இளம் பெண்களின் கொலைக்கு யார் காரணம்?
புது இயக்குனர் இயக்கத்தில்
" ச வு டு "
படத்தில் புரியும்.
ஶ்ரீ வராஹி அம்மன் நல்லாசியுடன் லாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஸ்ரீ கண்ணன் லட்சுமணன் தயாரித்துள்ள படம்தான் " சவுடு " .
இதன் இயக்குனரான ஜெயந்தன் அருணாசலம் படத்தைப் பற்றி கூறியதாவது,
"ஒரு கிராமத்தில் இளம் பெண்கள் தொடர்ந்து மாயமாகி வருகின்றனர். இதனால் பெண்ணைப் பெற்றவர்கள் மிகவும் பீதிக்குள்ளாகி அவதிப்படுகின்றனர். இதனால் ஊர்தலைவரான ராயப்பன் காவல் துறைக்கு புகார் தெரிவிக்கிறார். மாயமான பெண்களை கண்டுபிடிக்க இன்ஸ் பெக்டர் வீரபாண்டியை காவல் துறை நியமிக்கிறது. அவர் தனது பாணியில் விசாரணையை துவக்குகிறார். மொத்தம் 14 இளம் பெண்கள் காணாமல் போனதாக அவருக்கு தெரிய வருகிறது. அதிர்ச்சி அடையும் அவர் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியதில் ஒரு கும்பல் மாட்டுகிறது. இவர்களிடம் நடத்திய விசாரணையில் அவருக்கு மேலும் பல திடுக்கிடும் தகவல் கிடைக்கிறது. இதற்கு காரணமானவரின் பெயரை கும்பல் கூறியதும் இன்ஸ்பெக்டர் மேலும் அதிர்ச்சிக்குள்ளாகிறார். இப்படி பரபரப்பான கதையை எழுதி அதற்கு விறுவிறுப்பான திரைக்கதையை நானும் பகவதி பாலாவும் இணைந்து எழுதி உள்ளோம். என்கிறார் இயக்குனர் ஜெயந்தன் அருணாசலம்.
இதில் பகவதி பாலா இன்ஸ்பெக்டர் வீரபாண்டியனாகவும், ஊர்த்தலைவர் ராயப்பனாக படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீகண்ணன் லட்சுமணனும் நடித்துள்ளனர். மேலும் இதில், போண்டாமணி, சாப்ளின் பாலு, வைகாசிரவி, கிளிமூக்கு ராமச்சந்திரன் , மீசை ராதாகிருஷ்ணன், பொன்ராம், ஸ்ரீ கண்ணன், பகவதி பாலா, கீர்த்தி விக்னேஷ், ஆசிபா, கே.ஜி.ஆர்., ஏசி. ஜான் பீட்டர், சோபியா வைத்தீஸ்வரி , வி.ஜெ. ரெஜினா , பாண்டி முருகன், ஜானகிராமன், ராஜன், அஜித், ஆனந்த், ஐஷூ, அபிமன்யு, தூத்துக்குடி ரெஜினா, ஜார்ஜ், புதுவை கர்ணா சரவணகுமார், பழனிவேல், ஜெகதீஷ், அருண், அரசு, கவிதா, பாலசந்தர், விஜயகுமார், புவனேஷ் ஏராளமான பேர் நடித்துள்ளனர்.
ஏசி. ஜான் பீட்டர் இசையையும், பவர் சிவா நடன பயிற்சியையும், ஜேசுதாஸ் சண்டை பயிற்சியையும், ஜார்ஜ் கலையையும், ராம்நாத் படத்தொகுப்பையும், மகிபாலன் - பால்பாண்டி இருவரும் ஒளிப்பதிவையும் , ஜான் பீட்டர், ரம்யா முத்துபாபு, செல்வராஜ் மூவரும் பாடல்களையும் கவனித்துள்ளனர்.
விரைவில் திரைக்கு வர இருக்கும் . "சவுடு " படத்தை லாக்ஸ் சினிமா நிறுவனம் சார்பில் ஸ்ரீ கண்ணன் லட்சுமணன் தயாரிக்க, கதை, வசனம் எழுதி ஜெயந்தன் அருணாசலம் இயக்கி உள்ளார்.
படத்தின் பெயர்
" ச வு டு "
கதாநாயகன் பெயர்
பகவதி பாலா
கதாநாயகி பெயர்
ஆசிபா
விஜயமுரளி
கிளாமர் சத்யா
PRO