Monday, January 27, 2025

சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ், மோகன்லால், பிருத்விராஜ் சுகுமாரன், இணையும், "L2: எம்புரான்" பட டீஸர் வெளியீடு!!*

*சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ், தயாரிப்பில் உருவாகியுள்ள, முதல் மலையாளத் திரைப்படம் "L2: எம்புரான்" பட டீஸர் வெளியீடு!!*

*சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ், மோகன்லால், பிருத்விராஜ் சுகுமாரன், இணையும்,  "L2: எம்புரான்" பட டீஸர் வெளியீடு!!*

தென்னிந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா புரொடக்ஷன்ஸ், மிகவும் எதிர்பார்க்கப்படும்  “L2E எம்புரான்” திரைப்படம் மூலம், மலையாளத் திரையுலகில் கால் பதித்துள்ளது. பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் "தி கம்ப்ளீட் ஆக்டர்" மோகன்லால் நாயகனாக நடித்துள்ளார். பெரும் வெற்றிப் படங்களான லூசிஃபர் மற்றும் ப்ரோ டாடிக்குப் பிறகு, இயக்குநர் மற்றும் நடிகராக அவர்களின் கூட்டணியில், உருவாகியுள்ள மூன்றாவது படம் என்பதால், இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது

2019 ல் வெளியான லூசிஃபர் படம், இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்து, பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.  இப்படத்தின் தொடர்ச்சியாக, இரண்டாம் பாகமாக, “L2E எம்புரான்” ஒரு  பிரம்மாண்ட சினிமா அனுபவமாக  உருவாகியுள்ளது.  இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா, நேற்று கொச்சியில் விமரிசையாக  நடைபெற்றது, இந்நிகழ்வில் மெகாஸ்டார் மம்முட்டி தலைமை விருந்தினராக கலந்து கொண்டார், மேலும் படத்தின் முக்கிய நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். 

https://youtu.be/AYzSvao5RbQ

டீஸர் வடக்கு ஈராக்கில் கைவிடப்பட்ட நகரமான "காரகோஷ்" என்ற இடத்தில் துவங்குகிறது.  இதில் ஸ்டீவன் நெடும்பள்ளி என்ற கதாபாத்திரம், ஆசியாவின் மிகவும் சக்திவாய்ந்த கூலிப்படை வெற்றிக் குழுவிற்கு தலைமை தாங்கும் அபிராம் குரேஷி என்ற இருண்ட மற்றும் புதிரான பக்கத்தைக் கொண்ட மீட்பரை அறிமுகப்படுத்துகிறது. படம் மோகன்லால் பாத்திரத்தை அதிரடி ஆக்சனுடன் ‌பிரம்மாண்டமாக அறிமுகப்படுத்துகிறது.  அரசியல் மற்றும் கூலிப்படைகளின் உலகத்தில் நிலவும்  அதிகாரம், துரோகம் மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றை இப்படம் ஆராய்கிறது.

சுபாஸ்கரன் அவர்களால் துவங்கப்பட்டு,  ஜி.கே.எம். தமிழ் குமரன் அவர்களால் தலைமையேற்று வழிநடத்தப்படும், லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், பெரிய பட்ஜெட் மற்றும்  சிறந்த உள்ளடக்கம் சார்ந்த படங்களை வழங்குவதில், பெயர் பெற்ற ஒரு சிறந்த தயாரிப்பு நிறுவனமாகும்.  மலையாள திரையுலகில் அறிமுகமாகும் விதமாக, லைகா புரொடக்‌ஷன்ஸ், பிரபல தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூரின் ஆசீர்வாத் சினிமாஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து, "L2: எம்புரான்" படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. 

இப்படத்தில் பிருத்விராஜ் சுகுமாரன், இந்திரஜித் சுகுமாரன், டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர், சானியா ஐயப்பன், சாய் குமார் மற்றும் பைஜு சந்தோஷ் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

L2E: எம்புரான் படத்தை  முரளி கோபி  எழுதியுள்ளார், தீபக் தேவ் இசையமைத்துள்ளார் மற்றும் சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுரேஷ் பாலாஜி மற்றும் ஜார்ஜ் பயஸ் ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர். பிருத்விராஜ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு வடிவமைப்பை கையாண்டுள்ளது, மோகன்தாஸ் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

L2E: எம்புரான் திரைப்படம், மார்ச் 27, 2025 அன்று மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியிடப்படவுள்ளது.

அகத்தியா” படத்தின் 3 வது சிங்கிள் “செம்மண்ணு தானே” கல்ச்சுரல் பாடல் வெளியானது

“அகத்தியா” படத்தின் 3 வது சிங்கிள் “செம்மண்ணு தானே” கல்ச்சுரல் பாடல் வெளியானது. !!   பெரும்  எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் ஃ...