Saturday, November 30, 2024

விஜய் சேதுபதி பாராட்டிய 'ரிங் ரிங்

லவ் பண்ணும் போது போனை மாற்றினால் அது 'லவ் டுடே' .கல்யாணத்திற்குப் பிறகு போனை மாற்றினால் 'ரிங் ரிங்'
 
விஜய் சேதுபதி பாராட்டிய  'ரிங் ரிங்'

போனின்றி அமையாது உலகு என்கிற டேக் லைனுடன் 
'ரிங் ரிங்'

'நீரின்றி அமையாது உலகு' என்றார் வள்ளுவர். இந்தக் காலத்தில் 'மொபைல் போன் இன்றி அமையாது உலகு' என்ற நிலை உள்ளது .அந்த அளவிற்கு மொபைல் போன் நம்முடைய வாழ்க்கையில் இரண்டறக் கலந்து விட்டது.இன்றைய  வாழ்க்கையில் மொபைல் போன் நமது இன்ப துன்பங்களில், கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுத்து வருகிறது.மனித உறவில் பல்வேறு சிக்கல்களுக்கும் பிரச்சினைகளுக்கும் காரணமாகவும் அது உள்ளது.
மொபைல் போன் என்பது இன்று மனிதர்களின் மூன்றாவது கையாக மாறிவிட்டது.

அப்படி மொபைல் போனை மையமாக வைத்து  'போனின்றி அமையாது உலகு' என்கிற டேக் லைனுடன் 
'ரிங் ரிங்' என்கிற பெயரில் ஒரு படம் உருவாகி உள்ளது.
இப்படத்தை இயக்குநர் சக்திவேல் இயக்கி உள்ளார். இதற்கு முன்பு  கந்தகோட்டை, ஈகோ, 4 சாரி படங்களை இயக்கிய இவருக்கு இது நான்காவது படம்.

இப்படத்தை தியா ஸ்ரீ கிரியேஷன்ஸ் மற்றும் ரூல்  பிரேக்கர்ஸ்  புரொடக்சன் சார்பில் ஜெகன் நாராயணன் , சக்திவேல் தயாரித்துள்ளனர்.

திருமணத்திற்கு முன்பு காதலர்கள் போனை மாற்றிக் கொண்ட கதை 'லவ் டுடே' என்றால் திருமணத்திற்குப் பிறகு தம்பதிகள் போனை மாற்றிக் கொண்ட கதை 'ரிங் ரிங் '. 
இப்படத்தில் விவேக் பிரசன்னா,சாக்ஷி அகர்வால், டேனியல் அன்னி போப்,பிரவீன், அர்ஜுனன், ஸ்வயம், சஹானா, ஜமுனா  ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்குப் பாடல்கள் பா. ஹரிஹரன், கலை இயக்கம் தினேஷ் , எடிட்டிங் பி. கே , ஒளிப்பதிவு பிரசாத் டிஎப்டி , இசை வசந்த் இசைப்பேட்டை,

திருமணத்துக்குப் பிறகு நான்கு தம்பதிகள் போனை மாற்றிக் கொள்கிறார்கள். அதற்குப் பிறகு அவர்கள் வாழ்க்கையில் நிகழும் நகைச்சுவையான, சுவாரஸ்யமான, மர்மங்கள் நிறைந்த , விறுவிறுப்பான சம்பவங்களைக் கொண்டு இந்தப் படம் உருவாகி இருக்கிறது.

நான்கு தம்பதிகளுக்கான பின்புலம் நான்கும் தனித்தனியாக இருக்கும்.
சென்னை, கிழக்கு கடற்கரைச் சாலை போன்ற இடங்களில் பெரிய வீடுகளில் படப்பிடிப்பு  நடைபெற்றுள்ளது.இதற்காக பெரிய அளவில் வீடு செட் போட்டும் படமாக்கி உள்ளனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு வாழ்த்தினார்.

2025 ஜனவரி 3ஆம் தேதி  வெளியிடும் திட்டத்தோடு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Friday, November 29, 2024

கவிப்பேரரசு வைரமுத்து படைப்புலகம் பன்னாட்டுக் கருத்தரங்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு


 கவிப்பேரரசு வைரமுத்து படைப்புலகம் பன்னாட்டுக் கருத்தரங்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு


கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதைக்கு வயது 52. அவரது திரைப்பாட்டுக்கு வயது 44. இதுவரை 39 நூல்கள் எழுதியிருக்கிறார். சாகித்ய அகாடமி விருதுபெற்ற இவரது கள்ளிக்காட்டு இதிகாசம் 10 இந்திய மொழிகளில் பெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கிறது; மேலும் 12 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்காக 7 ஜனாதிபகளிடம் விருது பெற்றிருக்கிறார். இவரது படைப்புகளை ஆராய்ச்சி செய்து இதுவரை 180 பேர் டாக்டர் பட்டமும், எம்.பில் பட்டமும் பெற்றிருக்கிறார்கள். இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷண் விருதுகளையும் பெற்றிருக்கிறார்.


கவிப்பேரரசு வைரமுத்து படைப்புகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் நடைபெறுகிறது. உலகெங்கிலுமிருந்தும் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும், ஆராய்ச்சி அறிஞர்களும் கலந்துகொண்டு கட்டுரை வாசிக்கிறார்கள். கருத்தரங்கம் முழுநாள் நிகழவிருக்கிறது. மாலையில் நிகழும் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள வேண்டும் என்று கவிப்பேரரசு வைரமுத்து நேரில் சென்று அழைப்பு விடுத்தார்.

Ultraviolette solidifies presence across South India with the launch of their new Experience Center in Chennai


 Ultraviolette solidifies presence across South India with the launch of their new Experience Center in Chennai

 

        Ultraviolette is now present in Karnataka, Tamil Nadu, Kerala, Andhra Pradesh, Telangana, Maharashtra and Gujarat.

        This is the 7th experience centre to be inaugurated this year and is a significant step in Ultraviolette’s expansion strategy.

        The new experience center is located in the heart of Chennai – Mount Road, making it accessible to customers across the city.

        The UV Space Station in Chennai is a 3S facility which will ensure customers are facilitated with a one stop shop for all their requirements.

Chennai, November 29th, 2024 – Ultraviolette is proud to announce the grand opening of its latest experience center in Chennai and is set to redefine the buying experience for customers in the region, bringing Ultraviolette’s cutting-edge technology and design closer to motorcycling enthusiasts in Tamil Nadu.

Located in the heart of Chennai, this UV Space Station will provide customers with a state-of-the-art experience to explore Ultraviolette's flagship high-performance motorcycle – the F77 MACH 2. The UV Space Station is also equipped with the UV SuperNova DC fast charging infrastructure.

Speaking on the occasion, Narayan Subramaniam, CEO and Co-founder of Ultraviolette, said: "Chennai is a city known for its progressive mindset and passion for automobiles, making it the perfect location to deepen our engagement with customers. It gives us immense pride to solidify our presence in Chennai, from initially operating a UV base to inaugurating this UV Space Station today; we are thrilled to bring the Ultraviolette experience to this vibrant city."

The new UV Space Station features cutting-edge design and interactive zones, offering customers an immersive glimpse into the future of mobility. It also serves as a comprehensive 3S facility—providing sales, service, and spare parts. Ultraviolette is making its mark as a leader in high-performance electric motorcycles, paving the way for an electrified future.

Adding to this, Niraj Rajmohan, CTO and Co-founder of Ultraviolette Automotive, stated, "At Ultraviolette, we are driven by our commitment to creating products that embody futuristic design and advanced engineering. We are excited to witness how this expansion will accelerate the adoption of high performance electric motorcycles in Tamil Nadu and beyond."

Bookings for the Ultraviolette F77 MACH 2 are available both online and at the experience center. Customers in Chennai can now experience firsthand the seamless blend of innovation and design that defines Ultraviolette.

Address of the UV Space Station in Chennai: No. 375, Mount Road, Saidapet, Chennai, Tamil Nadu - 600015 Landmark : Next to Saidapet Metro

About Ultraviolette Automotive

Ultraviolette (UV) is an innovator in future-ready Electric Vehicle Platforms and Battery Technology. Infused with Aviation DNA, this enterprise was conceived in 2016 by the founders, Narayan Subramaniam and Niraj Rajmohan. Ultraviolette is backed by a spectrum of global investors, including Lingotto (a subsidiary of EXOR N.V., renowned for its majority or controlling stakes in iconic brands and global leaders such as Ferrari, Stellantis, CNH Industrial, Iveco Group, The Economist Group, Via, and Juventus), Qualcomm Ventures, Zoho Corporation, TVS Motors, and Speciale Invest. For more information, visit https://www.ultraviolette.com/ 

Social Media

        Instagram: @ultraviolette_automotive

        YouTube: @UltravioletteEV

        Twitter: @UltravioletteEV

 

Thursday, November 28, 2024

Mayan - திரைவிமர்சனம்

ஒரு தகவல் தொழில்நுட்ப வல்லுநர் தனக்கு மாயன் வம்சாவளியைக் கண்டுபிடித்து ஒரு திடுக்கிடும் தீர்க்கதரிசனத்தைப் பெறுகிறார்: உலகம் 13 நாட்களில் அழிந்துவிடும். தங்கு தடையின்றி வாழ்வதற்கான வாய்ப்பாக இதை ஏற்றுக்கொண்ட அவர், தனது ஆழ்ந்த ஆசைகளை நிறைவேற்றுவதற்காக உற்சாகமான பயணத்தை மேற்கொள்கிறார்.

இயக்குனர் ராஜேஷ் கண்ணன் தமிழ் கலாச்சாரம், மாயன் புராணம், மறுபிறப்பு மற்றும் பேரழிவு கருப்பொருள்களை ஒருங்கிணைத்து ஒரு லட்சிய கதையை வடிவமைத்துள்ளார். காஸ்மிக் சுழற்சிகளைக் கண்காணிப்பதற்காக அறியப்பட்ட சிக்கலான மாயன் நாட்காட்டியில் இருந்து உத்வேகம் பெறுகிறது, மேலும் அதன் கற்பனையான கதைக்கு அடித்தளமாக இதைப் பயன்படுத்துகிறது.

ஆதி (வினோத்), ஒரு சாதாரண வாழ்க்கையில் சிக்கிய தொழில்நுட்ப வல்லுநர், கடினமான முதலாளியை (ஆடுகளம் நரேன்) கையாள்வது மற்றும் அவரது சகாவான தேவிக்கு (பிந்து மாதவி) சொல்லப்படாத உணர்வுகளைப் பின்தொடர்கிறது. பாம்புகள் மற்றும் பழங்கால சின்னங்களைச் சந்தித்த பிறகு, மாயன் பாரம்பரியத்தைக் கண்டுபிடித்து, மாய சக்திகளைப் பெறும்போது அவரது வாழ்க்கை ஒரு வியத்தகு திருப்பத்தை எடுக்கும். அதிகாரம் மற்றும் அச்சமின்றி, ஆதி தனது அடக்குமுறையாளர்களை எதிர்கொள்கிறார், அவரது காதலை திருமணம் செய்துகொள்கிறார், மேலும் ஒரு ஐபிஎஸ் அதிகாரிக்கு (ஜான் விஜய்) சவால் விடுகிறார். இந்த துணிச்சலான செயல்கள் ஒரு காவிய சுற்றுச்சூழல் பேரழிவு வரிசையில் முடிவடைகிறது, இது அற்புதமான போர்வீரர்களைக் கொண்ட ஒரு சர்ரியல் போருக்கு வழிவகுக்கும்.

அதன் லட்சிய நோக்கம் இருந்தபோதிலும், படம் அதன் கூறுகளை சமநிலைப்படுத்த போராடுகிறது. விளக்கங்களுக்கான அனிமேஷன் காட்சிகளின் விரிவான பயன்பாடு, புதுமையானது, உணர்ச்சி ஓட்டத்தை குறுக்கிடுகிறது, பாத்திர வளர்ச்சிக்கு சிறிய இடத்தை விட்டுச்செல்கிறது. இருப்பினும், புராணத்தையும் நவீனத்தையும் இணைக்கும் துணிச்சலான முயற்சி பாராட்டுக்குரியது.

இறப்பை எதிர்கொள்ளும் போது ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையைத் தழுவும் முக்கிய யோசனை கட்டாயமானது. சில சமயங்களில் மரணதண்டனை தடுமாறினாலும், சமூகக் கட்டுப்பாடுகளில் இருந்து விடுபட்டு தைரியமாக வாழ்வதற்கான படத்தின் செய்தி தனித்து நிற்கிறது. படத்தின் காட்சி லட்சியம், அதன் தனித்துவமான கதை முன்மாதிரியுடன் இணைந்து, அதன் குறைபாடுகளைக் கடந்து பார்க்க விரும்புவோருக்கு இது ஒரு புதிரான கண்காணிப்பாக அமைகிறது.
 

Wednesday, November 27, 2024

சிலம்பரசன் டி. ஆர் - யுவன் சங்கர் ராஜா இணைந்து வெளியிட்ட 'ஸ்வீட் ஹார்ட்' பட ஃபர்ஸ்ட் லுக்

*சிலம்பரசன் டி. ஆர் - யுவன் சங்கர் ராஜா இணைந்து வெளியிட்ட 'ஸ்வீட் ஹார்ட்' பட ஃபர்ஸ்ட் லுக்*

*நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் 'ஸ்வீட் ஹார்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு*

*'மாடர்ன் மாஸ்ட்ரோ' யுவன் சங்கர் ராஜாவின் 'ஸ்வீட் ஹார்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு* 

தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நம்பிக்கைகுரிய நட்சத்திர நடிகரான ரியோ ராஜ் காதல் நாயகனாக நடித்திருக்கும் 'ஸ்வீட் ஹார்ட்' எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் டி. ஆர் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். 

அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஸ்வீட் ஹார்ட்' எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சிவசங்கர் கவனித்திருக்கிறார். காமெடி வித் ரொமான்டிக் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் திரையில் லவ் மேஜிக் நிகழ்த்தும் இளம் காதலர்களான ரியோ ராஜ் - கோபிகா ரமேஷ் ஆகியோரின் இளமை துள்ளலான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. 

ஃபர்ஸ்ட் லுக்கைத் தொடர்ந்து படத்தைப் பற்றிய புதிய தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே 'மாடர்ன் மாஸ்ட்ரோ' யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவாகும் 183வது இசை ஆல்பம் 'ஸ்வீட் ஹார்ட்' என்பதால்.. இப்படத்தின் பாடலுக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

RAPO 22’ படம் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின்!*

*’RAPO 22’ படம் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின்!*

தமிழ் சினிமாவில் பல மெலோடி ஹிட் பாடல்கள் கொடுத்த இசையமைப்பாளர்கள்  விவேக் மற்றும் மெர்வின் ஆகியோர் தெலுங்கு திரையுலகில் நடிகர் ராம் பொதினேனியின் 22வது படத்திற்கு இசையமைப்பதன் மூலம் தெலுங்கு சினிமாவிலும் இசையமைப்பாளர்களாக அறிமுகமாகிறார்கள். 

இயக்குநர் மகேஷ் பாபு இயக்கும் ’RAPO 22’ படத்தை, சினிமாவில் பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்த மைத்ரி மூவி மேக்கர் தயாரிக்கிறது. விவேக் மற்றும் மெர்வினின் இசை பயணத்தில் இது மிக முக்கிய மைல்கல்.   

இந்த அனுபவம் குறித்து விவேக் மற்றும் மெர்வின் பகிர்ந்து கொண்டதாவது, ”உயர்தரமான இசை மற்றும் புதுமையான கதை சொல்லலுக்கு தெலுங்கு சினிமா பெயர் பெற்றது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், ராம் பொதினேனியின் 22ஆவது படமான ‘RAPO 22’ படம் மூலம் தெலுங்கு சினிமாவில் நாங்கள் அறிமுகமாவது எங்களுக்கு பெருமையான விஷயம். இந்தப் படம் ரொம்பவே ஸ்பெஷல். நிச்சயம் எனர்ஜிடிக்கான இசையைக் கொடுப்போம்” என்றனர். 

விவேக் மற்றும் மெர்வின் இருவரின் தெலுங்கு அறிமுகத்தை இப்போது ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள். ’RAPO 22’ படத்தின் அடுத்தடுத்த அப்டேட் வரும் நாட்களில் எதிர்பார்க்கலாம்.

Tuesday, November 26, 2024

Mahabalipuram to Become India’s First Green Tourism Destination.

Mahabalipuram is on its way to becoming India’s first green tourism destination through a collaboration with Green Destinations, a Netherlands-based organization promoting sustainable tourism in over 80 countries. The Mata Amritanandamayi Mandir Trust formalized this initiative by signing a Memorandum of Understanding (MoU) with Green Destinations during the inauguration of World Heritage Week. 

The MoU was signed in the presence of Union Minister for Culture and Tourism, Shri Gajendra Singh Shekhawat, by Mahesh Gopalakrishnan, Project Director of the Mata Amritanandamayi Mandir Trust, and Albert Salman, President of Green Destinations. 

Please find attached the press release and image for the same.


Monday, November 25, 2024

சென்னையில் நடந்த 'புஷ்பா2' படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வின் போது எமோஷனலாகப் பேசிய பான் இந்தியன் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!

*”என்னைப் பிறப்பித்து வளர்த்த தமிழ் மண்ணுக்கு எனது பணிவான மரியாதையும் அன்பும்” - சென்னையில் நடந்த 'புஷ்பா2' படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வின் போது எமோஷனலாகப் பேசிய பான் இந்தியன் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!* 

பாட்னாவில் நடந்த 'புஷ்பா 2: தி ரூல்' டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியின் மூலம் தென்னிந்திய நடிகர் அல்லு அர்ஜூன் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதை ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். கிட்டத்தட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் நிகழ்வை கண்டுகளித்தனர்.  இந்த நிகழ்வு 'புஷ்பா' திரைப்படம் எந்தளவிற்கு ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.  தனது நடிப்பால் மட்டுமல்லாது திறமையான நடனம் மூலமும் புஷ்பா கதாபாத்திரத்தின் மூலமும் உலகம் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார் நடிகர் அல்லு அர்ஜூன்.

படத்திற்கான புரோமோஷன்களின் ஒரு பகுதியாக கடந்த நவம்பர் 24 அன்று 'புஷ்பா2' படக்குழு சென்னை வந்தடைந்தது. தாம்பரம், சாய்ராம் கல்லூரியில் நடைபெற்ற இந்த ப்ரீ ரிலீ ஈவண்ட்தான் இப்போது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. படத்தை விநியோகிக்கும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிகழ்வு நடக்கும் ஏரியா முழுவதும் ‘புஷ்பா2’ தீம் கொண்டு அந்த இடத்தை அலங்கரித்திருந்தார்கள்.

இந்த நிகழ்வின் ஹலைட்டான தருணம் ‘புஷ்பாராஜ்’ அல்லு அர்ஜூனின் நெகிழ்ச்சியான பேச்சுதான்.  ‘வணக்கம் தமிழ் மக்கள்’ என்று தனது பேச்சை ஆரம்பித்தவர் முழுவதுமாக தமிழிலேயே பேசி அசத்தினார். சென்னையில் தனது சிறுவயது மற்றும் பள்ளிப்பருவ நியாபகங்களை நெகிழ்வுடன் பகிர்ந்தார். கடந்த இருபது வருடங்களாக சென்னையில் தனக்காக ஒரு நிகழ்வு நடத்த வேண்டும் என்பது தனது கனவாக இருந்தது எனவும் அது ‘புஷ்பா2’ நிகழ்வில் நிறைவேறி விட்டது எனவும் மகிழ்வுடன் சொன்னார். அப்போது, நிகழ்ச்சி தொகுப்பாளர் அல்லு அர்ஜூனிடம் சிறுவயதில் அவருக்குப் பிடித்த நடிகர் யார் என்று கேட்க, அவர் செய்து காட்டிய ஸ்டைல் மூவ்மெண்ட் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்தை தான் குறிக்கிறது என ரசிகர்கள் ஆர்ப்பரித்தார்கள்இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகாவுடன் பணிபுரிந்த அனுபவம் பற்றி பகிர்ந்த கொண்ட அல்லு அர்ஜூன், ”கடந்த நான்கு வருடங்களாக ‘புஷ்பா2’ செட் எனது வீடு போல மாறிவிட்டது. மற்ற படங்களுக்காக நான் சென்றாலும் அங்கு ராஷ்மிகாவை மிஸ் செய்த ஆரம்பித்தேன். அந்த அளவிற்கு எங்களுக்குள் நல்ல நட்பு மலர்ந்திருக்கிறது” என்றார். 

நடிகை ஸ்ரீலீலா குறித்து பாராட்டி பேசும்போது, “அவர் அற்புதமான டான்ஸர். ஒவ்வொரு முறை அவரிடன் நடனத் திறமையை பார்க்கும்போது அவருக்கு இணையாக நானும் எனது நடனத்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பேன்” என்றார்.

இயக்குநர் சுகுமார் பற்றியும் அல்லு அர்ஜூன் பகிர்ந்து கொண்டார், “நாடு முழுவதும் நாங்கள் படத்தை புரோமோட் செய்யும் பணியை செய்து வருகிறோம். நாங்கள் புரோமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கும் அதே வேளையில் படத்தின் தரத்தை இன்னும் மேம்படுத்துவதற்காக அங்கு கடும் உழைப்பைக் கொடுத்து கொண்டிருக்கும் இயக்குநர் சுகுமாரின் அர்ப்பணிப்பிற்கு தலை வணங்குகிறேன். எனது முதல் படம் நடித்த பிறகு ஒரு வருடம் படம் இல்லாமல் இருந்தேன். சுகுமார் சார் அப்போது 'ஆர்யா' படத்துடன் வந்தார். 'ஆர்யா' படம் இல்லை என்றால் நான் இங்கு இல்லை. எனது வாழ்க்கையிலும் முன்னேற்றித்திலும் சுகுமார் சாருக்கு பெரிய பங்குண்டு. ரசிகர்கள் நீங்கள் கொடுக்கும் அன்புதான் என் உயிர்நாடி. சீரான இடைவெளியில் தரமான படங்களை உங்களுக்கு வழங்குவதில் நான் உறுதியாக இருக்கிறேன்”.

மேலும் பேசுகையில், “எங்களின் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் ஒட்டுமொத்த தொழில்நுட்பக் குழுவினருமே திரையரங்கில் பார்வையாளர்களுக்கு அற்புதமான அனுபவத்தைக் கொடுக்கவுள்ளார்கள். நானும் தேவி ஸ்ரீ பிரசாத்தும் சேர்ந்தால் நிச்சயம் ஸ்பெஷல் மேஜிக் எப்போதும் இருக்கும். ‘புஷ்பா2’ படத்தை இன்னும் அடுத்த நிலைக்கு உயர்த்திய தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸூக்கும் பிரம்மாண்டமாக படத்தை வெளியிடும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட், கல்பாத்தி அகோரம் சாருக்கும் நன்றி” என்றார். 

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட், அர்ச்சனா கல்பாத்தி பேசுகையில், “அல்லு அர்ஜூன் எப்போதுமே சூப்பர் ஸ்பெஷல். அதனால்தான், அவருக்கு இவ்வளவு ரசிகர்கள். ‘புஷ்பா2’ படம் வெளியானதும் அவர் நேஷனல் ஸ்டாரில் இருந்து இண்டர்நேஷனல் ஸ்டார் ஆவார். அந்த அளவிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகரிப்பார்கள்” என்றார்.

எழுத்தாளர் அஜித் மேனன் மற்றும் பாடலாசிரியர் அனில் வர்மா தொகுத்த ட்ரூ விஷன் ஸ்டோரீஸ் : ஆறாம் தொகுதியான 'ஹிடன் அஜெண்டாஸ் ஷுட்- ரெடி' வெளியீடு*

*எழுத்தாளர் அஜித் மேனன் மற்றும் பாடலாசிரியர் அனில் வர்மா தொகுத்த ட்ரூ விஷன் ஸ்டோரீஸ் : ஆறாம் தொகுதியான 'ஹிடன் அஜெண்டாஸ் ஷுட்- ரெடி' வெளியீடு*

இந்திய அளவில் முன்னணியில் உள்ள எழுத்தாளரான அஜித் மேனன் மற்றும் பாடலாசிரியர் அனில் வர்மா ஆகியோர் இணைந்து தொகுத்த ட்ரு விஷன் ஸ்டோரீஸ் எனும் புத்தக வரிசையில் ஆறாம் தொகுதியான 'ஹிடன் அஜெண்டாஸ் ஷுட் -ரெடி' எனும் நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையின் மையப் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது இந்த விழாவில் 'ஏசியா வில்லே' எனும் ஊடக நிறுவனத்தின் உரிமையாளரும், மூத்த ஊடகவியலாளருமான சசிகுமார் எழுத்தாளர்கள், அஜித் மேனன்- சுனில் வர்மா, தயாரிப்பாளர்கள் ராம்குமார் கணேசன், திரிநாத் மல்ஹோத்ரா, டி. சிவா தனஞ்செயன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

'ஹிடன் அஜெண்டாஸ்' என்பது வாசகர்களால் பரபரப்பாக வாசிக்கப்பட்ட புத்தகமாகும். இந்த புத்தகத்தில் இடம் பெறும் கதாபாத்திரங்கள் முதல் பக்கத்திலேயே வாசகர்களின் மனதை கவர்ந்து விடுகின்றன. ஒவ்வொரு பக்கத்தையும் வாசிக்கும் போதே காட்சியை கண்கூடாக கற்பனை செய்து அந்த கதையின் சுகத்தை.. வாசிப்பு அனுபவத்தை ..உணரும் வகையில் கதை கரு இடம் பிடித்துள்ளது. எங்கள் வாசகர்கள்.. ட்ரு விஷன் ஸ்டோரீஸ் எனும் தொடரின் முதல் தொகுதியை வாசித்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் இந்த புத்தகத்திற்கு பல்வேறு பட தயாரிப்பு நிறுவனங்களின் ஆதரவும், ஆர்வமும் தருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறோம்.

ட்ரு விஷன் கதைகள் என்பது எழுத்தாளர் அஜித் மேனன் மற்றும் பாடலாசிரியர் அனில் வர்மா ஆகியோர் தொகுத்த ஆறு தொகுதிகளின் தொகுப்பாகும். இது திரைப்படத்திற்கான ' ஹிடன் அஜண்டாஸ் ஷுட் -ரெடி' எனும் வகையில் இந்திய கதைகளின் புதிய சகாப்தத்தை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.

இந்திய திரைப்பட துறையின் கோரிக்கையை தொடர்ந்து உயர்தரமான ... உள்ளூர் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை பூர்த்தி செய்யும் வகையில் இந்திய அளவில் புகழ்பெற்ற பத்து எழுத்தாளர்களில் முன்னணியில் உள்ள எழுத்தாளரான அஜித் மேனன் ட்ரு விஷன் கதைகளை எழுதி இருக்கிறார். இதனை பாடலாசிரியர் அனில் வர்மா  தொகுத்து வழங்குகிறார். இந்த அற்புதமான ஆறாம் தொகுதிக்கான தொகுப்பில் இந்திய வாழ்க்கை கலாச்சாரம் மற்றும் அசலான நிகழ்வுகளின் செழுமையை படம் பிடித்திருப்பதுடன் சினிமாவுக்கான நடையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு ' ஹிடன் அஜண்டாஸ் ஷுட் -ரெடி' என குறிப்பிட்டிருக்கிறோம். இந்த தொடரின் கதைகள் ஏற்கனவே திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. அனார் என்டர்டெயின்மென்ட் மற்றும் பினாக்கிள் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த தொடரின் கதைகளை தழுவி படைப்புகளை உருவாக்கும் எண்ணத்தைக் கொண்டிருக்கிறது. இவர்களால் எழுதப்பட்டு பிரபலமான ஹிடன் அஜண்டாவின் முதல் நான்கு கதைகள் திரில்லர் வகையிலான தொடர்களாகும்.

