சமூக ஆர்வலர் அப்சரா ரெட்டி மற்றும் பிரபல ENT மருத்துவர் மோகன் கமேஷ்வரன் ஆகியோர் குட் டீட்ஸ் கிளப் சார்பில் 30 கேட்கும் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு, உயர்தர காதுகேட்கும் கருவிகளை வழங்கினர்.
சமூக சேவை, அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தடம் பதித்து தனக்கென ஒரு பாதையை சுயமாய் உருவாக்கி, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் அப்சரா ரெட்டி நிறுவிய, அனைத்த குட் டீட்ஸ் கிளப், பல்வேறு மனிதாபிமான செயல்களின் மூலம் சமூகத்தில் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் விதைத்து வருகிறது. அதன் ஒரு பாகமாக, வேளச்சேரி பார்க் ஹயாத் நட்சத்திர விடுதியில், அப்சரா ரெட்டி மற்றும் மெட்ராஸ் ஈஎன்டி ரிசர்ச் ஃபவுண்டேஷனின் பிரபல மருத்துவர் மோகன் காமேஸ்வரனுடன் இணைந்து, கேட்கும் குறைபாடுடைய மாற்றுத் திறனாளி குழந்தைகள் 30 பேருக்கு, உயர்தர காது கேட்கும் கருவிகளை கிளப் நன்கொடையாக வழங்கியுள்ளது.
தங்கள் தாயின் குரலைக் கூட கேட்டிறாத, அன்றாட சத்தத்தை ஒருபோதும் அனுபவிக்காத குழந்தைகளுக்கு இந்நிகழ்ச்சி எல்லையில்லா ஆனந்தத்தையும், நம்பிக்கையின் கீற்றையும் வெளிப்படுத்தியுள்ளது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அப்சரா ரெட்டி, நாம் சாதாரணமாக கெட்பவற்றை அறிந்திராத இந்த குழந்தைகளுக்கு, இந்த கருவிகள் புதிய உலகிற்கான நுழைவாயிலாக இருக்கும் என்றார். காது கேட்கும் கருவிகளை வழங்கும்போது, வெறுமனே ஒலியை பரிசாக வழங்குவது மட்டுமல்லாமல், அவர்களுக்கு தொடர்புகொள்வதற்கும், கற்றுக்கொள்வதற்கும், வரம்புகள் இல்லாமல் கனவு காண்பதற்கும் ஒரு வாய்ப்பை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். இது குட் டீட்ஸ் கிளப் மூலம் ஒவ்வொரு குழந்தையும் பார்க்கப் படுவதையும், கேட்கப் படுவதையும், நேசிக்கப் படுவதையும் உறுதி செய்வது என்றும் தெரிவித்தார்.