட விமர்சனம்

  தலைவன் தலைவி என்பது இதயம், நகைச்சுவை மற்றும் பாரம்பரியத்தை அழகாகக் கலக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான மற்றும் உணர்வுபூர்வமான குடும்ப பொழுதுபோக்கு...