இந்த புத்தகத்தை புகழ்பெற்ற சிருஷ்டி பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பதிப்பகம் ஆண்டுதோறும் ட்ரு விஷன் ஸ்டோரீஸ் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட ஜானரிலான கதைகளை கொண்டு, கடந்த ஆறு ஆண்டுகளில் 24 தனித்துவமான கதைக் களங்களை வழங்கி இருக்கிறது. இது திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு வித்தியாசமான படங்களுக்கான கதை கருவினையும் வழங்கியிருக்கிறது. இந்த தொடரின் ஒவ்வொரு தொகுதியும் ஒரு சினிமாவை வாசிப்பது போன்ற அனுபவத்தை வழங்குவதற்காக நேர்த்தியாக தொகுக்கப்பட்டுள்ளது. மேலும் இது திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு உற்சாகமான கதைகளை தயாரிப்பதற்கும் வழிவகை செய்கிறது.

''ட்ரூ விஷன் ஸ்டோரீஸ் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு பக்கமும் ஒரு சினிமாவை நேரடியாக பார்த்த அனுபவத்தை உணர வைக்கும். இந்த புத்தகம் வாசகர்களுக்கு காட்சி வழியிலான கதை சொல்லலை கொண்டிருக்கிறது'' என்கிறார் எழுத்தாளர் அஜித் மேனன்.

இதில் உள்ள கதைகளை தொகுத்திருக்கும் பாடலாசிரியர் அனில் வர்மா குறிப்பிடுகையில், ''எங்கள் நோக்கம் இந்திய பார்வையாளர்களுக்கு திரைப்படம் தொடர்பாக இந்திய கலாச்சாரத்தை ஆழமாக எதிரொலிக்க கூடிய உள்ளடக்கத்தை உருவாக்குவதே ஆகும் '' என்கிறார்.

ட்ரு விஷன் கதைகளுடன் அஜித் மேனனும், அனில் வர்மாவும் 2023 ஆம் ஆண்டில் தொடங்கிய 'தி பாந்தர்'ஸ் கோஸ்ட்' எனும் புத்தகத் தொடரின் வெற்றியை இதிலும் தொடர்கிறார்கள். மேலும் இந்த ஆண்டின் வாசிக்கக்கூடிய.. வாசிக்க வேண்டிய சிறந்த 15 புத்தகங்களில்.. இரண்டு சிறந்த விற்பனையான தொகுதிகளுடன்... இந்திய இலக்கியம் மற்றும் சினிமாவின் இவர்களது தாக்கம் குறித்து ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மூன்றாவது புத்தகம் ஜனவரி 2025 ஆம் ஆண்டில் வெளியாகிறது.‌

அனார் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தொலைநோக்கு திட்டம் மூலம் இந்திய சினிமாவில் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனத்திலிருந்து 30 வருடம் அனுபவம் உள்ள பிரேம் மேனன் மற்றும் திரைப்படத் துறையில் 24 வருடம் அனுபவமுள்ள கண்ணன் ஆகியோர் இந்த அசாதாரணமான திரை கதைகளை இந்திய சினிமாவிற்கு ஏற்ற வகையில் கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இது கலாச்சார ரீதியாக வளமாக உள்ள உள்நாட்டு கதை சொல்லலை புதிய உயரத்திற்கு உயர்த்த தயாராக உள்ளது என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

இந்நிகழ்வில் 'ஏசியா வில்லே' எனும் டிஜிட்டல் தளத்தின் உரிமையாளரும், மூத்த ஊடகவியலாளருமான சசிகுமார் பேசுகையில், '' அனைவருக்கும் வணக்கம்! இந்த புத்தகத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் புத்தகத்தின் பி டி எப் பதிப்பை பிரேம் மேனன் இணையம் வழியாக அனுப்பியிருந்தார்.

இந்த தருணம் அற்புதமான மாற்றத்திற்கான தருணம். சினிமாவை பற்றிய கருத்தியல் ரீதியிலான மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது. இது போன்ற புத்தகங்கள் நேர் நிலையான மாற்றத்தை ஏற்படுத்தும் வலிமை கொண்டது.

தற்போது திரைத்துறை பெரும் பாய்ச்சலை கொண்டிருக்கிறது. அதன் வணிக எல்லைகள் விரிவடைந்திருக்கிறது. டிஜிட்டல் தளங்கள் என திரைப்படத்திற்கான சந்தைகளும் புதிதாக உருவாகி இருக்கிறது. ஒரு மொழியில் உருவாக்கி அதனை பல மொழியில் வெளியிடுவதற்கான சாத்தியமும் ஏற்பட்டிருக்கிறது.

புதிதாக வரும் இளம் படைப்பாளிகள் வித்தியாசமான படைப்பு சிந்தனையுடன் களம் இறங்குகிறார்கள். உதாரணத்திற்கு மஞ்சுமோள் பாய்ஸ் - வாழை போன்ற படங்களை குறிப்பிடலாம்.  இத்தகைய படங்கள் குறைந்த முதலீட்டில் உருவாகி, 60 கோடி 70 கோடி என வசூலிக்கிறது. எனவே இது மாற்றத்திற்கான தருணம் என குறிப்பிடுகிறேன். இதற்கான அடித்தளத்தை இந்த புத்தகம் ஏற்படுத்துகிறது. 

இதனை எழுதிய அஜித் மேனன்-  அனில் வர்மா தங்களின் அனுபவத்தை சினிமா மொழியில் எளிதாக எழுதி இருக்கிறார்கள். அஜித் மேனன் -அனில் வர்மா -அனார் என்டர்டெயின்மென்ட் - என மூன்று' A 'களும் ஒன்றிணைந்திருக்கிறது.
இது ஒரு நல்லதொரு கூட்டணி.

என்னுடைய அனுபவத்தில் அண்மையில் சோனி நிறுவனத்திற்காக ஒரு கதையை தேர்வு செய்து அதனை உறுதிப்படுத்தியிருக்கிறேன். கதைதான் முதலில் வலிமையாக இருக்க வேண்டும். இந்த எண்ணத்தை இந்த புத்தகம் பிரதிபலிக்கிறது.

நான் அடிப்படையில் ஒரு ஊடகவியலாளர். ஊடகம் என்பது எது சாத்தியம் என்பதை சொல்லக்கூடியது. உண்மையை உரக்க சொல்லக்கூடியது. ஆனால் கதை என்பது வேறு.

அஜித்திடம் ஏன் புத்தக வெளியீட்டிற்காக சென்னையை தேர்வு செய்தீர்கள்? என்று கேட்டபோது.. தமிழ் மொழியின் தொன்மையை பற்றி விளக்கினார்.

தற்போது மலையாளம் திரையுலகிலிருந்தும் ஏராளமான இளம் படைப்பாளிகள் புதிய சிந்தனையுடன் படைப்புகளை உருவாக்கி வருகிறார்கள். குறிப்பாக டிஜிட்டல் தளங்களில் ஏராளமான திறமைசாலிகள்.. தங்களின் படைப்புகளை வழங்கி வருவதை பார்க்கிறேன்.

கதை எழுதுவது என்பது சாதாரணமானதல்ல. அதற்காக கற்பனை மட்டும் போதாது. அதற்கு நிறைய திறமைகளும்.. துறை சார் அறிவுகளும்.. அனுபவங்களும் வேண்டும். அப்போதுதான் வித்தியாசமான கதைகளை எழுத முடியும்.

புத்தகம் வெளியிடுவது, எழுதுவது என்பது ஒரு தொழிலாக உயர்ந்து வருகிறது. அதனால் இளம் திறமையாளர்கள் தங்களுடைய எண்ணங்களையும், கற்பனைகளையும் புத்தகமாக வெளியிடுவதற்கு முன் வர வேண்டும். எழுத்தின் வழியாக கதை சொல்வதும் ஒரு தனித்திறமை தான்.

'ஹிடன் அஜெண்டாஸ் ஷுட் -ரெடி' எனும் இந்த புத்தகம் ஒரு வெற்றிகரமான நூல் . இந்தப் புத்தகத்தை வெளியிடுவதை மகிழ்ச்சியான தருணமாக கருதுகிறேன். இந்த புத்தகத்திற்கு ஏராளமான தயாரிப்பாளர்களும் திரையுலக ஆர்வலர்களும் ஆதரவு தருவார்கள்.

இவ்விழாவில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கும் ராம்குமார் கணேசன் பாலிவுட் தயாரிப்பாளர் திரிநாத் மல்ஹோத்ரா தமிழ் பட தயாரிப்பாளர்கள் டி .சிவா மற்றும் தனஞ்ஜெயன், என்னுடைய நண்பர் பிரேம் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்றார்.

அனார் என்டர்டெயின்மென்ட் கண்ணன் பேசுகையில், '' ஒரு நல்ல கதை.. அதற்கு ஏற்ற திரைக்கதை இருந்தால்தான்.. அந்த சினிமா பிளாக்பஸ்டர் ஹிட்டாக மாறும். சிருஷ்டி பதிப்பகத்தார்கள் இன்று நம்பிக்கையுடன் 'ஹிடன் அஜெண்டாஸ் ஷுட் -ரெடி' எனும் புத்தகத்தை வெளியிடுகிறார்கள். இது எழுத்தாளர்களுக்கு ஊக்கம் தரும் விசயம். அனார் என்டர்டெயின்மென்ட் மற்றும் சிருஷ்டி பதிப்பகம் புதிய இளம் தலைமுறை படைப்பாளிகளை வரவேற்க காத்திருக்கிறது. 

கடந்த பல ஆண்டுகளாக நான் தமிழ் திரையுலகை உற்று கவனித்து வந்த ஒரு விசயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  தமிழ் சினிமாவின் வெற்றி சதவீதம் என்பது ஏழு முதல் எட்டு சதவீதம் தான் இருக்கிறது. அதாவது 200 முதல் 225 படங்கள் தமிழில் வெளியானால் அதில் 15 முதல் 16 படங்கள் தான் பிளாக்பஸ்டர் ஹிட்டாகிறது. இதற்கான முதன்மையான காரணம் என்ன என்று உள்ளார்ந்து கவனித்தால்.. கதை. 
கதை சரியாக இருக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் திரைக்கதையும் பொருத்தமாக இருக்க வேண்டும். இது இரண்டும் பலவீனமாக இருந்தால் அந்தத் திரைப்படம் சுமாராகத்தான் இருக்கிறது. 

தமிழ் திரையுலகத்திற்கு ஏராளமான புது தயாரிப்பாளர்கள் வருகிறார்கள்.. அவர்களுக்கு கதை தேர்வு விசயத்தில் மட்டும் தயாரிப்பாளர் சங்கம் ஒரு குழுவை அமைத்து வழிகாட்டினால்.. தமிழ் சினிமாவின் வெற்றி சதவீதம் அதிகரிக்கும். 

தமிழ் சினிமாவில் இன்று மிகப்பெரிய பேசு பொருள் என்னவென்றால்.. சிறிய  முதலீட்டில் உருவாகும் திரைப்படங்கள் ஓடிடி எனப்படும் டிஜிட்டல் தளங்களில் விற்பனையாவதில்லை என்பதுதான். இதற்கு முக்கிய காரணம் பலவீனமான கதை தான். கதையை சீராக்கினால் தான் மற்ற அனைத்தும் சீராகும். 

இன்றைய சூழலில் தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் 100 திரைப்படங்கள் விற்பனை செய்ய முடியாமல் இருக்கிறது. ஒரு திரைப்படத்திற்கு குறைந்தபட்சம் மூன்று கோடி என்று வைத்துக் கொண்டாலும்.. கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் தமிழ் சினிமாவில் வியாபாரமாகாமல் முடங்கி இருக்கிறது. 

இங்கு வருகை தந்திருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்பில் இருப்பவர்கள்.. நீங்கள் இது தொடர்பாக ஒரு குழுவை அமைத்து கதை தொடர்பாக ஆலோசனையும், வழிகாட்டுதலையும்  வழங்க வழி வகை செய்ய வேண்டும்.  இதனால் தமிழ் சினிமாவில் ஏற்படும் நஷ்டத்தை குறைக்கலாம். 

இந்த எழுத்தாளர்கள் எழுதியிருக்கும் புத்தகத்தை தயாரிப்பாளர்களும் வாசிக்க வேண்டும். ஏராளமான புதிய தலைமுறை படைப்பாளிகள் வரவேண்டும். அவர்களுக்கு ஆதரவு தர வேண்டும். இங்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி'' என்றார்.

Sunday, November 24, 2024

LINEMAN - திரைவிமர்சனம்

பெரிய கனவுகள் பெரும்பாலும் சவால்களை அழைக்கிறது, உதய்குமார் இயக்கிய லைன்மேன் இந்த உலகளாவிய உண்மையை அழகாக சித்தரித்துள்ளார். தூத்துக்குடியின் அமைதியான உப்புக் களஞ்சியத்தில் அமைக்கப்பட்ட இப்படம், தனது கிராமத்தை புதுமைப்படுத்தவும் மேம்படுத்தவும் பாடுபடும் இளம் எலக்ட்ரானிக்ஸ் ஆர்வலரான செந்திலின் (ஜெகன் பாலாஜி) எழுச்சியூட்டும் பயணத்தை விவரிக்கிறது.

