Wednesday, February 12, 2025

4த் ஃப்ளோர் - ஆரி அர்ஜூனன் நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியானது.

4த் ஃப்ளோர் - ஆரி அர்ஜூனன் நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியானது.

மனோ கிரியேஷன் சார்பில் A. ராஜா தயாரிப்பில், ஆரி அர்ஜூனன், தீப்ஷிகா, பவித்ரா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அதன் தலைப்பினை, படக்குழு படத்தின் நாயகன் ஆரி அர்ஜூனன் பிறந்தநாளான பிப்ரவரி 12 - இல் அறிவித்தது. 

முன்னதாக அவருடைய பிறந்தநாளை பூந்தமல்லியில் உள்ள பார்வைத்திறன் குன்றியோர் பள்ளியில் கேக் வெட்டியும், விருந்து பரிமாறியும் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து படத்தின் தலைப்பினை பார்வைத்திறன் குன்றிய வயதானவர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் ஆரி அர்ஜூனன்  வெளியிட்டார். 

பரபரப்பான திரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்தது.

4த்   ஃப்ளோர் திரைப்படத்தை மனோ கிரியேஷன் சார்பில் A. ராஜா தயாரித்துள்ளார். L.R. சுந்தரபாண்டி எழுதி இயக்கியுள்ளார். 
J. லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  தரண்குமார் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு - ராம் சுதர்சன், கலை இயக்கம் - சுரேஷ் கல்லாரி, சண்டைப்பயிற்சி டேஞ்சர் மணி, நிர்வாகத் தயாரிப்பு - சூரியப் பிரகாஷ். மக்கள் தொடர்பு ராஜா A