Tuesday, January 28, 2025

ZHEN STUDIOS நிறுவனத்தின் முதல் படைப்பாக உருவாகியுள்ள "தருணம்" படம், ஜனவரி 31 ஆம் தேதி வெளியாகிறது !!


விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற ரொமாண்டிக் திரில்லர்  "தருணம்" படம், ஜனவரி 31 ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியாகிறது !! 


ZHEN STUDIOS சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள  "தருணம்"  திரைப்படம், வரும்  ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான  திரையரங்குகளில் உலகமெங்கும்  வெளியாகிறது.  

தேஜாவு  திரில்லர் படம் மூலம் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் ஒரு அருமையான காதல் கதை மூலம் மகிழ்விக்கவுள்ளார். 

வாழ்வே பல தருணங்களால் ஆனது ஆனால், ஒரு தருணம் மொத்த வாழ்க்கையையும் மாற்றும் அப்படியான ஒரு தருணத்தை, காதல் கலந்து சொல்லும் அருமையான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. 


தமிழ்த்திரையுலகில் கால்பதித்துள்ள ZHEN STUDIOS நிறுவனம் சார்பில் புகழ் மற்றும் ஈடன்,  பெரும் பொருட்செலவில் இப்படத்தை உயர்தரமான படைப்பாகத் தயாரித்துள்ளனர். 


ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, உலகமெங்கும் எண்ணற்ற  திரையரங்குகளில் வெளியாகிறது.  



தொழில் நுட்ப கலைஞர்கள்

எழுத்து, இயக்கம் - அரவிந்த் ஶ்ரீநிவாசன்
ஒளிப்பதிவாளர் - ராஜா பட்டாசார்ஜி
இசை - தர்புகா சிவா
பின்னணி இசை - அஸ்வின் ஹேமந்த் 
படத்தொகுப்பு - அருள் E சித்தார்த்
கலை இயக்குனர் - வர்ணாலயா ஜெகதீசன்
சண்டைப்பயிற்சி - Stunner சாம்
தயாரிப்பாளர் - புகழ் A, ஈடன் (ZHEN STUDIOS )
மக்கள் தொடர்பு - சதீஸ், சிவா (AIM)

Global Star Ram Charan’s PEDDI Lengthy & Crucial Schedule Begins In A Gigantic Village Set In Hyderabad

*Global Star Ram Charan’s PEDDI Lengthy & Crucial Schedule Begins In A Gigantic Village Set In Hyderabad* Global Star Ram Ch...