செந்திலின் அற்புதமான கண்டுபிடிப்பு மின்சாரத்தை சேமிப்பதையும் அவரது சமூகத்தின் எதிர்காலத்தில் புரட்சியை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், அவரது லட்சியம் நடைமுறைக்கு மாறானதாகக் கருதும் கிராம மக்களிடமிருந்து அவரது கருத்துக்கள் சந்தேகத்திற்குரியவை. இந்த மேல்நோக்கிப் போரில், செந்திலின் மிகப்பெரிய கூட்டாளி அவரது தந்தை சுப்பையா (சார்லி), அவரது நேர்மை மற்றும் கடின உழைப்புக்கு பெயர் பெற்ற அர்ப்பணிப்புள்ள லைன்மேன். தனது மகன் மீது சுப்பையாவின் அசைக்க முடியாத நம்பிக்கை கதையின் உணர்ச்சிகரமான முதுகெலும்பாக அமைகிறது, செந்தில் தனது கண்டுபிடிப்பை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க முற்படுகையில், நிதிப் போராட்டங்கள், சமூக ஏளனங்கள் மற்றும் அதிகாரத்துவ தடைகளை எதிர்கொள்ள உதவுகிறது.

தூத்துக்குடியின் இயற்கை எழில் மற்றும் சவால்களை நேர்த்தியுடன் படம்பிடித்து, கிராமப்புற வாழ்க்கையின் உண்மையான சித்தரிப்பில் படத்தின் பலம் உள்ளது. அதன் மையத்தில் மென்மையான மற்றும் தொடர்புடைய தந்தை-மகன் பிணைப்பு உள்ளது. சார்லி சுப்பையாவாக ஜொலிக்கிறார், கதையை தொகுத்து வழங்கும் ஒரு இதயப்பூர்வமான நடிப்பை வழங்குகிறார். அவரது சித்தரிப்பு அரவணைப்பை வெளிப்படுத்துகிறது, சுப்பையாவை மறக்க முடியாத பாத்திரமாக்குகிறது. ஜெகன் பாலாஜி தனது கனவுகளின் எடையை குடும்ப எதிர்பார்ப்புகளுடன் சமநிலைப்படுத்தும் உறுதியான ஆனால் பாதிக்கப்படக்கூடிய செந்திலாக ஈர்க்கிறார்.

துணை நடிகர்கள் கதைக்கு அடுக்குகளை சேர்க்கிறார்கள். சரண்யா ரவிச்சந்திரன், திரை நேரம் மட்டுப்படுத்தப்பட்டாலும், பாராட்டத்தக்க நடிப்பை வழங்குகிறார், அதே நேரத்தில் அதிதி பாலனின் சுருக்கமான கேமியோ நீடித்த தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

சில காட்சிகள் உணர்ச்சிப்பூர்வமாக ஆழமாக ஆராய்ந்திருக்கலாம், மற்றும் ஒரு சில கதாபாத்திரங்கள் குறைவாகவே உணரப்பட்டாலும், லைன்மேன் அசாதாரண அபிலாஷைகளைக் கொண்ட சாதாரண மக்களின் பின்னடைவை முன்னிலைப்படுத்துவதில் வெற்றி பெறுகிறார். விடாமுயற்சி மற்றும் நம்பிக்கையின் கதையை நெய்து, புதுமைகள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகும், பாடப்படாத ஹீரோக்களுக்கு இது ஒரு அஞ்சலியாக செயல்படுகிறது.

அதன் இதயப்பூர்வமான கதை மற்றும் யதார்த்தமான பின்னணியுடன், அசைக்க முடியாத நம்பிக்கையும் ஆதரவும் கனவுகளை நிஜமாக மாற்றும், உத்வேகம் மற்றும் வெற்றியின் கடுமையான செய்தியை வழங்குகிறது என்பதை லைன்மேன் நமக்கு நினைவூட்டுகிறார்.

 

Saturday, November 23, 2024

ஆர் ஜே பாலாஜி நடிக்கும் 'சொர்க்கவாசல்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு*

*ஆர் ஜே பாலாஜி நடிக்கும் 'சொர்க்கவாசல்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு*

*இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - இசையமைப்பாளர் அனிருத் இணைந்து வெளியிட்ட 'சொர்க்கவாசல்' திரைப்படத்தின் முன்னோட்டம்*

இயக்குநரும், முன்னணி நடிகருமான ஆர். ஜே. பாலாஜி முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் 'சொர்க்கவாசல்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற நிகழ்வில் முன்னணி நட்சத்திர இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பிரபல‌ இசையமைப்பாளர் அனிருத் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு முன்னோட்டத்தை வெளியிட்டனர்.

அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'சொர்க்கவாசல்' படத்தில் ஆர். ஜே. பாலாஜி, இயக்குநரும் நடிகருமான செல்வராகவன், ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், நடிகை சானியா ஐயப்பன், ஷஃரப் உதீன், ஹக்கீம் ஷா, பாலாஜி சக்திவேல், கருணாஸ், ரவி ராகவேந்திரா, அந்தோணி தாசன், சாமுவேல் ராபின்சன், எழுத்தாளர் ஷோபா ச‌க்தி, மௌரிஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்திருக்கிறார். சர்வைவல் க்ரைம் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தை ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கின்றன‌. உலகம் முழுவதும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ். ஆர். பிரபு மற்றும் எஸ். ஆர். பிரகாஷ் பாபு இணைந்து வழங்குகிறார்கள்.

வரும் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தினை உலகம் முழுவதும் வெளியிடும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான எஸ். ஆர். பிரபு , திங்க் ஸ்டுடியோஸ் சந்தோஷ், படத்தின் நாயகன் ஆர். ஜே. பாலாஜி, நாயகி சானியா ஐயப்பன், நடிகர் ஹக்கீம் ஷா, இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத், ஒளிப்பதிவாளர் பிரின்ஸ் ஆண்டர்சன்,  கதாசிரியர்கள் தமிழ் பிரபா மற்றும் அஸ்வின் ரவிச்சந்திரன் ஆகியோருடன் இதர‌ படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.

முன்னோட்டத்தை வெளியிட்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், "இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள். முதலில் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். முன்னோட்டம் மிகவும் மனதிற்கு நெருக்கமானதாக இருக்கிறது. ஆறு மாதங்களுக்கு முன்பே இப்படத்தின் சில காட்சிகளை பார்த்திருக்கிறேன். அப்போது 'ஆர்.ஜே பாலாஜி எனும் நடிகர் வருகை தருகிறார்' என குறிப்பிட்டேன். படத்தை வெளியிடும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் என்னுடைய வாழ்த்துகள். இந்தப் படம் வெளியான பிறகு தான் என்னுடைய 'கைதி 2' படத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமா, இல்லையா என்பது தெரியவரும் . ஏனெனில் படத்தின் முன்னோட்டம் உணர்வுப்பூர்வமானதாகவும், மனதிற்கு நெருக்கமானதாகவும் இருந்தது," என்றார்.

இசையமைப்பாளர் அனிருத் பேசுகையில், "சொர்க்கவாசல் படத்தின் தயாரிப்பாளர்களான சித்தார்த் ராவ் மற்றும் பல்லவி சிங் எங்கள் குழுவுடன் பதினோரு ஆண்டுகளாக பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு திரைப்படம் தயாரிப்பதில் பெரு விருப்பம் உண்டு. அந்த வகையில் அவர்களுடைய ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸின் முதல் திரைப்படமாக சொர்க்கவாசலை தயாரித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும் எனக்கு நெருக்கமான நண்பர்கள் தான். ஒளிப்பதிவு செய்திருக்கும் பிரின்ஸ் ஆண்டர்சன் மும்பையில் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரனின் மகனான சாண்டோவின் உதவியாளர். அவர் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகும் படம் இது. அற்புதமாக பணியாற்றியிருக்கிறார். அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது, அதற்காக மனதார வாழ்த்துகிறேன். எங்களுடைய குழுவில் ஒலி கலவை பொறுப்பினை பத்தாண்டுகளாக சிறப்பாக செய்து வரும் கலைஞர் வினய் ஸ்ரீதர் இதில் பணியாற்றி இருக்கிறார். இந்தப் படத்தின் தயாரிப்பில் இணைந்திருக்கும் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கும் நன்றி. திரைப்படத்தை வெளியிடும் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் அவரர்களுடைய அனுபவத்தால் இந்த படத்தை உலகம் முழுவதும் சிறப்பாக வழங்குவார்கள். இதற்காக அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் பள்ளியில் எனக்கு இரண்டு வருட ஜூனியர். அந்தத் தருணத்தில் அவருக்கு சினிமாவில் ஆர்வம் இருக்கிறது என்று எனக்குத் தெரியாது. அதன் பிறகு ஒரு நாள் என்னை சந்தித்து திரைப்பட இயக்குநராக வேண்டும் என தெரிவித்தார். அதன் பிறகு ஒரு இயக்குநரிடம் உதவி இயக்குநராக சேர்ந்து, மூன்று திரைப்படங்களில் பணியாற்றி 'சொர்க்கவாசல்' திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார். இந்தப் படத்தின் கதையை முழுவதுமாக விவரித்துவிட்டு, யார் நாயகனாக நடித்தால் நன்றாக இருக்கும் என என்னிடம் கேட்டார். நான் அப்போது இதற்கு என்னுடைய நண்பரான ஆர். ஜே. பாலாஜி தான் பொருத்தமானவராக இருப்பார் என்று மனதில் பட்டதை உடனே சொன்னேன். இந்த படத்தினை பார்த்து விட்டேன், என்னுடைய நண்பர்கள் அனைவரும் இணைந்து ஒரு தரமான படைப்பை உருவாக்கி இருக்கிறார்கள் என்று மகிழ்ந்தேன். நான் இசையமைப்பாளராக வாழ்க்கையை தொடங்கும் போது ஆர். ஜே. பாலாஜி பண்பலை வானொலியில் தொகுப்பாளராக புகழ்பெற்று இருந்தார். அப்போது அவருடன் பேசுவது எங்களுக்கெல்லாம் பெருமிதமாக இருக்கும். ஆர் ஜே வாக கலை உலக பயணத்தை தொடங்கி இன்று நடிகராக உயர்ந்திருக்கிறார். அவர் நடித்த படங்கள் அனைத்தும் கமர்ஷியலாக வெற்றி பெற்று இருக்கின்றன‌. அவர் நடிக்கும் படங்களுக்காக‌ கடினமாக உழைப்பார். காமெடியனாக நடித்திருக்கிறார், கமர்ஷியலாக நடித்திருக்கிறார், ஆனால் இந்த திரைப்படத்தில் அவர் ஒரு அற்புதமான நடிகராக உருமாற்றம் பெற்றிருக்கிறார். செல்வராகவன் இந்தத் திரைப்படத்திற்கு ஒரு தூணாக இருக்கிறார். என்னுடைய கலை உலக பயணத்தையும், இசைப்பயணத்தையும் நேர்த்தியாக வடிவமைத்ததில் செல்வராகவனுக்கும் கணிசமான பங்கு உண்டு. இந்த படத்தில் இணைந்து பணியாற்றியதற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்று அனைவரது வாழ்விலும் சொர்க்கவாசல் திறக்கும் என்று நம்புகிறேன்," என்றார்.

கதாசிரியர்-எழுத்தாளர் தமிழ் பிரபா பேசுகையில், "உறக்கத்திலிருந்து எழுந்து விட்டார் நீதிபதி...
வாக்கிங் புறப்பட்டு விட்டார் வக்கீல்...சீருடை அணிந்து விட்டார் போலீஸ்காரர்...நான் இன்னும் என்னுடைய குற்றத்தை செய்ய துவங்கி இருக்கவில்லை...' என கவிஞர் பிரான்சிஸ் கிருபா எழுதிய கவிதை தான் இந்த தருணத்தில் எனக்கு நினைவுக்கு வருகிறது. இந்த கவிதையை தான் இந்த படமாக நான் பார்க்கிறேன்.
இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. ஏனெனில் நான் எழுதிய முதல் திரைப்படமான 'சார்பட்டா பரம்பரை' படம் வெளியாகியிருக்கவில்லை. அந்தத் தருணத்தில் இயக்குநர் பா. ரஞ்சித் என்னை தொடர்பு கொண்டு என் உதவியாளர் சித்தார்த் ஒரு கதையை வைத்திருக்கிறார். அவருடன் இணைந்து பணியாற்று என கேட்டுக்கொண்டார். அந்த கதையை கேட்டவுடன் எனக்கு மிகவும் நெருக்கமானதாக இருந்தது.

என்னுடைய வீடு சென்னை மத்திய சிறைக்கு அருகே உள்ளது. சிறையில் நடைபெற்ற கலவரத்தை நான் சிறிய வயதில் இருக்கும்பொழுது நேரில் பார்த்திருக்கிறேன். அந்த கலவரத்தை தழுவிய திரைப்படம் என்றவுடன் எனக்கு திரைக்கதை எழுதுவது ஆர்வமாகிவிட்டது. அருண் மற்றும் சித்தார்த்துடன் இணைந்து பணியாற்றினேன்.

திரைக்கதை எழுதுவது என்பது எளிதில் சோர்வடைய வைக்கும் பணி. ஆனால் மற்றவர்களுடன் இணைந்து உருவாக்கும் போது ஆற்றலுடன் விரைவாக செயல்பட முடிகிறது. இந்த கதையை பொருத்தவரை பன்முகத் தன்மைமிக்க கதாபாத்திரங்கள் ஏராளமாக இருக்கின்றன‌. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்துவம் உண்டு.

இந்தப் படத்தில் நடித்த ஆர். ஜே. பாலாஜியை எப்போதும் எனக்கு ஒரு முன்னூதாரண நாயகனாக பார்க்கிறேன். ஏனெனில் பண்பலை வானொலியில் சென்னை தமிழில் பேசினார். அதுவே எனக்கு உந்துதலாக இருந்தது. இதனால் நானும் இரண்டு ஆண்டுகள் பண்பலை வானொலியில் தொகுப்பாளராக பணியாற்றினேன்.

