*சென்னையில் நடைபெற்ற 2வது நாள் Provoke Art Festival 2024 ஆண்டிற்கான விருதை பத்ம பூஷன் டாக்டர் டி.வி.கோபாலகிருஷ்ணன், பத்மஸ்ரீ லீலா சாம்சன், பத்மஸ்ரீ ஆர்.முத்துக்கண்ணம்மாள், கலைமாமணி டி.எஸ்.பி.கே மௌலி, வீணை விதுஷி, ஹேமலதா மணி, திரு கங்கை அமரன் உள்ளிட்டருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன.*
சென்னை மியூசிக் அகாடமியில், நடைப்பெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரு.சந்தோஷ் IG, திரு.தாமோதர் IPS, திரு.சங்கர் ஆவடி ஆணையர், திரு.சிவ் சங்கர் IT ஆணையர், திரு.ஷாஜி கிறிஸ்டோபர் வருமான வரித்துறை, மேஜர் ஜெனரல் இந்திரபாலன், Dr.J.ராதாகிருஷ்ணன் IAS,CSK CEO காசி விஸ்வநாதன், சாம் பால் மற்றும் அஸ்வினி சாம் பால் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கலைத் துறையில் புகழ்பெற்ற கலைஞர்களை வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கி கௌரவிக்கபட்டனர்.
ஸ்ரீ சஞ்சய் சுப்ரமணியன் பாடிய சுப்பிரமணிய பாரதியின் பாடல்களை விருந்தினர்கள் கண்டு ரசித்தனர். கூடுதலாக, ஸ்ரீ ரஞ்சித் மற்றும் ஸ்ரீமதி விக்னா குழுமம் "விஸ்வகர்பா"வை கிளாசிக்கல் மற்றும் தற்கால கூறுகளை ஒருங்கிணைக்கும் ஒரு பிரமிக்க வைக்கும் கண்கவர் நிகழ்ச்சியை மக்கள் கண்டு களித்தனர்.
பத்ம பூஷன் டாக்டர் டி.வி.கோபாலகிருஷ்ணன்,பத்மஸ்ரீ லீலா சாம்சன், பத்மஸ்ரீ ஆர்.முத்துக்கண்ணம்மாள், கலைமாமணி டி.எஸ்.பி.கே மௌலி, வீணை விதுஷி ஹேமலதா மணி, திரு கங்கை அமரன் உள்ளிட்ட, கலைத் துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன.