Wednesday, November 27, 2024

RAPO 22’ படம் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின்!*

*’RAPO 22’ படம் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின்!*

தமிழ் சினிமாவில் பல மெலோடி ஹிட் பாடல்கள் கொடுத்த இசையமைப்பாளர்கள்  விவேக் மற்றும் மெர்வின் ஆகியோர் தெலுங்கு திரையுலகில் நடிகர் ராம் பொதினேனியின் 22வது படத்திற்கு இசையமைப்பதன் மூலம் தெலுங்கு சினிமாவிலும் இசையமைப்பாளர்களாக அறிமுகமாகிறார்கள். 

இயக்குநர் மகேஷ் பாபு இயக்கும் ’RAPO 22’ படத்தை, சினிமாவில் பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்த மைத்ரி மூவி மேக்கர் தயாரிக்கிறது. விவேக் மற்றும் மெர்வினின் இசை பயணத்தில் இது மிக முக்கிய மைல்கல்.   

இந்த அனுபவம் குறித்து விவேக் மற்றும் மெர்வின் பகிர்ந்து கொண்டதாவது, ”உயர்தரமான இசை மற்றும் புதுமையான கதை சொல்லலுக்கு தெலுங்கு சினிமா பெயர் பெற்றது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், ராம் பொதினேனியின் 22ஆவது படமான ‘RAPO 22’ படம் மூலம் தெலுங்கு சினிமாவில் நாங்கள் அறிமுகமாவது எங்களுக்கு பெருமையான விஷயம். இந்தப் படம் ரொம்பவே ஸ்பெஷல். நிச்சயம் எனர்ஜிடிக்கான இசையைக் கொடுப்போம்” என்றனர். 

விவேக் மற்றும் மெர்வின் இருவரின் தெலுங்கு அறிமுகத்தை இப்போது ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள். ’RAPO 22’ படத்தின் அடுத்தடுத்த அப்டேட் வரும் நாட்களில் எதிர்பார்க்கலாம்.

Heritage Meets High Performance as Bajaj Pune Grand Tour 2026 Trophy Arrives in Chennai

Heritage Meets High Performance as Bajaj Pune Grand Tour 2026 Trophy Arrives in Chennai Chennai : The heritage-inspired Trophy f...