நான் திரைத்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும் இதுவரை எந்த நட்சத்திரத்துடனும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்வதை விரும்பியதில்லை. அப்படி நான் விரும்பிய ஒரே= நடிகர் - படைப்பாளி செல்வராகவன் தான். ஏனெனில் அவருடைய திரைப்படங்களில் கதாபாத்திர வடிவமைப்பு வித்தியாசமானதாக இருக்கும். 'புதுப்பேட்டை' படத்தில் நாயக பிம்பத்தை பத்து பேர் அடித்தாலும் வலியை தாங்கக்கூடிய கதாபாத்திரமாக வடிவமைத்திருப்பார். இது என்னை பெரிதும் கவர்ந்தது.  இயக்குநரை தொடர்பு கொண்டு செல்வராகவனுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற என் விருப்பத்தை தெரிவித்தேன். அதன் பிறகு சில நாட்கள் கழித்து செல்வராகவன் என்னை சந்திக்க விரும்பினார். அவரை நேரில் சந்தித்த பொழுது திரைக்கதை நேர்த்தியாக எழுதி இருக்கிறாய் என பாராட்டினார்.

மேலும் இந்த திரைப்படத்தில் தமிழ் இலக்கியத்தில் முக்கியமான ஆளுமையாக திகழும் எழுத்தாளர் ஷோபா ச‌க்தி ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்திற்கு புதிதாக முயற்சித்து இருக்கிறோம். கிரைம் ஆக்ஷ‌ன் திரில்லர் கதை என்றாலும், சர்வைவல் திரில்லர் வகைமையை சார்ந்தது என குறிப்பிட விரும்புகிறேன். இந்தத் திரைப்படத்தை அனைவரும் கண்டு ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.

கதாசிரியர் அஸ்வின் ரவிச்சந்திரன் பேசுகையில், "சிறைக்குள் நடைபெறும் கதையை எழுதலாமா என என்னுடைய நண்பரான இயக்குநர் சித்தார்த் கேட்டார். அது கொரோனா காலகட்டம் என்பதால் எழுதுவதற்கு சம்மதம் தெரிவித்தேன். அதன் பிறகு சிறையை பற்றிய படங்களை பார்த்தோம், அது தொடர்பாக எழுதி வெளியான புத்தகங்களையும் வாசித்தோம்.

இந்தத் தருணத்தில் எங்களுக்கு உதவிய தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இந்தத் திரைப்படம் வட சென்னையை களமாகக் கொண்டது. நானும், இயக்குநர் சித்தார்த்தும் தென் சென்னையை சார்ந்தவர்கள். இதனால் வடசென்னையை சார்ந்த எழுத்தாளர்-கதாசிரியர் தமிழ்பிரபாவை அழைத்து, அவருடன் இணைந்து பணியாற்றினோம். தற்போது இப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்து காட்சிகள் அனைத்தும் உயிரோட்டமாக இருக்கிறது என்றால் அதன் பின்னணியில் தமிழ் பிரபாவின் உழைப்புதான் அதிகம். கதையின் நாயகனான பார்த்தி கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியதும் அவர்தான். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.

இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் பேசுகையில், "இந்த திரைக்கதையை முழுவதுமாக படித்துவிட்டு இயக்குநரிடம் நீங்கள் தான் எழுதினீர்களா, இதை யார் எழுதினார்கள் எனக் கேட்டேன். இதனை படப்பிடிப்பு நிறைவு செய்யும் வரை கேட்டுக் கொண்டே இருந்தேன். ஏனெனில் இப்படி ஒரு திரைக்கதையை எழுத முடியுமா என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இதை நான் இந்த தருணத்தில் சொல்வது சற்று மிகைப்படுத்தலாகவே இருக்கும், இருந்தாலும் படம் வெளியான பிறகு நீங்கள் அதை உண்மை என்று ஒப்புக் கொள்வீர்கள். இது போன்றதொரு திரைக்கதையை எழுதுவது சாதாரணமான விஷ‌யம் அல்ல, வாசிக்கும் போது எனக்கு சற்று பொறாமையாகவே இருந்தது.

நல்ல படம் வரவேண்டும் என்று நிறைய பேசுகிறோம். ஆனால் அது குறித்து யாரும் முயற்சி செய்வதில்லை. இந்த படம் நிச்சயம் வித்தியாசமானதாக இருக்கும். இதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன். இந்தத் திரைப்படத்தை ரசிகர்களுடன் திரையரங்குகளில் காண்பதற்கு நானும் ஆவலாக காத்திருக்கிறேன்." என்றார்.

ட்ரிம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான எஸ் ஆர் பிரபு பேசுகையில், "இந்தத் திரைப்படத்தை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுவதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர்களுக்கு என்னுடைய முதல் நன்றி. இப்படத்தை உருவாக்கத்தின் தொடக்க நிலையில் இருந்து எனக்கு தெரியும். இதில் பணியாற்றியவர்கள் அனைவரும் நெருக்கமான நண்பர்கள். நண்பர்கள் ஒன்றிணைந்து உருவாக்கும் படைப்பு என்பது வித்தியாசமானதாக இருக்கும். ஏனெனில் நண்பர்களாக இருந்து படைப்பை உருவாக்கும் போது அவர்கள் எந்த சவாலையும் எளிதாக எதிர்கொள்வார்கள். இந்தப் படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். இந்தத் திரைப்படம் வெற்றி பெறுவதற்காக நாங்களும் கடுமையாக உழைக்க தயாராக இருக்கிறோம். இக்கதை நம்மில் பலரும் கேட்டு பார்த்த சம்பவங்களுடன் தொடர்புடையது. படம் பார்க்கும்போது அந்த சம்பவத்துடன் எளிதில் தொடர்பு படுத்திக் கொள்ளும் வகையில் திரைக்கதை அமைந்திருக்கிறது. இன்றைய சூழலில் அனைவரும் ரசிக்கும் வகையிலான திரில்லர் ஜானரில் இந்த திரைப்படம் அமைந்திருக்கிறது. அதனால் இந்த திரைப்படம் வெற்றி பெறும் என உறுதியாக நம்புகிறேன்," என்றார்.

நடிகை சானியா ஐயப்பன் பேசுகையில், "ஆர். ஜே. பாலாஜியுடன் இணைந்து நடித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இதுவரை இது போன்ற கதாபாத்திரங்களை ஏற்று நடித்ததில்லை. அற்புதமான வாய்ப்பை வழங்கிய இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. 29ம் தேதி முதல் படம் திரையரங்குகளில் வெளியாகிறது, அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசித்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.

இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் பேசுகையில், "அறிமுக இயக்குநருக்காக இப்படி ஒரு பிரம்மாண்டமான மேடையை வழங்கிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தைப் பற்றி அதிகம் பேசாமல் இதில் நடித்த நடிகர்கள், நடிகைகள், பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களைப் பற்றி பேசுவதற்கு முன் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி- செல்வராகவன் -பாலாஜி சக்திவேல்- கருணாஸ் -நட்டி- என பத்திற்கும் மேற்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் பணியாற்றினார்கள். அவர்கள் அறிமுக இயக்குநர் என்று எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள்.

நைஜீரிய நாட்டில் இருந்து சாமுவேல் ராபின்சன் என்ற நடிகர் இங்கு வருகை தந்து நடித்தார். கேரளாவில் இருந்து ஷஃரப் உதீன் -ஹக்கீம் ஷா- சானியா ஐயப்பன்- என மூன்று நட்சத்திரங்கள் இந்த படத்தில் பணியாற்றினார்கள்.

இந்த மேடைக்காக... மேடைக்கு வருவதற்காக வழி அமைத்துக் கொடுத்தவர் இயக்குநர் பா. ரஞ்சித். அவரிடம் ஆறு ஆண்டுகள் பணியாற்றினேன். நிறைய விஷ‌யங்களை கற்றுக் கொண்டேன். அதற்காக அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சொர்க்கவாசல் படத்தின் கதையை மூன்றாண்டுகளுக்கு முன் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எழுத திட்டமிட்டோம். 'வடசென்னை', 'விருமாண்டி' என இதற்கு முன் வெளியான கல்ட் திரைப்படங்களை பார்த்தோம். அதன் பிறகு இந்த படைப்பை வித்தியாசமான கோணத்தில் வித்தியாசமாக வழங்கலாம் என தீர்மானித்தோம். இதற்காக ராஜமுந்திரியில் உள்ள சிறைக்குச் சென்று சிறை கைதிகளுடன் பேசினோம். அந்தத் தருணத்தில் தவறே செய்யாமல் ஏராளமானவர்கள் சிறையில் இருப்பதை கண்டோம்.  அவர்களை விசாரணை கைதி என குறிப்பிடுவார்கள். இந்தியாவில் 70 சதவீதத்திற்கு மேல் சிறையில் விசாரணை கைதிகள் தான் இருக்கிறார்கள் என்ற ஒரு தகவலும் கிடைத்தது. இவர்களுக்கு நீதிமன்றம் இதுவரை எந்த தண்டனையும் வழங்கவில்லை. இருந்தாலும் இவர்கள் சிறையில் இருக்கிறார்கள்.  அவர்களிடம் உரையாடும்போது அவர்களிடம் இருந்த ஒரே விஷ‌யம் நம்பிக்கை. அவர்கள் என்றாவது ஒருநாள் இந்த சொர்க்கவாசல் திறந்து வீட்டிற்குச் சென்று குடும்பத்தினருடன் வாழலாம் என நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். அந்த விஷ‌யம் இந்தப் படத்தில் இடம் பிடித்திருக்கிறது. இது பார்வையாளர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளும் என நம்புகிறேன். எமோஷனல் வித் ஆக்ஷ‌ன் திரில்லராக இந்த திரைப்படம் இருக்கும். இர‌ண்டு மணி நேரம் பத்து நிமிடம் அளவிற்கு இந்த திரைப்படத்தை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். இந்த படைப்பை ரசிகர்களாகிய நீங்கள் எப்படி வரவேற்பு அளிப்பீர்கள் என்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தத் திரைப்படத்திற்கு ஊடகங்களும், மக்களும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.

நடிகர் ஆர். ஜே. பாலாஜி பேசுகையில், "அனைவருக்கும் வணக்கம். பிரதம மந்திரி- ஜனாதிபதி -முதலமைச்சர் - ஆகிய மூவரைத் தவிர அனைவருக்கும் நன்றி சொல்லி விட்டோம். இந்த குழுவுடன் எனக்கு ஒன்றரை ஆண்டு கால பயணம் இருக்கிறது. இந்தப் படத்தில் நிறைய அறிமுக கலைஞர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். இதனால் அவர்கள் அனைவரும் தங்களுக்கு உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்தார்கள். நான் கீழே அமர்ந்திருக்கும் போது மேடையில் பேசிய அனைவரின் பேச்சையும் ரசித்து கேட்டேன். அதேபோல் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக இவர்கள் படத்தை ரசித்து ரசித்து எடுப்பதையும் பார்த்து இருக்கிறேன். நான் நடித்த ஒரு படத்தை ரிலீஸிற்கு நான்கு நாள் இருக்கும் இந்த தருணத்திலும் நான் இதுவரை பார்க்கவில்லை. அதற்கு காரணம் நான் இவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை. இந்தப் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்ததற்காக இயக்குநர் சித்தார்த்திற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னிடமிருந்து நடிப்பை அவர் வாங்கினார். அவரிட‌த்தில் எழுத்து வடிவத்தில் முழு திரைக்கதையும் இருந்தது. இதற்காக உழைத்த எழுத்தாளர்கள் தமிழ் பிரபா - அஸ்வின் ரவிச்சந்திரன் மற்றும் சித்தார்த்துக்கு நன்றி.

இந்தப் படத்தில் டீசர் வெளியானவுடன் என்னுடைய நண்பர்களான நிறைய ஹீரோக்கள் இயக்குநருக்கு போன் செய்து பாராட்டி இருக்கிறார்கள். இந்தப் படத்தின் முன்னோட்டம் மற்றும் படம் வெளியான பிறகு அவருக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

படப்பிடிப்பு தளத்தில் அவருடைய குழுவினரை நான் கலாய்த்து இருக்கிறேன். ஏனென்றால் அவர்கள் எப்போதும் ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருப்பார்கள். உதவி இயக்குநராக பணியாற்றிய அருண் - இந்த படத்தில் ஒரு பாடலை எழுதி இருக்கிறார். 

ஒளிப்பதிவாளர் பிரின்ஸ் ஆண்டர்சன் குழுவினரும் திறமையானவர்கள். அவளர்களுடன் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவர்களிடமிருந்து நிறைய விஷ‌யங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். நான் நடித்த திரைப்படங்களிலேயே இந்த படத்தில் தான் போட்டோகிராபி சிறப்பாக இருக்கிறது. மிகப்பெரிய வேலையை எளிதாகவும், சிரமமின்றியும் செய்பவர் ஒளிப்பதிவாளர் பிரின்ஸ். அவருக்கு பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது.

இப்படத்தின் எடிட்டர் செல்வாவுடன் இணைந்து 'எல்கேஜி', 'மூக்குத்தி அம்மன்', 'வீட்ல விசேஷங்க', 'சிங்கப்பூர் சலூன்' என அனைத்து படத்திலும் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். அவருடன் இந்த படத்திலும் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தில் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புகிறேன். கடவுள் புண்ணியத்தில் இந்த படத்தில் அவருக்கு தேசிய அளவில் விருது கிடைக்க வேண்டும் என்று இறைவனை  பிரார்த்திக்கிறேன்.

கதாசிரியர் தமிழ் பிரபாவின் எழுத்துக்கு நான் மிகப்பெரிய ரசிகன். இந்தப் படத்தில் எனக்கு ஜோடியாக நடித்திருக்கும் சானியா ஐயப்பன்.. இந்த  திரைப்படத்தின் விளம்பர நிகழ்விற்கு வருகை தந்திருக்கிறார். படத்திற்கும் சிறப்பாக புரொமோஷன் செய்து வருகிறார். அவர் இந்த படத்தில் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் அவரும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.

செல்வராகவன்  திரையில் தோன்றினாலே பெரிய நட்சத்திர நடிகர் போல் இருக்கும். படப்பிடிப்பு தளத்தில் அவர் எப்போதும் அமைதியாக இருப்பார். அவருக்கு நண்பர்களும் குறைவு. படபிடிப்பு தளத்தில் மிக குறைவாகவே பேசுவார். மிகப்பெரிய ஸ்டார் இந்த படத்தில் இருக்கிறார் என்ற உணர்வே எங்களுக்கு இருந்தது.

