Friday, February 21, 2025

"2 K ஹார்ட்" படத்தில்காதல் திருமணசுவாரஸ்யம்!

"2 K ஹார்ட்" படத்தில்
காதல் திருமண
சுவாரஸ்யம்!

2000 த்திற்கு பிறகு பிறந்தவர்களின் திருமணம் அதிகமாக 
விவாகரத்து ஆவதற்கு காரணம் என்ன?
காதல் திருமணம் செய்தவர்களும் விரைவில் மணமுறிவுக்கு உட்படுவது ஏன்?
பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணம் சிறந்ததா? என்ற கேள்விகளுக்கு விடைதாங்கி விரைவில் வரும் படம்தான் " 2 K ஹார்ட்" என்கிறார் இப்படத்திற்கு கதை வசனம் எழுதியுள்ள பர்வதன்.

லிங்கேஷ் குமார், பிரகதி, வித்யா, தேவஶ்ரீ, கார்த்திக் ராஜா, பாலகிருஷ்ணன், பவர்ஸ்டார் சீனிவாசன்,  சாப்ளின் பாலு, ஜானி .கே.மணிகண்டன்  என நிறைய பேர் நடித்துள்ளனர்.

சேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வளர்ந்துள்ளது.   தர்வேஷ் ஒளிப்பதிவையும், தயானந்த் பிறைசூடன்
பாடலுக்கு இசையையும், சேலம் சண்முகசுந்தரம் - - சேலம் துரைராஜ் இருவரும் தயாரிப்பு நிர்வாகத்தையும், சாய் நரேஷ்குமார் படத்தின் பின்னணி இசையையும், பா. சேதுமாதவன் பாடல்களையும், பர்வதன்  கதை வசனத்தையும் , விக்னேஷ் குமார் நடன பயிற்சியையும், சேலம் துரைராஜ் சண்டை பயிற்சியையும் கவனித்துள்ளனர். 

"ஆறடி " மற்றும் " தகவி " ஆகிய படங்களை தயாரித்த எஸ். நவீன்குமார் தமது
ஸ்ரீ சிவ குடும்பம் பிலிம்ஸ் சார்பில் மூன்றாவது படமாக "2 கே. ஹார்ட்" படத்தை தயாரித்துள்ளார்.

திரைக்கதை அமைத்து படத்தொகுப்பையும் ஏற்று தமது மூன்றாவது படமாக டைரக்ட் செய்துள்ள ஜெ. சந்தோஷ் குமார் படத்தைப் பற்றி கூறியதாவது, " பர்வதன்  அவர்களின் கதைவசனத்தில் ஆறடி என்ற படத்தை முதலாவதாத  இயத்தினேன். அதில் சுடுகாட்டில் பெண் வெட்டியாளாக கதாநாயகியை நடிக்க வைத்து விருதுகள் பல பெற்றேன். அடுத்து தகவி என்ற படத்தை தரைப்படை, கப்பல்படை, விமானபடை என்பதன் சுருக்கமே தகவி இதில் சிறார்களால் நக்சலைட்டுகள் திருந்துவதாக எடுத்தேன். இதுவும் பல்வேறு விருதுகளை பெற்றது. 3வது படமாக " 2 K ஹார்ட் " என்ற படத்தை இயக்கி உள்ளேன். இதில் 2000க்குப் பின் பிறந்தவர்களின் காதல் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களை சுவைபட அனைத்து செக்டாரும் பார்க்கும் வண்ணம் படமாக்கி இருக்கிறேன்.  பர்வதன் அவர்களின் கதை வசனம் படத்திற்கு மிகவும் , வலுவுள்ளதாக இருக்கிறது என்று படம் பார்ப்பவர்கள் கூறுவார்கள்" என்கிறார்.

விஜயமுரளி
PRO

"2 K ஹார்ட்" படத்தில்காதல் திருமணசுவாரஸ்யம்!

"2 K ஹார்ட்" படத்தில் காதல் திருமண சுவாரஸ்யம்! 2000 த்திற்கு பிறகு பிறந்தவர்களின் ...