மேலும் இந்தப் படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படம் எனக்கு ஸ்பெஷலானது. ஏனெனில் படத்தை இயக்கிய சித்தார்த் 15 ஆண்டு காலத்திற்கு முன் நான் கிரிக்கெட் விளையாடும் போது எனக்கு பின்னால் நின்று கொண்டிருப்பான். அவனது இயக்கத்தில் நடித்திருக்கிறேன்.

நான் சூர்யாவின் படத்தை இயக்கிக் கொண்டிருப்பதற்கும், இப்படத்தின் தயாரிப்பாளரான சித்தார்த் ராவிற்கு பங்கு உண்டு. அவருடைய முதல் பட தயாரிப்பில் நானும் இடம் பெற்றதற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

திங்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ஸ்வரூப். எல் கே ஜி படம் வெளியான தருணத்திலிருந்து என்னுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து இருந்தார். இந்த படத்தின் கதையை இரவு 10 மணி அளவிற்கு கேட்டுவிட்டு அடுத்த நாள் காலையில் இணைந்து பணியாற்றலாம் என சம்மதம் தெரிவித்தார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிகழ்வு எனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆனது. 'தீயா வேலை செய்யணும் குமாரு' படம் வெளியான தருணத்திலிருந்து இதுவரை 13 ஆண்டுகள் கடந்து விட்டது. என்னுடைய மனைவி திவ்யா நாகராஜன் இந்த நிகழ்விற்கு வருகை தந்திருக்கிறார். அவர் கலந்து கொள்ளும் முதல் சினிமா நிகழ்வு இதுதான்.

சொர்க்கவாசல் படத்தை பற்றி பேசுவதில் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. இந்த படம் நன்றாக வந்திருக்கிறது. பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டுகிறார்கள். இந்தப் படத்தின் டீசருக்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது. தற்போது படத்தின் முன்னோட்டம் வெளியாகி இருக்கிறது. இதற்கும் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன் ஒரு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சர்ச்சையை ஏற்படுத்து வகையில் எதையாவது பேச வேண்டும் என்று இருந்தது. ஆனால் நான் தற்போது என்ன நினைக்கிறேன் என்றால்.. பேசுவதற்கு எதுவும் இல்லை என்றாலும் பரவாயில்லை. படத்தின் கன்டென்ட் நன்றாக இருந்தால் அது மக்களிடம் ரீச் ஆகிவிடும்.

நான் 2006ம் ஆண்டிலிருந்து இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். விற்பனை செய்வதற்காக ஒரு கடைக்கு நாம் பிஸ்கட்டை எடுத்து சென்று விட்டால் அதை மற்றவர்கள் நன்றாக இருக்கிறது.
இல்லை என்று சொல்லத்தான் செய்வார்கள். அதேபோல் தான் சினிமாவும். ரசிகர்களை சென்றடைந்த பின் ஒரு படத்தைப் பற்றி அவர்கள் விமர்சனம் செய்வார்கள்.

ஒரு படம் வெளியான பிறகு அதைப்பற்றி யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். யூடியூபில் விமர்சிக்கலாம்... ட்விட்டரில் விமர்சிக்கலாம் .. இன்ஸ்டாகிராமில் விமர்சிக்கலாம். அது அவர்களுடைய சுதந்திரம். யாரும் அவர்களிடத்தில் இருக்கும் செல்போனை பறிக்க முடியாது. அதனால் விமர்சனம் குறித்த கட்டுப்பாடு நம்மிடத்தில் இல்லை. 

சொர்க்கவாசல் படத்தில் கன்டென்ட் நன்றாக இருக்கிறது. இந்தப் படத்தை பார்த்து நன்றாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காகத் தான் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.  இவர்கள்தான் என்னுடைய அடுத்த படத்தின் தயாரிப்பாளர்கள். இந்தப் படத்தின் விநியோகஸ்தர்கள்.

போட்டிகள் நிறைந்த சூழலில் ஓடிடி எனப்படும் டிஜிட்டல் ரைட்ஸ் விற்பது கடினமாக இருக்கும். ஆனால் நல்ல தொகையை கொடுத்து இப்படத்தின் உரிமையை வாங்கி இருக்கும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் எங்கள் குழு மீது வைத்த நம்பிக்கைக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

தற்போதெல்லாம் பயம் அதிகமாக ஏற்படுகிறது. வெளியில் தேசியக்கொடி ஒன்றினை கையில் ஏந்தி கொண்டு இந்தியன் என்ற உணர்வோடு இருந்தால் அதற்கும் ஏதாவது விமர்சனம் செய்வார்களோ என்ற பயம் ஏற்படுகிறது.

நான் பாவாடையும் கிடையாது. சங்கியும் கிடையாது. அனைத்து அரசியல் கட்சியின் ஐ டி விங்கிடம் ஒரு பணிவான வேண்டுகோள் வைக்கிறேன். நீங்கள் அரசியலை மட்டும் பாருங்கள். சினிமாவை விட்டு விடுங்கள். சினிமாவில் வாரந்தோறும் திரைப்படங்கள் வெளியாகின்றன‌. திரைப்படங்களை விமர்சித்து அதனை அழிப்பதில் எதற்காக உங்களுடைய ஆற்றலை வீணடிக்கிறீர்கள்.

அதேபோல் ரசிகர்களிடத்திலும் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன் அதாவது ரஜினி ரசிகர்கள் -கமல் ரசிகர்கள்- விஜய் ரசிகர்கள்- அஜித் ரசிகர்கள்- என  எல்லா ரசிகர்களும் நல்ல திரைப்படங்களை பாருங்கள். படம் பிடிக்கவில்லை என்றால் விமர்சனம் செய்யுங்கள். அது உங்கள் உரிமை.  ஆனால் அவர்கள் படம் வந்தால்

JOLLY O GYMKHANA - திரைவிமர்சனம்


 "ஜாலி ஓ ஜிம்கானா" என்பது ஒரு வேடிக்கையான நகைச்சுவை, இது பார்வையாளர்களுக்கு ஓரளவு குறைபாடுகள் இருந்தாலும், அனுபவத்தை வழங்குகிறது. சக்தி சிதம்பரம் இயக்கிய இப்படம், பிரியாணி கடை நடத்தும் குடும்பத்தைச் சுற்றி, துரோகம், கொலை உட்பட பல சவால்களை எதிர்கொள்ளும் கதை. முன்னுரை புதிரானது, மேலும் கதைக்களத்தில் சில தர்க்கரீதியான முரண்பாடுகள் இருந்தாலும், வேடிக்கையான, கவலையற்ற பார்வை அனுபவத்தை விரும்புவோரை ஈர்க்கும் ஒரு விளையாட்டுத்தனமான தொனியை திரைப்படம் பராமரிக்கிறது.

படத்தின் நகைச்சுவையை ஆதரிப்பவர் யோகி பாபு, அவரது நகைச்சுவை நேரம் பல மறக்கமுடியாத தருணங்களை வழங்குகிறது, இருப்பினும் அவரது சில நகைச்சுவைகள் குறி தவறவிட்டன. ஆயினும்கூட, அவரது இருப்பு கதைக்கு உயிரோட்டத்தை சேர்க்கிறது. ஜான் விஜய், ரோபோ சங்கர், மற்றும் எம்.எஸ் உள்ளிட்ட குழும நடிகர்கள். பாஸ்கர், வித்தியாசமான நகைச்சுவையை மேசைக்குக் கொண்டுவந்தார், ஆனால் அபிராமி தனது வலுவான நடிப்பால் உண்மையிலேயே பிரகாசிக்கிறார், முக்கிய காட்சிகளில் அவருடன் நடித்த மடோனாவை மிஞ்சினார்.

இறுதியில், "ஜாலி ஓ ஜிம்கானா" ஒரு வேடிக்கையான, இலகுவான திரைப்படம், அது தன்னை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சதி குறிப்பாக ஆழமாக இல்லாவிட்டாலும், படம் சில தர்க்கரீதியான குறைபாடுகளால் பாதிக்கப்படுகிறது, குறிப்பாக பிரபுதேவா மற்றும் அபிராமியின் நடிப்பு, திரைப்படம் அதன் நகைச்சுவை வாக்குறுதியை வழங்குவதை உறுதி செய்கிறது. இது ஒரு தலைசிறந்த படைப்பாக இருக்காது, ஆனால் ஸ்லாப்ஸ்டிக் காமெடி ரசிகர்கள் மற்றும் சாதாரண திரைப்பட பார்வையாளர்களுக்கு இது ஒரு இனிமையான பார்வை அனுபவத்தை அளிக்க போதுமான சிரிப்பையும் பொழுதுபோக்கையும் வழங்குகிறது.


பசங்க லவ் மூடில் இருக்கிறாங்க.. நாம ஆக்சன் படம் எடுத்துட்டு இருக்கோம்” ; ‘மிஸ் யூ’ ட்ரெய்லர் விழாவில் யதார்த்தம் பேசிய நடிகர் கார்த்தி*

*”பசங்க லவ் மூடில் இருக்கிறாங்க.. நாம ஆக்சன் படம் எடுத்துட்டு இருக்கோம்” ; ‘மிஸ் யூ’ ட்ரெய்லர் விழாவில் யதார்த்தம் பேசிய நடிகர் கார்த்தி*

*“இப்போதும் காதல் படங்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் நாம் எடுப்பது இல்லை” ; நடிகர்  கார்த்தி வெளிப்படை பேச்சு* 

7 MILES PER SECOND’ நிறுவனம் சார்பில், 
சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், 
சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘மிஸ் யூ’. இளமை துள்ளலுடன், துறுதுறுப்பான ரொமாண்டிக் பீல் குட் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தை ‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ போன்ற கமர்சியல் ஹிட் படங்களை  இயக்கிய N. ராஜசேகர் இயக்கியுள்ளார்.

ஜே.பி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா குமார், ரமா, பாலசரவணன், 'லொள்ளு சபா' மாறன், சஸ்டிகா என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தபடத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 
 
‘மிஸ் யூ’ திரைப்படம் வரும் நவ- 29ல் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தைத் தமிழகமெங்கும் வெளியிடுகிறது. இந்தநிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் கார்த்தி இந்தப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட, நடிகர் சித்தார்த் அதை பெற்றுக்கொண்டார். 

இந்த நிகழ்வில் நடிகர் கார்த்தி பேசும்போது, “இங்கே வந்து அமர்ந்த கொஞ்ச நேரத்திலேயே எனக்கு அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை பார்த்த ஞாபகம் வந்துவிட்டது. ஏனென்றால் சித்தார்த் முதல் நாள் படப்பிடிப்பில் சேர்ந்த போது ஒரு ரயில்வே ஸ்டேஷனில் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தோம். அவன் போய் அங்கிருக்கும் எல்லோருக்கும் நடிப்பு சொல்லிக் கொடுத்துக்கொண்டு இருந்தான்..  பேக்ரவுண்ட் செக் பண்ணி கொண்டு இருந்தான்.. மணி சார் தாங்க முடியாமல், “டேய் பேசாம அவனை நடிக்க மட்டும் சொல்லுங்கடா” என்று சொன்னார். இங்கே வந்தும் பார்க்கிறேன்.. அதே வேலை தான் நடந்து கொண்டிருக்கிறது.. இங்கேயும் லைட்டை திருப்புங்க.. கதவை மூடுங்க என.. “டேய் நீ கொஞ்சம் அமைதியா இருடா”.. (சித்தார்த்தை பார்த்து கூறுகிறார்).  

என்னை சினிமா குடும்பத்தை சேர்ந்தவன் என்று சொல்வார்கள். ஆனால் எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. நான் படித்துவிட்டு உதவி இயக்குநராக சேர்ந்த அந்த சமயத்தில் தான் சித்தார்த், சுதா கொங்கரா, மிலிந்த் எல்லோரும் அங்கே இருந்தார்கள். சினிமா பற்றி அவர்களுக்கு தெரிந்திருந்த விஷயங்கள், அவர்கள் பேசும் விஷயங்களை எல்லாம் பார்க்கும்போது, அய்யய்யோ திரும்பவும் நாம் கடைசி பென்ச் தான் போல இருக்கிறதே.. இவர்கள் இவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார்களே.. நாம் எதுவும் தெரியாமல் ஏமாந்து விட்டோமே என்று தோன்றியது. சினிமா எடுக்க வேண்டும் என்றால் சினிமா பார்த்தால் மட்டும் பத்தாது, நிறைய படிக்க வேண்டும்.. கற்றுக்கொள்ள வேண்டும் என இவர்களுடன் உரையாடியபோது தான் நான் கத்துக்கிட்டேன் என்று சொல்லலாம்.

இந்த படத்தின் டைட்டில் ‘மிஸ் யூ’. நம் பசங்க அதிகமாக யூஸ் பண்ணும் வார்த்தைகள் தான் ‘லவ் யூ’.. ‘மிஸ் யூ’.. அதுல ரொம்ப கேட்சிங்கான வார்த்தையான  ‘மிஸ் யூ’வை படத்தின் டைட்டிலாக வைத்து விட்டீர்கள். பசங்க சோசியல் மீடியாவில் போடும் போஸ்ட்டுகள் எல்லாமே லவ் போஸ்ட்டுகளாக இருக்கின்றன.. ஆனால் நாம் ஆக்சன் படங்களாக எடுத்துக் கொண்டிருக்கிறோம். மறுபடியும் ஒரு ஆக்சன் படமாக எடுத்து, ஒரு லவ் ஃபெயிலியர் பாடல் வைத்து, சரக்கு அடிக்கும் காட்சியை வைத்து நான் படித்த  காலத்தில் பார்த்த சினிமா போல இது இருக்கிறது. 

எனக்கு விஜய் சார் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் படம் ரொம்பவே பிடிக்கும். அதில் பாடல்கள், காதல், அதை சுற்றி இருக்கும் விஷயங்கள் என இப்போது பார்த்தாலும் அது உற்சாகமூட்டுவதாக இருக்கும். இப்போதும் அது போன்ற படங்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் நாம் எடுப்பது இல்லை. பாய்ஸ் சித்தார்த் என்பதால் அவர் மட்டும் இன்னும் லவ் பண்ணிக் கொண்டிருக்கிறார்.. பார்ப்பதற்கும் அப்படியே இருக்கிறார் என்பது அவருக்கு ஒரு பெரிய வசதியாக இருக்கிறது. ஜிப்ரான் இசையில் தினேஷ் நடன வடிவமைப்பில் சித்தார்த் நன்றாகவே ஆடி இருந்தார். பாடல்கள் நன்றாக இருந்தது. பார்ப்பதற்கு நான் படித்த காலத்தில் இருப்பது போன்று சிம்பிளாக இருந்தாலும் உள்ளே ஏதோ ஒன்று இருக்கிறது. அப்படி இல்லாமல் சித்தார்த் ஒத்துக் கொள்ள மாட்டார். 

இந்த படத்தின் நாயகி ஆஷிகா ரங்கநாத் தற்போது சர்தார்-2வில் என்னுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். சிறிய ஊரில் இருந்து வந்தவர் என்றாலும் அவ்வளவு திறமையுடன் மொழி தெரியாவிட்டாலும் சின்சியராக இருக்கிறார். அது எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. இந்த படத்தில் ரொம்ப அழகாக இருக்கிறார். 

பண்ணையாரும் பத்மினியும் குறும்படம் பார்த்ததிலிருந்து பாலசரவணனை பார்த்து யார் அந்த பையன், இப்படி பின்னுகிறானே என யோசித்து இருக்கிறேன். அப்பாவித்தனத்தை வெளிப்படுத்துவது ரொம்பவே கஷ்டமான விஷயம். கொஞ்சம் மீறினாலும் கொட்டாவி விட்டு விடுவார்கள். அப்பாவித்தனத்துடன் சேர்ந்து நகைச்சுவையையும் வெளிப்படுத்தியது எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. 
அதன் பிறகு லப்பர் பந்து என அவர் நடித்த படங்களில் எல்லாம் எல்லா பஞ்ச்சுகளும் சரியான விதத்தில் இறங்கிக் கொண்டே இருக்கும். பாலசரவணன் உங்களுக்கு  நிச்சயமாக ஒரு பெரிய இடம் இருக்கிறது. நாம சீக்கிரம் ஒண்ணா ஒர்க் பண்ணுவோம். பசங்க கிட்ட சொல்லிக்கிட்டே இருக்கிறேன். நிச்சயமாக அது நடக்கும் என நம்புகிறேன். 

நானும் கருணாவும் இப்போதுதான் வா வாத்தியாரே படத்தில் நடித்து முடித்து வந்தோம். அவ்வளவு அழகாக காமெடி வசனங்களை டெலிவரி பண்ணுகிறார். நான் எதுவுமே கத்துக்காமல் சினிமாவுக்கு வந்து, இங்கே தான் கத்துக்கிட்டேன். ஆனால் இன்று எல்லோரும் ஷார்ட் பிலிமில் அசத்துகிறார்கள். வரும்போதே தயாராகி வருகிறார்கள். ஜிப்ரான் நாம் இருவரும் தீரன் அதிகாரம் ஒன்று சேர்ந்து பணியாற்றினோம். விரைவில் இன்னொரு படத்தில் இணைவோம். இயக்குநருக்கு இது மூன்றாவது படம். பெரிய வெற்றி பெற வேண்டும்.. சித்தார்த் நண்பன் மிலிந்த்துக்காக படம் பண்ணியதாக இருக்கட்டும் ‘சித்தா’ படத்திற்கு அவ்வளவு கவனம் எடுத்துக்கொண்டு பண்ணியதாகட்டும்.. அதை புரமோட் செய்த விதமாகட்டும்.. அதற்கு கிடைத்த பாராட்டுக்களை பார்க்கும்போது ரொம்பவே பெருமையாக இருக்கிறது. சென்னை வெள்ளத்தை மறக்க முடியாது. அதில் நீ செய்த விஷயங்கள் எல்லோருக்கும் ஒரு தூண்டுகோலாக இருந்தது. நல்ல விஷயங்களை திரும்ப திரும்ப பேசிக்கொண்டே இருப்பது அவசியமாக இருக்கிறது” என்று கூறினார்.


மக்களின் மனங்களை வென்ற, ஸ்டார் விஜய் 'ஆஃபீஸ்' தொடர், ஹாட்ஸ்டாரில் மீண்டும் முழு நீள வெப் சீரிஸாக வெளிவரவுள்ளது !!

*மக்களின் மனங்களை வென்ற, ஸ்டார் விஜய் 'ஆஃபீஸ்' தொடர், ஹாட்ஸ்டாரில் மீண்டும் முழு நீள வெப் சீரிஸாக வெளிவரவுள்ளது !!*

வெப் சீரிஸாக மீண்டும் வரும் 'ஆஃபீஸ்' தொடர், ஹாட்ஸ்டாரில் விரைவில் !! 

'இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தமிழ் தொலைக்காட்சியின் மிகவும் ரசிக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றான 'ஆஃபீஸ்' தொடரை, முழு அளவிலான வெப் சிரீஸாக விரைவில், வெளியிடவுள்ளது. 

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இன்று இந்தத் வெப் சீரிஸின் தலைப்பை சமூக ஊடகம் வழியே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்பு,  பார்வையாளர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸாக உருவாகவுள்ள இந்த சீரிஸ், 2013 ஆம் ஆண்டு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் வெளியான, ஒரு ஆபிஸில் நடக்கும் காதல், காமெடிகளை மையமாக கொண்ட 'ஆஃபீஸ்' தொடரின்   மறுவடிவமாகும். 

கனா காணும் காலங்கள் சீரிஸின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தொலைக்காட்சித் தொடரை, இந்த கால ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு, ஒரு வெப் சீரிஸாக மாற்றுவது, ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. 

சமீப காலங்களில் வெளியான ஹாட்ஸ்டாரின் வெப் சீரிஸான 'கனா காணும் காலங்கள்' மட்டுமல்ல, 'ஹார்ட் பீட்' மற்றும் 'உப்பு புளி காரம்' போன்ற சீரிஸ்களும் மகத்தான வெற்றியை ருசித்துள்ளன. இதனைத் தொடர்ந்து டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸாக ஆஃபீஸ் சீரிஸை வெளியிடவுள்ளது.

தமிழ் தொலைக்காட்சியின் முதல் ஆஃபீஸ் நிகழ்வுகளை பற்றிய தொடராக வெளியான ஆஃபிஸ்  தொடரில், நடிகர்கள் கார்த்திக் ராஜ், ஸ்ருதி ராஜ், விஷ்ணு, மதுமிளா, உதயபானு மகேஸ்வரன், சுசேன் ஜார்ஜ், சித்தார்த் மற்றும் அன்பழகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இயக்குநர் ராம் விநாயக் இயக்கிய இந்தத் தொடர் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து, மக்களின் இதயங்களை வென்ற தொடராக வெற்றி பெற்றது.

562-எபிசோட் கொண்ட இந்த தொடர், ஒரு ஐடி நிறுவனத்தின் ஊழியர்களைச் சுற்றி நடக்கும் கதைக்களத்தில் உருவானது. இப்போது, அதே தொடர், வெப் சீரிஸாக, புத்தம் புதிய நடிகர்கள் மற்றும் மறுவடிவமைக்கப்பட்ட அமைப்புடன் உருவாக்கப்பட உள்ளது. இது முந்தைய தொடரின் அடிப்படை அம்சங்களுடன், ஆஃபீஸ் களேபரங்களை நவீனமாக எடுத்துச் சொல்லும்.

ஆஃபீஸ் வெப் சீரிஸாக ரீமேக் செய்யப்படுகிறது என்ற செய்தி, ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும், பார்வையாளர்களின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

https://youtu.be/MQfpsZshTM8

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி: 
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை மாற்றியுள்ளது - அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்ச்சிகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது.  மேலும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.

Friday, November 22, 2024

PARARI - திரைவிமர்சனம்

பரரி என்பது எழில் பெரியவேதி எழுதி இயக்கிய ஒரு கிராமிய நாடகம். இப்படத்தை ஹரிசங்கர் தயாரித்துள்ளார்.

சமூக உணர்வுடன் கூடிய ஒரு கிராமிய நாடகமாக PARARI தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. துரதிர்ஷ்டவசமாக, இது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் "தோழர்" படங்களின் பட்டியலில் மற்றொரு கூடுதலாக முடிவடைகிறது, இதற்கு முன் எண்ணற்ற முறை பார்வையாளர்கள் பார்த்த கருப்பொருள்கள் மற்றும் ட்ரோப்களை மறுசுழற்சி செய்கிறது. சில திருவிழா பாராட்டுக்களின் ஆதரவுடன் படம் களத்தில் இறங்குகிறது, ஆனால் இவை மட்டுமே அதன் இருப்புக்கான ஒரே நியாயமாகத் தெரிகிறது. புதிய முன்னோக்குகள் அல்லது புதுமையான கதைசொல்லலை வழங்குவதற்குப் பதிலாக, PARARI இடைவிடாத சரமாரியான பிரசங்கக் காட்சிகள் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் செய்திகளை வழங்குகிறது.

நிகழ்ச்சிகள் சேவை செய்யக்கூடியவை ஆனால் குறிப்பிடத்தக்கவை அல்ல. ஹரிசங்கர் மற்றும் சங்கீதா கல்யாண் ஆகியோர் கண்ணியமான முயற்சிகளை மேற்கொண்டனர், ஆனால் மற்ற நடிகர்கள் வெறுமனே இயக்கங்களை கடந்து செல்கிறார்கள், மறக்கமுடியாத எதையும் வழங்கவில்லை.

தொழில்நுட்ப ரீதியாக, படம் சமமாக நடுநிலையானது. ஸ்ரீதரின் ஒளிப்பதிவு செயல்பாட்டுடன் இருந்தாலும் கதையை உயர்த்தத் தவறிவிட்டது. சீன் ரொனால்டின் இசை, கடந்து செல்லக்கூடியதாக இருந்தாலும், நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தாது. படத்தின் ஓட்டத்தை சீர்குலைக்கும் குறிப்பிடத்தக்க குறைபாடுகளுடன் சாமின் எடிட்டிங் தடுமாறியது. உரையாடல்கள் சோர்வாகவும் யூகிக்கக்கூடியதாகவும் உள்ளன, ஏற்கனவே வழக்கமான திசையை மேலும் இழுத்துச் செல்கின்றன.
 

ZEBRA - திரைவிமர்சனம்

 ஜீப்ரா என்பது ஈஸ்வர் கார்த்திக் இயக்கிய ஆக்‌ஷன்-காமெடி த்ரில்லர், குழப்பம், குற்றம் மற்றும் பின்னடைவு ஆகியவற்றின் கதையை பின்னுகிறது. அர்ப்பணிப்புள்ள வங்கி ஊழியரான சூர்யா (சத்யதேவ் காஞ்சரனா), ஒரு பெரிய வங்கி பிழையை சரிசெய்வதில் தனது காதலியான சுவாதிக்கு (ப்ரியா பவானி சங்கர்) உதவிய பிறகு கவனக்குறைவாக பிரச்சனையின் புயலில் மூழ்குகிறார். ஒரு வழக்கமான திருத்தமாகத் தொடங்குவது, ஒரு கும்பலாக மாறிய வணிக அதிபரான ஆதி (டாலி தனஞ்சய) உடனான அதிக-பங்கு மோதலாக பனிப்பந்துகளாக மாறுகிறது. நிகழ்வுகள் வெளிவரும்போது, ​​எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் புதிரான கதாபாத்திரங்கள் பார்வையாளர்களை யூகிக்க வைக்கின்றன: சூர்யா இந்த துரோகப் பிரமைக்குச் சென்று தனது வலிமைமிக்க எதிரியை முறியடிக்க முடியுமா? ஆதியின் பிரமாண்ட திட்டங்களின் மையத்தில் என்ன இருக்கிறது?

வங்கியியல் உலகம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களின் புதிரான ஒன்றுடன் ஒன்று அமைக்கப்பட்ட ஜீப்ரா அதிரடி, நகைச்சுவை மற்றும் சஸ்பென்ஸ் ஆகியவற்றின் கலவையுடன் ஒரு புதிய கதையை வழங்குகிறது. படத்தின் பலம் அதன் கவர்ச்சிகரமான கதைக்களம் மற்றும் நகைச்சுவையான தருணங்களில் உள்ளது, இருப்பினும் இறுக்கமான திரைக்கதை அதன் தாக்கத்தை மேலும் உயர்த்தியிருக்கலாம். ஒரு சில துணைக்கதைகள், முக்கிய கதையின் தீவிரத்தை சிறிது நீர்த்துப்போகச் செய்கின்றன.

சத்யதேவ் சூர்யாவாக ஒரு சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார், ஒரு நுட்பமான வங்கியாளராக இருந்து உயிருக்கு ஆபத்தான சவால்களில் சிக்கிய மனிதனாக சிரமமின்றி மாறுகிறார். தனஞ்சயா ஆதியாக ஜொலிக்கிறார், அதிநவீனமும் அச்சுறுத்தலும் கலந்து அவரை மறக்கமுடியாத எதிரியாக்கினார். அவர்களின் டைனமிக் கெமிஸ்ட்ரி திரைப்படத்தை இயக்குகிறது, பல தனித்துவமான தருணங்களை உருவாக்குகிறது. பிரியா பவானி சங்கர் சுவாதியாக உணர்ச்சிவசப்படுகிறார், அதே சமயம் அம்ருதா ஐயங்காரின் ஆராத்யா ஆதியின் கதையை ஆழம் மற்றும் நுணுக்கத்துடன் வளப்படுத்துகிறார்.

துணை நடிகர்கள் பொழுதுபோக்கின் அடுக்குகளைச் சேர்க்கிறார்கள், சத்யா பட்டி பாப் காமிக் ரிலீஃப் வழங்குகிறார் மற்றும் சுனில் எம்ஜியாக அட்டகாசமான வில்லத்தனத்தை சேர்க்கிறார். ஏ முதல் ஒய் பாபா வரையிலான சத்யராஜின் விசித்திரமான சித்தரிப்பு மற்றும் ஜெனிபர் பிசினாடோவின் புதிரான பாம்பு ஷீலா ஆகியவை குழுமத்தை மேலும் மேம்படுத்துகின்றன.

தொழில்நுட்ப ரீதியாக, படம் ரவி பஸ்ரூரின் அற்புதமான இசை மற்றும் சத்யா பொன்மரின் அற்புதமான ஒளிப்பதிவு ஆகியவற்றால் சிறந்து விளங்குகிறது. அனில் கிரிஷின் எடிட்டிங் கிட்டத்தட்ட 165 நிமிட இயக்க நேரத்தை சற்று நீட்டித்த போதிலும் ஒரு ஒத்திசைவான ஓட்டத்தை பராமரிக்கிறது. ஆக்கப்பூர்வமான கதாபாத்திர அறிமுகங்கள் மற்றும் காட்சித் திறமை ஆகியவற்றால் குறிக்கப்பட்ட கார்த்திக்கின் கண்டுபிடிப்பு இயக்கம், கதைசொல்லலுக்கு ஒரு புத்துணர்ச்சியூட்டும் பரிமாணத்தைச் சேர்க்கிறது.

லக்கி பாஸ்கர் மற்றும் மட்கா போன்ற நிதி சார்ந்த த்ரில்லர்களை நினைவூட்டும் அதே வேளையில், ஜீப்ரா அதன் நகைச்சுவை, நாடகம் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் தனித்து நிற்கிறது. இது விதிவிலக்கான நிகழ்ச்சிகள் மற்றும் ஒரு தனித்துவமான கதை பாணியால் இயக்கப்படும் ஒரு ஈர்க்கக்கூடிய சவாரி.

EMAKKU THOZHIL ROMANCE - திரைவிமர்சனம்

எமக்கு தோழில் ரொமான்ஸ் ஒரு கற்பனையான காட்சியுடன் துவங்குகிறது, அங்கு உமா சங்கர் (அசோக் செல்வன்) ஆஸ்கார் விருது ஏற்பு உரையை நிகழ்த்துகிறார், பிராட் பிட் மற்றும் கிறிஸ்டோபர் நோலன் போன்ற ஹாலிவுட் ஐகான்களின் கைதட்டலைப் பெற்றார். இருப்பினும், யதார்த்தம் ஊடுருவி, உமாவை உயரிய கனவுகள் கொண்ட ஒரு ஆர்வமுள்ள திரைப்படத் தயாரிப்பாளராக வெளிப்படுத்துகிறது. பாலாஜி கேசவன் இயக்கிய இந்த ரொம்-காம் உமாவின் உதவி இயக்குநராக இருந்த வாழ்க்கையை ஆராய்ந்து, அவரது பயணத்தில் நகைச்சுவையை பின்னுகிறது. 

மெயின்ஸ்ட்ரீம் ரோம்-காம்கள் பெரும்பாலும் ஃபார்முலாக் கதைசொல்லலில் ஒட்டிக்கொண்டிருக்கும் அதே வேளையில், எமக்கு தோழில் ரொமான்ஸ் லேசான நகைச்சுவை மற்றும் தொடர்புடைய மோதல்களால் பார்வையாளர்களை வசீகரிக்க முயற்சிக்கிறது. கதை உமா மற்றும் லியோ (அவந்திகா மிஸ்ரா) மீது கவனம் செலுத்துகிறது, அவர்களின் உறவு தவறான புரிதல்களால் நிறைந்துள்ளது, குறிப்பாக சரண்யாவுடன் உமாவின் பந்தத்தை லியோ தவறாகக் கருதும் போது. இந்த தவறான புரிதல்கள் கதையின் பெரும்பகுதியைத் தூண்டுகின்றன, ஆனால் மீண்டும் மீண்டும் வருகின்றன. அதன் எளிமை இருந்தபோதிலும், படத்தின் விளையாட்டுத்தனமான தொனி மற்றும் காதல் குறும்புகள் அதற்கு ஒரு தென்றலான முறையீட்டைக் கொடுக்கின்றன.

துணை நடிகர்கள் படத்தை உயர்த்தி, அதன் மறக்கமுடியாத சில தருணங்களை வழங்குகிறார்கள். பகவதி பெருமாள் தனது நகைச்சுவையான டைமிங்கால் தனித்து நிற்கிறார், குறிப்பாக அவர் ஒரு NRIயாக நகைச்சுவையாகக் காட்சியளிக்கிறார். பழம்பெரும் நடிகை ஊர்வசி, உமாவின் விறுவிறுப்பான அம்மாவாக, நம்பிக்கையுடன் கூடிய நகைச்சுவையை வெளிப்படுத்துகிறார், கதைக்கு அரவணைப்பு சேர்க்கிறார். அவரது பாத்திரம் அற்புதமானதாக இல்லை என்றாலும், அவரது இருப்பு ஒரு நீடித்த தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அவந்திகா மிஸ்ரா தமிழ் பேசும் செவிலியராக ஆச்சர்யப்படுகிறார், அசோக் செல்வனுடன் கண்ணியமான வேதியியலைப் பகிர்ந்துகொள்ளும்போது உதடு அசைவுகளை கச்சிதமாக ஒத்திசைக்கிறார். செல்வனின் இலேசான நடிப்பு படத்தின் இலேசான தொனியுடன் நன்றாக ஒத்துப்போகிறது.

காட்சி ரீதியாக, வண்ணமயமான காட்சிகள் மற்றும் மெல்லிசை ட்யூன்களைக் கொண்ட துடிப்பான கடற்கரைப் பாடல் காட்சியுடன் படம் மகிழ்கிறது. வெறும் 100 நிமிடங்களில், இயக்க நேரம் கதை விறுவிறுப்பாகவும் ஈர்க்கக்கூடியதாகவும் இருப்பதை உறுதி செய்கிறது.

இறுதியில், எமக்குத் தோழில் காதல் என்பது அதன் வகையை மறுவரையறை செய்ய விரும்பாத ஒரு இலகுவான பொழுதுபோக்கு. அதன் கதாபாத்திரங்களின் சிக்கலான தன்மைகளை இது பளபளக்கும் அதே வேளையில், நகைச்சுவை, ஈர்க்கும் நிகழ்ச்சிகள் மற்றும் உணர்வு-நல்ல அதிர்வு ஆகியவை அதை ஒரு இனிமையான பார்வையாக மாற்றுகின்றன. சிக்கலற்ற பொழுதுபோக்கை விரும்புவோருக்கு ஏற்றது, இது காதல் மற்றும் நகைச்சுவையின் மகிழ்ச்சியான கலவையை வழங்குகிறது.

 

Thursday, November 21, 2024

NAYANTHARA NEYOND THE FAIRYTALE - திரைவிமர்சனம்

'முதலில், நான் ஒரு நபர் என்பதை நிரூபிக்க முயற்சிக்கிறேன். அப்போது நான் நடிகை என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்வேன்.'

மர்லின் மன்றோவின் இந்த பிரபலமற்ற மேற்கோள், புதிய Netflix ஆவணப்படமான Nayanthara: Beyond the Fairy Tale ஐப் பார்க்கும்போது என் மனதைக் கடந்தது.

இந்த ஆவணப்படம், தொழில்துறையினரால் அறிவிக்கப்பட்ட 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாராவின் கடினமான மற்றும் ஊக்கமளிக்கும் பயணத்தை, ஆண் ஆதிக்கம் செலுத்தும் திரைப்படத் துறையில் நிலைநிறுத்த முயற்சிக்கிறது.

ஆனால் நயன்தாரா: பியோன்ட் தி ஃபேரி டேல் அதன் வடிவத்தை எதிர்த்துப் போராடும் ஒரு திருமண வீடியோ, நமது முன்னணி பெண் பிரபலங்களில் ஒருவரின் புகழை உயர்த்துவதற்கான கருதப்படுகிறது.

நயன்தாரா, இந்தப் பகுதியில், சில சுய-விழிப்புணர்வுடன் அடித்தளமாக இருக்கும் வகையில் தனது ஆரம்பகால வாழ்க்கையின் முட்டாள்தனங்கள் மற்றும் உயர் புள்ளிகளைப் பற்றி சிந்திக்க போதுமான வசதியாகத் தெரிகிறது.

2003 இல் மலையாளத்தில் அறிமுகமான மனசினக்கரே திரைப்படத்தை இயக்கிய சத்யன் அந்திகாட், இந்த ஆவணத்தில் பேசும் ஒரு வழிகாட்டியாகத் தோன்றுகிறார்.

அவரது இயக்குனர் தனது முதல் காட்சியை படமாக்குவதற்கு முன்பு, நடிகர்கள் மற்றும் குழுவினருடன் ஹேங்கவுட் செய்யவும், விஷயங்களை உணரவும் அவளை எப்படி செட்டில் வசதியாக மாற்றினார் போன்ற விவரங்களை நாங்கள் பெறுகிறோம். இந்த பகுதிகள் அவரது தாயார் தனது கல்லூரி நாட்களை நினைவு கூர்வதோடு, கேரளாவில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் இயல்பான வளர்ப்பில் இருந்து விடுபடுவதற்கான ஆரம்ப கால இடைவெளியைத் தக்கவைத்துக்கொள்ளும் ஆரம்பப் போராட்டங்கள்.

கல்லூரிக்குச் செல்லும் பெண் ஒரு குறுகிய காலத்திற்குள் உடனடி நட்சத்திரமாகத் தள்ளப்பட்டதையும், தொழில்துறையில் உள்ள சில சிறந்த திறமையாளர்களுடன் பணிபுரிவதையும், அது அவள் மீது ஏற்படுத்திய தாக்கத்தையும் உணர்கிறோம்.

ஆனால் தயாரிப்பாளர்கள் எந்த நடிகரின் திறமையின் மிக முக்கியமான அம்சம், அவரது வேலையின் 'செயல்திறன்' அம்சம் மற்றும் ஷீலா, ஃபாசில், சுகுமாரி போன்ற பழம்பெரும் நபர்களுக்கு எதிராக தனது வடிகட்டப்படாத ஆற்றலை எவ்வாறு பொருளின் பகுதிகளாகப் பயன்படுத்தினார் என்பதைப் பற்றி அதிகம் சிந்திக்க விரும்பவில்லை. மோகன்லாலும் ஜெயராமும் இன்னும் ஆரம்பமான கேரியரில்.

நடிகையும் தனது சிந்தனை செயல்முறை மற்றும் அவரது ஆரம்ப பகுதிகளின் கருத்தாக்கத்தை ஆராய்வதில் அதிக கவனம் செலுத்தவில்லை.

நடிகையை தனது தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் சூழ்ந்திருந்த 'குற்றச்சாட்டு' உறவுச் சிதைவுகள் மற்றும் ஊடக சர்ச்சைகள் சம்பந்தப்பட்ட மிகவும் ஜூசியான பகுதியை அடைவதற்கான அவசரத்தில் இருப்பது போல, அவரது முந்தைய சில படங்களில் அவை கடந்து செல்வதை நீங்கள் உணரலாம்.

இங்குதான் ஆவணப்படம் குறைவான சுவாரசியமான, வெற்று கலோரி, சிகிச்சை-அருகிலுள்ள வாகனமாக மாறுகிறது, அங்கு நடிகை தனது பிரபல வாழ்க்கையின் சங்கடமான பகுதிகளில் தாமதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார், மேலும் ஊடக விவரிப்புகள் மற்றும் வதந்திகளை பரப்புதல் ஆகியவற்றின் புல்லட் புள்ளிகள் மூலம் அவரது பொது மக்களை மாற்றியது. அந்த நேரத்தில் உணர்தல்.

நயன்தாராவின் கற்றறிந்த, கேமிரா முகவரி, விக்னேஷின் குறைவான தயார்படுத்தப்பட்ட, மூல ஆற்றலுடன் நேரடியாக முரண்படுகிறது, அவர் தனது சிறந்த பாதியைப் பற்றி மிகுந்த உற்சாகத்துடனும் பயபக்தியுடனும் பேசும்போது தனது எண்ணங்களை உருவாக்குவது போல் தெரிகிறது.

அவர்களின் தொடர்புகளும் காதல் சைகைகளும் ஆவணப்படத்தின் பிற்பகுதியில் அரவணைப்பைச் சேர்க்கின்றன, இருப்பினும் காதல் செழிப்பில் கவனம் மற்றும் கருப்பொருள் எடைகள் இழக்கப்படுகின்றன.

கடைசி 10 நிமிடங்கள் திட்டமிடப்பட்டு முடிவடைகிறது மற்றும் பெரிய காலநிலை திருமணத்துடன் அனைத்து தளர்வான முனைகளையும் இணைக்க மிகவும் கடினமாக முயற்சிக்கிறது.

இந்த ஆவணப்படம் ஒரு நியாயமற்ற உலகத்தின் வழியாகச் செல்வதற்கு எல்லா முரண்பாடுகளையும் மீறி ஒரு பெண்ணை ஆவணப்படுத்துகிறது.

இது ஒரு கலைஞரின் செயல்முறை மற்றும் முடிவெடுப்பதில் முதலீடு செய்யும் ஒரு விசித்திரமான பொருளாக இருந்திருக்கும், ஆனால் தற்போதையது, பாப்கார்ன் எரிபொருளில் இரசிகர் அஞ்சலி பொழுதுபோக்கின் ஒரு மாலை நேரத்தை இலக்காகக் கொண்ட ஒரு பிரகாசமான, ஆர்வமுள்ள பிரபல வாழ்க்கை முறை ஆவணமாக முடிவடைகிறது. .

ராணா டகுபதி வெளியிட்ட விராட் கர்ணா நடிக்கும் ' நாக பந்தம் ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்*

*ராணா டகுபதி வெளியிட்ட விராட் கர்ணா நடிக்கும் ' நாக பந்தம் ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்* நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா-...